Saturday 10 October 2015

மாலைத்தீவு படையெடுப்பு

மாலைத்தீவு படையெடுப்பு

29 அக்டோபர் 1988

இரவு நேரம்,
நாற்பது அடி நீளமுள்ள இரண்டு மீன்பிடி படகுகளில் 80 ஆயுதம் தாங்கிய போராளிகள் ஈழத்தின் மேற்குப் பகுதியான முள்ளிக்குளம் கடற்கரையில் இருந்து தென்மேற்காகக் கிளம்பினர்.

கிட்டத்தட்ட 800 கி.மீ கடல்தாண்டி அப்பால் இருக்கும் மாலைத் தீவின் தலைநகரான மாலே நோக்கி

இவர்கள் புலிகள் (LTTE)கிடையாது
இவர்கள் அப்போது புலிகளை விட பத்துமடங்கு வலிமையாகத் திகழ்ந்த புளோட் (PLOTE) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் வெறும் 80பேர்
ஏற்கனவே ஊடுருவியவர்கள் ஒரு 30பேர் இருக்கலாம்.

இவர்களை வைத்து அந்நாட்டின் சர்வாதிகாரி அப்துல் காயூமின் ஆட்சியை கலைத்து அந்த நாட்டையே பிடிக்க நினைப்பவரான லுத்பிக்கு (Luthfee) அரசியலிலும் படைத்துறையிலும் ஆதரவாளர்கள் இருந்தனர்.

நான்கு நாட்கள் பயணித்து நவம்பர் 3 1988 அதிகாலையில் மாலே கடற்கரையில் இறங்கியவர்கள் வந்த படகுகளை திருப்பியனுப்பிவிட்டனர்.
எப்படியும் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் (!)
ஆறு குழுவாகப் பிரிந்து கொடுக்கப்பட்ட தலங்களைக் கைப்பற்ற முன்னேறினர்.

புளோட் தலைவர் உமா மகேசுவரனுக்கும் லுத்பிக்கும் என்ன ஒப்பந்தமோ தெரியாது.
அது புளோட் இயக்கத்திற்கு ஒரு தீவைத் தருவதாகவோ
அல்லது 10லட்சம் முதல் ஒருகோடி வரை பணமாகவோ கொடுப்பதாக இருக்கலாம் என்று பலர் கூறினார்கள்.

லுத்பி அதிக சேதமில்லாமல் தலைநகரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து காயூமை (gayoom) சிறைபிடித்துவிட்டால் வெற்றி எழுதில் கிடைத்துவிடும் என்று நினைத்தார்.
புளோட் போராளிகள் முன்னால் மாலைத்தீவு படையினர் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார்.

தலைநகரின் எல்லா நிலைகளும் மிகவிரைவாக புளோட் கட்டுக்குள் வந்தது.
கிட்டத் தட்ட மாலைத்தீவைப் பிடித்தாயிற்று.
காயூமை பிடிப்பது மட்டும்தான் மீதியிருந்தது.

ஆனால் காயூம் எப்படியோ தப்பித்துவிட்டார்.

பல இடங்கள் மாறி மாறி மறைந்து எப்படியோ ஒருவழியாக
தன்னாட்டைக் காப்பாற்றுமாறு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தந்தி அனுப்பிவிட்டார்.

உடனே இந்தியாவின் படை ஆக்ராவிலிருந்து 600 பாராசூட் வீரர்களுடன் வந்திறங்கி விமான நிலையத்தை மீட்டது.
பிறகு மேலும் படை வந்திறங்க 1600 இந்திய வீரர்கள் மாலேவை கைப்பற்றத் தொடங்கினர்.
இரண்டு போர் கப்பல்கள் அனுப்பப்பட்டன.

தோற்று பின்வாங்கிக் கொண்டு வந்த ப்ளோட் வீரர்கள் ஒரு கப்பலைக் கைப்பற்றி ஒரு அமைச்சர் உட்பட சிலபேரை பணயமாகப் பிடித்துக்கொண்டு வந்த வழியே திரும்பினர்.

பின்னாலேயே கண்கானித்துக்கொண்டு வந்த இந்திய விமானம் வானொலி மூலம் சரணடையச் சொன்னது.
சரணடையாத புளோட் வீரர்கள் பணயக்கைதிகளில் ஒருவரைக் கொன்று கடலில் வீசினார்கள்.
இந்திய விமானம் குண்டு போட்டு கப்பலை மூழ்கச் செய்தது போராளிகள் சரணடைந்தனர்.

அமெரிக்கா கயூம் ஆட்சியை காப்பாற்றியதற்காக இந்தியாவைப் பாராட்டியது.

இந்த கயூம் 30 ஆண்டுகாலம் வல்லாதிக்க ஆட்சி நடத்தி இந்திய அமெரிக்க நாடுகளின் அடிவருடியாக இருந்தவர்.
மக்களால் வெறுக்கப்பட்டவர்.

2008ல் கயூமால் சிறைவைக்கப்பட்டு மக்கள் போராட்டத்தால் விடுதலையடைந்த நஷீத் என்பவரால் தேர்தலில் காயூம் தோற்கடிக்கப்பட்டார்.
(நசீதையும் 2012ஆயுதமுனையில் பதவி விலகச்செய்துவிட்டனர்)

www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=38250
kalaiy.blogspot.in/2012/02/blog-post_11.html?m=1

2008ல் கயூம் தோற்கடிக்கப்பட்ட போது 20 ஆண்டுகளுக்கு முன்பே அவரை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்ற லுத்பீ அளித்த பேட்டியில்
"கயூம் அரசு பரப்புரை செய்வது போல புளோட் எங்களிடம் மாலைத்தீவின் எந்த பகுதியையும் தாங்கள் இயங்கக் கேட்கவில்லை".

https://m.facebook.com/editphoto.php?id=619131328190524&ref_component=mbasic_photo_permalink&ref_page=%2Fwap%2Fphoto.php&refid=13

No comments:

Post a Comment