Wednesday 14 October 2015

புத்தர்தான் ஏசு

புத்தர்தான் ஏசு

புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த அனேக நிகழ்வுகள் ஏசுவின் வாழ்விலும் நிகழ்ந்திருப்பதை காணலாம்,

1) சித்தார்த்தனின் அன்னையின் பெயர் மாயா தேவி,
ஏசுவின் அன்னை மேரி.
இருவருமே ஆண் துணையின்றி குழந்தையை ஈன்றனர்.

2) சித்தார்த்தன் பிறந்ததும் மன்னன் பிம்பிசாரன் அக்குழந்தையை கொல்ல முயற்சித்தான்.
ஏசுவை ஏரோது மன்னன் கொல்ல முயற்சித்தான்.

3) ஏசுவின் மக்களுக்கான பணியில் சாத்தான் குறுக்கிடுவதைப்போல் புத்தரின் பணியில் மாரன் குறுக்கிடுகிறான்.

4) புத்தரின் சீடரான ஆனந்தர் மாதங்கி எனும் தாழ்த்தப்பட்ட பெண்ணிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்க அவளோ தாழ்த்தப்பட்ட இனத்தைச்சார்ந்த என்னிடம் உயர்ந்த குலத்தைச்சார்ந்த நீங்கள் தண்ணீர் அருந்தலாமா எனக்கேட்க ஆனந்தர் பதிலாக நான் தண்ணீர்தான் கேட்டேன் குலம் கேட்கவில்லை என்று அவளிடம் தண்ணீர் பெற்று அருந்துகிறார்.
ஏசு ஒருமுறை ஒரு சமாரிய பெண்ணிடம் தண்ணீர் கேட்க அவளோ நீரோ யூதர் நான் சமாரியப் பெண் என்னிடம் தண்ணிர் கேட்கலாமா எனக்கேட்க , ஏசு பதிலாக நீ தண்ணீருடன் இருக்கிறாய் நான் தாகத்துடன் இருக்கிறேன் என்று தண்ணீர் வாங்கி அருந்துகிறார்.

5) புத்தர் ஞானோபதேசம் செய்ய காசி நகருக்கு செல்கிறார், அங்கு அவரது சொற்பொழிவைக்கேட்ட அவரின் எதிரி உட்பட நால்வர் சீடராக மாறுகிறார்கள்.
இதே கதை ஏசு வாழ்விலும் உண்டு ஒரே வித்தியாசம் காசி நகருக்கு பதிலாக கபர்னகூம்.

6) ஏசு உபதேசிக்கிறார், தன்னைப்போலவே எதிரிகளிடமும் நட்புக்கொள்ளவேண்டும்;
புத்தர் உபதேசிக்கிறார், நம்முடைய எல்லாச்செயலும் நட்பும் தயவும் நிறம்பியதாய் இருக்கவேண்டும்.

7) தன்னுடன் சேருபவர்கள் சொத்து சுகங்களை துறந்து எளிமையாக வாழவேண்டும் என்பது புத்தரின் கட்டளை.
புனிதப்பயணம் தொடங்கும் போது ஊன்றுகோல் அன்றி வேறு எதையும் எடுத்துச்செல்லக்கூடாது, இரண்டு உடைகள் உடுத்தக்கூடாது இது ஏசுவின் கட்டளை.

8) சாத்தானின் சூழ்ச்சி வலையிலிருந்து மீண்ட ஏசு கபர்னகூம் செல்கிறார்.
மாரனின் சோதனையிலிருந்து மீண்ட புத்தர் காசி செல்கிறார்
(காசி கபர்னகூம் ஒற்றுமை காண்க)

9) புத்தர் கூறுகிறார் வானம் பூமியின் மீது இடிந்து விழுந்து இந்த உலகம் அழிந்து போகலாம், வலிமை மிகுந்த கடல் வற்றிப்போகலாம் ஆனந்தா என்னுடைய வாக்குகள் நிலைத்திருக்கும்.
கிருஸ்து கூறுகிறார் வானமும் பூமியும் அழிந்து போகலாம் ஆனால் என்னுடைய வாக்கிற்கு அழிவு கிடையாது.

10) ஏசு இறந்தபின் மூன்றாம் நாள் மீண்டு வருகிறார்.
புத்தர் இறந்த மூன்றாம் நாள் அவரை அடக்கம் செய்த கல்லறையின் கதவு ஏதோஒரு சக்தியால் திடீரென திறக்கிறது.

புத்தரின் வாழ்வில் நிகழ்ந்தவையாக கூறப்படும் இந்த நிகழ்வுகள் புத்தர் இறந்து 130 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட நூல்களில் இடம்பெற்றிருக்கின்றன,
அதேநேரம் ஏசு பிறப்பதற்கு 250 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நன்றி: https://senkodi.wordpress.com/2010/04/25/cave-bhuddah/

மேலும்,
சிலுவையில் ஏசு பேசியதில் தமிழ்
Jesus on the Cross Spoke Tamil
https://m.youtube.com/watch?v=O2DNb1iC4eM

புத்தம் -தமிழரின் கொடை
https://m.youtube.com/watch?v=b9W0NEd3ypI

நாளந்தா -தமிழ் வார்த்தை
https://m.youtube.com/watch?v=K5XlPyOtups&itct=CCMQpDAYACITCLjR56Ssw8gCFcKlqgodtFEDcTIGcmVsbWZ1SJKV37vEhu3qbw%3D%3D&client=mv-google&gl=IN&hl=en
(இந்த காணொளி கைபேசி வடிவில் தற்போது இல்லை.
நாளும் தா என்பதே நாளந்தா என்றானதாம்)

m.9gag.com/gag/5209098

No comments:

Post a Comment