Showing posts with label மள்ளர். Show all posts
Showing posts with label மள்ளர். Show all posts

Monday, 10 February 2025

பறையர் இனி எவ்வழி

பறையர் இனி எவ்வழி?

 சாதி என்கிற அளவுகோலின் படி மட்டுமே பார்த்தால் 
பள்ளர் பறையர் இருவருமே தொடங்கிய இடம் ஏறத்தாழ ஒன்றுதான்!

 பள்ளர் எவரையும் நம்பாமல் தம்மை மட்டுமே நம்பி தமது குடி அடையாளத்துடன் தமக்கான மள்ளரியம் என்ற கருத்தியலை உருவாக்கி தாம் தாழ்ந்தவர் என்ற மனப்பான்மையை விட்டொழித்து தமிழ்தேசியத்தையும் அரவணைத்தபடி தம் கையூன்றி மேலெழுந்து தேவேந்திரர் என்று பெயர்பெற்று பட்டியல் சலுகையைத் தூக்கியெறியும் தன்னம்பிக்கையுடன் களத்திலும் பிற சாதிகளுக்கு வெட்டுக்கு வெட்டு கொடுக்கும் துணிச்சலுடன் நிற்கின்றனர்.
 அவர்கள் கடந்த வந்த பாதையில் பிழைகளும் சமரசங்களும் இருக்கலாம்!
 ஆனால் இன்று தேவேந்திர தலைவர்களும் மக்களும் பிறர் மதிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.
  
 அதேநேரத்தில் பறையர் தலித்தியத்தின் பின்னால் போனார்கள்!
தம்மைத் தாமே தாழ்த்திக்கொண்டு தலித்திய இயக்கத்தை வளர்த்த மலைச்சாமி தேவேந்திரரை வீழ்த்தி அந்த இயக்கத்தை அபகரித்து கட்சியாக்கி திராவிடத்தை துணைகொண்டு பிற சாதிப் பெண்களைத் துரத்தி பல்வேறு சாதிக் கொடுமைகளுக்கும் அவப்பெயருக்கும் ஆளாகி சிறிது தமிழ்தேசியத்தின் மீதும் சவாரி செய்து வளர்ந்து கடைசியில் திராவிடத்திடம் விலைபோய் மண்டியிட்டு கடைசியில் தன் குடிநீரில் தானே மலம் கழித்துவிட்டு நிற்கின்றனர்! 

 பறைத் தமிழர்கள் இனியும் பிதுக்கப்பட்ட புராணத்தை பாடிக்கொண்டு திராவிடத்தின் செருப்பின் கீழ் தலித்திய அசிங்கத்தில் ஒட்டிக் கிடக்கப் போகிறார்களா?! 
 அல்லது தேவேந்திரத் தமிழர்களைப் போல தேசியத்தை அரவணைக்கும் குடிவழி அரசியலைப் பிடிக்கொண்டு மேலெழும்பி வரப் போகிறார்களா?!
 

Tuesday, 29 May 2018

கச்சநத்தம் பள்ளர் பெருமக்களே!

கச்சநத்தம் பள்ளர் பெருமக்களே!

உங்களை வெட்டியவன் தனிப்பட்ட காரணமல்லாமல் சாதிவெறியினாலே வெட்டினான் என்றால்,

வெட்டியவனை நீங்கள் விடாதீர்கள்!
திருப்பி வெட்டுங்கள்!

அவன் அகமுடையானா? தமிழனா? ஒரே ஊர்க்காரனா? என்றெல்லாம் பார்க்காதீர்கள்.

வெட்டுக்கு பதில்வெட்டு கொடுங்கள்!

பள்ளர்கள் ஒருங்கிணைந்து வெட்டிய குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் உங்களை எப்படி வெட்டினார்களோ அதேபோல வெட்டுங்கள்!

அதற்காக குற்றவாளிகளின் ஒட்டுமொத்த சாதிக்கு எதிராகத் திரும்பாதீர்கள்!

பிற சாதியினரையோ அல்லது கூலிக்கு மாரடிக்கும் கட்சிகளையோ இயக்கங்களையோ நடுவில் வரவிடாதீர்கள்!

நீங்கள் அவ்வாறு செய்யவும் மாட்டீர்கள்.

தமிழ்தேசிய சிந்தனையை பள்ளர்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் இல்லை.

இருந்தாலும் பதிவிடுகிறேன்.

Wednesday, 6 September 2017

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர்
(சான்றுகளுடன்)

கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு...
-----------------
முதல் படம்,

14 மார்ச் 2014 தினமணி
டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்:
உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு
by Venkatesan

புதியதமிழகம் கட்சி நிறுவனரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமியின் சாதிச் சான்று தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது டாக்டர் கிருஷ்ணசாமி சமர்ப்பித்த சாதிச் சான்று போலியானது என நெல்லை மாவட்டம் கொடியங்குளத்தைச் சேர்ந்த குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜி எம் அக்பர் அலி அண்மையில் விசாரித்தார்.
கிருஷ்ணசாமியின் தந்தை கொண்டா ரெட்டி சமூகத்தையும் தாய் அருந்ததியர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
ஆனால் வேட்பு மனுவில் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர் என கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
-------------
அடுத்த படம்,

Mallar Advocates Association (MAA)
No.138, Thambu Chetty street,
Chennai 600001.

நாள்: 06.09.2017

அனுப்புநர்,
பெ.இராமராஜ் வழக்குரைஞர்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை 104
தொ.எண். 9176067906

பத்திரிக்கையாளர் சந்திப்பு

உயர்திரு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். எமது வழக்குரைஞர் சங்கம் சார்பில் வருகின்ற வியாழன் (07.09.2017) அன்று காலை 11 மணியளவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளோம்.

சந்திப்பின் நோக்கங்கள்:
1.ஆளும் பா.ஜ.க அரசின் மக்கள்விரோதத் திட்டங்களுக்கு ஆதரவளித்து தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கண்டிப்பது.
2. தேவேந்திர குல வேளாளர் சாதியில் பிறக்காமல் பொய்யான சாதிச்சான்றிதழ் பெற்று அப்பாவி மக்களை ஏமாற்றும் டாக்டர் கிருஷ்ணசாமியின் போக்கை அம்பலப்படுத்துவது.
3. நீட் தேர்வுமுறையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதோடு தொடர்ந்து மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் டாக்டர் கிருஷ்ண சாமியிடமிருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயக் கொடியாகிய சிவப்பு பச்சைக் கொடியை மக்களை அணிதிரட்டுவதற்கான அறைகூவல் விடுப்பது.

இதர முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் சந்திப்பு நடைபெற உள்ளதால் தங்களது பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள,
பெ.இராமராஜ்
---------------
மேற்கண்ட இரண்டு போக கிருஷ்ணசாமி குடும்பம் பற்றி விரிவாக கூறுகிறது தற்போதைய செய்தி ஒன்று:-

டாக்டர் திரு. கிருஷ்ணசாமியின் “தேவேந்திரகுலத்தான்” என்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு

(ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம்)

பொருள்:
டாக்டர்.கே.கிருஷ்ணசாமி மோசடி செய்து “தேவேந்திரகுலத்தான்” என்று பெற்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய விண்ணப்பம்.

பார்வை:
கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் 09-1-1998 அன்று டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்ட நிரந்தர சாதிச் சான்றிதழ் எண் 1063899,
SL.NO. .10 / 98

ஐயா,
டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்ற சாதிச் சான்றிதழை கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட்டுள்ளது.

இது தவறானது, இது ஏமாற்றிப் பெற்ற சதான்றிதழாகும் அவர் தனது செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி “தேவேந்திரகுலத்தான்” என்ற போலியான சாதிச்சான்றிதழை ஏமாற்றிப் பெற்றுள்ளார்.

