இந்தி படிக்க
பொன்.ராதாக்ருஷ்ணன் வலியுறுத்தல்.
நேரே யூட்யூப் செல்லுங்கள்.
தற்போதைய ஹிந்திபடம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்ததாக ஒன்றை தரவிறக்கிப் பாருங்கள்.
உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமென்றால் படம் அப்படியே புரியும்.
நமக்கு ஆங்கிலமொழி முதலாளி என்றால்
ஹிந்தி பேசுபவனுக்கு அம்மொழி கடவுள்.
ஆங்கிலம் பேசினால் காலிலேயே விழுந்துவிடுவான்.
ஹிந்தியாவிலேயே ஹிந்தி கற்பிக்காத ஒரே மாநிலம் தமிழகம்.
முன்பு ஹிந்திபடிக்காவிட்டால் ஹிந்தியாவில் மாநிலம்தாண்டி வேலைகிடைக்காது என்றார்கள்.
இன்று ஹிந்தியன் தமிழகத்துக்கு பிழைக்கவரும் நிலை.
இப்போது ஹிந்தி படிக்காவிட்டால் அவனை வைத்து வேலைவாங்கமுடியாது என்று கூறுகிறார்கள்.
இன்று ஹிந்தியா மார்தட்டிவரும் சந்திராயனை ஏவிய குழுவில் 8ல் மூவர் தமிழர்.
தமிழன் அறிவுவேண்டும் ஆனால் அது இந்தியில் இருக்கவேண்டுமா?
தன்மொழி மீது பற்றில்லாமல் இந்திவழிக் கல்வியில் படிக்கும் ஹிந்தியன்,
வரலாறு தெரியாமல் செத்தமொழியான சமஸ்க்ருத மொழியை இன்னமும் பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கும் ஹிந்தியன்,
மெத்தப் படித்தவன்தான் ஆங்கிலம் பேசமுடியும் என்ற அளவுக்கு ஹிந்தியை பரவவிட்ட ஹிந்தியன்,
தன்மொழி கலை இலக்கியங்களை குழிதோண்டி மூடிவிட்டு ஹிந்திப் படங்களையே கலையாக பார்க்கும் ஹிந்தியன்,
சே குவேரா என்றால் யார் என்று கேட்கும் அறிவாளி ஹிந்தியன்,
மகாபாரத ராமாயணக்கதைகளை வரலாறு என்று நம்பிவரும் ஹிந்தியன்
ஆங்கிலத்தை அண்ணாந்து பார்க்காமல் இருந்தால்தான் வியப்பு.
பிறப்பால் ஆங்கிலேயர்கள் அதாவது ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட பூர்வீக இங்கிலாந்து மக்கள் தமிழர்களை விடவும் குறைவு.
அவர்கள் மொழி உலகம் முழுவதும் பரவி இன்று ஆட்டிப்படைக்கிறது என்றால் அதற்கு அவர்கள் தன்தாய்மொழி மீது வைத்திருந்த பற்றே காரணம்.
நீ கடல்கடந்து போய் அவன் நாட்டில் அவன் மொழியைப் பேசினால் அவன் உன்னை மதிப்பானா?
அல்லது தன்னைப் பெருமையாக நினைப்பானா?
ஜெர்மனிக்கோ இத்தாலிக்கோ பிரான்சுக்கோ போய் ஆங்கிலத்தில் பேசுங்கள்.
அவன் ஆங்கிலம் தெரியாது என்று கூறுவான்.
கூறுவான் என்பது முக்கியமல்ல.
பெருமையாகக் கூறுவான்.
ஒன்று தெரியாது என்பதை வெட்கப்பட்டுத்தான் கூறவேண்டும்.
ஆனால் வேற்றொரு மொழியைத் தெரியாது என்பதைப் பெருமையுடன் கூறுவேண்டும்.
ஆங்கிலம் தெரியாது என்று கூறும் ஜப்பானியனும் சீனனும் இரஷ்யனும் சாதிக்காததையா ஆங்கிலம் திணிக்கப்பட்ட நம்மைப்போன்றவர்கள் சாதித்துவிட்டார்கள்?
ஹிந்தியாவுக்குள் இருக்கும்வரை ஹிந்தி தமிழை கற்பழித்துக்கொண்டுதான் இருக்கும்.
விளக்குப் பிடிப்பதை விட்டுவிட்டு விடுதலையைப் பற்றி சிந்திப்பீர் தமிழரே.
Sunday, 7 December 2014
ஹிந்தியும் ஆங்கிலமும்
Labels:
ஆங்கிலம்,
ஆதி பேரொளி,
இந்தி,
இந்தி எதிர்ப்பு,
மொழி,
மொழிப்பற்று,
வேட்டொலி,
ஹிந்தி,
ஹிந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment