Showing posts with label முத்துராமலிங்கனார். Show all posts
Showing posts with label முத்துராமலிங்கனார். Show all posts

Wednesday, 31 October 2018

RSS பரப்பும் தேவர் பற்றிய பொய்

RSS பரப்பும் தேவர் பற்றிய பொய்

ஆர்.எஸ்.எஸ் தலைவரான கோல்வால்கர் மதுரை வந்தபோது தேவர் அவரைச் சந்தித்து பொன்முடிப்பு வழங்கியதாக இந்துத்துவ வெறியர்கள் பொய் பரப்புரை செய்துவருகின்றனர்.

தேவர் வெறுப்பு அரசியல் செய்வோரும் இதை முக்கிய குற்றச்சாட்டாக வைக்கின்றனர்.
"காந்தியைக் கொன்றவருக்கு பணமுடிப்பு கொடுத்தார்" என்றெல்லாம் கலங்கம் கற்பிக்கின்றனர்.

இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டும் புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இதில் இருப்பவர் தேவரே இல்லை என்பது தெளிவு.

1951 முதலே தேவர் மீசையில்லாமல் நீளமான முடியுடன் தோற்றமளித்தார்.
இதற்கு பல சான்றுகள் உண்டு.

1955 இல் தேவர் பர்மா சென்றபோது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட காணொளிகள் புகைப்படங்கள் இன்றும் உண்டு.
அதில் அவர் மீசையில்லாமல் நன்கு நீண்ட தலைமுடியுடன் உள்ளார்.
கடைசிவரை அப்படியே தொடர்ந்தார்.

கோல்வால்கர் மதுரை வந்தது 1956 இல்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தேவர் என்று காட்டப்படும் நபர் மீசையுடனும் நன்கு வெட்டப்பட்ட தலைமுடியுடனும் காணப்படுகிறார்.

தேவருடைய வாழ்க்கை வரலாறு என்று முதலில் வந்த நூல் "முடிசூடா மன்னன் முத்துராமலிங்கத் தேவர்" என்கிற நூலே ஆகும்.
அந்த நூலை எழுதிய திரு.ஏ.ஆர். பெருமாள் தனது சிறு வயது முதல் தேவருடன் இணைந்து பணியாற்றியவர் ஆவார்.
அதில் தேவருடைய இந்து மதப்பற்று பற்றியும் வருகிறது.
ஆனால் கோல்வால்கர் பற்றியோ ஆர்.எஸ்.எஸ் பற்றியோ எதுவுமில்லை.

திரு.காவ்யா சண்முகசுந்தரம் என்கிற எழுத்தாளர் தேவர் பற்றி வெளிவந்த 24 சிறிய பெரிய நூல்களை ஆராய்ந்து தொகுத்து "பசும்பொன் சரித்திரம்" எனும் தேவரின் முழுமையான சுயசரிதை எழுதியுள்ளார்.
அதிலும் கோல்வாக்கர் சந்திப்பு சேர்க்கப்படவில்லை.

தேவர் வாழ்க்கை வரலாறு பற்றி ஆராய்ந்து தகவல்களைத் திரட்டிவைத்திருக்கும் ஆய்வாளர் திரு.நவமணி கோல்வால்கர் - தேவர் சந்திப்பு பொய் என்று கூறிவிட்டார்.

தேவருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

எனவே ஆதாரமற்ற இந்த பொய்பிரச்சாரத்தை யாரும் நம்பவேண்டாம்.

Monday, 30 October 2017

முதுகுளத்தூர் கலவரம் - மறைக்கப்பட்ட உண்மைகள்

முதுகுளத்தூர் கலவரம்
- மறைக்கப்பட்ட உண்மைகள்

இமானுவேல் சேகரனார்
படுகொலை செய்யப்படும்வரை 90% பள்ளர்களுக்கு அவர் யார் என்றே தெரியாது.

இமானுவேல் சேகரனார் பற்றி வந்த ஆகச்சிறந்த புத்தகத்தில் அவர் வரலாறு வெறும் பத்து பக்கத்தைத் தாண்டவில்லை.
அவர் எப்படி பள்ளர்களின் தலைவர் ஆவார்?

1957ல் முதுகுளத்தூர் கலவரத்திற்கு முன்பே இரண்டு பள்ளர்களை தேர்தலில் நிற்கவைத்தவர் தேவர்.
(ஒருவர் வென்றார், ஒருவர் தோற்றார்)

சமாதான கூட்டத்தில் தேவர் இமானுவேலார் சாதியைக் காரணம் காட்டி கையெழுத்திட மறுத்ததாகக் கூறுவதில் துளியளவும் உண்மை கிடையாது.
அந்த தொகுதி எம்.எல்.ஏ தான் கையெழுத்திடவேண்டும்  என்று கூறினார்.
காரணம் பள்ளர்களுக்கு யாரென்றே தெரியாத ஒரு இளைஞரை விட ஒரு பள்ளரான அப்பகுதி எம்.எல்.ஏ கையெழுத்திட்டால் சரியாக இருக்கும் என்பது அவர் வாதம்.

தேவர் கையெழுத்து போடாததால் சமாதானம் முயற்சி தோல்வியடைந்தது என்பது முழுப்பொய்.
தேவர் முதலில் மறுத்தாலும் பிறகு இமானுவேலாரை பிரதிநிதியாக ஏற்று கையெழுத்தும் போட்டுவிட்டார்.
( முத்துராமலிங்கத்தேவர் என்பதுதான் அவர் பெயர்.
கையெழுத்தும் அவ்வாறே போடுவார் ).

அந்த சமாதான அறிக்கை மறுநாள் வெளிவர இருந்தது.
அது வெளிவரக்கூடாது என்பதற்காக நேருவின் உளவுத்துறை அன்றே இரவில் மின்சாரத்தை துண்டித்து  இமானுவேலாரைக் கொலை செய்து பழியை தேவர் மீது போட்டது.
தேவரை சிறைக்குள் அடைத்து ஸ்லோ பாய்சன் கொடுத்து வெளியேவிட்டது.
(ஜெயலலிதாவை இவ்வாறுதான் மத்திய அரசு கொன்றது).
இதனால் ஆரோக்கியமாக கம்பீரமாக இருந்த தேவரையா விரைவாக உடல்நலம் குன்றி இளம் வயதிலேயே மரணமடைந்தார்.

நேருவை இயக்குவது இஸ்ரேல் என்று உண்மையை போட்டுடைத்த,
நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்று கூறிவந்த,
காந்தியை கொன்ற சவார்க்கருக்கு பாராட்டும் ரூ.5000 பொன்முடிப்பும் வழங்கிய,
காங்கிரசுக்கு எதிரான அத்தனை சக்திகளையும் ஒன்றுதிரட்டிய
மிகப்பெரிய ஆளுமையான தேவர் ஒழிந்ததால் நேரு நிம்மதி அடைந்தார்.
இதற்காக அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

சமாதான கூட்டத்தில் 'ஒரு பள்ளப்பய எனக்கு சமமா! அவன் நாளைக்கு இருக்கக்கூடாது' என்று தேவர் கூறியதாக பள்ளர் மத்தியில் உளவுத்துறையால் வதந்தி பரப்பப்பட்டது.
(இத்தனைக்கும் தேவரோடு வந்த 2பேரில் ஒருவர் பள்ளரான வேலு குடும்பன் ஆவார்).

தேவர் நுழைந்தபோது இமானுவேலார் கால்மேல்கால் போட்டபடி மரியாதை இல்லாமல் சிகரெட் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தே இருந்ததாகவும்,
பேச்சுவார்த்தை முடிந்ததும் தேவரிடம் ஒரு தாம்பலத்தில் வெற்றிலை பாக்கு வைத்து நீட்டி மறவர் பெண்ணை தனக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தருமாறு கேட்டதாகவும் மறவர் மத்தியில் வதந்தி பரப்பட்டது.
(இமானுவேலார் அப்படியெல்லாம் செய்யவில்லை.
எம்.எல்.ஏ வரமுடியாத சூழல் என்று மரியாதையுடன் எடுத்துக்கூறினார்.
தொலைபேசியில் பேசவைத்ததாகவும் கூறுகின்றனர்)

நேருவின் உத்தரவின்பேரில் மறவர் கிராமமான கீழத்தூவலில் ரே எனும் வடயிந்தியர் தலைமையிலான போலீஸ்படை நுழைந்து ஐந்து இளைஞர்களை அழைத்துப்போய் கண்மாய் கரையில் வைத்து கண், கை, கால்களை கட்டி சுட்டுக்கொன்றது.
இது சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் நடந்த முதல் படுகொலை ஆகும்.
இது காமராசர் போலீசை அனுப்பி மறவர்களைக் கொன்றதாகக் காட்டி மறவருக்கு எதிராக நாடார்களையும் கலவரத்தில் இறக்க எடுத்த முயற்சி ஆகும்.

இந்த யோசனைகளை நேருவுக்கு வழங்கியது அண்ணாதுரை.
உளவுத்துறைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியது தி.மு.க வந்தேறிகள்.
காரணம் தெலுங்கு சின்னமேளம் எனும் தேவதாசி சாதியைச் சேர்ந்த அண்ணாதுரை தனது குலத்தொழிலான விபச்சாரத் தொழிலை செய்துவந்ததை தேவர் மதுரையில் ஒரு பொது இடத்தில் அவரை வைத்துக்கொண்டே அம்பலப்படுத்தினார்.

தேவருடன் இணைந்து காங்கிரசை எதிர்த்த ஈ.வே.ராமசாமியும் ராஜாஜி பதவி விலகி காமராசர் வென்றதும் அவருடன் போய் சேர்ந்துகொண்டு தேவருக்கு எதிராக காமராசரை தூண்டியபடி இருந்தார்.

(ராஜாஜி தேவருடன் போய் இணைந்தார்.
ஆதித்தனாரும் தேவருடன் இணைந்தார்)

எவ்வளவோ முயற்சிகளுக்குப் பிறகும் இரண்டு ஆண்டுகள் கழித்து இமானுவேலார் கொலையில் தேவருக்கு பங்கில்லை என்று அவர் 1959ல் விடுதலை செய்யப்பட்டார்.

கலவரமும் கொலையும் நடந்தபிறகும் கூட, தேவரையா ஐந்து ஆண்டுகள் கழித்து 1962 தேர்தலில் ஒரு பள்ளரை நிறுத்தி வெல்லவைத்தார்.
தொகுதிக்கே போகாமல் தானும் வெற்றிபெற்றார்.

சாகும்போது தனது சொத்துகளை மக்களுக்கு எழுதிவைத்தார்.
அதில் 1/3 பங்கு பள்ளர்களுக்கு கிடைத்தது.

இறுதிவரை தேர்தலில் தோல்வியே காணாத தேவர் பள்ளர்கள் கணிசமாக வாழ்ந்த தொகுதியில்தான் மாபெரும் வெற்றிகளை பெற்றார்.

ஒருவேளை பள்ளர் வாக்குகளைக் கவர பிற்காலத்தில் இப்படி மாறியிருக்கலாம் என்கிறார்கள் சிலர்.
ஆனால் இருபது ஆண்டுக்கு முன்பே 1939லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைத்தியநாத ஐயர் மற்றும் (பறையரான) கக்கனுடன் இணைந்து பல பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மக்களைத் திரட்டி ஆலயநுழைவு நடத்தியவர் தேவர்.

3 அல்லது 4 இடங்களில் மட்டுமே போட்டிபோடும் தேவர் கட்சி அதில் பல சாதியினரையும் நிற்கவைத்தது வரலாறு.

இத்தகைய வரலாறு கொண்ட தேவர் எப்படி சாதிவெறியர் ஆவார்?

தேவரை நாடார்களுக்கு எதிரானவராக சிலர் திரிக்கிறார்கள்.
காமராசரை முதலமைச்சர் ஆவதற்கு தேவர் உடன்படாத காரணம் அவர் படிக்காதவர், இனப்பற்று இல்லாதவர், நேரு குடும்பத்திற்கு விசுவாசமானவர் என்பதால்தான்.
மற்றபடி காமராசர் வளர்ச்சியில் தேவருக்கு குறிப்பிட்ட பங்குண்டு.

காமராசரை முக்குலத்தின் எதிரியாக சிலர் திரிக்கின்றனர்.
தேவர் காலத்தில் காமராசருடன் காங்கிரசில் அவருக்கு பக்கபலமாக பல முக்குலத்தோர் இருந்தனர்.
வணங்காமுடி வைரவத்தேவர், கோபால்சாமி தென்கொண்டார், புதுக்கோட்டை தொண்டைமான், வேதாரண்யம் வேதாசலத்தேவர், திருச்சி அருணாசலத்தேவர், ஆர்.வி.சாமிநாதன், உடையப்பா சிவசுப்பிரமணியத்தேவர், மதுரை சின்னக்கருப்பத்தேவர், என்.எஸ்.வீரபத்திர தேவர், இராமநாதபுரம் சண்முகராஜேசுவர சேதுபதி,  அருப்புக்கோட்டை துரைசிங்கத்தேவர், முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன், சங்குமுத்து தேவர், டி.என்.அனந்தநாயகி, சாண்டோ சின்னப்பத்தேவர், நடிகர் சிவாஜிகணேசன் போன்றவர்கள் காமராஜருக்கு ஆதரவான முக்குலத்தோர் ஆவர்.

ஆக அன்று நடந்தது இரண்டு கட்சிகளுக்கு இடையேயான மோதல்தான்.
சாதி மோதல் கிடையாது.

அன்று தேவர் சரி.
ஆனால் இன்று மறவர்கள் சரி இல்லை.

தேவர் படத்தை வைத்துக்கொண்டு பள்ளர்களுக்கு எதிராக வெறிபிடித்து அலைவோர் தேவருக்கே களங்கம் கற்பிக்கும் துரோகிகள்.

திராவிடத்தின் சாதிய அரசியலுக்கு பலியாகி இன்று மறவர்களே தேவருடைய கொள்கைகளுக்கு மற்ற எவரையும் விட எதிராக செயல்படுகின்றனர்.

தேவர் தனக்கு குருபூசை கேட்டதும் இல்லை.
தேவர் எளிமையானவர். புகழ்ச்சியை விரும்பாதவர்.
அவரை கடவுள் போல பெரிதாக விழா எடுத்து கொண்டாடவேண்டிய அவசியமும் இல்லை.

தேவர் இறந்து பல ஆண்டு கழித்து தேவருக்கு சிலை நிறுவியதும் குருபூஜை நடத்தவைத்ததும் திராவிட வந்தேறிகள் தமிழர்களை மோதவிட்டு சாதிய அரசியல் செய்யத்தான்.

தேவர் ஒரு மனிதர்.
மாமனிதர். கடவுள் இல்லை.

ஒரு தலைவருக்கு என்ன மரியாதை உண்டோ அதைச் செய்வதில் தவறில்லை.

தேவர் குருபூசை அதற்கு போட்டியாக இமானுவேல் சேகரன் குருபூசை என்று குருபூசைகளின் பெயர்களில் இன்று நடக்கும் கூத்தும் அட்டூழியமும் அலப்பறையும் சாதிவெறியின் வெளிப்பாடு என்பது கண்கூடு.

இன்று குருபூசையில் தேவர் படத்தை சட்டையில் போட்டுக்கொண்டு மூக்குமுட்ட குடித்துவிட்டு நடுரோட்டில் போக்குவரத்தை மறித்து அரிவாள்களுடன் கூட்டமாக கும்மாளம் போடும் இளைஞர்களுக்கு தேவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி கடுகளவாவது தெரியுமா?

தேவரின் முகம் ஒன்றும் சாதிவெறியின் சின்னம் இல்லை.
ஆனால் இன்று நடைமுறை என்ன?

பள்ளர்கள் பெரிய தகுதி இல்லாத இமானுவேல் சேகரனாரை தூக்கிப்பிடிப்பதையும் அவருக்கு குருபூஜை நடத்துவதையும் கைவிடவேண்டும்.
தேவரையே தலைவராக ஏற்கவும் வேண்டும்.
இதைச் செய்யாத பள்ளர்கள் நன்றிகெட்டவர்கள்.

முக்குலத்தோர் தேவருக்கு குருபூஜை நடத்துவதைக் கைவிடவேண்டும்.
அமைதியான முறையில் அவரவர் ஊர்களில் பலசாதி மக்களுக்கும் தேவர் பற்றி எடுத்துக்கூறி பொதுவான விழாவாக சிறிய அளவில் கொண்டாடவேண்டும்.

தேவர்தான் மேற்கண்ட இரு சமூகத்துக்கும் தலைவர்.
ஏன் தமிழர் அனைவருக்கும் தலைவர்.
ஏன் இந்தியா முழுவதுக்குமான தலைவர்.

இந்தியன் மறந்துவிட்டான்.
தமிழர்கள் மறக்கவில்லை.
மறக்கும்படி செய்யாதீர்கள்.

குருபூசை எனும் பெயரில் நடிகர்களையும் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளையும் திராவிட கட்சிகளின் அல்லக்கைகளையும் கூட்டி பெரிய அலப்பறை கொடுத்து பிற தமிழர்கள் தேவரை வெறுக்கும்படி செய்யாதீர்கள்.

தமிழர்களே! தமிழகம் முழுவதும் கிராமம் தோறும் சாதி வேறுபாடு இன்றி தேவர் புகைப்படத்தை வைத்து அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவோம்.

தேவர் நடத்திய பத்திரிக்கைக்கு கண்ணகி என்றுதான் பெயர்வைத்தார்.
சிந்துசமவெளி நாகரிகம் தமிழருடையது என்றும் தமிழின் சிறப்புகள் பற்றியும் எழுதியுள்ளார்.
தன் வாழ்நாளில் வள்ளலார் வழியை கடைபிடித்துவந்தார்.
உடல்நிலை முடியாத நிலையிலும் ம.பொ.சி நடத்திய எல்லை போராட்டத்தில் கலந்துகொண்டு பேசியும் உள்ளார்.
பர்மா போய் தமிழர்களைச் சந்திக்கும்போது அந்நாட்டு அதிபருக்கு திருக்குறள் நூலை பரிசாக அளித்தார்.
மலையகத் தமிழரை சந்தித்துவிட்டு தமிழகம் வந்தபோது இலங்கை தமிழர்கள் விரைவில் சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள் என்று அன்றே கூறியுள்ளார்.