எனவே மோசடிமூலம் பெறப்பட்ட அவரது சாதிச் சான்றிதழை G.O.Ms(2D) 108,dated 12th September 2007இன்படி ரத்து செய்ய வேண்டும்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை தாலுகாவின் கீழ் வரும் அவரது சொந்த கிராமத்தில் இருந்து தனது சாதிச் சான்றிதழைப் பெறுவதற்குப் பதிலாக அவர் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் தேவேந்திரகுலத்தான் என்ற போலியான சாதிச் சான்றிதழை நிலையான சான்றிதழாகப் பெற்றுள்ளார்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி பிறந்த சொந்த கிராம நிர்வாக அலுவலரால் முறையாக விசாரிக்கப்பட்டு நிலையான சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இது வருவாய்த் துறையின் ஆணை எண். Go.Ms.No.781 dtd 2nd May 1988 –என்பதற்கு எதிரானதாகும்.

திரு.கிருஷ்ணசாமிக்கு 09-01-1998 அன்று நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழில் அவரது முகவரி "கே கிருஷ்ணசாமி த/பெ கருப்பசாமி,
சங்கீதா மருத்துவமனை,
பாலக்காடு மெயின்ரோடு,
குனியமுத்தூர்"
என உள்ளது.
இச்சான்றிதழ் குனியமுத்தூர் கிராமநிர்வாக அலுவலரால் அவர்பிறந்த ஊர் உள்ள ,உடுமலைப்பேட்டைத் தாலுகாவில் நேரடியாக விசாரிக்கப்படாமல் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் விசாரிக்கப்படாமல் வழங்கப்பட்ட்டுள்ளது.
இது மேற்படி வருவாய்த்துறையின் ஆணைக்கு எதிரானதாகும் திரு.கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் என்ற தனது போலியான சாதிச்சான்றிதழை வைத்துக்கொண்டு இரண்டு முறை ஓட்ப்பிடாரம் SC தொகுதியில் MLA ஆகி உள்ளார் இதன் மூலம் உண்மையான தேவேந்திரகுலமக்கள் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தோம்.

இவர் தனது மகன் திரு.சியாம், மகள் திருமதி. சங்கீதா, இவர்களுக்கு தேவேந்திரகுலத்தான் என்று போலிச் சான்றிதழ் பெறுவதன் மூலமாக ஒட்டப்பிடாரம் MLA தொகுதி மற்றும் தென்காசி MP தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட வைக்க விரும்புகிறார்.
இச்செயல் உண்மையான தேவேந்திரகுல மக்கள் அங்கே போட்டியிடும் வாய்ப்பை இழக்கச் செய்வதாகும்.
ஏனெனில் திரு.கிருஷ்ணசாமி அருந்ததியர்(மாதாரி,சக்கிலியர்) சாதி இவரது மனைவி கேரளா OBC சாதி.
இவ்விருவரும் தேவேந்திரகுலமல்ல.
எனவே அவரது மகனும் மகளும் தேவேந்திர குலமல்ல..

மேலும் திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுல சாதி அல்ல.  ஏனெனில் அவரது தாயார் திருமதி தாமரை தாழ்த்தப்பட்ட அருந்ததியர் (சக்கிலியன்-12,மாதாரி சாதி)
மற்றும் கிருஷ்ணசாமியைப் பெற்ற தந்தை கருப்பக்குடும்பன் அல்ல,
கருப்பக்குடும்பன் அவரது காப்பாளர் மட்டுமே.

திரு.கருப்பக்குடும்பன் அவரது தாயார் தாமரைக்கு இரண்டாவது கணவர் ஆவார்.
திரு. கிருஷ்ணசாமி 8 வயது மற்றும் அவரது சகோதரி பாக்கியம் 6 வயது இருக்கும்போது தமது தாயார் தாமரையுடன் மசக்கவுண்டன் புதூரிலுள்ள திரு.கருப்பக்குடும்பன் வீட்டிற்கு வந்து அவருடன் சேர்ந்துள்ளார்.
அதற்குப் பின்னர் கருப்பக் குடும்பனுக்கும் தாமரைக்கும் தங்கம் என்ற ஒரு பெண் பிறந்துள்ளது.

இவ்வாறு இருக்கும்போது எப்படி கிருஷ்ணசாமி தன்னை கருப்பக்குடும்பனின் மகன் என்று கூறமுடியும்?

அரசின் விஜிலென்ஸ் குழுதான் அவரைப் பெற்ற தந்தை எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் அல்லது குடும்பன் சாதியைச் சார்ந்தவர் அல்ல.

எனவே, தாசில்தார் கோயம்புத்தூர் தெற்கு அவர்கள் டாக்டர் திரு.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்று வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.

அத்தோடு டாகடர் கிருஷ்ணசாமியின் மகள். திருமதி.கே.சங்கீதா மற்றும் அவரது மகன் திரு. சியாம் இவர்களுக்கும் தேவேந்திரகுலத்தான் என்று போலியாகச் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பின் அவைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் Tribal நலத்துறை GO.MS.No.106 நாள் 15-10-12 ஆணைப்படி,
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமது விஜிலன்ஸ் குழுமூலம் இவ்வாறு போலியாகச் சான்றிதழ் பெற்ற டாகடர் கிருஷ்ணசாமியின் மீது நடவடிக்கை எடுத்து எமது சாதியை காப்பாற்றுவது கடமை.

திருநெல்வேலி,15-8-2017.

அனுப்பப்படும் நகல்கள்:
(1). Principal Secretary to Govt State of Tamil Nad ,
Revenue Department, Secretariat, Fort St George.
Chennai -600009,
(2). Principal Secretary to Govt State

தேதி: 15-8 -2017
அனுப்புநர்,
S. சிவ ஜெயப்பிரகாஷ், A.D.S.P. (ப.நி),
செல் எண்: 9442219159
செயலாளர்: மள்ளர் பாரதம் சங்கம் (பதிவு எண் .85 / 2013)
செயலாளர்: அகிய இந்திய குடும்பர் சத்திரிய மகாசபாவின் தமிழ்நாட்டுக் கிளை,
தலைமை அலுவலகம்: வாரணாசி,
உத்தரப்பிரதேசம்.
Regd. எண் .1894 (882/1910),
ஆசிரியர்: மள்ளர் பாரதம்.

முகவரி:
எண்:C-32/86H,
ஆசாத்தெரு,
மனகாவலம் பிள்ளை நகர்,
பாளையங்கோட்டை & அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம்,
தமிழ்நாடு - 627 002.

பெறுநர்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
கோயம்புத்தூர் மாவட்டம்,
ஸ்டேட் பாங்க் சாலை,
கோபாலபுரம்,
கோயம்புத்தூர் -641018
-----------
மேற்கண்ட மூன்றும் பள்ளர் பெருமக்களே கொடுத்த புகார் ஆகும்.
சில பள்ளர் உடன்பிறப்புகள் அவரது வளர்ப்புத் தந்தையை உண்மையான தந்தை என்று நம்பி அவருக்கு ஆதவாக செயல்படுகின்றனர்.
இவர் பூர்வீகம் கோவை காமராசர் வீதி (கோவை புரூக்பீட்ஸ் அருகே இருக்கும் அருந்ததியர் வசிக்கும் பகுதி).
இவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் என்பது அங்கே போய் விசாரித்தால் தெரியும்.
--------
இவரது அரசியல் நுழைவே மக்களைக் காவுகொடுத்த தாமிரபரணிப் படுகொலை மூலம் நடந்தது.
1999ல் மாஞ்சோலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பணியாற்றிய கிருஷ்ணசாமி,
அவர்கள் பிரச்சனை முடிந்து வேலைக்குத் திரும்பிய பிறகு நான்கைந்து நாட்கள் கழித்து எங்களை மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டனர் என்று பொய்யாக பேட்டி கொடுக்க,
ஏற்கனவே அதிருப்தியில் இருந்த நிர்வாகம் உடன்படுக்கையை ரத்து செய்து வேலையை நிறுத்தியது.
அடுத்த நடந்த திருநெல்வேலி பேரணியின்போது தி.மு.க முன்பே திட்டமிட்டு தாமிரபரணி ஆற்று நீரை அதிகமாகத் திறந்து வைத்து போராடிய மக்கள் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தி  ஆற்றில் தள்ளியதால் விக்னேஷ் எனும் ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் (பெரும்பாலும் பள்ளர்) இறந்தனர். 500 பேர் வரை காயமடைந்தனர்.

அந்த சூடு ஆறுவதற்குள்ளே 2001 ல் திமுகவுடன் கூட்டணி வைத்து பத்து எம்.எல்.ஏ. சீட்
வாங்கியவர்தான் இந்த கிருஷ்ணசாமி.

இவருக்காக உயிரைவிட்ட எவரையும் இவர் நினைவுகூர்ந்ததோ மரியாதை செலுத்தியதோ ஒருபோதும் கிடையாது
-------------
இது போக இவர் ஹிந்துத்வா கையாள் என்பதற்கும் இரண்டு சான்றுகள் உண்டு.

குமுதம் 16.1.1998
'என் குரு சங்கராச்சாரியார்தான்' என்று கிருஷ்ணசாமி அளித்த பேட்டிக்கான அட்டைப்பட விளம்பரம்.

இது இவரது ஆரம்பகால இந்துத்துவ சார்புக்கு சான்று ஆகும்.
மேலும், நேற்று அனிதா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும்
அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும்
அதை விசாரிக்க முதல்வரையும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்கவுள்ளதாகவும் பேட்டி கொடுத்தார்.
நேற்று மாலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக சென்று இரவு டெல்லியில் (மிக உயர்தர ஆடம்பரமான) ஹோட்டல் ஷெரட்டனில் தங்கிவிட்டு
இன்று (06.09.2017) காலை 11மணிக்கு எந்த (அப்பாயின்ட்மென்ட்) முன் அனுமதியும் இல்லாமல் நேரடியாக பிரதமருக்கு அடுத்தநிலையில் உள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து அனிதா மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க மனு கொடுத்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.

எந்த பதவியிலும் இல்லாத ஒருவரால் நினைத்த மாத்திரத்தில் உயர்மட்ட பா.ஜ.க அமைச்சரை சந்திக்க முடிகிறதென்றால் அவர் அந்த கட்சிக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருக்கவேண்டும் என்று யூகிக்கமுடிகிறது.

மேலும் நீட் தேர்வினை ஆதரிக்கும் இவர் எண்ணூற்றி சொச்சம் மதிப்பெண் மட்டுமே எடுத்த தனது மகளுக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் கெஞ்சி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான இட
ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் இடமும் வாங்கிக்கொடுத்தவர் ஆவார்.
இதனை பாலா பாரதி (கன்னடர்) அம்பலப்படுத்தியுள்ளார்.

இவர் தற்போது மத்திய அரசிடம் எதிர்பார்ப்பது தனது மகளுக்காக திருவனந்தபுரத்தில் கட்டிவரும் மிகப் பிரம்மாண்டமான மருத்துவமனைக்கு எந்த தடங்கலும் வரக்கூடாது என்பதுதான்.

எங்கெங்கு நோக்கினும் உருமறைப்பு வந்தேறிகள் !

Thursday, 29 December 2016

பரந்த மனம் வேண்டும் பள்ளர்களே!

பரந்த மனம் வேண்டும் பள்ளர்களே!

பன்னீர்செல்வம் ஒரு மறவர் என்பதற்காக மட்டுமே எதிர்க்கும் சில பள்ளர்களுக்கு..

முதலில் மள்ளர்-மறவர் மோதல் எப்போது தொடங்கியது என்று அறிக.

தேவரையா தேர்தலில் நிறுத்திய பள்ளர்கள் இருவர்.

1957தேர்தலில் ஃபார்வர்டு பிளாக் சார்பாக ஏ.வேலு தேவேந்திரர் என்பவரையும்
ஏ.பெருமாள் தேவேந்திரர் என்பவரையும்
நிறுத்தினார்.

இதில் ஒருவர் வெற்றியடைந்தார்.
இதன் பிறகே இமானுவேல் சேகரனார் படுகொலை நடந்தது.

