Showing posts with label first overseas empire ever. Show all posts
Showing posts with label first overseas empire ever. Show all posts

Thursday, 9 October 2014

உலகப் பந்தில் சோழப் பேரரசு

சோழர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கடலையும் சேர்த்தால் சோழப் பேரரசு இவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்.
உலகில் தோன்றிய எந்த ஒரு பேரரசுக்கும் சளைத்ததன்று.

சோழப் பேரரசு

சோழப் பேரரசு இவ்வளவு பெரியதாக இருந்திருக்கலாம்.
இராசேந்திர சோழனுக்குப் பிறகு முதலில் இலங்கை, பிறகு இந்தோனேசியா, பிறகு மலேசியாவின் வடக்குப் பகுதியும் பர்மாவும், அதன் பிறகு வடயிந்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் என சோழர்கள் கையை விட்டுப் போய்விட்டன;
சோழ அரசு தஞ்சாவூரை மட்டும் கொண்டதாக சுருங்கி பிறகு மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் முடிவுற்றது.

Wednesday, 8 October 2014

கடல் கடந்த பேரரசு

கடல் கடந்த பேரரசு
--_--_--_--_--_--_--_--_--

முதன்முதலாக கடல்கடந்த பேரரசை நிறுவியவர்கள் ஸ்பானியர்கள் (spanish empire) என்கிறது மேற்கத்திய வரலாறு.

ஆனால், முதன்முதலாகக் கடல் கடந்து தொலைதூரம் வரை தமது ஆதிக்கத்தை நிறுவியவர்கள் சோழர்களே ஆவர்.

இராசேந்திர சோழன் ஆட்சிக்குள் பல மன்னர்கள் இருந்தார்கள்;
ஆனால் அவன் வெளியிட்ட தங்க நாணயத்தில் மூவேந்தர் சின்னங்களான மீன், வில், புலி ஆகிய மூன்று மட்டுமே உள்ளன.

தமிழ் நாட்டாண்மை (தமிழ்த் தேசியம்) என்றைக்கோ தோன்றிவிட்டது.
நமக்குத்தான் அது புரிவதில்லை.