செம்படை காக்கும் கரும்படை
@@@@@@@@@@@@@@@@
நாள்: 27-12-2218
அவர்களுக்கு மன்னிப்பு கிடையாதுதான்.
117 பெண்கள், 76 ஆண்கள், 30 முதியவர்கள், 8 குழந்தைகள் தமிழ்க் குடியரசுத் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு.
என் கண் முன்னே நடந்த அந்த நிகழ்வை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை.
மனது இன்று சரியில்லை அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு என் மலேசியநண்பன் வீட்டுக்குச் சென்றேன்.
அங்கே அவனுடைய ஒரு தமிழ்நண்பன் அமர்ந்து தொலைக்காட்சியில் ஓடிய அந்த படுகொலை பற்றிய செய்தியை பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் அவனிடம் என் ஆதங்கத்தை வெளிப்படுத்த அருகில் சென்று அமர்ந்து
"இந்தக் கப்பலில் நானும் இருந்தேன்" என்று பேச்சை ஆரம்பித்தேன்.
"அப்படியா என்ன நடந்தது அன்று?"
என்று கேட்டான்.
"நான் அந்த உல்லாச கப்பலின் பாதுகாப்புக்கு பொறுப்பான நிறுவனத்தில் வேலைசெய்பவன் என்ற வகையில் உலகமகா கோடீசுவரர்கள் மட்டுமே பயணம் செய்யமுடிந்த அந்த ஆடம்பரக் கப்பலில் காவலாளியாகச் செல்ல வாய்ப்பு கிடைத்தது.
2200 பேர் பயணம் செய்த அந்த கப்பலில் இதே நாளில் நான்கு வருடங்கள் முன்பு நாங்கள் மேல்தளத்தில் கண்கானிப்பிலிருந்தபோது பின்பக்கம் பக்கவாட்டில் பெரியவெடிச்சம் கேட்க என்னவென்று ஓடிச்சென்று பார்த்தோம்.
அங்கே பெரிய குண்டு வெடித்து ஓட்டை விழுந்து தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.
அந்த வெளிச்சத்தில் நாங்கள் தெளிவாகப் பார்த்தோம்.
இன்னொரு படகை வேகமாகச் செலுத்திக்கொண்டு வந்த கறுப்பு மனிதர்கள் படகிலிருந்து பாதியில் குதித்துவிட அந்த வெடிமருந்து நிரம்பிய படகு மட்டும் ஏற்கனவே சேதமடைந்த பகுதிக்கு அருகில் மோதி வெடித்தது.
கப்பல் ஒரு பக்கமாக சாய ஆரம்பித்தது.
பாதுகாப்புக்கு நின்ற நாங்கள் மேலேயிருந்து சுட்டோம்.
ஆனால் அவர்கள் உடலில் கட்டியிருந்த நீர் உந்துகள் மூலம் வெகுசீக்கிரம் பின்னோக்கி சென்றுவிட்டனர்.
நான் உடனே கப்பலின் தளகருத்தா(கேப்டன்) அறைக்கு சென்று பார்த்தேன்.
அங்கே வானொலியில் எங்களை சரணடையச் சொன்னார்கள்.
தளகருத்தாவோ தான் பக்கத்து நாடுகள் உதவியைக் கோரியதாகவும் அவர்கள் விமானம் வந்து கொண்டிருப்பதாகவும் கூறி சரணடைய மறுத்தார்.
மறுநிமிடம் முன்பக்கம் எதிர்பக்கவாட்டில் இன்னொரு படகு வந்து மோதியது. சாய்ந்த கப்பல் நேராக ஆரம்பித்தது.
முன்பக்க காவலாளி வந்து அவர்கள் கறுப்பு உடையில் கறுப்பு படகில் நீரில் முடிந்த அளவு அமிழ்ந்திருப்பதாகவும் இந்த இருளில் தாக்கமுடியாது என்றும் 5படகுகள் இருக்கலாம் எனது பேசியில் கூறினான்.
