எப்போதுவரை சாதியானது தமிழ் அடையாளமாக இருக்கும்?
தமிழர்களுக்கு என்று முறையான நாடோ அரசோ இல்லை.
இருந்திருந்தால் ஆவணங்களில் 'இனம்' என்பது சேர்க்கப்பட்டு யார் எந்த இனம் என்பதற்கான சான்று இருந்திருந்திருக்கும்.
ஆனால் இன்று நம்மிடம் இனத்தின் உட்பிரிவுக்கான சான்று ஆவணம் மட்டுமே உள்ளது.
ஆக இன்று யாரெல்லாம் தமிழர் என்று அடையாளம் காண சாதி சான்று காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
எனவே என் இன அடையாளமான சாதிச் சான்றிதழைப் பதிவேற்றுகிறேன்.
(சாதி: சேனைத்தலைவர்
சான்றிதழ் எண்: 5663912
தேதி: 09.12.2003)
தமிழர் தாய்நிலம் தமிழரின் (இராணுவக்) கட்டுப்பாட்டில் வந்தபிறகு
இனம் எது என்பதற்கான சான்று வழங்கப்படும் வரை தமிழர் சாதி அடையாளத்தை மறைக்காமல் இருப்பது அவசியமாகிறது.
நமக்கான அரசு அமைந்ததும் சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு இனத்தை மட்டும் ஆவணங்களில் குறிப்பிடவேண்டும்.
மற்ற இனங்களுக்கு இனத்தின் மொத்த வரலாறே நீளமாக இல்லாதபோது
தமிழரின் சாதி வரலாறு பிற இனங்களின் வரலாறை விட நீளமாயிருக்கிறது.
இது தமிழர்களின் சாதியப்பெருமைக்கு வழிவகுத்து பிரிவினை உண்டாக்கி
வந்தேறிகள் அரசியல் செய்ய வழி ஏற்பட்டுவிட்டது.
அதாவது நமது சாதி பிரச்சனைக்கு காரணம் நமது பழமையே ஆகும்.
அதனால் சாதி அடையாளத்தை விட பழமையான இன அடையாளம் புறக்கணிக்கப்பட்டு போதிய ஆய்வுகள் இல்லாமல் இன அடையாளம் அழிந்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
10,000 ஆண்டுகள் பழமையான நமது இனம் அதன் பழமையை நிறுவ முடியாமல்
சில நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையான சாதி வரலாற்றைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது.
ஆக முதலில் சாதி அடையாளத்தை ஏற்றுக்கொண்டு
சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிக்கவேண்டும்.
பிறகு சாதிகள் அனைத்தும் இணைந்து தமிழர்நாடு அமைக்க போராடவேண்டும்.
பிறகு இன அடையாளத்தை உறுதிசெய்து சான்றளித்துவிட்டு சாதிய அடையாளத்தை விட்டுவிட வேண்டும்.
இதுதான் உண்மையான சாதி ஒழிப்பு.
(வருங்காலத்தில் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிடும்.
தமிழினம் மொத்ததமும் ஒரு தமிழ்ச்சாதியாக மாறித்தான் தீரவேண்டும்)
முப்படை கொண்ட தமிழர் அரசு அமைந்த பிறகு
இன்று சாதிய வரலாற்றை எவ்வளவு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோமோ
அதே அளவு தீவிரத்துடன் இன வரலாறை ஆய்வு செய்யவேண்டும்.
சுருக்கமாக,
தமிழர் நாடு தமிழரின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு வரும்வரை சாதி அடையாளமே தமிழ் அடையாளம்.
Tuesday, 18 October 2016
எப்போதுவரை சாதியானது தமிழ் அடையாளமாக இருக்கும்?
Saturday, 19 July 2014
மரியாதைக்குரிய பள்ளர்
மரியாதைக்குரிய பள்ளர்
சன்னதியில் பரிவட்டம்
யானை மீது ஊர்வலம்
வெண்கொற்றக்குடை நிழல்
மள்ளர் குலப்பெருமை மணிமுடியாய்த் தரித்த
தமிழினம்
தமிழ்நாட்டின் பழம்பெரும் கோவில்களான
மதுரை மீனாட்சியம்மன்,திருபரங்குன்றம் ,
பழனி ,திருத்தணி ,திருச்செந்தூர் முருகன்
கோவில்கள் , கோவை பேரூர் பட்டிஸ்வரர் ,
நெல்லையப்பர் , சங்கரன் கோவில் மற்றும்
கழுகுமலை உள்ளிட்ட பல கோவில்களில்
பள்ளர்களுக்கு பழங்காலந் தொட்டு இன்று வரையி
லும் முதல் மரியாதையும் , பள்ளர்கள் சார்ந்த பல
விழாக்களும் நடைபெறுகின்றன ,
திருப்பரங்குன்றம் கோவிலில்
http://mallarchives.blogspot.in/2012/
11/3874.html?m=1
பழனி
http://devendrarkural.blogspot.in/2014/01/blog-
post_8121.html?m=1
மதுரை மீனாட்சி கோவில்
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_9550.html?m=1
திருநெல்வேலி நெல்லையப்பர் சிவன்கோவில்
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_4.html?m=1
பேரூர் (கோவை மாவட்டம்)
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_6.html?m=1
https://m.facebook.com/photo.php?fbid=422122847891374&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
Thursday, 10 July 2014
ஒரு பறைத்தமிழன் விடாமல்

ஒரு பறைத்தமிழன் விடாமல் பறைசாற்றுங்கள்
*************************
*************************
பார்ப்பாரும் பறையரும் ஒருகுலத்தவரே.
வருங்காலத்தைப் பார்த்துக் கூறுபவர், தூதுசெல்வோர்,பூசைமுடிந்தது
திறனுடைய எவரும் பூசை செய்யலாம், இவ்வுரிமை ஏலமும் விடப்பட்டுள்ளது; பார்ப்பனருக்கான சிறப்புச் சலுகைகள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படவில்லை; சேர்ந்து வாழும்பகுதி 'சேரி' எனப்பட்டது; கிரேக்கர் பகுதி ‘யவனச் சேரி’ எனப்பட்டது; சிலப்பதிகாரம் குறிப்பிடும் புறஞ்சேரி எனும்
ஊரில், பார்ப்பனரும், பாணரும் இருந்தனர்; ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்கள் வாழ்ந்த இடத்தின் பெயர் பார்ப்பனச் சேரி ஆகும்; தேவாரம் பாடும் தமிழ்மரபினர் பிடாரர் எனப்பட்டனர்; பவன'பிடாரர்' பெரியகோயிலின் தலைமைக்குரு; பார்ப்பனர்கள் இவருக்கு கீழ்; பறையர், என்போர் தமிழரின் அறிவு மரபினர். பள்ளர்
என்போர், தமிழரின் வேளாண் மரபினர்; இராஜராஜன் தன்னாட்டுப் பார்ப்பனர்களைக் கொன்றான் என்கிறது சாளுக்கியக் கல்வெட்டு; பார்ப்பாரில் பெரும்பகுதியினர் வள்ளுவர்,
பறையர் உள்ளிட்ட அறிவார்ந்த
பிரிவினரே; காஞ்சி சங்கராச்சாரி கருவறைக்குள் நுழையக்கூட
அவருக்கு அனுமதி கிடையாது; 1335ல் மதுரை முகமதிய ஆட்சியை எதிர்த்து தென்னிந்தியாவில் இருந்த பிராமண ஆதரவாளர் இணைந்து அமைத்த அரசே விஜயநகரப்பேரரசு; அதன் ’நாயக்கர்களில்’ கணிசமானோர் பார்ப்பனர்; கிருஷ்ண தேவராயர் தன்மகன் திருமலாவைக் கொன்ற சாளுவ திம்மா என்ற பார்ப்பன அமைச்சரைக் கொல்லவில்லை; ’திராவிடர் என்போர் தென்னாட்டுப் பார்ப்பனரே’; ராசராசனின் தமக்கையார் ஒரு தேவரடியார் என்றால் (நாயக்கர்களின்)தேவதாசி போன்ற இழிவானவர் அல்ல என்பது புரியும்; அந்தணர் என்பார் பிராமணர் அல்லர்; பிராமண ஆதிக்கம்சாதி ஏற்றத்தாழ்வு நாயக்கராட்சியில் திணிக்கப்பட்டது;
அடுக்கடுக்கான ஆதாரங்கள்;
அதிர்ச்சியான தகவல்கள்;
ம.செந்தமிழனின் 'திராவிட அவதூறும் தமிழர் மரபும்'
http://www.keetru.com/
பறையருக்கு இறையிலி நிலங்கள் வழங்கிய இராசராசன்
http://www.keetru.com/
https://www.facebook.com/photo.php?fbid=403824759721183&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
பார்ப்பனர் தமிழரே

அதென்ன எங்கு திரும்பினாலும் பார்ப்பான்
எதற்கெடுத்தாலும் பார்ப்பான்
எவனைக் கேட்டாலும் பார்ப்பான்.
