Showing posts with label நாயர். Show all posts
Showing posts with label நாயர். Show all posts

Thursday, 12 October 2017

மலையாளி திருமுருகன்

மலையாளி திருமுருகன்
***************************

மே17 இயக்கத்திற்கு கொடுத்த நேரம் முடிந்துவிட்டது.

மே17 இயக்கத்தின் கள்ளமௌனம் இனி செல்லாது

இனி அதன் தலைவரை 'திருமுருகன் நாயர்' என்றே அழையுங்கள்.

யார் சான்று கேட்டாலும் என் பதிவினைக் காட்டுங்கள்.
அப்படியும் திமிரினால் என்னை தொடர்புகொள்ளுங்கள்.

திருமுருகன் ஒரு மலையாள வந்தேறியே!

12.10.2017
-----------------------

Saturday, 7 October 2017

மே17 இயக்கத்திற்கு சவால்

மே17 இயக்க உறுப்பினர்களே!

உங்கள் தலைவர் திருமுருகன் காந்தி தமிழிரில்லை என்றும்
அவர் மலையாள இனத்தின் சாதியான நாயர் பிரிவில் வரும் எட்டுவீட்டு பிள்ளை என்றும் தகவல் கிடைத்துள்ளது.

தமிழரையும் தமிழையும் வாய்க்கு வந்தபடி தீட்டிய ஈ.வே.ரா வை வழிகாட்டியாக முன்னிறுத்தும் உங்கள் தலைவர்,
தொடர்ந்து பிறமொழியாளர்க்கு ஆதரவாகவும்
தமிழர் இன அடையாளத்தை குழப்பும் வகையிலும் பேசிவருகிறார்.

அதனால் அவர் வேற்றினத்தவர் என்று தமிழர்கள் சார்பில் நான் குற்றம் சாட்டுகிறேன்.

எங்களுக்காகப் போராடுவதாகச் சொல்லும் நீங்கள் உண்மையில் யார் என்று நாங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.
ஒரு இயக்கம் என்றால் பொதுமக்களில் ஒருவர் வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என்பதே முறை.

  எனவே உங்கள் தலைவர் பிறப்பால் தமிழர்தான் என்று 72 மணிநேரத்தில் சான்று காட்டவேண்டும்.

இல்லையென்றால் இந்த பதிவையே சான்றாக வைத்து இனி உங்கள் தலைவரை மலையாளிகளின் முறைப்படி 'திருமுருகன் நாயர்' என்றே அழைப்போம்.

(மே17 உறுப்பினர்களுக்கு கொண்டுசேர்க்கவும்.
நன்றி)

07.10.2017 மாலை 4 மணியளவில் முகநூலில் இட்டது
-----------------------------
மே17 இயக்கத்திற்கு கொடுத்த 72 மணிநேரம் முடிந்தது

மே17 இயக்கத் தலைவர் திருமுருகன் ஒரு மலையாளி  (நாயர்) என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இட்ட பதிவிற்கு எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

மேற்கண்ட பதிவு ஒருவேளை மே17 இயக்கத்தின் மேல்மட்ட உறுப்பினர்கள் பார்வைக்கு சென்றிருக்காதோ என்ற ஐயம் எழலாம்.

மேற்கண்ட பதிவு மே17 இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

அந்த பக்கத்தை பின்தொடரும் (அல்லது பின்தொடர்வதாகக் காட்டப்படும்) ஒரு லட்சத்தி முப்பதாயிரம் பேரும்,
அந்த 138 விருப்பங்களும் 63 பகிர்வுகளும் (share) பெற்ற பதிவினை பார்க்கவில்லை என்று நம்பமுடியாது.

திருமுருகன் காந்தியின் அதிகாரப்பூர்வ முகநூலும் எனது பதிவில் பலரால் குறியிடப்பட்டுள்ளது.
அவருக்கும் எனக்கும் பரஸ்பர நண்பர்கள் 255 பேர் உள்ளனர்.
ஆக திருமுருகன் கவனத்திற்கு இந்த பதிவைப் பற்றி ஒருவர் கூட கொண்டுசெல்லவில்லை என்றும் நம்பமுடியாது.

மே17 இயகக்கத்தினரே!

நீங்கள் ஒன்றும் வேற்று கிரகத்தில் இல்லை.
முகநூல் உங்களது முக்கிய ஊடகம்.
எனது பதிவவைப் பார்க்காதது போல கள்ளமௌனம் காக்கவேண்டாம்.

நீங்கள் பதில் கூறித்தான் ஆகவேண்டும்.
ஒருவேளை பொதுவெளியில் திருமுருகனின் இன அடையாள சான்று காட்டுவதில் தயக்கம் என்றால் என் முகநூலுக்கு அனுப்புங்கள்.
நான் உங்கள் தலைவர் என்ன இனமோ அதை மட்டும் வெளியிடுவேன்.
பிற விபரங்களை வெளியிடமாட்டேன்.

உங்களுக்கு மேலும் 24 மணிநேரம் தருகிறேன்.

10 அக்டோபர், 08:22 PM ·

Sunday, 7 May 2017

பாலக்காட்டு சித்தூரில் தமிழ்த் திருவிழா

பாலக்காட்டு சித்தூரில் தமிழ்த் திருவிழா

பாலக்காட்டில் பேசப்படுவது தமிழே.
அது மலையாளத் தொனியில் இருக்குமே ஒழிய அது சோழநாட்டுத் தமிழே ஆகும்.

உண்மையான (தமிழ்ப்)பார்ப்பனர் தஞ்சையில் இருந்து தொடர்ச்சியாக பாலக்காடு வரை கிழக்கு மேற்காக இருந்தனர். இருக்கின்றனர்.
இந்த வட்டார வழக்குதான் பார்ப்பனத் தமிழ்.

பிறகு கற்கோயில்கள் நாடு முழுவதும் கட்டப்பட்டன.
பார்ப்பனர்களும் தமிழ்மண் முழுவதும் பரவினர்.

பெருங்கோயில்கள் கட்டப்பட்டபோது பிராமணர்கள் வேலைவாய்ப்பு கிடைப்பதால் குடியேறினர்.

