தமிழர்நாட்டில் சிலைகள்
தமிழர் தாய்நிலம் தமிழர்களின் ராணுவக் கட்டுப்பாட்டிற்கு வந்ததும் தேவையற்ற சிலைகள் அகற்றப்படும்.
அதிலும் ஈ.வே.ரா உட்பட திராவிடத் தலைவர்களின் சிலைகள்
காந்தி உட்பட ஹிந்திய தலைவர்களின் சிலைகள் அனைத்தும் ஒரு இடம் விடாமல் அத்தனையும் அகற்றப்படும்.
தமிழராக பிறந்த தலைவர் அல்லது தமிழருக்காகவே உழைத்த வேற்றினத் தலைவர் தவிர பிறருக்கு சிலை கிடையாது.
மெரீனா கடற்கரையில் உள்ள சமாதிகள் அனைத்தும் அகற்றப்படும்.
பள்ளி பாடப் புத்தகங்களில் தலைவர்கள் பற்றி தனிப்பட்ட வரலாறு எதுவும் இருக்காது.
தற்போதுள்ள பிரம்மாண்ட மணிமண்டபங்கள் அனைத்தும் இடிக்கப்படும்.
நினைவிடங்கள் காலி செய்யப்படும்.
ஈழத்தை ஆக்கிரமித்து சிங்களவர் நிறுவியுள்ள புத்த சிலைகள் போல பிற இனத்தவர் ஆதிக்க நோக்கில் நிறுவியுள்ள சிலைகள் அனைத்தும் அகற்றப்படும்.
முக்கியமான பொருட்கள் இருந்தால் அவை அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.
பொது இடங்களுக்கு தனிநபர் பெயர் இருந்தால் அவை மாற்றப்பட்டு இயல்பான பெயர்கள் வைக்கப்படும்.
இறந்த பிறகும் இந்த மண்ணில் ஆறடியை ஆக்கிரமித்தபடி யாரும் இருக்ககூடாது.
விடுதலைக்காக போராடி மடிந்த மாவீரருக்கு நடுகல் வைக்கப்படும்.
எத்தனை பெரிய தலைவராக இருந்தாலும் எந்த மதத்தவராக இருந்தாலும் இறந்த பிறகு உடல் எரியூட்டப்படும்.
அந்த நீறு(அஸ்தி) அவர் பிறந்த அல்லது வாழ்ந்த இடத்தில் மண்ணில் புதைக்கப்பட்டு அதன் மேல் நின்றநிலையில் ஒரே ஒரு சிலை நிறுவிக்கொள்ளலாம்.
இந்த சிலை அவரது உடலமைப்பு அளவே பெரியதாக இருக்கவேண்டும்.
5 அடி உயர மேடையில் வைத்துகொள்ளலாம்.
அதில் உள்ள கல்வெட்டில் தலைவரது பெயர், பிறந்த தேதி, இறந்த தேதி மற்றும் திறந்தவர் பெயர், திறந்த தேதி தவிர வேறு எதுவும் இருக்ககூடாது.
சிலை பொதுவழியில் இடைஞ்சலாக இருக்ககூடாது.
கல்லில்தான் சிலை வைக்கவேண்டும்.
வண்ணமடித்தல் கூடாது.
தனியார் வளாகத்தில் வைக்கப்படும் சிலைகள் வெளியே இருந்து பார்ப்போருக்கு தெரியாமல் வைக்கப்படவேண்டும்.
வழிபாட்டு தலங்களுடைய கோபுரங்களில் சிலை இருக்கலாம்.
அது தனிநபர் சிலையாக இருக்ககூடாது.
சிலை அமைப்பது மிகச் சிறந்த தலைவர்களுக்கு மட்டுமே!
ஒரு தலைவருக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் சிலை இருக்கும்.
சிலை பராமரிப்பும் அத்தலைவர் பிறந்தநாள் விழா நடத்துவதையும் அரசே ஆடம்பரம் இல்லாமல் செய்யும்.
நமது கலை மற்றும் ஆற்றலை உலகிற்கு காட்ட பெரிய கட்டுமானங்கள் செய்வது அவசியம்.
ஆனால் அது தனிநபர் அடையாளமாக இருக்ககூடாது.
தமிழர்களே!
நடுத்தெருவில் கூண்டுக்குள் வெயிலில் புழுதியில் பறவைகள் எச்சமிட சிலை நிறுவி ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் மாலைபோட்டு புகைப்படம் எடுத்துக்கொள்வது செய்நன்றி ஆகாது.
தனிநபர் முக்கியத்துவம் தமிழர்நாட்டில் இருக்காது.
(படம்: அலெக்சாண்டரின் சிலை)
No comments:
Post a Comment