ஆக தேவர் ஒரு இனப்பற்றுள்ள தமிழர். அதனால் பெருந்தமிழர் என்ற பட்டத்திற்கு தகுதியானவர்.

வைக்கம் ஆலயநுழைவு போராட்டத்தில் கட்சி பணத்தில் பத்தோடு பதினொன்றாக போய்விட்டு வந்து வைக்கம் வீரர் பட்டம் போட்டுக்கொண்ட,
கீழ்வெண்மணி படுகொலை கூலி உயர்வு கேட்டதால்தான் நடந்தது என்று அறிக்கைவிட்ட,
பறையரை கேவலமாக தொடர்ந்து பேசிவந்த,
ஆங்கிலேயருக்கு கடைசிவரை விசுவாசமாக இருந்த
கன்னட வந்தேறி ஈ.வே.ரா நமக்கு தலைவராம்.

ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொழிலாளருக்கும் முழு இந்திய மக்களுக்கும் இறுதிமூச்சுவரை நன்மை செய்துவந்த நாட்டுப்பற்றாளர், இனப்பற்றாளர், கொடைவள்ளல், தியாகி முத்துராமலிங்கனார் சாதிவெறியராம்.

ஆக ஈ.வே.ராமசாமியை தூக்கி எரிந்துவிட்டு அந்த இடத்தில் முத்துராமலிங்கத் தேவனாரை வைத்துக் கொண்டாடுவது தமிழர் நம் அனைவரின் கடமை ஆகும்.

Tuesday, 22 August 2017

ஈழத் தமிழர்கள் அடிமையில்லை, சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள் _ தேவர் அன்றே சொன்னார்

ஈழத் தமிழர்கள் அடிமையில்லை, சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள் _ தேவர் அன்றே சொன்னார்

இலங்கையில் தமிழர்கள் சிங்களருக்கு இணையாக வாழ விரும்புகிறார்கள்.
அவ்வாறு வாழ முடியாத போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்று தேவர் தனது கட்டுரையில் எழுதுகிறார்.

அந்தக் கட்டுரை இதோ...

"இனம் என்றால் சிங்கள இனமும் தமிழ் இனமும் என்று இருந்தால் பிரச்சனைக்கு இடமே இல்லை.
மொழி என்று இருந்தால் சிங்கள மொழியும் தமிழ்மொழியும் என்றிருந்தால் சிக்கலே கிடையாது.
இது சேன நாயகாவுக்குத் தெரியாத ஒன்றல்ல.
ஆயினும் அந்த நிலைமையை ஏற்படுத்த அவர் மறுக்கிறார்.
தம்மைப் பதவியில் அமர்த்தியவர்கள் சிங்களவர்களாம். சிங்களத்தை ஆட்சிமொழியாக்கவும் சிங்களவர்களைப் பாதுகாக்கவும் தம்மை அவர்கள் தெரிவு செய்தார்களாம்.
அவர்கள் விருப்பத்துக்கு மாறாக தாம் எதையும செய்ய முடியாது என்று கையை விரிக்கிறார்.
பாவம் பதவி போய்விடுமே என்ற பயம்.
பதவி என்ன அவ்வளவு பெரிதா?
அப்படி நினைத்தால் அதன் விளைவை அவர் அனுபவித்தே தீர வேண்டும்.
சிங்களவர்களுக்குச் சிங்களம் எப்படியோ அப்படித்தான் தமிழர்களுக்கும் தமிழ் உள்ளது.
சிங்களவர்களுக்குத் தமது மேம்பாட்டில் எவ்வளவு அக்கறையுண்டோ அவ்வளவு அக்கறை தமிழர்களுக்கும் தமது மேம்பாட்டில் உண்டு.
ஆகவே நாட்டில் ஒற்றுமை வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழத் தேவையில்லை.
அடிமைகளாய் உரிமை அற்றவர்களாய் வாழ்வதைவிடச் சுதந்திரப் போராட்டத்தில் குதித்துச் சுத்த வீரர்களாய் மானம் உள்ளத் தமிழர்களாய் மடிவது மேல் என்று அவர்கள் கருதுகிறார்கள்"

பசும்பொன் தேவரின் அரசியல் முழக்கம் (1952)
- க.பூபதிராஜா
பக்கம்:141.

படம்: 1952 இலங்கை ஞவுஞ்சுவே-யின் இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் மாநாடு முடிந்தபின் தேநீர் விருந்தில் பசும்பொன் பெருமகனார் சௌமிய மூர்த்தி தொண்டைமான்......!!

நன்றி: ஈழத்தமிழர்களின் உணர்வுகளை பற்றி தேவர் திருகமனார் எழுதிய கட்டுரை..!
_ Tamil creators (youtube)

Wednesday, 21 June 2017

மீனாட்சியம்மன் கோவில் ஆலயநுழைவு அரிய புகைப்படம்

வைத்தியநாதையர் அவர்கள், கக்கன் அவர்களுடன் மீனாட்சியம்மன் கோவிலில் 1939 ஆம் ஆண்டு ஆலயநுழைவு நடத்தியபோது எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இருப்பவர்
பெருந்தமிழர் முத்துராமலிகத் தேவர் அவர்கள்தானா?

நான் ஏற்கனவே போட்ட 'ஐயர் செய்த ஆலயநுழைவு' பதிவில் தேவனார் அப்போது சிறையில் இருந்ததாகவும் ஆதரவாக துண்டு சீட்டு மட்டுமே விநியோகித்ததாகவும் போட்டிருந்தேன்.

அறிந்தவர்கள் கூறவும்.

Friday, 1 April 2016

திருத்தணியைத் தமிழகம் மீட்ட வரலாறு

திருத்தணியைத் தமிழகம் மீட்ட வரலாறு

ஈ.வே.ரா:-
“ஆந்திரா-தமிழ்நாடு பிரிவினை என்பது 1921 இலேயே முடிந்து விட்டது.
அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்துபோய்விட்டன.
இன்றைக்கு 30வருடங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன.
இந்த 30 வருடங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசு அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை.
யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் எனபவர்கள் எதிர்த்தார்களே தவிர மாற்ற வேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை.
தமிழர்களில்தான் ஆகட்டும் இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே, வீரர்கள், இவர்கள் இந்த 20,30 வருடங்களாக என்ன செய்தார்கள்?
இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்திற்காக-பிழைப்புக்காகத் தவிர,
“குமரி முதல்
வேங்கடம் வரை”
என்கிற அறிவு இன்றைக்கு வருவானேன்?”
(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்,
தொகுதி-2, பக்கம் 723, 724)

செங்கல்வராயன் (அப்போதைய சென்னை மேயர்):-
"சென்னையை ஆந்திரத்தின்
தலைநகரமாக்க சென்னையில் வசிக்கும் சிறுபான்மை தெலுங்கர்கள் விதண்டவாதம் பேசினால்,
குடிக்க தண்ணீர் தரமாட்டோம்
பிணத்தை எரிக்க சுடுகாடு தரமாட்டோம்"

முத்துராமலிங்கத்தேவர்:-
தமிழரசு காணவும், தமிழகத்தின் எல்லைகளை மீட்கவும் தமிழை அரசு மொழியாக்கவும் சரியான நேரத்தில் தமிழ் அரசு கழகம் முன் வந்திருக்கிறது.
தமிழ்நாடு - தமிழுக்கும் தமிழ்ப் பண்புக்கும் முரண்பட்ட முறையில் ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்தே அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.
அந்த அலைக்கழிவு, முடிவில் ‘தமிழ் மாகாணம்’ என்று கூட சொல்ல இயலாது ‘எஞ்சிய சென்னை’ என்பதன் முறையிலேயே இழிவான முறையில் தமிழ் மாகாணத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
சரித்திர சான்றான திருப்பதியையும் இழந்து நிற்கிறது.
இந்நிலையில், சென்னையை ஒட்டி, ஜனத் தொகையிலும் சர்வமுறையிலும் தமிழ்நாட்டிற்குப் பாத்தியப்பட்ட சித்தூரையும், திருத்தணி போன்ற தேவாலயத்தையும் இழந்து
நிற்கிறது.
இதற்கென ஒரு போராட்டம் எழுந்த பின்னரும் காங்கிரஸ் மந்திரிசபை ஆங்கிலேய முறையை பின்பற்றி அடக்குமுறையால் கையாள நினைக்கிறதே தவிர அறிவு வந்ததாக தெரியவில்லை.
எனினும், இந்த வடக்கெல்லைப் போராட்டம் நீடிக்குமானால் இதில் மந்திரிசபை வழக்கம்போல அசட்டுத்தனத்தைக் கையாளுமானால் விபரீத விளைவுகளை எதிர்பார்க்கநேரும்.
அது பல பொட்டி ஸ்ரீராமுலுகளை தமிழ்நாட்டில் தயாரிக்கும் என்று எச்சரித்து தமிழ் எல்லைப் போராட்டத்திற்கு ஆசிகூறுகிறேன்"
  (7.6.1956 அன்று கன்னியாகுமரியில் பேசியது)

திருத்தணிகை தமிழகத்தோடு இணைந்த நாள்
1.4.1960

"திருத்தமிழ்க்கு உயர்திசைச்
சிறப்புடைத் திருத்தணிகை"
என்று திருப்புகழ் பாடியவர் அருணகிரிநாதர்.

தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாக விளங்கிய வடவெல்லையான திருப்பதியை இழந்து தமிழர்கள் பரிதவித்து நின்ற போது சற்று ஆறுதலான தீர்ப்பொன்று 1957ஆம் ஆண்டில் எல்லை ஆணையர் எச்.வி. படாஸ்கர் என்பவரால் அளிக்கப்பட்டது.

அது என்னவெனில்,
தமிழ்ப்பகுதிகளாக விளங்கிய திருத்தணி, திருவாலங்காடு, வள்ளி மலை, ஆகியவை தமிழகத்தோடு இணைக்கப்படும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விசால ஆந்திரம் கேட்டு தெலுங்கர்கள் 1953ஆம் ஆண்டு தீவிரமாக போரடிய போது சித்தூர் மாவட்டத்தில் ஆறு தமிழ்ப்பகுதிகளை தெலுங்கர்கள் அபகரித்து கொண்டனர்.
அதில் தமிழர்கள் இருகண்களெனப் போற்றும் மாலவன் குன்றமும் (திருப்பதி)
வேலவன் குன்றமும் (திருத்தணி) அடங்கும்.

1946ஆம் ஆண்டிலிருந்து-
"வேங்கடத்தை விட மாட்டோம்,
வேங்கடமே தமிழகத்தின் எல்லை,
தணிகை தமிழருக்கே"
-என்று தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் விடாது முழங்கி வந்தார்.

அப்போது தமிழ்நாட்டில் திராவிடநாடு முழக்கத்தை கவெரா (ராமசாமிநாயக்கன்), அண்ணாத்துரை (அரைத்தேலுங்கர்) போன்றவர்கள் எழுப்பிய காரணத்தாலும்,
காங்கிரசு கட்சியில் தலைவராக விளங்கிய காமராசரின் தமிழின உணர்வற்ற போக்காலும் ம.பொ.சி.யின் குரல் ஒற்றை தனிமனிதரின் குரலாகவே பார்க்கப்பட்டது.

அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழின உணர்வு இந்திய, திராவிடக் கட்சிகளால் மழுங்கடிக்கப்பட்ட காரணத்தால் ஆந்திரர்கள் தமிழர்களின் தலைநகரான சென்னையைக் கூட தயக்கமின்றி உரிமை கொண்டாடி கேட்க முடிந்தது.

நல்ல வேளையாக சென்னை மீட்புப் போரிலும் தலையிட்டு "தலையைக் கொடுத்தேனும் தலை நகரை காப்பேன்"
என்று ம.பொ.சி. முழக்கமிட்டார்.
அந்த முழக்கத்திற்கு நல்ல பலனும் கிடைத்தது.

சென்னையை அரசியல் தளமாகக் கொண்டு இயங்கிய தமிழகக் கட்சிகள் எல்லாம் வேறு வழியின்றி சென்னை மீட்புக் கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டன.
முதல்வர் இராசாசி துணையோடு சென்னை தமிழர் வசமானது.

ஆனால், சென்னையை மீட்க ஒத்துழைத்த பேராய, பொதுவுடைமை, திராவிட இயக்கக் கட்சிகளெல்லாம் வட வேங்கட மீட்புக் கிளர்ச்சிக்கு ம.பொ.சி. அழைத்த போது ஒதுங்கியே நின்று வேடிக்கை பார்த்தன.
இதில் ம.பொ.சி. போற்றி வந்த இராசாசியும் உள்ளடக்கம்.
ம.பொ.சி. வடக்கெல்லைப் போராட்டக்குழுவை உருவாக்கி சித்தூர், புத்தூர்,திருத்தணி ஆகிய இடங்களில் அரசு அலுவலகங்கள் முன்பும், தொடர் வண்டி முன்பும் மறியல் போராட்டங்களை நடத்தி வந்தார்.
இராசாசி ஆட்சியில் நீதிமன்றம் இவருக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தது.
அவர் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக 3.7.1953இல் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பகுதிகள் குறித்து ஆராய எல்லை ஆணையம் அமைக்க நேரு ஒப்புக் கொண்டார்.
இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் நேரு ஒப்புக் கொண்டபடி எல்லை ஆணையம் அமைக்க வில்லை.
ஒவ்வொரு ஆண்டும் சூலை 3ஆம் நாள் வடக்கெல்லை பாதுகாப்பு குழு சார்பாக எல்லை ஆணைய நாள் கொண்டாடப் பட்டது.
நேரு அரசாங்கம் இதையெல்லாம் பொருட்படுத்த மறுத்தது.

