Sunday, 4 October 2015

புலிச் சீருடையில் குழந்தைகள்

சில கோணல் மண்டையர்கள் குழந்தைகள் புலிச் சீருடையில் இருக்கும் படத்தை போட்டு அதைக் குழந்தைப் போராளிகள் என்கின்றனர்.

அந்த கயவர்கள் காட்டும் படம் மாவீரர் நாளில் புரட்சிகர நடனமாடும் புலி உடை அணிந்த குழந்தைகளின் படமாகும் ஆதாரமாக இப்படத்தை தருகிறேன்.

மேலும் சில படங்கள் பின்னூட்டங்களில் இணைக்கிறேன்.

மேலும் சில படங்கள் சிறிலங்கா அரசே சில குழந்தைகளுக்கு புலிகளின் உடையை அணிவித்து (அதுவும் அத்துவானக் காட்டில் மரணபீதி முகத்தில் தெளிவாகத் தெரியுமாறு) சில படங்களை உலவ விட்டுள்ளது.

புலிகள் ஒரு நாளும் குழந்தைகளைப் போராடவைக்கவில்லை.
குண்டு வெடிப்பிலிருந்து தப்புவது, முதலுதவி போன்ற பயிற்சிகளை மட்டுமே அளித்தனர்.
போலியான தகவல்களை நம்பவேண்டாம்.
புலிகள்தான் அவர்கள் பிரச்சனை என்றால் தற்போது ஈழத்தில் புலிகள் இல்லாத சூழலில் ஏன் தனி ஈழ வாக்கெடுப்புக்கோ, இலங்கை மீதான விசாரணைக்கோ வழிபிறக்கவில்லை.
புலிகளைக் காரணமாகக் காட்டி தமிழர்களைக் கொல்வதை நியாயப்படுத்தும் கொடூரப் பாவிகள்தான் இப்போதும் புலிப்பயம் காட்டிவருகிறார்கள்.
அன்றாட வாழ்வில்கூட ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சிலரை நாம் ஏற்கவேண்டியதுள்ளது,
அதேபோலத் தமிழர்கள் விமர்சனங்களை மீறிப் புலிகளை ஏற்பது தவிர்க்க இயலாதது.

No comments:

Post a Comment