Showing posts with label மறுபக்கம். Show all posts
Showing posts with label மறுபக்கம். Show all posts

Thursday, 28 September 2017

அம்பேத்கர் ரசிகர்களுக்கு...

அம்பேத்கர் ரசிகர்களுக்கு...


 அம்பேத்கர் பற்றிய மூட நம்பிக்கைகள் மற்றும் அதன் உண்மைத்தன்மை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.


* அம்பேத்கர் இடவொதுக்கீடு பெற்றுத் தந்தார்


1882ல் அதாவது அம்பேத்கர் பிறக்கும் முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடங்கிய கோல்ஹாப்பூர் அரசாட்சியில் பிராமணரல்லாத சாதிகளுக்கு முதன்முதலாக இடவொதுக்கீடு ஷாஹு எனும் அரசரால் வழங்கப்பட்டது.


 1893 ல் (அதாவது அம்பேத்கர் இரண்டு வயது குழந்தையாக இருந்தபோதே) அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான சென்னை மாகாணத்து தலைவர்கள் ஆங்கிலேயருக்கு கோரிக்கை வைத்து 49 சாதிகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலக் கல்வியில் இடவொதுக்கீடு வழங்கச் செய்தனர்.


 1927 லேயே இடவொதுக்கீடு அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான மெட்ராஸ் மாகாணத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது.

 இதைப் பெற்றுத் தந்தது சுப்பராயக் கவுண்டர் மற்றும் முத்தையா முதலியார்.

 (அதாவது அம்பேத்கர் காந்தியுடன் பூனா ஒப்பந்தம் போட்டு தேர்தலில் 18% தனி தொகுதிகள் வாங்கித் தருவதற்கு 5ஆண்டுகள் முன்பே)


1935ல் எம்.சி.ராஜா அவர்கள் தெளிவாக வரையறுத்து அதை சட்டமாக்கினார்.

SC 14%, 

BC 14%, 

Non Brahmin 44%, 

Brahmin 14%,

Christian 7%,

Muslim 7% 

என்றவாறு 100% இடவொதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

(அதாவது அம்பேத்கர் ஆங்கில அரசுடன் பேசி 8.33% இடவொதுக்கீடு கொண்டுவந்ததற்கு 7ஆண்டுகள் முன்பே)


 தற்போதும் இந்திய ஒன்றியம் முழுவதும்

SC=15%

ST=7.5%

OBC=27.5

என 50% இடவொதுக்கீடு உள்ள நிலையில்,


 தமிழகத்தில் மட்டும்தான்

BC=26.5%

BCM=3.5% (பிற். இசுலாமியர்)

MBC=20%

SC=15%

SCA=3% (அருந்ததியர்)

ST=1%

என 69% இடவொதுக்கீடு உள்ளது.

 (இதற்கு முக்கிய காரணம் பா.ம.க முன்னெடுத்த போராட்டம் ஆகும்)

------------------


* அம்பேத்கர் தலித் என்ற அடையாளத்தின் கீழ் மக்களை ஒன்று திரட்டினார்


 அம்பேத்கர் ஓரிரு முறை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தாலும் அவர் 'தீண்டத்தகாதோர்' என்ற சொல்லாலேயே எப்பொதும் குறிப்பிடுவார்.

 ஆவணங்களில் 'சாதியற்ற இந்துக்கள்' என்று குறிப்பிட முன்மொழிந்தார்.

 தலித் என்ற வார்த்தை அவர் விரும்பாதது.


 (தமிழகத்தில் 'தலித்' என்ற வார்த்தையும் 'தாழ்த்தப்பட்ட' என்ற வார்த்தையும் 1981ல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளன)

----------------------


* அம்பேத்கர் சுதந்திரத்திற்காக போராடினார்


 அம்பேத்கர் இறுதிவரை ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தவர்.

 காந்தியை எதிர்கொள்ள ஆங்கிலேயர் அவரை பயன்படுத்தினர்.

 ஆங்கிலேயர் வெளியேறியதும் அவர் இந்துத்துவத்திற்கு மாறினார்.

