Sunday, 4 October 2015

நாங்கள் இருக்கிறோம்

நாங்கள் இருக்கிறோம்.

உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்.

உங்கள் தங்கையின் திருமணம் நாங்கள் நடத்துவோம்.

நீங்கள் படிக்கும் செலவு நாங்கள் செய்வோம்.

உங்களுக்கு அரசுவேலை நாங்கள் தருவோம்.

தரமான பொருட்கள் நாங்கள் விற்போம்.
தகுந்த பாதுகாப்பு நாங்கள் தருவோம்.
தரமான உணவு நாங்கள் அளிப்போம்.
மருத்துவ செலவினங்கள் அத்தனையும் நாங்கள் ஏற்போம்.
வழக்குகளை நீதிவழுவாமல் நாங்கள் நடத்தித் தருவோம்.
உங்களை சுற்றுலா அழைத்துச் செல்வோம்.
உயர்தர ஆடைகள் அணிவிப்போம்.
மதிப்பு மிக்க சமூகநிலைக்கு முன்னேற்றுவோம்.
உங்கள் பண்பாடை, கலாச்சாரத்தை, மொழியை, நாகரீகத்தை இன்னும் உங்கள் தாய்மண்ணுடன் இணைந்த அத்தனையையும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்போம்.

குற்றங்களை ஒழிப்போம்.
தேவைகளை நிறைவேற்றுவோம்.
நிறைவான வாழ்வு தருவோம்.
அறிவியல் முன்னேற்றத்தின் அத்தனை நன்மைகளும் உங்களுக்குக் கிடைக்கச் செய்வோம்.
பொருளாதாரத்தை மேம்படுத்தித் தருவோம்.
மருந்துக்காவது ஒரு துன்பம் வாராதா என்று உங்களை ஏங்கச் செய்வோம்.

நாங்கள் யார்?! நாங்கள் யார்?!
நாங்கள்தான் தமிழருக்கான அரசை நிறுவப்போகும் இளைஞர்கள்.
மேலே சொன்ன வாக்குறுதிகள் ஆசைவார்த்தைகள் இல்லை.
அத்தனையையும் நிறைவேற்றுவோம்.
எப்படி? 
எப்படி என்றால்?
முதலில் எமக்கான ஒரு ஆயுதப் படையை கட்டமைத்து பத்தில் ஒன்பது உயிரைக் கொடுத்தேனும் எமது தாய்தமிழ் மண்ணை மீட்போம்.
அதன் நடுவே ஒரு நிலப்பகுதியை தனியாக உருவாக்கி அதைச் சுற்றி வேலி அமைப்போம்.
அதுதான் தனித்தமிழ் மண்டலம்.
தமிழர் எவரும் அங்கே குடியேறலாம்.
ஒரே ஒரு கேள்வி
'நீ தமிழன் என்கிற ஒற்றை அடையாளத்தை மட்டும் ஏற்கிறாயா?'
ஆம் என்றால் உள்ளே நுழையலாம்.
அங்கே மதம், சாதி, பணம் என எதுவும் இருக்காது.
அங்கே தனி அரசு நடக்கும்.
யாருக்கும் எதுவும் சொந்தமில்லை.
நாளாக நாளாக மற்றபகுதி தமிழரும் அங்கே குடியேற அந்த மண்டலம் விரியும்.
கடைசியில் முழு தமிழர்நாடும் அந்த மண்டலமாக மாறிவிடும்.

இது நடக்குமா?
அரசே அத்தனையையும் செய்யுமா?
மக்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்குமா? 
குழப்பம் வருகிறதுதானே?!
இதற்கான பதில் அன்றாட வாழ்விலேயே இருக்கிறது.