இது ஏன் நடந்தது என்றால் சமாதான பேச்சுவார்த்தையின் போது இமானுவேலாரை பிரதிநிதியாக ஏற்கமுடியாது என்றும் அன்று காங்கிரஸ் சார்பாக நின்று வென்றவர்தான் (அவரும் ஒரு பள்ளர்.
தேவரையா நிறுத்திய பள்ளரை காங்கிரஸ் ஆதரவுடன் தோற்கடித்தவர்) பிரதிநிதியாக ஏற்கமுடியும் என்றும் கூறினார் தேவர்.
(சாதியை காரணமாக அவர் கூறவில்லை)

ஆனால் பிறகு மனம் மாறி விட்டுக்கொடுத்தார்.
இமானுவேல் சேகரனாரை பள்ளர் பிரதிநிதியாக ஏற்று மக்களை அமைதியாக இரும்படி அறிவிக்கப்பட இருந்த அறிக்கையில் கையெழுத்து போட்டார்.

இதை மறைத்து அந்த அறிக்கையை வெளிவராமல் தடுக்கவே இமானுவேலாரைக் கொலை செய்து பழியை தேவர் மீது போட்டனர்.
(தேவரை சிறையிலடைத்து மெல்லக் கொல்லும் நஞ்சு கொடுத்தனர்.
அதுவரை ஆரோக்கியமாக கம்பீரமாக வலம் வந்த தேவனார்.
சிறையிலிருந்து வெளிவந்த பிறகு நோயாளி ஆகி விரைவிலேயே மரணமும் அடைந்தார்)

1962 ல் மீண்டும் ஏ.வேலு தேவேந்திரரை ஃபார்வர்டு ப்ளாக் சார்பாக நிறுத்தி வெற்றி பெறச்செய்தார்
முத்துராமலிங்க தேவனார்.

அதுமட்டுமன்றி தேவர் வெற்றி பெற்ற தொகுதிகளில் பள்ளர்கள் கணிசமாக இருந்தனர்.

தேவரையா பள்ளர்களுக்கோ
பள்ளர்கள் தேவனாருக்கோ எதிராக இருந்ததே இல்லை.

அவர் இறக்கும் தருவாயில் தமது சொத்துக்களை பகிர்ந்தளித்த போது 30% பள்ளர்களுக்கு கிடைத்தது.

ஆக தேவர்-தேவேந்திரர் மோதல் அரசியல் லாபத்திற்காக போலியாக உருவாக்கப்பட்டது.

இதனை இரு தரப்பினரும் புரிந்துகொள்ளவேண்டும்.
பன்னீர்செல்லத்தையும் சசிகலாவையும் நாம் தூக்கியெறிந்தால் அந்த இடத்தில் வேற்றினத்தான் வந்து அமர வழி ஏற்படும்.

உங்கள் மனதைக் கேட்டுப்பாருங்கள்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்ற இயற்கைக்கு ஏற்பவே உங்கள் ஆழ்மனம் பதில் சொல்லும்.

பன்னீர்செல்வம் ஒன்றும் நிரத்தரமானவர் கிடையாது.

நாம் பிறகு இவரை அகற்றிவிட்டு மானமுள்ள வேறொரு தமிழரை அரியணை ஏற்றலாம்.

பரந்த மனம் வேண்டும் பள்ளர்களே!

Saturday, 15 October 2016

கூலி உயர்வு கேட்டதால்தான் கீழ்வெண்மணி படுகொலை நடந்தது - ஈ.வே.ரா அறிக்கை

கூலி உயர்வு கேட்டதால்தான் கீழ்வெண்மணி படுகொலை நடந்தது
- ஈ.வே.ரா அறிக்கை

1968ல் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்களை தன் அடியாட்கள் மற்றும் ஆயுதங்களுடன் சென்று தாக்கி விரட்டிவிட்டு,
முதியோர், பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேரை (தமிழர்கள்) வீட்டுக்குள் பூட்டிவைத்து உயிரோடு எரித்துக்கொன்றான் அப்பகுதி மிராசுதாரான கோபாலகிருஷ்ண நாயுடு என்ற வந்தேறித் தெலுங்கன்.

