Showing posts with label மனு தர்ம. Show all posts
Showing posts with label மனு தர்ம. Show all posts

Tuesday, 2 May 2017

நவீன வர்ணாசிரமம்

நவீன வர்ணாசிரமம்

"தமிழினத்தின் தலைமக்களே!
பெருமைமிகு பள்ளர் பெருமக்களே!

இடவொதுக்கீடு என்பது என்ன தெரியுமா?

10 பேருந்துக்கான நிதியை ஒதுக்கி  அதில் முக்கால் பாகத்தை ஆட்டையை போட்டுவிட்டு,

4 ஓட்டைப் பேருந்துகள் வாங்கி விட்டு,

அதில் நெருக்கடி ஏற்படும்போது
பெண்கள், முதியவர், நோயாளி என்று இருக்கைகளை ஒதுக்குவது போல
ஒரு ஏமாற்று வேலை ஆகும்.

இதனால் எவருக்கும் எந்த பலனும் இல்லை.

இறங்குங்கள் அந்த ஓட்டை உடைசல் பேருந்தில் இருந்து,
தனியே ஒன்றிணைந்தால் மகிழுந்து (கார்) கூட உங்களால் வாங்கமுடியும்"

"பார்ப்பனக் கைக்கூலி!
மனுதர்ம அடிமை!"

"யாருப்பா நீ ?"

"நான்தான் பெரியார் பேரன்"

"ஓகோ. உனக்கு புரியவில்லையா?
உதாரணம் கேள்.
தமிழகத்தில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க OC க்கு cut-off மதிப்பெண் 198/200
அதேநேரத்தில் SC க்கு 195/200
அதாவது வெறும் 3 மதிப்பெண் வித்தியாசம். இதுதான் அதிகபட்சம்.
பல கல்லூரிகளில் 1 மதிப்பெண் வித்தியாசம்தான்.
இப்படியான இடவொதுக்கீட்டால் என்ன பலன்?"

"எல்லாம் பாப்பான் செய்யும் வேலை.
அவன் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஆடுமாடு ஓட்டிக்கொண்டு கைபர் போலன் கணவாய் வழியாக வந்தான்.
ஆரியன் சமஸ்கிருதம் பேசிக்கொண்டு வந்தது செவ்வாய் கிழமை.
அன்று மழை பெய்தது.
பக்கத்தில் இருந்து பார்த்த மாக்ஸ்முல்லர் இதை எழுதியிருக்கிறார்.
அவன் ஒரு குகைக்குள் உட்கார்ந்து மனுதர்மம் எழுதி சாதியை உருவாக்கினான்.
அவன் வெள்ளையாக இருந்ததால் பொய்சொல்லமாட்டான் என்று நம்பி எல்லாரும் அவனுக்கு அடிமையாகிவிட்டார்கள்.
ஓசோனில் ஓட்டை விழுந்ததற்கே
பாப்பான்கள்தான் காரணம்.
அவர்கள் குடுமியை வெட்டி பூணூலை அறுத்துவிட்டால் நாட்டில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும்."

"அப்படியாப்பா OC, BC, SC, ST என்று புதுப்பெயரிட்டு மனுதர்மத்தின் நால்வர்ணத்தை அப்படியே சட்டமாக்கி சலுகை வழங்குவது நவீன மனுதர்மமா? இல்லையா?"

"அது... வந்து.. பின்ன ஜாதி எப்டி ஒழியும்?"

"சாதிய ஏற்றத்தாழ்வுதானே ஒழியணும்.
சாதி ஏம்ப்பா ஒழியணும்?
சாதி அடையாளம் இல்லாமல் ஒருவன் தமிழனா என்று கண்டுபிடிக்க இப்போது வேறு  வழியில்லையே!
அதை ஒழித்தால் வேற்றினத்தார் அடையாளத்தை மறைத்து ஊடுருவ வசதியாகிவிடுமே!"

"நீ ஒரு சாதிவெறியன்!
பள்ளர்களை ஒழிக்க நினைக்கும் தேவர் சாதிக்காரன்"

"நான் தேவனே கிடையாது"

"நீ கிருஷ்ணசாமி அடிமை.
அவன் பார்ப்பனர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறான்"

"நான் கிருஷ்ணசாமி ஆதரவாளன் கிடையாது.
இந்த வெளியேற்றம் அவர் சிந்தனையும் கிடையாது.
பள்ளர்கள் பல மேடைகளில் பேசியதைத்தான் மிகத் தாமதமாக புரிந்துகொண்டு தற்போது அவர் பேசியுள்ளார்"

"நீ ஆதிக்க சாதிவெறியன்.
தமிழன் எல்லாருமே சாதி வெறியன்.
உலகத்திலேயே தமிழன் மட்டும்தான் சாதிவெறியன்.
1000 பெரியார் வந்தாலும் திருந்தமாட்டீர்கள்.
2 லட்சம் ஆண்டுகளாக அடிமையாக இருந்த ஆதி திராவிடரை மீண்டும் கீழே இறக்கும் முயற்சி இது"

"யாருடா திராவிடன்?
போடா வந்தேறி"

"நான் சுத்தத் தமிழன்லு!
தமிழு பேசுறவன்லு எல்லாரும் தமிழன்லு!

தமிழு வாழ்கலு!
தமிழ்பேசுமு மக்கள்லு வாழ்கலு!
பிரபாகரன்லு வாழ்கலு!
ஈழம் வாழ்கலு!
தந்தை பெரியாரு வாழ்கலு!

ஆனா தமிழ்நாட்டலு தமிழன் ஆளக்கூடாதுலு!
சீமான் நாம்டம்ளர்லு ஒழிகலு!
நீதான்லு ஆரிய அடிமைலு!
ஜாதி ஒழியணும்லு!
போங்கடா இன... சாரி.. சாதிவெறியன்லுகளே!"

"ஆமா, ஏன் இப்ப ஓ கால் கிடுகிடுகிடுனு ஆடுது?"

Thursday, 9 June 2016

மனுதர்மம் பார்ப்பனர் படைத்ததா?

பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்',
அது பார்ப்பனரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்டநூல்.

மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.
'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த
ஆவத்தம்பா சூத்திரம்,
போதாயன சூத்திரம்,
நாரதர் சூத்திரம் முதலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்.