பிறகு தமிழனல்லாத குலோத்துங்கன் காலத்தில் பிராமணர் குடியேற்றம் பெருமளவில் நடத்தப்பட்டு பார்ப்பனர்களை விட பிராமணர் அதிகமாயினர்.

அதன்பிறகு வேற்றின ஆட்சி பார்ப்பனர்களை ஓரங்கட்டி பிராமணர்களை எழுச்சிபெறச் செய்தது.

பாலக்காட்டுப் பார்ப்பனர்கள் சோழிய (முன்குடுமி) பார்ப்பனரே ஆவர்.

பாலக்காடு தமிழ்ப்பகுதியாயிருக்க தமிழை மறக்காத இவர்கள் முக்கிய காரணம்.

பாலக்காட்டில் இன்றும் நடத்தப்படும் இராமாயண தொல்பாவைக் கூத்து கம்பராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆயிரம் (தமிழ்ப்)பாடல்களைக் கொண்டது.

பாலக்காடு மாவட்டம் நல்லேபள்ளி நகரத்தில் சுணங்கியம்மன் கோவில் ஆலயவிழாவில் பாடப்படும் ஒரு தமிழ்ப்பாட்டு இராசேந்திரன் காலத்தில் பாலக்காட்டில் குடியேறிய தமிழர்கள் பற்றி கூறுகிறது.
அதாவது ஏற்கனவே இருந்த தமிழர்கள் மத்தியில் தமிழர்கள் குடியேறினர். (பார்க்க: படம்)

இதே பாலக்காடு மாவட்டத்தில் தமிழக எல்லைக்கு அருகே உள்ள சித்தூரில் மாசி மாதம் ஒரு விழா கொண்டாடடப் படுகிறது.
அதன் பெயர் கொங்கன்படை.

இது கி.பி. 1592 ல் கொங்கு நாடு வழியாக நாயக்கர் படை சித்தூரைத் தாக்கிய போது அப்படையை எதிர்த்து போரிட்டு வென்ற நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகை.

இதன் நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்கள் அக்காலம் வரை தூய தமிழ்ப் பகுதியாக பாலக்காடு மாவட்டம் இருந்ததற்கான சான்றுகளைக் கொண்டுள்ளது.

மேற்கண்ட போருக்குப் பிறகு சித்தூர் மட்டும் கொச்சி அரசு செய்த உதவிக்கு நன்றிக்கடனாக பாலக்காட்டு அரசனால் கொடுக்கப்பட்டு கொச்சி அரசுக்கு வெளியே சிறு துண்டாக கொச்சியின் பகுதியாக 1947 வரை இருந்தது.

போருக்குப்பிறகு மலையாளக் குடியேற்றம் நடந்துள்ளது.
அதன்பிறகு தெலுங்கரும் கன்னடரும் குடியேறினர்.
பிறகு மராத்தியரும் குடியேறினர்.
பிறகு குடகு ஜைனரும் துளு பிராமணரும் குடியேறினர்.

முதலில் தமிழ்ப் பகுதியாக இருந்த பாலக்காடு தற்போது பல்வேறு இனங்கள் வாழும் பகுதியாகிவிட்டது.

தமிழர்களின் பழமையான துறைமுகங்களான தொண்டி,  முசிறி ஆகியவற்றில் வந்திறங்கும் வணிகப் பொருட்கள் பாலக்காடு கணவாய் வழியாக தமிழகம் முழுவதும் கொண்டுசெல்லப்பட்டன.
அதாவது நில அமைப்பாலும் வணிக கட்டமைப்பாலும் பாலக்காடு தமிழகத்துடன் தொடர்பில் எப்போதும் இருந்தது. இருக்கிறது.

1500களில் தமிழகம் முழுவதும் வேற்றின ஆட்சியில் இருந்தது.
அப்போது மதுரை நாயக்கரின் கட்டுப்பாட்டில் கொங்கு பகுதியைக் கவனித்து வந்தவர் (இளையங்குடி) வீரப்ப நாயக்கர் என்பவர்.
இவரது அதிகாரி இரணியமூர்த்தி பிள்ளை.
இவருக்கு வந்த வணிகப்பொருட்களை சித்தூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள வாளையாற்றுக் கானலில் சிலர் கொள்ளையடித்தனர்.

மதுரை நாயக்க மன்னர் சித்தூர்க்காரர்கள்தான் இந்த கொள்ளையை நடத்தியதாக தவறாக நினைத்து
கொள்ளையர்களை ஒப்படைக்காவிட்டால் போர் தொடுப்போம் என்று பாலக்காட்டை ஆண்ட சேகரிவர்மருக்கு ஓலை அனுப்புகிறார்.
நாயக்க மன்னர் அனுப்பிய எச்சரிக்கை ஓலை தமிழில் எழுதியிருந்தது.
இதை ஓலைமுறி என்று அழைக்கின்றனர்.
சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் விரவி கொச்சையான தமிழில் இது எழுதப்பட்டுள்ளது.

சேகரிவர்மர் ஆட்சியில் பாதைக் காவலராக இருந்தோர் சம்பத்து மன்றாடியார்கள்.
இவர்களுக்கும் ஓலையின் மற்றொரு படிவம் அரத்தி என்ற பறையர் பெண் மூலம் கொடுக்கப்பட்டது.
உடனே சித்தூரின் நூறுவீட்டு நாயகர்களுடன் கலந்துரையாடிய மன்றாடியார்கள் சேகரிவர்மருக்கு தகவல் அனுப்பினர்.

பதில் அனுப்ப ஒரு வாரக் கெடு கொடுக்கப்பட்டிருந்தது.
சேகரிவர்மர் படையோ மிகவும் சிறியது.
அவர் உடனே கொச்சி அரசர் கேசரிராமவர்மனிடம் உதவி கேட்டு ஓலை அனுப்பினார்.
ஆனால் பதில் எதுவும் வரவில்லை.

கெடு முடிந்ததும் வீரப்ப நாயக்கர் படைகள் மணலியாற்று வடகரையில் மணலித்துறை என்ற இடத்திற்கு வந்து கூடாரம் அடித்தன.
இருட்டிய பிறகு மதுரை படை ஊருக்குள் நுழைந்தது.