உடனே ஈ.வே.ரா கொதித்து எழுந்தார். அறிக்கைவிட்டார்.

யாருக்கு எதிராக?

அன்று கூலித்தொழிலாளர்களுக்கு பக்கபலமாக நின்ற கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக.

பின்னே! ஒரு வந்தேறி அதிலும் நாயுடு,
இன்னொரு வந்தேறியை அதிலும் நாயுடுவை எதிர்த்து அறிக்கை விடுவானோ?!

ஈ.வே.ரா, கீழ்வெண்மணி படுகொலை பற்றி விட்ட அறிக்கை 28.12.1968 அன்று விடுதலையில் வந்துள்ளது.

* * இடப்பட்டுள்ள இடங்களைக் கவனிக்கவும்.

"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள், விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல
அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல
ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல
மேடைகளிலே பேசுகிறார்கள்.

உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி
விவசாய மக்களை ஏமாற்றி, அவர்களைப் *பலி*வாங்கிக் கொண்டு வருகிறார்கள்.

*கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல.*
இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும்.

நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

*தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும்* என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல்,
நாட்டிலே கலவரத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தி

இன்றைய தினம்,
வலதானாலும் சரி,
இடதானாலும் சரி,
அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி,
இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.

நாகை தாலுக்காவிலே *கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி.
அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர்.*

கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை.
தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது.
இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கம்யூனிஸ்ட்களின் குறி கீழத் தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது.
இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்"

அதாவது கீழ்வெண்மணி படுகொலைக்கு
கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம் என்று கூறுகிறார்.

மேலும், கூலித் தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்திக் கேட்கக்கூடாது.
கிடைக்கும் சம்பளத்திற்குள் வாழ்ந்துகொள்ளவேண்டும்.

மீறி கலகம் செய்தால் கீழ்வெண்மணி போன்ற படுகொலைகளைச் சந்திக்கவேண்டிவரும்.

அப்படியும் அடங்காமல் ஆர்ப்பாட்டம் செய்தால் அரசாங்கம் அடக்கி ஒடுக்கும்.
(அப்போது வந்தேறி அண்ணாதுரை முதல்வர், நடந்து கொண்டிருந்தது திராவிட வந்தேறிகளின் ஆட்சி)

இதுதான் அவர் கூறுவரும் கருத்து.

ஈ.வே.ரா எந்த இடத்திலும் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு கண்டனமோ
அல்லது வெண்மணி பள்ளர்களுக்கு இரங்கலோ தெரிவித்ததே இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்யவேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார்.

கீழ்வெண்மணி படுகொலையில் கைதுசெய்யப்பட்ட நாயுடு நிராபராதி என்று 1965ல் விடுதலை செய்யப்பட்டான்.
இதற்கு வந்தேறித் தெலுங்கனான கருணாநிதி அமைத்த விசாரணைக் கமிஷன் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு ஆதரவாக இருந்தது முக்கிய காரணம்.
நீதிபதி மகாராஜன் தீர்ப்பில் “கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை"  என்று கூறினார்.
இதற்கு நன்றிக்கடனாக திருநெல்வேலியில் ஒரு பகுதிக்கு அவர் பெயர்வைக்கப்பட்டது.
அதுதான் மகாராஜ நகர்.

நாயுடு விடுதலையானபோது அவரை வரவேற்ற தி.மு.க வினர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைத்தனர்.

தி.மு.கவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்யவும் இல்லை.

1968ல் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கீழவெண்மணி கிராமத்தைச் சேர்ந்த13 வயது சிறுவன் நந்தன் தன் நண்பர்களுடன் சேர்ந்து 12 ஆண்டுகள் கழித்து 1980 டிசம்பரில் கோபாலகிருஷ்ண நாயுடுவை வெட்டி படுகொலை செய்தார்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (எம்.எல்) கம்யூனிஸ்ட்களின் அழித்தொழிக்கும் குழு என்று அறியப்பட்ட இவர்களை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை.
கம்யூனிஸ்ட் தலைமை இக்குழுவினருக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டனர்.