பின்பக்கத்திலே தாக்கப்படாத பக்கத்தில் இருந்த காவலாளியோ கறுப்பு மனிதர்கள் காந்தம், கொக்கி, ஈட்டி போன்றவற்றை பயன்படுத்தி கப்பல் மேல் ஏறுவதாகவும் அவர்கள் ஊசலாடிக்கொண்டே ஏறுவதாலும் இருளில் இருக்கும் படகிலிருந்து துப்பாக்கிசூடு நடத்தி நாம் தாக்காதவாறு பார்த்துக் கொள்கிறார்கள் என்றும் கூறினான்.
நான் அந்த முட்டாள் தளகர்த்தாவின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சரணடையக் கட்டாயபபடுத்தினேன்.
அவன் சரணடைவதாக அறிவித்தான்.
அதற்குள் தமிழ்தீவிரவாதிகள் எங்கள் கப்பலில் நுழைந்திருந்தனர்.
நான் விரைந்து சென்று அந்த கப்பலில் இருந்த ஒரு தமிழரை அழைத்து வந்து சமாதானம் பேசச்செய்தேன்.
அவர்கள் தமிழில் ஏதோ பேசிக்கொண்டனர்.
கப்பலை பெரிய நிகோபர் தீவுக்கு (மாநக்காவரம்) மூழ்குவதற்குள் செலுத்தக் கூறினார்.
பாதிவழியில் அந்த சேதமடைந்த கப்பல் நின்றுவிட அந்தக் கப்பலில் இருந்த உதவிப் படகுகளையும் இறக்கி அனைவரையும் படகுகள் மூலம் விரைவாக தீவுக்கு கரையேற்றினோம்.
உதவிக்கு வந்த விமானங்கள் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
உதவிக்கு கப்பல்கள் வரவில்லை வந்திருந்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும்.
அங்கே அவர்களிடம் எங்களைப் பற்றிய விபரங்கள் ஏற்கனவே இருந்தது.
அவர்கள் எங்களில் 117 பெண்கள், 76ஆண்கள், 30முதியவர்கள், 8குழந்தைகளை தனியே பிரித்து கூட்டிச் சென்றுவிட்டனர்.
நாங்கள் இரண்டாயிரம் பேரும் ஒன்றும் புரியாமல் ஆயுதமுனையில் நிறுத்தப்பட்டிருந்தோம்.
சிறிது நேரத்தில் ஒரு பெண்தீவிரவாதி வந்தாள்.
அவள் மூன்றுமாதங்கள் முன்பு தமிழ்ப்பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்து தமிழ்க்குடியரசில் போரிடும் பன்னாட்டு படையினர் முன்னேறி வந்ததாகவும் அவர்களைத் தடுக்க வேறுவழியின்றி தமதுபொதுமக்களையும் சேர்த்து கொல்லவேண்டிவந்ததாகவும் அதில் பலியான மக்களின் எண்ணிக்கையே 117பெண்கள், 76ஆண்கள், 30முதியோர், 8குழந்தைகள் ஆவர்.
அவர்களைப் பணையக் கைதியாக வைத்து முன்னேறிய படையில் எந்த எந்த இனத்தவர் எவ்வளவு இருந்தனர் என்று பார்த்து அதற்குத் தகுந்தவாறு அந்த இனத்தைச் சேர்ந்த மக்களை எங்களுடன் இருந்த 231பேரை பிரித்து எடுத்துச் சென்றுள்ளதாகவும் மற்றவர்களை விடுவிப்பதாகவும் கூறினர்.
உறவுகளைப் பிரிந்தவர்கள் அலறித் துடித்தனர்.
விட்டுவிடும்படி கெஞ்சினர்.
எங்களோடு வந்த தமிழரும் கூடக் கெஞ்சினார்.