எருமை மீது அமர்ந்தபடி ஊருக்குள் நுழைந்த நாயக்க மன்னனை அப்பகுதி நாட்டுப்பாடல் கீழ்க்கண்டவாறு (தமிழில்) விவரிக்கிறது,

வெத்திலை போட்டு இருவழியா ஆறொழுகும்
வெத்திலைச் சாறு எச்சில்பட்ட செம்பொன்தாடி
பெரும்தலையும் போண்டிவயிறு குறுங்கழுத்தும்
செங்கடையும் செகசெகத்த செம்மீன்பல்லும்

சேகரிவர்மரின் சிறியபடை நாயக்க படையை எதிர்க்கமுடியாமல் சிறிதுநேரத்திலேயே சிதறியது.

எதிர்பாராத விதமாக கொச்சி அரசர் அனுப்பிய உதவிப்படை அங்கு வந்து சேர்ந்தது.
இதை எதிர்பார்க்காத நாயக்கபடைகள் நிலைகுலைந்தன.
படையை வழிநடத்திய ஊத்துக்குளி பாளையக்காரர் காலிங்கராயர் கொல்லப்பட்டார்.
நாயக்கப்படை பின்வாங்கி ஓடியது.

காலிங்கராயர் கொல்லப்பட்ட இடத்தில் ஒரு சித்தூர் அம்மனுக்கு கோவில் கட்டினர்.
ஊத்துக்குளி பாளையப்பட்டு வம்சாவழிகள் இந்த சித்தூர் பகவதிக்கு திருப்பணி செய்துள்ளனர்.
இந்த பகவதி முதலில் மூகாம்பிகை என்றே அறியப்பட்டாள்.
இதற்கு நாயர்கள் பூசாரிகளாக உள்ளனர்.

இந்த கோயிலுக்கு முன்பு சேகரிவர்மரின் குலதெய்வமான பழையனூர் காளிக்கு ஒரு சிறுகோவில் கட்டினார்.
இதில் எம்பிரான்திரி எனும் மலையாள பிராமணர் பூசாரியாக உள்ளனர்.

சித்தூரில் கொங்கன்படை விழாவை நடத்துவோர் சம்பத்து மன்றாடியார்கள்.
தமிழர்களான இவர்கள் தற்போது தமிழை மறந்துவிட்டனர்.

இப்போது விழா பற்றி பார்ப்போம்.

முதலில் கணியார் அல்லது கணியன் (பறையர்) அழைக்கப்பட்டு திருவிழா இடையூறின்றி நடக்குமா என்று 'விரிச்சி' பார்ப்பார்கள்.

பிறகு 'கும்மாட்டி',
இதன் பொருள் என்ன என்று கணிக்கமுடியவில்லை.
இதில் போர்க்கொடி ஏற்றப்படும்.
ஆண்கள் நீண்ட கழிகளில் காட்டுப்பூக்களை இலைதழையுடன் கட்டி எடுத்துவருவர்.
மாலை அம்மன் ஊர்வலத்தோடு இளைஞர்கள் போருக்கு ஊர்வலமாகச் செல்வது போல பேரொலி எழுப்பியவாறு செல்வர்.

அடுத்தது 'பாணன் - பாட்டி',
இது கொள்ளையர்களைப் பிடிக்க எடுத்த முயற்சியில் பாணனையும் அவனது மனைவியையும் சந்தேகத்தின் பெயரில் நாயர்கள் பிடித்துவந்து சம்பத்து மன்றாடியார்களிடம் விசாரணைக்காக நிறுத்திய நிகழ்வு நாடகமாக நடிக்கப்படும்.
பாணன் தனது ஊர் திருச்சிவப் பேரூர் (திருச்சூர்) என்றும் தன் மனைவியின் ஊர் அங்காடிபுரம் என்றும்
குருநாடு, குப்பநாடு, நெடியிருப்பு, தாளியூர், ஆலத்தூர், வில்லுபுத்தூர், காஞ்சிரப்புழை, காட்டூர், மஞ்சளூர், பல்லாவூர், கண்ணாடி ஆகிய ஊரில் உள்ள பாணர்களுக்கு தான் தலைவன் என்று கூறுவான்.
(மேற்கண்ட ஊர்கள் பாலக்காடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ளன)

அடுத்து இதேபோல இரண்டு நம்பூதிரிகள் விசாரிக்கப்பட்டமை நடித்துக்காட்டப்படும்.
இதில் நம்பூதிரிகள் தனது வீட்டில் திருட்டு போனதாகவும் மாந்திரீகம் செய்யும் பெரும்பாணனைப் பார்த்து குறிகேட்க வந்ததாகவும் கூறுவர்.

அடுத்து 'ஆசாரிவேலை', இதில் ஒரு தச்சாசாரியை பிடித்து வந்து விசாரித்ததை நடித்துக்காட்டுவர்.

பிறகு நாயக்கப்படை உளவாளிகள் ஊருக்குள் வந்து திருடியதை மாங்காய் திருடன், தேங்காய் திருடன், பலாப்பழத் திருடன் முதலிய பெயர்களில் வேடமிட்டு நடித்துக்காட்டுவர்.

பிறகு அரத்தி எனும் பறைச்சி மன்றாடியார்களிடம் போர் ஓலையைக் கொடுப்பது காட்டப்படும்.
இதை 'அரத்தி காவு தீண்டல்' என்பர்.

கொங்கன்படை படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு சித்தூர் மற்றும் நெம்மாறை ஆகிய தாலுகாக்கள் கொச்சிக்கே கேசரிவர்மரால் பரிசாகக் கொடுக்கப்பட்டன.

சித்தூரை ராணுவமயமாக்க நாயர்கள் சித்தூரில் குடியேற்றப்பட்டனர்.
அந்த விபரங்கள் கீழே,
காவல் பாடியில் இருந்து எழுவத்து வீட்டார் மற்றும் புறையத் வீட்டார்,
வெள்ளிநாழியிலிருந்து அம்பாட் வீட்டார்,
பாலக்காட்டிலிருந்து சிற்றிடத்து வீட்டார் மற்றும் தச்சாட்டு வீட்டார்,
செறுவத்தூரிலிருந்து செறுவாலைக் குடியினர்,
கண்ணாடி பகுதியிலிருந்து வாக்கையில் எனும் வீட்டார்.

பின்னால் குடிவந்த இவர்களே கொங்கன்படை விழாவின் காரியதரிசிகளாக அவ்விழாவை பொறுப்பேற்று நடத்துகின்றனர்.
குறிப்பாக அம்பாட்டு, தச்சாட்டு, பொறையத்து, எழுவத்து என நான்கு வீட்டு மலையாளிகள்.

முக்கியநாளான அன்று,
முதலில் 'பறையெடுப்பு',
இப்பொது பறைக்குப் பதில் செண்டைமேளம் அடித்து யானைகளை ஊர்வலமாக அழைத்துவருகிறார்கள்.

அடுத்து "தாயம்பாகை',
  இதில் மாரார்கள் ஒரு வித செண்டை மேளம் அடிப்பர்.
  பிறகு பூசாரி மீது அம்மன் வந்து திருநீறு பூசும்.
பிறகு 'கோலக்குழந்தைகள்',
அதாவது ஆண் அல்லது பெண் போல வேடமிட்ட குழந்தைகள் பெரியவர்கள் தோளில் அமர்ந்தபடி ஊர்வலமாகச் செல்வர்.
இதை நாயர் மற்றும் பிராமணர் செய்கிறார்கள்.

அதன் பிறகு 'தட்டின்மேல் கூத்து',
மூங்கில் களி மற்றும் தப்பைகளால் செய்யப்பட்ட பெரிய தட்டின் மீது வேடமிட்ட சிலர் ஆட அதை எட்டுபேர் தூக்கியபடி செல்வர்.
இதோடு 'என்னடி சிங்கி ஏதடி சிங்கி' என்று பாடியபடி சிங்கன்-சிங்கி நாடகத்தின் ஒரு காட்சியை வேடமிட்டு நடிப்போர் உண்டு.
'என்ன செய்வேன் ஏது செய்வேன் என் மகனே' என்று சந்திரமதி வேடமிட்டு ஒரு பெண் புலம்பியபடி வருவாள்.

பிறகு இருபது பேர் மார்பில் தோல்பட்டை கட்டி இடுப்பில் கத்தியை செருகி ஈழுவர் வேடமிட்டு ஊருக்குள் ஓடி வந்து கொங்கன்படை வந்ததைக் கூறுவர்.

பிறகு ஊர்வலம் சித்தூரம்மன் கோவிலை வந்தடையும்
கோலக்குழந்தைகள் பழையனூர் கோயிலுக்குப் போவார்கள்.
மாலை ஆகியிருக்கும் இப்போது 'பாண்டிமேளம்' அடிப்பார்கள்.
பிறகு வானவேடிக்கை நடக்கும்.

அதன்பிறகு 'படைமறித்தல்',
இரவு சிற்றிடத்து வீட்டார் கொங்கன்படை வேடமிட்டு குதிரை மீதமர்ந்து வெடிகளை வெடித்தபடி ஆரவாரமாக வருவர்.
இதற்கு தாரை தப்பட்டம் பாலத்துள்ளி பறையர்கள் முழக்குவார்கள்.

கொங்கப்படை பகவதி கோயிலை வலம்வந்து ஒரு கொங்கன் போர் ஓலையை வாசிப்பான்.
இதை வழிவழியாக மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு வருவதால் மளமளவென கூறுவான்.

பிறகு கொங்கன் வேடமிட்ட ஒருவன் தலைமையில் படை பந்தங்களுடன் ஊருக்குள் நுழையும்.

அடுத்த நிகழ்வு 'படை ஓட்டம்',
இதில் இரண்டு படைகளும் மோதுவது போல நடிப்பார்கள்.
நாயர்படையில் நாயர்பெண்களும் ஆண்வேடமிட்டு கையில் கிடைத்த ஆயுதங்களுடன் போரில் கலந்துகொண்டதை நடித்துக்காட்டுவர்.
சிலரை கட்டிலில் கிடத்தி தூக்கிச் செல்வர்.
சிலர் ஒப்பாரி வைப்பர்.
கொங்கன் எருமை போல மரத்தில் செய்து அதன் தலையை வெட்டுவார்கள்.

அடுத்து 'பொன்வேலை',
இதில் இரவு மூன்று மணி அளவில் தாயம்பகை அடித்து சித்தூருக்கு திரும்புவார்கள்.
பிறகு வானவேடிக்கை நடக்கும்.
பிறகு சேகரிவர்மர் வந்து போர்நடந்த இடத்தைப் பார்வையிட்டதை ஒரு மன்றாடியார் நடித்துக்காட்டுவார்.

இதன்பிறகு 'அச்சனும் மகனும்',
இது மலபாரின் இராமந்தளியில் இருந்து ஒரு பாணனும் அவரது மகனும் போர்பயிற்சி அளிக்க சித்தூர் வந்தது நடித்துக்காட்டப்படும்.

அடுத்து மலமையும் தெய்யாட்டமும்,
இதை தரக மன்றாடிகள் நடத்துவர்.
மலமைக் களி எனும் பாடலின் தாள கதிக்கு ஏற்ப கால்வைத்து ஆடும் விளையாட்டே இது.

இதற்கடுத்து தெய்யாட்டு,
பகவதி பிரதிஷ்டை செய்த நிகழ்வைக் குறிக்கும்.
கணபதி பாடல் பாடி தொடங்குவர்.

கற்றைச் செஞ்சடை முடியோன் கறைக்
கண்டன் மகன் பிள்ளையோன்
ஒற்றைக் கொம்புடையதொரு கணபதிக்கு
அபயமே ஞான்

பிறகு பகவதியுடன் சிவனை காண்பதாக

கண்டங்க கொண்டு ஞொஞ்சுடுத்து
அம்ம கையில் வளையிட்டுக் கண்ணெழுதி
கிண்டியில் நீர் கோறிக் கால்கழுகி
அம்ம சிளிவரி வெத்திலை கைபிடித்து
கைலாசத்துக்குச் சென்று
ஏழுவலம் கொண்டு நின்று
ஐயஞ்சு பூதி தெளிஞ்சம்மே
அரியிட்டுக் கைதொழுதாளே
பின் பூதப்படைகளுடன் சேர்ந்து
அவ்வண்ணம் அவளிருந்தாளே
அம்ம அக்கணத்தோடிருந்தாளே

என்ற பாடல் பாடப்படும்.

இதன்பிறகு 'பரிசைமுட்டு',
நூற்றைம்பது ஆண்டுகள் முன்பு சீக்கு எனும் முஸ்லீம் பாடிய பாடல்கள்.
இவை காலம் செல்லச்செல்ல வடிவம் மாறிவிட்டன.
இதை 'படைவெட்டுப் பாடல்கள்' என்கின்றனர்.
கோவை அப்பாச்சி கவுண்டன்பதியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த ஆறுமுகம் பிள்ளை கொங்கப்படை பற்றி தமிழில் எழுதியுள்ளார்.
அது (சில பாடல்கள் தவிர) இன்று கிடைக்கப்பெறவில்லை.

அடுத்து 'பள்ளு',
பள்ளர்கள் பாடும் பாடலே பள்ளு ஆகும்.
இதில் ஆடு பலியிடுவது சமீபகாலம் வரை நடந்தது.

பிறகு நான்குமணி அளவில் அனைவரும் கூடிநிற்க அம்மன் பூசாரி மீது வரும்.
மன்றாடியார் முன்னிலையில் நான்கு வீட்டு மேனோன்மாரும் வரவு செலவு கணக்கு வாசித்து அம்மனிடம் ஒப்புதல் வாங்குவார்கள்.

இதோடு விழா முடியும்.


உண்மையில் போரில் ஈடுபட்ட தமிழ் வெள்ளாளர்களுக்கு செம்பனாம்பதி, நெல்லியம்பதி, வலிய வள்ளம்பதி, கோழிப்பதி, குன்னங்காட்டுப்பதி, சர்க்கார்பதி, எடுத்தேன்பதி, தேனம்பதி, வடகரைப்பதி, பாலார்பதி, ஒழலப்பதி, பெரும்பதி, ஆட்டையாம்பதி என சித்தூர் மன்னரால் அளிக்கப்பட்ட நிலம் இன்றும் அவர்கள் கையில்தான் உள்ளது.
இவர்கள் கொங்கு வேளாளர் உறவின்முறை ஆவர்.

இராமபட்டினம், ஊத்துக்குழி, முத்தூர் ஆகிய ஊர்களின் கவுண்டர்கள் திருவிழாவிற்கு சமீபகாலம் வரை குதிரை அனுப்பியுள்ளனர்

பாலக்காடு மாவட்டத்தில் நடைபெறும் ஒரு திருவிழா இன்றும் தனது தமிழ் வடிவத்தை இன்றுவரை தக்கவைத்துள்ளமை அது நமது மண் என்பதற்கான சான்றுகளில் ஒன்று.

பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி:
கொங்கன்படை - வரலாற்று அடிப்படைகளும் திருவிழா நடைமுறைகளும் (1993)
_ பேரா. கு. அருணாசலக் கவுண்டர்
(Tamilheritage ebook)
 

Tuesday, 11 April 2017

குருதியில் நனைந்த குமரி -17

குருதியில் நனைந்த குமரி -17
---------------------------------------------
நாள்: 28.08.1954
நேரம்: நண்பகல்
இடம்: தேரூர்

காங்கிரஸ் குழு நேரில் பார்வையிட்டு தேவையானவற்றைக் குறித்துக்கொண்டு பலரும் வலியுறுத்தியபடி வரலாற்று தகவல்களைக் கேட்டறிய நாகர்கோவிலுக்கு அருகே இருக்கும் தேரூருக்குச் சென்றனர்.

அங்கே தமிழ்க்கவிஞர் மற்றும் ஆராய்ச்சியாளரான கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை வீட்டுக்குச் சென்றனர்.

வாசலில் அவரது வளர்ப்புப்பிள்ளையும் மருமகனுமான சிவதாணுப்பிள்ளை நின்றிருந்தார்.
காங்கிரஸ் குழுவினர் அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார். 

78 வயதான கவிமணியார் அப்போது மரணப்படுக்கையில் இருந்தார்.

"மாமா தற்போது பேசும் நிலையில் இல்லை.
இந்த இறுக்கமான சூழலில் மாமாவுக்கு தேவையான மருந்துகளும் உணவும் கிடைப்பது சிரமமாக உள்ளது.
எழுப்புகிறேன், கண்விழிக்கிறாரா பார்க்கலாம்"

அனைவரும் அவரது படுக்கையைச் சுற்றி அமர்ந்தனர்.

"மாமா! மாமா! உங்களைப்பார்க்க தமிழ்நாட்டிலிருந்து தலைவர்கள் வந்திருக்கிறார்கள்."

கவிமணி கண்விழித்தார்.

"யார்?! தமிழ்நாட்டிலிருந்தா?!
என்றால் குமரிநாடு இன்னமும் தமிழ்நாட்டுடன் இணையவில்லையா?"

கரையாளர் "அதற்காகத்தான் ஐயா வந்திருக்கிறோம்.
கவலை வேண்டாம்.
காலம் நெருங்கிவிட்டது.
உங்கள் உதவி தேவை.
உங்களுக்குத் தெரிந்த சரித்திர தகவல்களைக் கூறுங்கள்"

கவிமணி "இங்கே சரித்திரம் என்றாலே அது நமது சரித்திரம்தானே ஐயா,
இந்த நாடு முழுவதுமே தமிழருக்குச் சொந்தம்.
மூழ்கிய குமரிநாடு முதல் இமயமலை வரை நமது மண்.
இந்த திருவிதாங்கூர் உட்பட மலையாள நாடு முழுவதுமே சேரநாடு.
சேரர் தமிழர்தான்.
மூவேந்தரில் ஒரு வேந்தன் அழிந்து போனானே?!
திருவிதாங்கூர் என்ற பெயர் அதங்கோடு என்ற தமிழ்ப்பெயர்தான்.
அதங்கோடு, திருவதங்கோடு ஆகி திருவிதாங்கூர் ஆகிவிட்டது.
தமிழ்ச்சங்கத்துக்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டு ஆசான் பிறந்த இடமிது.
போனது போகட்டும் இன்று தமிழ்பேசும் பகுதியையாவது ஒன்றிணைத்து தமிழ்ராஜ்ஜியம் அமையுங்கள்."