இதற்கிடையில், 1.11.1954இல் தமிழில் கூட்ட நடவடிக்கைகளை நடத்தியதாகக் கூறி தமிழர்களால் ஆளப்பட்டு வந்த திருத்தணிகை பஞ்சாயத்து சபையை ஆந்திர அரசு கலைத்தது.

தில்லி அரசும், ஆந்திர அரசும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு தமிழர் மீது வஞ்சனை காட்டி வருவதைக் கண்டித்து ம.பொ.சி. தலைமையில் வடக்கெல்லை பாதுகாப்புக் குழு மீண்டும் கூடியது.
அது மீண்டும் வடக்கெல்லைப் போராட்டத்தின் இரண்டாம் கட்டப் போரை தொடங்கப் போவதாக அறிவித்தது.
போராட்டத் தளபதியாக விநாயகம் அறிவிக்கப்பட்டார்.

15.10.1956இல் தமிழகமெங்கும் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதுபோல் தொடர்வண்டி சங்கிலியை இழுத்து தொடர்வண்டி நிறுத்தப் போராட்டம் நடத்தியதால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பி.கோவிந்தசாமி என்பவர் இராஜ மந்திரி சிறையிலும்,
மாணிக்கம் என்பவர் பழனி சிறையிலும் மாண்டனர்.

போராட்டத்தைக் கண்டு அச்சமுற்ற தமிழக காங்கிரசு அரசும்,
ஆந்திர அரசும் தங்களுக்குள் ஒப்புக்கு பேச்சு வார்த்தை நடத்தி வந்தன.
இதனையே காரணமாக காட்டி எல்லை ஆணையம் அமைக்க முடியாது என்று நேரு அரசு கைவிரித்தது.
பேச்சு வார்த்தை நாடகம் தோல்வியுற்ற நிலையில் 1956ஆம் ஆண்டு திசம்பர் மாதம் படாஸ்கர் என்பவர் தலைமையில் எல்லை ஆணையம் அமைக்கப்படுவதாக நேரு அறிவித்தார்.

1957ஆம் ஆண்டு வெளிவந்த படாஸ்கர் ஆணையத் தீர்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டு திருத்தணிகையை தமிழகத்தோடு இணைப்பதற்கு நேரு அரசு வழக்கபம்போல் காலம் கடத்தியது.

நாடாளுமன்றத்தில் சட்டம் ஆக்குவதற்கு திருத்தணிகை தெலுங்கு உறுப்பினர்கள் பல முட்டுக்கட்டைகளை போட்டு வந்தனர்.
அன்றைய சபாநாயகர் அனந்த சயனம் அய்யங்கார், வட நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் பண்டிட் தாகூர்தாஸ் பார்கவா ஆகியோர் மூலம் திருத்தணி இணைப்பு மசோதாவை தடுக்க முற்பட்டனர்.

1959ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட இணைப்பு மசோதா நவம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதைக் கண்டித்து திருத்தணிகை பஞ்சாயத்து சபை கண்டன தீர்மானம் நிறைவேற்றியது.

ம.பொ.சி. தில்லிஅரசை வன்மையாகக் கண்டித்து கடிதம் எழுதினார்.
அதன் பிறகு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 1.4.1960இல் நடைபெற்றது.
அப்போது எவ்வித திருத்தமும் இன்றி திருத்தணி இணைப்பு மசோதா சட்டமாக்கப்பட்டது.

வடக்கெல்லை மீட்புக்காக போராடிய மங்கலகிழார், ம.பொ.சி., தளபதி விநாயகம், மேயர் செங்கல்வராயன், கோல்டன் ந.சுப்பிரமணியம், திருத்தணிகை பஞ்சாயத்து தலைவர் சரவணய்யா, என்.ஏ.ரசீது மற்றும் சிறை சென்ற ஈகியர்களை நினைவு கூறுவோம்!

நன்றி: Kathi Nilavan
நன்றி: சந்தோஷ் கதிர்வேலன்
நன்றி: Velmurugan Ramalingam
நன்றி: பெருமாள் தேவன்