Saturday, 11 April 2026

தமிழ்தேசியப் பார்வையில் தாய்க்கிழவி விமர்சனம்



தமிழ்தேசியப் பார்வையில் தாய்க்கிழவி விமர்சனம்

 ஊருக்குள் வட்டிக்கு விடும் ஒரு அடாவடிக் கிழவி!
 அவள் மரணப் படுக்கையில் விழுந்த செய்தியை அறிந்து சந்தோசமாக அவள் சாவைக் கொண்டாட தயாராகும் ஊர்மக்கள்!
 அந்த நேரத்தில் சொத்து சண்டையிலும் வரதட்சணை தகராறிலும் ஈடுபடும் அந்த குடும்பத்து ஆண்கள்! 
 அப்போது அந்த கிழவி பதுக்கி வைத்திருக்கும் தங்கம் பற்றி தகவல் தரும் ஒரு நபர்!
 அதை தேடி கண்டுபிடிக்க முடியாமல் கடைசியில் தாய்க்கிழவியை பிழைக்க வைக்க அல்லாடும் வாரிசுகள்!
 கடைசியில் மனிதநேயத்தை காட்டி பெண்ணுரிமையை புகுத்தி முடிக்கிறார்கள். 

 வன்மத்துக்கு இப்போது காமெடி என்று பெயர்மாற்றி வைத்துள்ளனர் போலும்!

 இதற்கு டைட்டில் கார்டிலேயே விடை இருக்கிறது!
 விஜய் டிவியில் சிறிய நிகழ்ச்சிகளில் தொடங்கி தன் திறமையால் சினிமாவுக்கு வந்து கதாநாயகனாக உயர்ந்த சந்தானம் எனும் ஒரு தமிழனை பொறுத்துக் கொள்ள முடியாத தெலுங்கு லாபி அதே ரூட்டில் சிவகார்த்திகேயன் என்ற தெலுங்கரை வளர்த்து காமெடியன், கதாநாயகன், உச்ச நடிகர் என்று கொண்டுவந்து இன்று தயாரிப்பாளர் அளவுக்கு வளர்த்துவிட்டுள்ளது!

 அழகும் திறமையும் வன்னியர் சமூக பின்புலமும் இருந்தும் உதயநிதியின் உற்ற நண்பராக இருந்தாலும் ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கப்பட்ட சந்தானத்தை இன்று கேட்பார் இல்லை!
  தமிழர்களான நாம் இந்த தெலுங்கு கும்பலிடம் கற்றுக்கொள்ளத் தவறிய முக்கியமான விடயம் இது!
 கருணாநிதி மட்டுமில்லை உதயநிதி வரை அப்படித்தான் இருக்கிறார்கள். 

 மேற்கண்ட படத்தில் வரும் மக்களை தேனியின் தேவர் சமூகம் என்பதை வலிந்து காட்டுகின்றனர்.
 இப்படத்தில் வரும் அனைவருமே மூடர்களாக இருக்கின்றனர்.
 அதாவது முக்குலம் என்றாலே இந்த காலத்திலும் படிக்கத் தெரியாத, ஒழுங்காக உடை உடுத்த தெரியாத, பேச்சிலும் பாவனையிலும் நாகரீகமற்ற காட்டுமிராண்டி கூட்டம் என்றே காட்டுகின்றனர்.

 இவர்கள் முன்கோபியாக, குடிகாரர்களாக, கஞ்சர்களாக, பணத்தாசையும் பேராசையும் பிடித்த நபர்களாக எந்நேரமும் ஒற்றுமை இன்றி அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 ஒவ்வொருவரும் உலகம் தெரியாத முட்டாள்களாக, சினிமா பைத்தியங்களாக, மூடநம்பிக்கைகள் நிறைந்தவர்களாக காட்டப்படுகிறார்கள்.

 கடைசியில் இதை சரிகட்டும் விதமாக அதில் ஒருவருக்கு மனிதநேயம் திடீரென்று ஊறுவதாக காட்டுகிறார்கள்!

 இச்சமூகத்தின் பெண்களை இவர்கள் காட்டியிருக்கும் விதம் மேலும் கேவலமாக உள்ளது!
  பொறாமை பிடித்தவர்களாக, தங்கத்தின் மீது ஆசை உள்ளவர்களாக, அடுத்தவர் குடியை கெடுக்க சதி செய்பவர்களாக, புறணி பேசுபவர்களாக காட்டப்படுகின்றனர்.
  இந்த படம் மருதுபாண்டியர் காலத்திலேயே மறுமணம் செய்யும் வழக்கம் இருந்த மறவர் சமூகத்தை ஏதோ பெண்களை பள்ளிக்கு கூட அனுப்பாமல் கல்யாணம் செய்வித்து அடிமைப் படுத்தி வைத்திருக்கும் சமூகமாக காட்டிவிட்டு
 கடைசியில் அப்பெண்களை கணவனை உதறிவிட்டு செய்தொழில் எதையாவது கற்று சொந்தக் காலில் நிற்கவும் அதன் மூலம் நிறைய தங்கம், சொத்து என சேர்த்துக் கொள்ளவும் அறிவுரை கூறுகிறது!
 மருதுபாண்டியர் மறைந்த பிறகும் அவர்களது மனைவியர் தமது நகைகளை மீட்க வழக்கு போட்டு போராடிய வரலாறு இருக்கிறது! 
 அந்த சமூகத்து பெண்களிடம் தங்க சேமிப்பின் முக்கியத்துவம் பற்றி பாடம் எடுக்கிறார்கள்! 