கரையாளர் "ஐயா, சேரநாடு மலையாள நாடாக ஆனது எப்படி?"

கவிமணி "நில அமைப்பு முதல் காரணம்.
இன்றைய தமிழ்நாட்டுக்கும் மலையாள நாட்டுக்கும் இடையே மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது.
இங்கே பேசப்படும் தமிழ் சிறிது வேறுமாதிரியாக ஆனது.
அதுவே மலைகளை ஆளும் மலையாளத் தமிழ்.
ஆனாலும் மலைகளுக்கு நடுவே இரு நாட்டையும் இணைக்கும் வழிகள் உள்ளன.
தெற்கே ஆரல்வாய் மொழி கணவாய்,
அதற்கு கொஞ்சம் வடக்கே சிறிய கணவாயான செங்கோட்டை கணவாய்,
வடக்கே பெரியதாக பாலக்காடு கணவாய்.
இன்று இந்த கணவாய்களுக்கு அருகே இருக்கும் நாங்கள்தான் தமிழ்த் தொடர்புடன் இருக்கிறோம்.
தமிழகத்தை ஒட்டியுள்ள தேவிகுளம் பீருமேடு தொழிலாளர்கள் 100 ஆண்டுகள் முன்பு வந்தவர்கள்.
அவர்களும் தமிழ் அடையாளத்துடன் இருக்கிறார்கள்.
மற்றவர்கள் மலையாளிகள் ஆகிவிட்டனர்.

இரண்டாவது காரணம் நம்பூதிரிகள்.
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியாது.
அவர்கள் கடல் வழி வந்ததாகவும் கங்கைக் கரையிலிருந்து வந்ததாகவும் கூறுவர்.
இவர்கள் வேதங்களை வைதீக முறையில் செய்யும் புதியதொரு இந்துமதப் பிரிவைக் கொண்டுவந்தனர்.
யாகம் வளர்ப்பது, சோதிடம் பார்ப்பது, தீட்டுக்கழிப்பது, செய்வினை வைப்பது, என மூடநம்பிக்கையை வளர்த்து ஏதோ தங்களிடம் அதிசய சக்தி இருப்பதாக மக்களை நம்பவைத்தனர்.
நாளடைவில் செல்வாக்கு அதிகரித்தது.
அவர்கள் மணிப்பளவம் அல்லது மணிப்பிரவாகம் என்ற ஒரு மொழியை உருவாக்கினார்கள்.
அதாவது 'தாயை வணங்கி' என்பதை 'மாதாவை நமஸ்கரித்து' என்று 'சமஸ்கிருதத்தைத் தமிழ்நடையில் எழுதும்' ஒரு செயற்கையான மொழியை உருவாக்கினர்.
  மன்னர்களையும் பூசை செய்துதரவாதகச் சொல்லி அவர்களுடன் நெருக்கமாகி மணிபிரவாகத்தை ஆட்சிமொழி ஆக்கினர்.
மன்னனுக்கு அடுத்த நிலையில் இடம்பிடித்தனர்.
மன்னர்கள் மூலம் உழைக்கும் சாதியினரை கீழ்சாதியாகவும் தீண்டத்தகாதோராகவும் ஆக்கினர்.
மன்னனின் படைத்தளபதிகளாக இருந்த தமிழரல்லாத வடுக வம்சாவழிகளான நாயர் வீட்டுப் பெண்களை தனக்கு உரிய பொருள் என்று கட்டுப்பாடு விதித்து அவர்களுடன் கலந்து கலந்து அவர்களைக் கலப்பினம் ஆக்கிவிட்டனர்.
இப்படியாக மேல்தட்டு வர்க்கம் மணிப்பிரவாக மயமானது.
நாளடைவில் அது நடுத்தட்டுக்கும் பரவியது.
ஆனால் அடித்தட்டில் இருந்த தமிழர்களுடன் இனக்கலப்பு நடக்கவில்லை.
மொழி மட்டும் கலந்தது
மணிப்பிரவாகமும் மலையாளத் தமிழும் கலந்து இன்றைய மலையாள மொழி உருவானது.
பழைய தமிழ் வட்டெழுத்துக்களை நகலெடுத்து தனியான புதிய எழுத்துமுறையை நம்பூதிரிகள் உருவாக்கினர்.
தமிழ் வார்த்தையின் கொச்சையான உச்சரிப்பையே மலையாள வார்த்தை என சேர்த்துக்கொண்டனர்.
அதாவது ஆமை என்பதை ஆம என்று உச்சரிப்போம் இதை மலையாளத்தில் ஆம என்ற வார்த்தையாக ஆக்கிக்கொண்டனர்.
இன்றும் இது பாதி தமிழ்.
தமிழர்களுக்கு மலையாளமும் மலையாளிகளுக்குத் தமிழும் அப்படியே புரியும்.
ஐக்கிய கேரளம் அமைந்ததும் முதல் வேலையாக மலையாளத்தில் இருக்கும் தமிழ்ச் சொற்களை நீக்கி அதற்கு இணையான சமஸ்கிருத சொற்களை புகுத்தி புதிய பாடத்திட்டம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்"

கரையாளர் "என்றால் பிராமணரெல்லாம் சுத்த மலையாளிகளா?"