அவரிடம் அவள் தமிழில் ஏதோ கூறினாள்.
பிறகு அவர் எங்களிடம் பன்னாட்டுப் படை மன்னிப்பு கோரினால் அவர்களை விடுவித்துவிடுவார்கள் என்றார்.
உலகளாவிய தொண்டு நிறுவனம் ஒன்றுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் கப்பல் அனுப்பி எங்களை மீள எங்கள் இடத்திற்கு அனுப்பினர்.
ஆனால், அடுத்த சில நாட்களில் அந்த பொதுமக்களை கடத்திய அன்றே நெற்றியில் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் அவர்களுக்கு நினைவிடம் அமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
ஏன் நீங்கள் இவ்வளவு கொடூரர்களாக இருக்கிறீர்கள்?
பணையக்கைதிகளை வைத்து முன்னேறிய பன்னாட்டுப் படையினர் 500பேரைத்தான் கொன்றுவிட்டீர்களே.
5தமிழர்களை உயிரோடு மீட்டீர்களே.
அன்று கடத்திய பொதுமக்களை பன்னாட்டுப்படை மன்னிப்பு கேட்காவிட்டால் கொன்றிருக்கலாம்.
ஆனால் நீங்கள் எங்களிடம் பொய்சொல்லிவிட்டு அன்றே கொன்றுவிட்டீர்களே?!
குழந்தைகளைக்கூடக் கொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது? இந்த உலகமே தமிழரை விரட்டி விரட்டி அடிக்கிறது சரி என்று ஆகிறதே?!"
என்று ஆவேசமாகக் கேட்டேன்.
அந்தத் தமிழன் பொறுமையாக "அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?!
முதலில் தமிழ் குடியரசைப் பற்றி அறியுங்கள்.
தமிழ்க்குடியரசில் இரண்டு விடுதலை இயக்கங்கள் உள்ளன.
ஒன்று செம்படை. அது 80% நிலப்பரப்பையும்
இரண்டாவதான கரும்படை 20% நிலத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இது பலருக்குத் தெரியாது.
உங்களை கடத்தியவர்கள் செம்படையாக இருந்தால் பெரிய கப்பல்கள் சூழ்ந்து சேதமே இல்லாமல் கடத்தியிருப்பார்கள்.
உங்களைக் கடத்தியது கரும்படையின் சிறிய படகுகள்.
தவிர மாநக்காவரத்தில் இயங்குபவர்கள் அவர்கள்தான்.
மாநக்காவரம், யாழ்ப்பாணம், வன்னி, கன்னியாகுமரி, பொதிகை, வடக்கே சத்தியமங்கலம் என அடர்த்தியான வனப்பகுதி அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த உலகம் செம்படையை அங்கீகரிப்பதன் காரணம் கரும்படை மீதான அச்சம்தான் காரணம்.
தமிழர் நிலத்தில் தமிழர் மட்டுமே வாழவேண்டும் என்ற தனித்தமிழியக்கொள்கை கொண்டவர்கள்.
செம்படையைப் போல வேற்றினத்தவரை இணைத்துக்கொள்வது கிடையாது.
தவிர இரு இயக்கங்களும் எந்தச் சூழ்நிலையிலும் தமிழரைக்கொல்லமாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள்.
அதனால்தான் படுதோல்வியைத் தழுவிய பன்னாட்டுப் படை தமிழரையே கேடயமாக நிறுத்தி முன்னேறியது.
செம்படை பின்வாங்க அது கரும்படையினர் பகுதிவரை முன்னேறியது.
ஒருகோடி தமிழர்கள் உயிர்கொடுத்து மீட்ட எங்கள் தாய்மண்ணையும் அதில் வாழும் பத்துக்கோடித் தமிழ்மக்களையும் காக்க வேறுவழியின்றி பணயக்கைதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் போரிட்டது கரும்படை.
அந்த மோதலில் வெறும் ஐந்துபேரை மட்டுமே மீட்கமுடிந்தது.
தமிழ்ப்பொதுமக்கள் இறந்துவிட்டனர்.
பன்னாட்டுப்படையைத் தொடர்ந்து விரட்டி அடித்து 500பேரை கொன்றுவிட்டது.
ஆனாலும் தமிழ்ப்பொதுமக்களை தமது கையாலேயே கொல்லவேண்டிவந்ததே தமது தோல்வியெனக் கருதினர்.
பன்னாட்டு படை மீண்டும் இதேபோல செய்யமுனைவதாக தகவல்கள் வந்தன.
அதைத் தடுக்கவும் பின்விளைவுகளை ஏற்படுத்தி அச்சத்தை விளைவிக்கவும் இவ்வாறு பதிலுக்கு பொதுமக்களைக் கொன்றதாக அறிவித்துள்ளனர்.
அவர்கள் நினைத்திருந்தால் உங்கள் அனைவரையும் கொன்றிருக்கலாம், அல்லது பேரம்பேசியிருக்கலாம், ஆனால் செய்யவில்லை.
சேதமடைந்த கப்பலுக்கு நட்ட ஈடு கொடுத்துள்ளனர்.
அதெல்லாம் செய்திகளில் வராது.
தவிர போரில் யாரைக்கொன்றாலும் அவர்கள் உடலின் படத்தையும் அடையாளங்களையும் வெளிவிடுவார்கள்.
இறந்தவர் வீட்டுக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்புவார்கள்.
நல்லமுறையில் அடக்கம் செய்யும் படங்களையும் நினைவிடத்தின் படங்களையும் வெளிவிடுவார்கள்.
ஆனால், அன்று கடத்திய செல்வச்சீமான்கள் படமோ உயிருடன் இருக்கையில் எடுக்கப்பட்டது.
நினைவிடத்தின் படம் மட்டுமே வெளியிடப் பட்டுள்ளது.
அங்க உடல் அடையாளங்களோ, இரங்கல் கடிதமோ, அடக்கம் செய்யும் படமோ எதுவும் வழக்கம்போல வெளிவரவில்லை.
நான்கு ஆண்டுகள் ஆகிறதுதான்.
ஆனாலும் அவர்களை மறைத்துவைத்திருக்கலாம், அல்லது பெரியவர்களைக் கொன்றுவிட்டு குழந்தைகளை அவர்களே வளர்த்துவரலாம், அல்லது எதிர்ப்புகள் உச்சமடைந்தால் வெளிக்காட்டலாம்.
அவர்கள் பொதுமக்களை கொல்லவில்லை என்பதை மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளனர்.
கரும்படையினர் இதுபோன்ற பழிகளை ஏற்றுக்கொள்வது புதிதுமல்ல.
செம்படைக்கு ஆதரவு பெருகுவதை அவர்கள் விரும்புகிறார்கள்.
அவர்கள் நினைத்திருந்தால் ஐந்தாண்டுகளுக்கு முன் ஆசுத்திரேலியாவின் கல்லூரியில் தமிழ்மாணவர் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக சிறியவிமானத்தில் நான்கேபேர் சென்று கல்லூரியைக் கைப்பற்றி அடித்த மாணவர்களை மூளைச்சலவை செய்து பைத்தியமாக்கிவிட்டு திரும்பியதுபோல பல நாடுகளுக்கும் சென்று பன்னாட்டுப் படையினர் குடும்பங்களைப் பழிவாங்கியிருக்கலாம்.
ஆனால், அவர்கள் அந்த கோடிசுவரக் கப்பலை மடக்கியது காரணமாகத்தான்.
அப்போதுதான் பெருமுதலாளிகள் நடத்தும் தேவையற்ற போர்கள் அவர்களுக்கு எதிராகத் திரும்பியது மாதிரி இருக்கும்".
என்றான்.
No comments:
Post a Comment