 படத்தில் வரும் நல்லவர் ஒரு சீன டாக்டர் மட்டுமே!
 எலைட் மக்களிலும் மூடநம்பிக்கை உள்ளவர்கள் உண்டு என்பதை ஒரு சீனில் காட்டுகின்றனர்! 

 இந்த வன்மங்களின் தொகுப்பைத் தான் சிறந்த படம் என்று கொண்டாடச் சொல்கிறார்கள்! 

 வந்தேறிகளின் பணத்தில் சினிமா எடுக்கும் பயல்களுக்கு ஏன் தமிழர்கள் மீது இத்தனை வன்மம் என்று தெரியவில்லை!

 'அயலி' வெப் சீரிஸில் தமிழகத்திலேயே முதல் பெண் டாக்டர் உருவான புதுக்கோட்டை மண்ணை ஏதோ பெண்களை பூட்டிவைக்கும் மர்ம பிரதேசமாக காட்டினார்கள்!
 
  இந்த ஆண்டு வந்த 'தலைவர் தம்பி தலைமையில்' எனும் படமும் ஒரு ஊரே வன்மம் பிடித்த முட்டாள்களின் கூடாரம் என்று காட்டி தமிழ் சமூகத்தின் மீதான இனவெறியை கொட்டித் தீர்த்தது!

 அதற்கு முன்பு வந்த 'ரயில்' திரைப்படம் தமிழர்களை இதற்கு மேல் இழிவாகக் காட்டமுடியாது என்பது போல காட்டியது!
 
 இதற்கும் முன்பு வந்த 'இரவின் நிழல்' சென்னை மக்களை மிருகங்கள் போல காட்டி ஒட்டுமொத்த படத்தில் ஒரே ஒரு தெலுங்கு பெண்ணை மட்டும் நல்லவராக காட்டியது! 

 உதயநிதி பதவியில் இருந்துகொண்டே நடித்து வெளியிட்ட 'நெஞ்சுக்கு நீதி' மற்றும் 'மாமன்னன்' படங்கள் கொங்கு தமிழர்களை சாதிவெறி பிடித்த அரக்கர்களாக காட்டியது!

  இவர்கள் வளர்த்துவிட்ட மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்களும் இதே வழியில் தமிழ் மண்ணில் எங்கோ விதிவிலக்காக நடக்கும் சம்பவங்களை பொது கலாச்சாரமாக காட்டி தமிழர்களை சாதிவெறியர்களாக காட்டுகின்றனர்!
 இவர்கள் பரவாயில்லை பட்டதில் ஒருவரையாவது நல்லவராக காட்டுவார்கள்!
 'நந்தன்' என்றொரு படம் அப்படிக்கூட ஒருவரைக் காட்டவில்லை! 

  அதாவது இந்த கூத்தாடி பயல்களின் வெறிக்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை யாரும் தப்பவில்லை! 

 அதிலும் இந்த நாய்கள் தமிழர்கள் சோறு சாப்பிடுவதை மிகவும் கேவலமாகக் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

 ஒரு தமிழன் சாப்பிடுவது கூட இவர்களுக்குப் பொறுக்கவில்லை!

 தமிழர்கள் மூச்சுவிடுவது கூட இவர்களுக்கு பி்ரச்சனையாக இருக்கிறது! 

 தமிழர்களை தாழ்வு மனப்பான்மை எனும் புதைகுழியில் தள்ள வந்தேறிகளுக்கு கிடைத்துள்ள அற்புதமான ஆயுதம் தான் சினிமா!

 இதனால்தான் அதிகாரத்தில் இருக்கும் வந்தேறிகள் பேப்பர், ரேடியோ, டிவி, சினிமா என அனைத்தையும் தங்கள் இரும்புப் பிடிக்குள் வைத்துள்ளனர். 

 தமிழர்கள் கைக்கு அதிகாரம் சிக்கியதும் முதலில் இந்த ஊடக ஆயுதங்களை தமிழர் வசம்  கொண்டுவர வேண்டும்!
ஆட்சி மாறினால் சினிமா காட்சிகளும் மாறும்! 

 

No comments:

Post a Comment