கவிமணி " இல்லை.
சோழர் காலத்தில் இங்கே வந்த தமிழ்நாட்டு பிராமணரான தமிழ் ஐயர்கள் இன்றும் தமிழையே பேசுகிறார்கள்.
தமிழராகவே இருக்கிறார்கள்.
தமிழ் ஐயர்கள் பாலக்காடு, கொடுங்காளூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அக்ரகாரம் அமைத்து வாழ்கிறார்கள்.
சமூகம் என்ற கட்டமைப்பு வைத்துள்ளனர்.
இவர்கள் நம்பூதிரிகளைப் போல தாந்திரீக முறையை பின்பற்றாமல் தமிழ் ஆகம முறையைப் பின்பற்றுகிறார்கள்.
கோவில்களும் தனித்தனிதான்.
பிராமணர்கள் செய்துவரும் கொடுமைகளில் இவர்களுக்கு 1% கூட பங்கு கிடையாது.
மன்னர்களின் திவான்களாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டோர் பெரும்பாலும் தமிழ்ப் பார்ப்பனர்கள்.
அந்த வகையில் அரசுக்கு உடந்தையாக இருந்ததாகக் கொள்ளலாம்.
அப்படிப் பார்த்தால் வேளாளர்களும் உடந்தையாக இருந்துள்ளனர் எனலாம்.

தமிழ் ஐயர்களை இன்றும் தமிழர்களாகவே மலையாளிகள் பார்க்கிறார்கள்.
தமிழ்ப்பட்டர் என்றே அழைக்கிறார்கள்.
தமிழையர்கள் அமைத்துள்ள 'சமூகங்கள்' அவ்வப்பகுதி தமிழர்களை ஒன்றிணைத்து ஆகம அடிப்படையில் கோவில் ஒன்று கட்டி அந்தப் பகுதி நிலங்களை ஒன்றாக்கி கோயில் மூலம் நிர்வகிக்கும் குத்தகை உரிமையை வைத்துள்ளன.
மலையாளிகள் தனக்கான அரசு அமைந்ததும் முதலில் அதில்தான் கைவைப்பார்கள்.
தமிழையர்கள் கையில் இருக்கும் நிலம் பறிபோனால் தமிழர்கள் ஒருங்கிணைப்பும் பொருளாதாரமும் பறிபோகும்"

கரையாளர் "என்றால் நிலத்தின் விளைச்சலை சுரண்டும் நம்பூதிரிகளுக்கும் ஐயர்களுக்கும் என்ன வேறுபாடு?"

கவிமணி " நம்பூதிரிகளைப் போல நிலத்தில் ஏகபோக உரிமையை அனுபவிக்கும் முறை கிடையாது இது.
குத்தகை உரிமை மட்டும்தான்.
இது நமது மாமன்னன் ராஜராஜசோழன் ஏற்படுத்திய முறை ஆகும்.
ஆரம்ப காலத்தில் நம்பூதிரிகள் இங்கே வந்து சிறிது வலுப்பெற்றதும் சேர மன்னர் ஆதரவுடன் திருவனந்தபுரம் அருகே காந்தளூர் சாலை எனுமிடத்தில் ஒரு கல்விக்கூடம் கட்டி அதில் தமிழ்ப்பாணர்களை அழைத்து வந்து போர்ப்பயிற்சி சொல்லிக்கொடுத்தனர்.
சேரர்களுக்கு உதவிப்படையாக இருக்கும் என்று மன்னனிடம் கூறினாலும் உண்மையில் சேரர்களை கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்கத்தான் அந்தப்படை.
ஆனால் அதற்குள் ராசராசன் சேரநாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றான்.
மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்தும், விழிஞ்சம் துறைமுகம் வழியே கப்பல்களை உள்ளே நுழைத்தும் இருமுனைத் தாக்குதல் நடந்தது.
வென்றதும் காந்தளூர் சாலையை இடித்து தரைமட்டமாக்கி அது இருந்த அடையாளமே இல்லாமல் செய்துவிட்டான்.
போர்ப்பயிற்சி பெற்ற மாணவர்களை தனது படையில் சேர்த்துக்கொண்டான்.
நம்பூதிரிகள் கொண்டுவந்த தாந்திரீக முறையை ஒழித்து மீண்டும் ஆகம முறையை நடைமுறைப்படுத்தினான்.
தனது கல்வெட்டுகளில் 'காந்தளூர்சாலை கலமறுத்தருளி' என்றே அவனது மெய்க்கீர்த்தி தொடங்கும்.
இது பற்றி நான் 32 ஆண்டுகள் முன்பே ஆராய்ந்து எழுதியுள்ளேன்."

கரையாளர் "பிராமணரில் தமிழர் உள்ளது போல தாழ்த்தப்பட்டோரிலும் மலையாளிகள் உண்டா?"

கவிமணி "இல்லை. ஆனால் ஈழவர், புலையர், தீயர் என தாழ்த்தப்பட்டோர் இந்த உண்மையை மறந்துவிட்டனர், தங்களை மலையாளிகளாகவே கருதுகின்றனர்.
இன்று மலையாளிகளில் மூன்று பெரும்பான்மைக் குழுக்கள் சிரியன் கிறித்தவர், நாயர்.
அவர்களுக்குள் எத்தனையோ பிரச்சனை இருக்கும் ஆனால் தமிழருக்கு எதிராக ஒன்றாகிவிடுவார்கள்.
உடனே நம்பூதிரியிடம் போய் ஆலோசனை கேட்டு அதுபடி நடப்பார்கள்"

கரையாளர் "உயர்சாதியானரில் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் சிலர் மலையாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகக் கேள்விப்படுகிறோம்"