அப்படி அவர்கள் என்ன செய்தார்கள் உங்களை?
சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தினானாம் பார்ப்பான், அவன் மனுதர்மம் என்று சொல்லிக்கொடுத்தால் உங்களுக்கு எங்கே போனது அறிவு?
எந்த ஊர் சாதிக்கலவரத்தில் பார்ப்பான் துணைபோனான்;
சாதியைப் பார்ப்பன் ஏற்படுத்தினான் எப்படி சொல்கிறீர்கள்? அந்தக்காலம் முதல் இன்றுவரை மக்களுக்காகப் பாடுபட்ட எத்தனையோ பார்ப்பனர்கள் இருக்கின்றனர்; தவிர உலகத்தில் அத்தனை மூலைகளிலும் நான்கடுக்கு சாதிகள் உள்ளன;
ஆன்மீகத்துடன் இணைந்துள்ள முதல் அடுக்கு, நிலத்தை ஆக்கிரமித்து காவல் மற்றும் படைத்துறையுடன் இணைந்த இரண்டாம் அடுக்கு, கருவிகளைக் கொண்டு தொழில்செய்யும் மூன்றாம் அடுக்கு, உடலுழைப்பை மட்டுமே கொண்டு பிழைக்கும் நான்காம் வகுப்பு;
உலகம் முழுவதும் இப்படித்தான் இருக்கிறது; அதனால் இவை சரி என்று சொல்லவில்லை இவை ஒழிக்கப்படவேண்டியவையே;
தவிர நீங்கள் வாடிகன் தேவாலயத்திலும் மக்கா மசூதியிலும்கூட பிறப்பால் உயர்ந்தவரென்று அந்த அந்த மதப் பிராமணனைக் காணமுடியும்; இத்தகையவர்களின் ஆதிக்கபலமும் ஒழிக்கப்படவேண்டியதே;
பிராமணன் வேறு பார்ப்பனன் வேறு; தமிழ்ப் பார்ப்பனர் உண்மையில் மற்றபகுதி பார்ப்பனரைப்போல் ஆண்டாண்டுகாலம் அடக்கியாளும் சாதியினர் கிடையாது; 1300 வருடங்கள் முன்பு வேற்றின பிராமணர்கள் பல்லவர்கள் ஆட்சியில் இடம்பிடித்தனர் இதன்பிறகு சமசுக்கிருதம் மெல்ல மெல்ல தமிழ்ப்பார்ப்பனர் மீதும் திணிக்கப்பட்டு வேற்றினப் பிராமணருக்கும் தமிழ்ப்பார்ப்பனருக்கும் கலப்பு நடந்து பிராமணர் பார்ப்பனரோடு பார்ப்பனராய் கலந்துவிட்டனர்; 700வருடங்கள் பிறகு தெலுங்கு-கன்னட அரசான விசயநகர ஆட்சியில் மீண்டும் வேற்றினப் பார்ப்பனர் நுழைந்து இன்னும் வலுவாக தமிழர் அனைவர்மீதும் சமசுக்கிருதம் திணிக்கப்பட்டது; அதன்பிறகு 300 ஆண்டுகள் முன்பு ஆங்கிலேயர் வந்து கிறித்துவத்தையும் ஆங்கிலத்தையும் திணித்தனர்;
இந்த மூன்று காலகட்டத்திலும் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தும் சமசுக்கிருதத்தை எதிர்த்தும் போராடியவர்களில் தமிழ்ப்பார்ப்பனர் பங்கு மறுக்கமுடியாதது; அதேபோல வேற்றின ஆதிக்கத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய தமிழ்ப்பார்ப்பனரின் பங்கும் மறுக்கமுடியாதது;
ஏன் உங்கள் கண்களுக்கு நல்ல பார்ப்பனர்கள் தெரிவதேயில்லை? தமிழுக்காகப் பாடுபட்ட பார்ப்பனர் உங்கள் கண்களுக்குத் தெரியவேயில்லையா? ஆயிரம் ஆண்டுகள் முன்பு ராசராசனின் ஆட்சியில் பிராமண மற்றும் சமசுக்கிருத ஆதிக்கத்தை ஆராய்ந்து அலசிக் காயப்போடும் நீங்கள் 300வருடம் முன்புவரை பிராமண மற்றும் சமசுக்கிருத பொற்காலமான விசயநகர ஆட்சியைப் பற்றி வாய்திறப்பதேயில்லையே ஏன்? திராவிடப் பாசமா?
பார்ப்பனர் பேசும் தமிழின் மொழிநடை வேறுபட்டு இருக்கிறது என்றால் கோயம்புத்தூர் கவுண்டர்கள் தமிழும், நாகர்கோவில் மீனவர் தமிழும், சென்னை மீனவர் தமிழும், பாலக்காடு பார்ப்பனர் தமிழும் வெவ்வேறாக இருப்பதைக் கவனிக்கவில்லையா? என்றால் அவர்கள் தமிழர் இல்லையா?
ஓதும் தொழிலில் வலுக்கட்டாயமாக சமசுக்கிருதம் திணிக்கப்பட்டதால் ஓதும் பார்ப்பனர்கள் சமசுக்கிருதத்தைக் கற்கின்றனர்; எல்லாப் பார்ப்பானும் சமசுக்கிருதம் கற்கிறான் என்று எவன் சொன்னான்?
கி.பி.700லிருந்து கி.பி.1300 வரை பிராமணருடன் இணைந்து ஆதிக்கசாதியாயிருந்த தமிழ்ப்பார்ப்பனர்,1300 களிலிருந்து 1900வரை ஒடுக்கப்பட்டு அதன்பிறகு 1900க்கு பிறகு மீண்டும் தலைதூக்கினர்;
எப்படி என்றால் 1909ல் வந்த மிண்டோ-மார்லி சீர்திருத்தம் 1919ல் வந்த மாண்டேகு செம்சுபோர்டு சீர்திருத்தம் மூலம் ஆங்கில அரசு இந்தியருக்கு விட்டுக்கொடுத்த அரசுபதவிகளில் தமது கல்வி மூலம் இடம்பெற்று மீண்டும் ஆதிக்கசக்தியாக வளர்ந்தனர்; இன்று அவர்கள் மீண்டும் ஒடுக்கப்பட்டு ஐம்பதாண்டுகளில் வேற்றின வந்தேறிகள் அவர்களை விரட்டிவிடும் நிலை வரவிருக்கிறது;
பார்ப்பனீயத்தை ஒழிக்கிறோம் என்று வந்தேறிகளை வாழவைக்கும் திராவிடத்துக்கு இடம்கொடுத்தோம்;
இருந்தாலும் இந்தப்பார்ப்பனர்களை செருப்பாலேயே அடிக்கவேண்டும்; எவனோ ஒருவன் வந்து 'பார்ப்பானை ஒழி' என்று மற்ற தமிழரிடம் சொல்லும்போது நாங்களும் தமிழர்தான் என்றவகையில் தமது ஊடகபலத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யாமல் முட்டாள்த்தனமாக ஆன்மீகம், இந்துமதம், சமசுக்கிருதம், ஆரியம் என்று வந்தேறிகளுக்குத் தோதுவான வழியிலேயே பயணித்து மற்ற தமிழருக்கும் எதிரியாகி வேற்றினப் பார்ப்பானோடும் இணையமுடியாமல் தமது பதவிபலத்தை இறுகபிடித்தபடி தனித்துநிற்கின்றனர்;
உங்கள் ஊரில் அக்கிரகாரம் இருந்தால் உற்றுக்கவனியுங்கள்; அதில் இப்போது பாதிகூட பார்ப்பனர் இருக்கமாட்டார்கள்;
வந்தேறிகளும், ஆதிக்க சாதியாரும் பிராமணர்களை விரட்டிவிட்டு அங்கே நிறைந்துவிட்டனர்; பார்ப்பனரும் கல்வி கற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடிப்போவதையே விரும்ப ஆரம்பித்துவிட்டனர்;
காலில் செருப்பே போடாத, வெறும் தண்ணீரில் துவைத்து பழுப்போடிய ஒற்றை வேட்டியோடும் பூணூலோடும் ஓட்டைமிதிவண்டியில் கால்வாயடிப் பிள்ளையார் கோவிலுக்குப் பூசை செய்து சில்லறையை எண்ணிக்கொண்டு பிழைப்பு நடத்தும் ஒரு ஏழைப்பார்ப்பானைக்கூடவா நீங்கள் பார்த்ததில்லை?