ஏனென்றால் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எப்போதும் வந்தேறிகளாகவே இருந்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்மட்டத்தில் இருந்த தமிழர்களுக்கு மேல்மட்டம் எந்த ஆதரவையும் தரவில்லை.
அடுத்த தேர்தலில் கருணாநிதியுடன் அக்கட்சி கூட்டணியும் வைத்துக்கொண்டது.

இன்றைக்கும்கூட இறந்த அப்பாவி மக்களை 'வீரர்கள்' என்று கம்யூனிஸ்ட் கொடியோடு சென்று வணக்கம் வைக்கிறார்களே ஒழிய
கோபாலகிருஷ்ணனை கொலைசெய்து பழிக்குப்பழி வாங்கிய உண்மையான வீரர்களை கொண்டாடுவதில்லை.

நந்தன் உட்பட வெண்மணிப் பள்ளர்கள் 11பேர் தண்டனை பெற்று சிறைசென்றனர்.
சாட்சிகள் இல்லாததால் தண்டனை நிரூபணம் ஆகாமல் சில ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர்.

எந்த போராட்ட வரலாறையும் கடைசிநேரத்தில் நுழைந்து ஆட்டையைப்போடும் பெரியாரியக் கூட்டம் கோபாலகிருஷ்ண நாயுடு கொலைவழக்கை வந்தேறி தெலுங்கரான கோவை ஜி.ராமகிருஷ்ணன் மூலம் எடுத்து நடத்தியது.
என்னமோ அந்த கொலையை தி.க தொண்டர்கள்தான் நடத்தினார்கள் என்றெல்லாம் பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மையில் கோபாலகிருஷ்ணனைக் கொலை செய்தவர்கள் திராவிட அமைப்புகளையும் கம்யூனிஸ்ட் அமைப்புகளையும் நம்பி மோசம் போய் கடைசியில் தங்களது சொந்த இழப்புக்கு பழிவாங்கத் தாமே களத்தில் இறங்கியவர்கள் ஆவர்.

கொலை நடந்தபிறகு ஆளாளுக்கு பங்குக்கு வருகிறார்களே ஒழிய அந்த கொலையைச் செய்ய முடிவெடுத்தவர்களுக்கு எந்த உதவியையும் எந்த அமைப்பும் செய்யவில்லை.

கீழ்வெண்மணி கொலை நிகழ்வு ஒருநாளில் நடந்த நிகழ்வு கிடையாது.
1946லேயே பிரச்சனை தொடங்கிவிட்டது.
அங்கே விவசாயக் கூலிகளாக இருந்த பள்ளர்களுக்கும் ஆதிக்கசாதியான நாயுடுகளுக்கும் உரசல் இருந்துவந்தது.

பள்ளர்கள் நடத்திவந்த இரவுநேர குடிசைப் பள்ளியை நாயுடுகள் நிறுத்தச் சொன்னார்கள்.
பள்ளர்கள் மறுத்தனர்.
ஆதிக்கசாதியினர் எலும்புத்துண்டுகளை வீசி காவல்துறையை அனுப்பினர்.

பள்ளர்கள் காவல்துறையை அடித்து உதைத்து விரட்டினர்.
மறுநாளே ரிசர்வ் படை வந்து இறங்கியது.
முக்கியமான இரண்டு பேரை அழைத்துச்சென்று சிறையிலடைத்தது.

இப்படி புகைந்துகொண்டே வந்த பிரச்சனை முற்றி இறுதியில் நடந்தேறியதுதான் 5 ஆண்கள், 20 பெண்கள், 19 குழந்தைகளைப் பலிகொண்ட அந்த திட்டமிட்ட படுகொலை.

ஜனநாயகமுறையில் தமிழர்களுக்கு கிடைக்காத நீதி  ஆயுதம் மூலமாகக் கிடைத்தது.
ஆனாலும் இழப்பு என்னமோ தமிழர் பக்கம்தான் அதிகம்.

மிக அதிகம்.