ஒரு பெரிய தொழிற்சாலையை எடுத்துக்கொள்வோம்.
ஒரு நபரை அது வேலைக்கு அமர்த்தி,
எட்டு மணிநேரம் வேலை வாங்கிக்கொண்டு பதிலாக அவருக்கு சம்பளம், சலுகை விலையில் உணவு மற்றும் தேநீர், வாரம் ஒருநாள் விடுமுறை, மருத்துவ வசதி, பாதுகாப்பு பயிற்சி, வருடத்திற்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுமுறை, தமது குடியிருப்பில் வீடு, வருங்கால சேமிப்பு, ஓய்வூதியம், சீருடை, பரிசுகள், கலைவிழாக்கள், போட்டிகள், திறமை மேம்பாடு, மேற்கல்விக்கான உதவி, பதவிஉயர்வு, பல்வேறு படிப் பணங்கள்,கடன்வசதி, காப்பீடு, வாகனவசதி, தொழிலாளர் குழந்தைகளுக்கான பள்ளி, தொழிலாளர் குடும்பத்திற்கான மருந்துவமனை, வெளிச்சந்தையிலிருந்து மொத்தவிலையில் பொருள்பெற்று தருதல், விபத்துக்கு சிகிச்சை மற்றும் இழப்பீடு என இத்தனையும் கொடுத்து உற்பத்திச் செலவுபோக இலாபமும் ஈட்டுகின்றன.
என்றால்...
ஒரு அரசே பெரிய தொழிற்சாலை போல ஏன் இயங்கமுடியாது??
அரசாங்கவேலை என்று தனியே ஏன்?
எல்லாவேலைகளும் அரசுவேலையாக ஏன் இல்லை?
சரி மேற்கண்ட தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி தமது மனைவி மற்றும் இரு குழந்தைகளோடு வாழ்பவர் என்று வைத்துக்கொள்வோம்.
அவர் ஒருவர் வருமானத்தில் நால்வருக்கு உணவு, உடை, இருப்பிடம், குழந்தைகளுக்கு கல்வி, பொழுதுபோக்கு இன்னபிற செலவுகள் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
என்றால் ஒரு தொழிற்சாலை பல்வேறு வகைப்பட்ட வேலைகளுக்கு தமது தொழிலாளிகளை வருடத்திற்கு 280நாட்கள் அதுவும் 8மணிநேரம் வேலைவாங்கிக் கொண்டு தானும் லாபம் ஈட்டி, அரசுக்கு வரியும் கட்டி, தொழிலாளி குடும்பத்திற்கு தேவையான பொருளையும் தரமுடிகிறது என்றால்,
ஒரு அரசு பல்வேறு வகையான வேலைகளைத் தமது குடிமக்கள் மூலமே குறைந்த உழைப்பின் மூலம் செய்வித்து தான் ஈட்டும் லாபத்தை தமது நாட்டின்(மக்களின்) பொருளாதாரமாக வைத்துக்கொண்டு, சம்பளமாக மக்கள் இல்வாழ்வு நடத்த தேவையானவற்றையும் ஆடம்பரப் பொருட்களையும் ஏன் தரமுடியாது?!
ஒரு கடையில் பத்துபேர் சேர்ந்து உடைவாங்கினால் விலைகுறைவாகவும் தரமானதாகவும் வாங்கலாம்தானே!
அதை அரசே கணக்கெடுத்து மொத்தமாக ஏன் தந்துவிடக்கூடாது?
எல்லா குற்றங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணம் இரண்டு, ஒன்று இல்லாமை,  இன்னொன்று சேர்த்துவைத்தல்.
இல்லாமையைப் போக்கி சேர்த்துவைக்க வழியின்றி ஆக்கிவிட்டால்?!
இதற்கு ஏன் இனம் தேவை மனிதனாக மண்டலத்தை அமைக்கலாமே என்றால் அமைக்கலாம்தான்.
ஆனால் கோடிக்கணக்கான மக்களை இணைப்பது சிரமம்.
எந்த அளவு எண்ணிக்கை கூடுகிறதோ அந்த அளவு ஒருங்கிணைப்பு கடினமாகும்.

இனரீதியாகக் கூடுவது சரியாக இருக்கும்.
மனிதர்கள் தாம் மனிதன் என்ற பொதுஅடையாளத்திற்குப் பிறகு இனம் என்ற கட்டமைப்புக்குள் வருகிறார்கள்.