நான் தொடர்வண்டியில் பயணித்தபோது 'பார்ப்பனத் தமிழில்' பேசிக்கொண்டு வந்தார் ஒருவர்; சமசுக்கிருதத்தையும் கிருசுணனையும் புகழ்ந்துகொண்டே வந்தவர் திராவிடத்தையும் ஒருபிடி பிடித்தார்; அவர் கிருட்ண பக்தியை வளர்க்கும் ISKCONஇயக்கத்தைச் சேர்ந்தவராம்; மதுரா என்றொரு இடம் டெல்லி அருகே உண்டு அங்கேதான் கிருட்ணன் பிறந்தாகக் கூறப்படுகிறது; அங்கே தொடர்வண்டி நிற்காவிட்டால் சங்கிலிப் பிடித்து இழுத்துவிடுவாராம்; கிருட்ணன் பிறந்த இடமே இந்தியாவின் தலைநகரமாம்; ஒட்டுமொத்த இந்தியாவும் அனைவருக்கும் சொந்தமாம்; மொழிவாரியாக பிரியக்கூடாதாம்; தமிழ்நாட்டில் தமது இயக்கத்துக்கு(?) எதிர்ப்பு இருக்கிறதாம்; அவரிடம் "நீங்கள் வீட்டிற்குள் என்னமொழி பேசுகிறீர்கள்" என்று கேட்டேன்; அவர் "தெலுங்கு" என்றார்; நான் "அதென்ன வந்து குடியேறிவர்கள் மட்டும் மதம், நாட்டுப்பற்று, மனிதநேயம் என்று மாநிலம் கடந்த விடயங்களை வலியுறுத்துகிறீர்கள்?" என்று கேட்டேன். உறைந்துபோய்விட்டார்; வந்தேறிகள் பிராமணரிலும் ஆதிக்க சாதியிலும் தாழ்த்தப்பட்டோரிலும் கலந்து பல்லாயிரக்கணக்கான வருடங்களாக ஒரே இனமாக வாழும் மக்களை வெவ்வேறு திசையில் இழுக்கிறார்கள்;
அந்த வந்தேறிப் பிராமணன் சொன்ன ISKCON பற்றிக் கூறவா? இது கிருட்ண பக்தியை பரப்பும் 'அமெரிக்க' நிறுவனம்; இவர்கள் வேலை என்னவென்றால் பிராமணர் போலக் குடுமிவைத்து காவியுடுத்தி நாமம் போட்டுக்கொண்டு கிருட்ணநாமம் கூட உச்சரிக்கவராத வெள்ளைக்காரர்களைக் கொண்டு,பல ஏக்கரில் சலவைக்கல் பதித்து வண்டிநிறுத்தும் இடத்துடன் கூடிய குளிரூட்டப்பட்ட அறைகள் கொண்ட ஆடம்பரமானக் கோவில்கட்டி அதில் வரும் காணிக்கையை அமெரிக்காவுக்கு வருமானமாக அனுப்புவது;
பெங்களூரில் இருக்கும் ISKCON கோவில் ஒன்று மட்டுமே colgate என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் சம்பாதித்து தந்த லாபத்தை விட மூன்றுமடங்கு அமெரிக்காவுக்கு சம்பாதித்துத் தருகிறது; பெங்களூரை விட பெரிய ISKCON கோவில் டெல்லியிலும் அதைவிடப் பெரியகோவில் மும்பையிலும் அதைவிடப் பெரியது மதுராவிலும் உள்ளது;
எந்த விளம்பரமும் செய்யாமல் வருமானவரி விலக்குடன் இந்து,கிறித்தவ, இசுலாமிய கோயில்களைக் கட்டி காசுபார்க்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இப்போது போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுகின்றன.
மதம் என்பதே மக்களிடம் இருக்கும் இறைநம்பிக்கை மூலம் சிலர் சுரண்டிக் கொழுக்கத்தான் என்றாலும் இப்போது அது உலகளாவிய வியாபாரமாகிவிட்டது;
பிராமணன் பெயரைச் சொல்லி எவன் எவனோ பிழைக்கிறான்;
அதனால்தான் கூறுகிறேன் பார்ப்பனீயத்தை ஒழியுங்கள் ஆனால் பார்ப்பனர்களை அல்ல;
அவர்களும் இம்மண்ணின் மைந்தரே;
வேற்றினத்து பிராமணரை தமிழ்ப்பார்ப்பனருடன் குழப்பாதீர்கள்;
தமிழராக நாம் இணைவதற்கு எந்தக் காரணமும் குறுக்கேவரக்கூடாது.
https://www.facebook.com/photo.php?fbid=375091589261167&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739