Wednesday 28 March 2018

தமிழக விவசாயிகள் சிதறிக் கிடப்பதேன்?

தமிழக விவசாயிகள் சிதறிக் கிடப்பதேன்?
----------------------

தமிழகத்தில் வந்தேறிகள் கைவசமுள்ள நிலவுடைமை வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது (நீலநிறம்).

(இதில் பிராமணர் என்பதில் பார்ப்பன குலத் தமிழர் உண்டா என்பது தெரியவில்லை.
எனக்குத் தெரிந்து தமிழ்ப் பார்ப்பனர் எவரிடமும் நிலவுடைமை இல்லை.
எனவே பி என்று குறிக்கப்பட்டோர் வடுக பிராமணராகவே இருக்க வாய்ப்பு அதிகம்)

மேலும் இது ஆங்கிலேயர் கால வரைபடம் ஆகும்.

50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தெலுங்கு கன்னட வந்தேறிகளின் நிலவுடைமை வரைபடத்தில் உள்ளதை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

இத்துடன் திராவிட ஆட்சியில் நகர்ப்புற நிலவுடைமை மார்வாடிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது.

தமிழகத்தில் 8 ல் ஒரு பங்கு நிலம் மலையாளிகள் கையில் உள்ளது.

கேரள எல்லைப்பகுதிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி கேரள குடியுரிமைக்கு விண்ணப்பித்து எல்லைக்கற்களை பிடுங்கி கேரளாவுடன் இணைக்கப்பட்ட தாளூர் போன்ற கிராமங்கள் பல.

இவையெல்லாம் வரைபடத்தில் குறிக்கப்படவில்லை.

அதாவது தமிழகத்தில் பெரும்பாலான நிலம் தமிழருக்கு சொந்தமில்லை.

விவசாய நிலங்கள் பெரும்பாலும் தெலுங்கர் கையில் உள்ளன.
விவசாய சங்கங்களில் பொறுப்பில் பதவியில் இருப்பவர்கள் இவர்களே!

கீழவெண்மணி படுகொலை செய்த கோபாலகிருஷ்ண நாயுடு நினைவுக்கு வரலாம்.
அவருக்கு ஈ.வே.ராமசாமியும் அண்ணாதுரையும் முட்டுக்கொடுத்து நினைவிருக்கலாம்.

விவசாயக் கூலிகளை விவசாயியாக யார் ஒத்துக்கொள்கிறார்கள்?!

தெலுங்கர்கள்தான் தமிழக விவசாயிகளை ஒன்றுசேரவிடாமல் நடுநடுவே ஊடுறுவி உள்ளனர்.

இதுவே விவசாய போராட்டம் பெரிய அளவு வெடிக்காத்தற்கு காரணம்.

நாராயணசாமி நாயுடு சீனிவாசராவ் போன்றவர்களை உப்புக்கு சப்பாணியாக ஒத்துக்கொள்ளலாம்

(வரைபடத்திற்கு நன்றி : பார்க்கவன் தமிழன்)

1 comment:

  1. முதல்படிநிலைச் சாதிகளில் பிராமணர்களின் நிலஉரிமை என்பது கொஞ்சம் மாறுபட்டது. அது கைவச உரிமை அல்ல, வரியில் ஒரு பங்கைக் கொள்ளும் உரிமை மட்டுமே.சோழர்களின் ஆட்சியில் அவ்வுரிமை அளிக்கப்பட்டது. பின்னர் நாயக்கர் ஆட்சியில் அவை மேலும் உறுதி செய்யப்பட்டன.

    மன்னராட்சி மறைந்து பிரிட்டிஷ் ஆட்சி வந்ததுமே அந்த வரி அவர்களுக்கு வராமலாகியது. அவர்கள் ஆங்கிலக் கல்வி கற்று ஆங்கில அரசில் பணியில் சேர்ந்து அவ்வீழ்ச்சியை எதிர்கொண்டார்கள்.
    ஆங்கில ஆட்சிக்காலத்தில் பிராமணர் வகித்த பதவிகள் இந்தியாவுக்கு முழுச் சுதந்திரம் வருவதற்கு முன்னரே குறையத்தொடங்கின. 1920களிலேயே அரசுப்பதவிகளில் கல்விகற்று மேலே வந்த பிற சாதிகள் உரிமைகோரிப் பெறத் தொடங்கின.

    அத்துடன் கிராமங்களில் கிராமகணக்குப்பிள்ளையாக பிராமணர்கள் வகித்த பாரம்பரியப் பதவிகள் இந்தியா முழுக்க அவர்களிடமிருந்து காங்கிரஸ் அரசுகளாலேயே பறிக்கப்பட்டன. கிராம ஆசிரியர்களாக அவர்கள் பெற்றுவந்த ஊதியத்தை நிறுத்தலாக்கியவர் ராஜாஜி. நவீனக் கல்விமுறையைக் கொண்டுவருவதற்காக அவர் இதைச்செய்தார்.

    அதன்பின் இந்தியா முழுக்க கொண்டுவரப்பட்ட நிலச்சீர்திருத்தங்கள் பிராமணர்களின் நிலவுரிமையை இல்லாமலாக்கின. தமிழகத்தில் அதைக்கொண்டுவர வாதிட்டவர் ராஜாஜிதான்.1962ல் காமராஜ் ஆட்சிக்காலத்தில் அது சட்டமாகியது.
    -செயமோகன்
    தமிழ்ப்பார்ப்பனர்களும்(தமிழ்ப்பிராமணர்களும்) பிறமொழிப் பார்ப்பனர்களையும்
    பல பிற சாதியினரையும் போலவே குடியேறியபோது பெண்கள் பற்றாக்குறையால் குடியேறியபகுதியில் பிறசாதியினரிடம் பெண் எடுத்தவர்கள் தான். பல வைதீகப் பார்ப்பனர்கள் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் தெலுங்கு, மலையாள,மராத்தி பார்ப்பனர்களுக்குக் கூட அதிக அளவு நிலவுடைமை இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete