கர்நாடகத் தமிழ்ப் பள்ளிகள்
1979ல் கர்நாடகத்தில் இருந்த 70 லட்சம் தமிழர்களுக்கென்று 267 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன.
கர்நாடக அரசின் இனவெறி நயவஞ்சகப் போக்கால் இன்று
ஒரு கோடி கர்நாடகத் தமிழர்களுக்கு 120 தமிழ்ப் பள்ளிகள்தான் உள்ளன.
ஆசியர்களை நியமிப்பதில் கடும் மெத்தனம் காணப்படுகிறது.
பத்தாண்டுகளுக்கு முன் கர்நாடகம் முழுவதும் கிட்டத்தட்ட 3000 தமிழாசிரியர்கள் இருந்தனர்.
இன்று 1000 பேர்தான் உள்ளனர்.
தமிழ்ப் பள்ளிகளை எப்படி பழி வாங்குகிறார்கள் என்று ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன்.
தமிழக எல்லையை ஒட்டி ஆலம்பாடி, பாலாறு, ஜம்போத்பட்டி, சிங்கத்திரா காலனி, அப்புக்கான்பட்டி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட 7கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்பவர்களில் 80 சதவீதம் பேர் தமிழர்கள்.
இப்பகுதி தமிழ்ப்பிள்ளைகள் தமிழ் வழிக் கல்வி கற்க காவிரி ஆற்றை பரிசல் மூலம் கடந்து,
எல்லைதாண்டி தமிழகத்திற்கு வந்து பெண்ணாகரம், நெருப்பூர், ஏரியூர் பகுதிகளில் தமிழ்ப் பள்ளிகளில் படித்துவந்தனர்.
பாராமுகமாய் இருந்த கன்னட அரசிற்கு கோரிக்கை வைத்து கோரிக்கை வைத்து மிகவும் பிற்பாடு இரண்டு தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
2003ல் வீரப்பனாரை பிடிக்க வந்த அதிரடிப் படை தங்குவதற்கு ஒரு தமிழ்ப் பள்ளியை மூடி அதையே முகாமாக்கினர்.
வீரப்பனார் இறந்த பிறகும் அதைத் திறக்கவில்லை.
2006ல் இன்னொரு பள்ளியும் மூடப்பட்டுவிட்டது.
நல்லவேளை காவிரியில் தண்ணீர் விடுவதில்லை.
தமிழ் படிக்கவரும் பிள்ளைகளின் பரிசல்கள் மூழ்காது.
No comments:
Post a Comment