கவிமணி "சிலர் இருக்கிறார்கள்.
பூணூல் போட்ட நாடார்களும் கூட அந்த வகையில் உண்டு.
நான் வெள்ளாளன்தான்.
குமரி மீட்புக்காக முதலில் விடுதலை அமைப்பு நிறுவிய அப்பாவுப்பிள்ளை வேளாளர்தான்.
நேசமணியின் கட்சியை நிறுவிய பி.எஸ்.மணி வெள்ளாளர்தான்.
இவ்வளவு ஏன்?!
நாஞ்சில் நாட்டுக்காக சேரநாடும் பாண்டியநாடும் மோதிக்கொள்ளும் என்று முன்பே கணித்து அதை மனோன்மணீயம் என்ற காவியமாகத் தீட்டிய சுந்தரம்பிள்ளை வெள்ளாளர்தான்.
அவர் கண்டெடுத்த கல்வெட்டு இன்றும் ஒரு முக்கிய சான்று.
அதுவே பாண்டிய நாட்டின் பகுதியான நாஞ்சில்நாட்டின் மீது சேரநாடு படையெடுத்தபோது காத்துநின்று வீரமரணம் அடைந்த வீரனின் கதையைக் கூறுகிறது.
அதாவது மலையாளிகள் சேரர்கள் என்றே வைத்துக்கொண்டாலும் நாஞ்சில் நாடு அவர்களுக்குச் சொந்தமில்லை என்பதை அவர் ஆணித்தரமாகக் கூறிச்சென்றுள்ளார்.
இது போல தொடக்ககால திருவனந்தபுரம் அரசர்கள் பாண்டிய வம்சமான வேணாட்டு அரசர்கள் என்பதையும் அவர்கள் காலத்தையும் சான்றுடன் நிறுவியுள்ளார்.
இத்தனைக்கும் அவர் மன்னருக்கு நெருக்கமானவர்.
நானும் அவரைப்போல திருவனந்தபுரத்தில் ஆசிரியராக இருந்தவன்தான்.
அவரைப்பற்றி ஆய்வும் செய்துள்ளேன்"

கரையாளர் " என்றால் திருவனந்தபுரம் வரைதான் மலையாளநாடு என்றால் இப்போது திருவனந்தபுரத்தில் தமிழர்கள் எத்தனை சதவீதம்"

கவிமணி " திருவனந்தபுரம் நகரில் 70% வரை இன்று தமிழர்கள்.
மலையாளிகள் தொடர்ந்து அந்நகரின் சுற்றுவட்டாரத்தில் குடியேறி வருகின்றனர்.
அந்நகரின் உணவுப் பொருட்கள் வணிகம் வேளாளர்கள் கையிலும்
மளிகை மற்றும் துறைமுகப் பொருட்கள் வணிகம் நாடார்கள் கையிலும் உள்ளது.
திருவனந்தபுரத்தின் முக்கிய சாலைகள் கடைவீதிகள் என எல்லாமே தமிழர்கையில்தான் உள்ளது.
அந்நகர் மலையாளிகள் கைக்குப் போனாலும் முழுதும் மலையாள மயமாக குறைந்தது 100 ஆண்டுகளாவது ஆகும்.

செங்கோட்டையிலிருத்து கடலுக்கு நேராக ஒரு கோடு கிழித்து அதற்கு தெற்கே உள்ளதை தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும்.
அதற்கு மூழ்கிய குமரிக்கண்டம் நினைவாக பெயர்வைக்கவேண்டும்.
நமது குமரிநாடு மூழ்கிவிட்டது.
அதன் எஞ்சிய அடையாளம் cape comarin என்று ஆங்கிலேயர் அழைக்கும் குமரி முனையும் அங்கே இருக்கும் குமரியம்மன் கோவிலும்தான்"

கரையாளர் "இங்கே நம்பூதிரிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மார்பை மூடமுடியாத அளவுக்கு சாதிக்கொடுமை நடந்ததாக அறிகிறோம்.
அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?"

கவிமணி "நம்பூதிரி சொன்னால் தமிழன் மானங்கெட்டுப்போய் அப்படியே செய்வானா?
இன்றும் பழங்குடிகளிடம் மாரை மூடும் வழக்கம் கிடையாது.
தமிழர்களிடமும் மார்பை மூடும் வழக்கம் முன்பு கிடையாது.
இதை கோவில் சிலைகளில் நீங்கள் பார்க்கலாம்.
இந்தப் பழக்கம் இங்கே மற்ற பகுதிகளை விட அதிககாலம் தொடர்ந்தது.
அதைத்தான் நம்பூதிரி சட்டமாக்கினான்"

கரையாளர் "தங்களது பிரச்சனைகள் தமிழகத்துடன் இணைந்தால் சரியாகிவிடும் என்று நினைக்கிறீர்களா?"

கவிமணி "கட்டாயம் சரியாகிவிடும்.
நாங்கள் தாய்நிலத்துடன் இணைவது எங்களின் பிரச்சனைகளால் அல்ல.
தமிழ்ப் பற்றினால்தான்.
இந்த பற்றுக்கு மதிப்பிருந்தால்தான் இந்தியா ஒன்றாக இருக்கும்"

கரையாளர் "சரி ஐயா, நேருவிடம் இது பற்றி எடுத்துச்சொல்கிறேன்"

கவிமணி "காந்தி இருந்த வரை நேரு மருமகள் போல இருந்தார்.
இப்போது பதவிக்கு வந்தவுடன் மாமியார் போல நடந்துகொள்கிறார்.
அவர் தயவை எதிர்பார்க்காமல் தமிழர்கள் போராடவேண்டும்.
தெலுங்கர்களை இந்த விசயத்தில் நாம் பின்பற்றவேண்டும்.
தென்குமரியும் வடவேங்கடமும் போய்விட்டாலும்
குறைந்தபட்சம் குமரி முனையிலிருந்து வேங்கடமலையான திருப்பதி வரையாவது நம் நாடு ஒரு சிற்றரசாகவேணும் இந்தியாவில் இருக்கவேண்டும்.
நான் உயிருடன் இருக்கப்போகும் காலம் குறைவு.
என் காலத்தில் இது நடக்கவேண்டும்.
என் கடைசி ஆசை இது"
என்று கூறிவிட்டு கண்ணை மூடினார் கவிமணி.
மூடிய கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

திடீரென்று உரத்த குரலில் பாட ஆரம்பித்தார்.
"தென்னெல்லை காத்தருளும் தேவி குமரீநின்
பொன்னடியைக் கும்மிட்டு போற்றுகின்றேன் மன்னுபுகழ்
செந்தமிழ் நாடு ஒன்றாகித் தேவர் நாடு ஒத்து உலகில்
சந்தமும் வாழ வரம் தா"
பாடி முடித்ததும் அப்படியே அயர்ந்துவிட்டார்.
---------------------
தொடரும்