-----------

* அம்பேத்கர் இந்து மதத்தை அதன் சாதிய கட்டுமானத்தை எதிர்த்தார்


 தொடக்கத்தில் அவ்வாறு இருந்தாலும் பிறகு நிறம் மாறினார்.

 இசுலாமியரை நம்பமுடியாதவர்கள் என்றும் இந்துக்களின் எதிரி என்றும் கூறி பாகிஸ்தானை பிரிக்கவும் முழு ஆதரவளித்தார்(9).

ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்ற இந்துத்துவ - இந்திவெறி கொள்கையை முன்வைத்தார்(5)

 

 பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களை இந்துமதத்தின் பிரிவுகள் என்றாக்கி அவர்களை சட்டபடி இந்துக்களாக ஆக்கினார் (சட்டம்-25).


சமஸ்கிருதத்தை ஆட்சிமொழி ஆக்க முயற்சிகளை மேற்கொண்டார் (6,7,8).

---------------

 

* அம்பேத்கர் சாதி அடையாளத்தை உதறியவர்


 நிச்சயமாக இல்லை. 

தனது சாதி பட்டத்தை மறைத்து அம்பேத்கர் எனும் உயர்சாதி பட்டத்தைப் போட்டுக்கொண்டாலும்.

 இறுதிவரை தமது சாதியான மகர் சாதிக்கு முடிந்தவரை போராடினார்.

 அவருக்கு முதலில் கிடைத்த பெரிய பதவி 1941ல் 'பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்' பதவியாகும்.

 அவர் செய்த முதல் வேலை ராணுவத்தில் மஹர் படையணி என்று ஒன்றை உருவாக்கியது ஆகும் (1941).

 அது இன்றும் உள்ளது.

------------------


* அம்பேத்கர் மொழி இன அடையாளங்களைக் கடந்தவர்


 இதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் முழுமையாக அப்படி கூறமுடியாது.

 பாம்பே (மும்பை) நகரம் குஜராத்தியர் கைக்கு போக இருந்தது.

 தன் இனத்தின் தலைநகரமான அதை தனது இனமான மராத்தியர்களுக்கே கிடைக்கச் செய்ததில் அம்பேத்கரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

 அப்போது அந்நகரம் குஜராத்திய பெரும்பான்மை மாநிலத்துடன் இணைந்திருந்தது.

 சொத்துகள் அனைத்தும் குஜராத்தியர் வசமிருந்தன.

 மராத்தியர் எண்ணிக்கை அந்நகரில் பாதி கூட இல்லை.

 அதற்கு முந்தைய மராத்திய பேரரசிலும் அந்நகர் இல்லை.

 மாநில எல்லைகள் புனரமைப்பின்போது மராத்திய மொழிவழி மாநிலம் அமைவது பற்றி அவர் சமர்ப்பித்த ஆவணம்(3) மராத்தியருக்கு மும்பையை பெற்றுத்தந்தது.

 அதன் வரலாற்றுப் பெயரான மகாராஷ்ட்ரா என்ற பெயரும் அவரால் பரிந்துரைக்கப்பட்டு சூட்டப்பெற்றது.

-----------


* அம்பேத்கர் தமிழ் மீதும் தமிழர் மீதும் அன்பு கொண்டிருந்தார்.


 இல்லை. தமிழ் மூத்தமொழி என்று கூறினார்தான்(4).

ஆனால் மூத்த குடி என நாகர் எனும் இல்லாத இனத்தைக் கூறினார்.

 தமிழகம் உட்பட மொழிவழி மாநிலம் அமையவிருந்தபோது எதிர்த்தார்.

 மொழிவழி மாநிலங்கள் இந்தியாவை துண்டுதுண்டாக உடைக்கும் என்று எச்சரித்தார்.

 மொழி உரிமைகளை அவர் வழங்கக்கூடாது என்று கூறினார்.

 காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்கும் சிறப்பு சட்டத்தை (பிரிவு- 370) நேரு சொல்லியும் எழுதித்தர அவர் மறுத்தார் (பிறகு கோபாலசாமி ஐயங்கார் எழுதினார்).

 தமிழ் ஆட்சிமொழி ஆக காயிதே மில்லத் அவர்கள் வாக்கெடுப்பு நடத்தி தமிழ் 72ம் இந்தி 73 வாக்குகளும் பெற்றதை அதிர்ச்சியுடன் குறிப்பிட்டு இந்தியை நாடு முழுவதும் திணிப்பதற்கு முழு ஆதரவு வழங்கினார்(2).

-----------


* அம்பேத்கர் இந்தியா முழுவதற்குமான தலைவர்


 அம்பேத்கர் அவரது வாழ்நாளில் மக்கள் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தது இல்லை.

 தேர்தலிலும் கூட தோற்றுதான் போனார்.

 அவர் தொடங்கிய இயக்கங்களும் பரவலான ஆதரவைப் பெறவில்லை.

 அவருக்கு கிடைத்த பதவிகள் ஆங்கிலேயரோ அல்லது காங்கிரசோ அளித்த வாய்ப்புதான்.

--------------


* அம்பேத்கர் ஒழுக்கமானவர்


 அம்பேத்கர் தமது 57 வயதில் தமக்கு மருத்துவம் பார்த்த தன்னை விட 19 வயது இளையவரான ஒரு பிராமணப் பெண்ணை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்டவர்.

 அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இறந்தும் போனார். 

------------


* அம்பேத்கர் சாதியொழிப்பில் முன்னோடி


 முதல் சாதி ஒழிப்பு மாநாடு தமிழகத்தில் 1891ல் அயோத்திதாசர் அவர்களால் நீலகிரியில் நடத்தப்பெற்றது.

 சாதி ஒழிப்பில் தமிழகமே முதலடி எடுத்துவைத்தது.


 எம்.சி.ராஜா 1927ல் எழுதிய 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து 

'The Untouchables' எனும் நூலாக 1948ல் வெளியிட்டார் அம்பேத்கர்.


 இதேபோல 1907 ல் அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய 'புத்தரும் அவரது ஆதிவேதமும்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து 

'The Buddha and his dhamma' என்ற புத்தகமாக அம்பேத்கர் எழுதி (அவர் இறந்த பிறகு அது) 1957ல் வெளிவந்தது.


 நகலெடுத்து தமது பெயரில் போட்டுக்கொண்டது கூட பரவாயில்லை.

 அந்த சிந்தனை எங்கே கிடைத்தது என்று பின்னிணைப்பில் கூட அவர் மேற்கண்ட தமிழர்களை மேற்கோள் காட்டவில்லை.

------------


* அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்ததில் முதல் ஆள்


 வடயிந்தியா அளவு தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்றாலும்

 1923 ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரெட்டமலை சீனிவாசன் பொது இடங்களில் பட்டியல் சாதியினர் நடமாட தடையில்லை என்று அரசாணை வெளியிட்டது தீண்டாமைக்கு எதிரான குறிப்பிடத் தகுந்த முதல் நடவடிக்கை ஆகும்.

-------------

 

* அம்பேத்கர் வந்தபிறகுதான் பறையர் முன்னேறினர்


 நிச்சயமாக இல்லை. 

அம்பேத்கர் அரசியலுக்கு வரும் முன்பே பறையர்கள் கல்வியிலும் அரசியலிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்கினர்.

 சொல்லப்போனால் அம்பேத்கருக்கு முன் அவரது இடத்தில் இருந்தவர் எம்.சி.ராஜா எனும் பறையர்தான்.

--------------


* அம்பேத்கர் ஆரியர்களை எதிர்த்தார் 


 அம்பேத்கர் ஆரிய கட்டுக்கதையை நிராகரித்தவர்.

 பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து மனுஸ்மிருதி எரிப்பு போராட்டத்தை நடத்தியவர்.

 பிராமணர் ஆரியர் என்பதையோ வேற்றினம் என்பதையோ அவர் ஏற்றுக்கொள்ளவில்லை (4, தொகுதி 7, பக். 85)

--------------


* அம்பேத்கர் புத்தமதத்தை சாதியை ஒழிக்கும் தீர்வாக முன்வைத்தார்


 அம்பேத்கர் இயற்றிய சட்டப்படி புத்தமதம் இந்து மதத்தின் பிரிவே.

 ஒரு இந்து புத்தமதத்திற்கு மாறினாலும் சட்டப்படி அவரது சாதி மாறாது.

 ' உயர்சாதி இந்துக்களுடன் சண்டை போடுகிறேன் அதற்காக நான் இந்து இல்லை என்று ஆகாது.

 பாகிஸ்தான் முஸ்லீம்களால் ஆபத்து வந்தால் இந்தியாவிற்காக உயிரைக்கொடுத்து போராடுவேன்' என்றும் கூறியுள்ளார் (9).

 இறப்பதற்கு 50 நாட்கள் முன்பு அவர் லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்தைத் தழுவியபோது எடுத்த 22 உறுதிமொழிகளில் சாதி பற்றி எதுவுமே இல்லை. 

--------------------------


 அம்பேத்கருக்கு ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வெள்ளையாக்கி கோட்சூட்டுடன் வரைந்து,

 தம்மை உயர்த்திய தலைவர் அவரென்றும் தம்மை தலித் என்றும் கூறிக்கொண்டு,

வரலாறும் உண்மையும் தெரியாமல்,

 மற்ற எந்த சாதிவெறி கும்பலுக்கும் சளைக்காத அலப்பறை செய்யும் அம்பேத்கர் ரசிகர்களே !


இனியாவது திருத்துங்கள்!


இதிலுமா வடக்கத்திய மோகம்!

----------------


1. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 2.

2. Thoghts on linguistic states 

3. Maharashtra as linguistic 

4. Who were the untouchables? 

5. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 1. page: 213 & 214)

6. Statesmen, 11th September 1949

7. The National Herald (11.09.1949)

8. The Hindu (11.09.1949)

9. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 15. page: 130 - 143))

Tuesday, 26 September 2017

விஜய் தெலுங்குபதி

தமிழகத்தை நசுக்கும் மத்திய அரசின் தேசிய விருதை வாங்க மாட்டேன்
- நடிகர் விஜய் தெலுங்கு பதி

பிப்ரவரி 29, 2016 தினகரன் செய்தி

தமிழக தெலுங்கர் யுகாதி விழா

2016-02-29@ 00:26:52

சென்னை: அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பாக ‘தமிழக தெலுங்கர் யுகாதி விழா’ மீனம்பாக்கத்திலுள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது.
யுகாதி விழாவிற்கு சம்மேளனத் தலைவர் சிஎம்கே. ரெட்டி தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பு செயலாளர் நந்தகோபால், பொருளாளர் அ.சங்கரன், மாநில துணை தலைவர் ஜெஎஸ்கே. சதீஷ்குமார், இளைஞரணி தலைவர் டி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் 'தமிழகத்தில் முக்கிய பங்களிக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி மங்கம்மா, ஜி.டி. நாயுடு, ஓமந்தூரார் ஆகியோர் தெலுங்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் தமிழகத்தில் சிறந்து விளங்கினார்கள்.
அதேபோல் இங்கு அமர்ந்திருக்கும் பிரதாப் சி.ரெட்டி ஆகியோரும் சிறந்து விளங்குகிறார்கள்.
யார் எந்த மொழி பேசினாலும், தாய்மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும்’ என்றார்.

இவ்விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு, பின்னணி பாடகி பி.சுசிலா, வேல்டெக் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர். சகுந்தலா ரங்கராஜன், ஜெயா கல்வி குழுமத்தின் தலைவர் பேராசிரியர் கனகராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

  திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உலக தெலுங்கு சம்மேளனத் தலைவர் வி.எல். இந்திரா டெக், அகில பாரத விஷ்வகர்மா மகாசபை நிறுவனர் ராஜமகாலிங்கம், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

(தகவலுக்கு நன்றி: Asa Sundar)

Tuesday, 31 May 2016

கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா? -ஈ.வே.ரா ஆவேசம்

கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா?
-ஈ.வே.ரா ஆவேசம்

”தீண்டாமை விலக்கு என்பதும்
கோவில் பிரவேசம் என்பதும்
சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானசூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா?