மனிதர்களுக்கிடையேயான வேறுபாட்டில் சாதி, மதம், நாடு, நிறம் போன்றவை இல்லாமல் வாழ்ந்துவிடலாம்.
இவை அன்றாட வாழ்வில் யாதொரு அவசியமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.
ஆனால், இவற்றிற்காக நாம் வீணே அடித்துக் கொள்கிறோம்.

ஆனால், இனம் என்பது இவற்றைவிட பழமையானது.
இனத்தின் முக்கிய கூறு மொழி, இது அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இனம் மற்றும் அதன் பண்பாடு நிலஅமைப்புக்கேற்ப காலநிலைக்கேற்ப வரலாற்று தேவைகளுக்கு ஏற்ப உருவாகியுள்ளது.
மற்றும் இது தனித்தன்மையானது.

சாதி, மத, பண, நாடு போன்ற விடயங்கள் உலகம் முழுவதும் உள்ளன.
தவிர ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு பாதிப்பு விளைவிக்க குறிப்பிட்ட மக்களால் ஏற்படுத்தப்பட்டவை.

முதலில் இனமாக திரண்டால் இனத்திற்குள் வேறுபாடுகள் ஒழிந்து உலகம் இனங்கள்வழியே(மட்டும்) பிளவுபட்டு இருக்கும்.
பிறகு இனங்களுக்கு இடையேயான வேற்றுமையை ஒழிக்க முயலாம்.

ஏற்றத்தாழ்வை ஒழிக்க இரண்டு வழி.
ஒன்று இரண்டையும் கலந்து வேற்றுமையை போக்குதல்,
மற்றொன்று ஒன்றுக்கு சமமாக மற்றதை உயர்த்துதல்.

என்று உலக இனங்கள் தமக்குள் வேறுபாடுகளை ஒழித்து ஒன்றுக்கு நிகராக இன்றொன்று வந்துவிடுகின்றனவோ அப்போது அவை கலந்து ஒரே இனமாக மாறக்கூட வாய்ப்புள்ளது.

என் இனமே சிறந்தது என்ற கருத்தும் இருக்கக்கூடாது என் இனமும் சிறந்தது என்று அனைவரும் எண்ணல் வேண்டும்.

இனவழிப் பெருமைகளைத் தூக்கியெறியுங்கள்.
அவை வரலாற்று பாடங்களாக மட்டும் நம்மை வழிநடத்தட்டும்.
குறிப்பிட்ட பழக்கம் அர்த்தமற்றது எனில் எத்தனை பழமையானதாயிருந்தாலும் தூக்கியெறியுங்கள்.
இனமாக திரளவேண்டிய கட்டாயம் மற்ற இனங்களை விட தமிழர்களுக்கு அழுத்தமாக உள்ளது என்பதை உணருங்கள்.

தேவையற்ற விடயங்களை நோக்கியே நாம் ஓடுகிறோம்.
வீடு கட்ட, திருமணம் நடத்த, பணம் நகை சேர்க்க, வேலை கிடைக்க, மருத்துவம் பார்க்க, மதத்தை பரப்ப, சாதியை காக்க, தொழிலை பெருக்க, வருங்காலத்துக்கு சேர்க்க, கல்வி கற்க என தேவையற்ற விடயங்களில் வாழ்க்கையைத் தொலைக்கிறோம்.
நான் கூறவருவதை பாடம் நடத்துவதுபோல் இன்றி ஒரு சிறிய கதை வடிவில் கீழே தருகிறேன்.
படித்துப் பாருங்கள்.
இந்த பதிவிற்கு பின்னூட்டம் இடாதீர்கள்.
சந்தேகங்கள் எழுந்தால் சிந்தியுங்கள் உங்களுக்கே விடை கிடைக்கும்.

அத்தியாவசியக் கொலைகள்
https://www.facebook.com/photo.php?fbid=373157656121227&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=42&refid=17

No comments:

Post a Comment