*பறையன் கீழ்சாதி* என்பது மாற்றப்படவில்லையானால்
அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது இதுவரை *நடுசாதியாக இருந்த சூத்திரர்* என்பவர்கள்
இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள்.
ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது”

என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு
– வீரமணி)

நன்றி: பெரியாரின் மறுபக்கம் (தொடர்)

Saturday, 19 July 2014

ஜெ. பாவாடைக்குள் மன்மோகன்

ஜெயலலிதா பாவாடைக்குள் எட்டிப்பார்க்கும் மன்மோகன்
'லக்பிம' சிங்கள பத்திரிக்கையில் வந்த படம்
(9செப்டம்பர்2012)
https://www.colombotelegraph.com/index.php/
lakbimanews-cartoon-controversy-why-i-stand-
by-our-cartoon/lakbima-cartoon/
இதுதான் 7கோடி தமிழர்களின்
முதல்வருக்கு கிடைக்கும் மரியாதை; எவனும்
தட்டிக்கேட்கவும் இல்லை, கண்டனமும் தெரிவிக்கவில்லை.
செல்வி.ஜெயலலிதா திருவாய் மலர்ந்தவை
“புலிகள் இயக்கத்தை ஓர் அரசியல் இயக்கமாக
நாங்கள் கருதவில்லை. அது ஒரு பயங்கரவாதக்
கும்பல். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின்
பெயர்கள் புலிகளின் கொலைப்பட்டியலில்
இடம்பெற்றுள்ளன. எனவே, அந்த அமைப்பைத்
தடை செய்ய வேண்டும்.
அதற்கு சரியான தருணம் இது"(ஜனவரி1992)
“போர்
என்றால் பொது மக்கள் சாவது இயற்கை தான்"(மே2009)
"இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக
இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம்
ஒப்படைப்பதற்கு மத்திய
அரசு உடனடி நடவடிக் கையை மேற்கொள்ள
வேண்டும் என்று இச்சட்டப்
பேரவை வற்புறுத்துகிறது"(14ஏப்ரல்2002)
வைகோ, நெடுமாறன், நக்கீரன் கோபால் உள்ளிட்ட
9பேரை புலிகள் பெயரைச் சொல்லி பொடா மூலம்
பழிவாங்கியது(2003)
http://www.koodal.com/news/tamilnadu.asp?id
=2043&title=tamilnadu-news-headlines-in-tamil
வரப்போகும் தேர்தலில்
காங்கிரசு செல்வாக்கை சரிக்கவும், தமிழ்மக்களின்
உணர்வுகளில் ஆதாயம் கறக்கவும், (நோயுற்ற
தந்தையைக்காண நளினிக்கு பரோல் கிடைக்கவிடாத
அம்மையார்) இப்போது அறிவித்த எழுவர்
விடுதலை 'தமிழன் காதில் சுற்றிய பூ'
http://www.vinavu.com/2014/03/03/rajiv-
assasination-case-jayalalitha-drama/
http://www.thinakkural.lk/article.php?article
%2Fgdgprwljzy4574ddac1f6f13
9414vzbhcbb372a177804adcd3b8a31e7djr
இவர்கள் விடுதலையானால் 2000ல் தர்மபுரியில்
3மாணவிகளை எரித்துக்கொன்ற அதிமுக
குற்றவாளிகளும் விடுதலை ஆக காய்நகர்த்த
வாய்ப்பு உண்டு.
http://m.oneindia.in/tamil/news/2007/12/06/tn-
dharmapuri-bus-burning-hc-confirms-death-pe
nalt.html
எவனுமே மதிக்காத 'இலங்கைக்கு பொருளாதாரத்
தடை கோரிய தமிழக சட்டமன்ற தீர்மானம்'
http://www.maalaimalar.com/2011/06/
08123813/tamilnadu-assembly-jayalalitha.html
(மதிக்கவில்லை http://www.vikatan.com/new/
article.php?page=2&module=news&
mid=9&sid&aid=3117&type=all )
மீனவர் பிரச்சனையில் முடிந்தது 'கடிதமும்
கண்டனமும்' மட்டுமே
http://www.cmr.fm/thamilfm/NewClients/
NewsDetail.aspx?ID=12310 http://
www.maalaimalar.com/2014/03/07024516/
Fishermen-about-prime-minister.html
2011 தேர்தல் நேரத்தில்
ஈழத்திற்கு இந்தியப்படை அனுப்புவேன் என்ற
வாய்ச்சவடால்
http://m.youtube.com/watch?v=LAVlrAF9mu0
(சேலம்)
http://m.youtube.com/watch?v=6d1ftpMR
c5w&rl=yes&guid&hl=en-GB&client=mv-
google&gl=IN (நாமக்கல்)
சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு முன்
இடிந்தகரை போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக
அணுவுலைப் பணிகளை நிறுத்த அமைச்சரவைத் தீர்மானம்
http://www.dinamani.com/tamilnadu/
article710128.ece?service=print
இடைத்தேர்தல் முடிந்த பிறகு கூடங்குளம்
அணுவுலை திறக்க ஒப்புதல் தீர்மானமும்,
கேரளாவிலிருந்து மலையாள காவல்படை 37
வண்டிகளும்அருளிய அம்மையார் (மே 2012)
http://www.vikatan.com/new/article.php?modu
le=news&aid=7918
போராட்டக்காரர்கள் மீது தடியடி (செம்டம்பர்2012)
http://m.oneindia.in/tamil/news/2012/09/10/
tamilnadu-kudankulam-unrest-jaya-convenes-
higher-officials-meet-161205.html
அணுவுலை முற்றுகையைத் தடுக்க 5000காவலர்கள்
குவிப்பு (அக்டோபர் 2012)
http://www.dailythanthi.com/node/7945
போராட்டக்காரர்களை ஒடுக்க 2000 காவல்படையினர்
(மார்ச்2013)
http://www.cinema.dinakaran.com/
News_Detail.asp?Nid=45713
ஈழ ஏதிலிகளுக்கு மாத உதவித்தொகை அதிகரிப்பு
http://news.vikatan.com/article.php?modu
le=news&aid=2973
அகதிமுகாம்களின் உண்மை நிலை கொடுமையானது
http://www.vinavu.com/2013/05/16/eelam-
refugees-tn-prisons/
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு
http://www.tamilwin.com/show-RUmrzBSXMZh
v4.html
இதே அம்மையாரிடம் பிரதமர் முன்னிலையில் கர்நாடக
முதல்வர் "ஒரு சொட்டுத் தண்ணீர் தரமுடியாது"
என்று சொல்லி வெளியேறியபோது
http://www.viduthalai.in/home/viduthalai/
rationalism/44761-cauvery-news-water-news-s
upreme-court-news.html
பரமகுடியில் காவல்துறை சுட்டுக்கொன்ற 7பேர்
http://www.vinavu.com/2011/09/12/dalits-
killed/
சமச்சீர்கல்விக்கு தடை
http://www.dinamalar.com/news_detail.asp?
id=247309&Print=1
தடையை நீக்கிய நீதிமன்றம்
http://www.thoothuonline.com/சமச்சீர்-கல்வி-த
ொடரவேண்ட/
குளறுபடிகளால் 4மாதம் படிப்பு பாழ்
http://www.dinamani.com/tamilnadu/
article688805.ece?service=print
அண்ணாநூலகத்தை மருத்துவமனையாக
http://m.oneindia.in/tamil/news/2011/11/03/
library-issue-govt-s-decision-is-insane-ramado
ss-aid0128.html
அண்ணாநூலகம் திருமண மண்டபமாக
http://www.dinakaran.com/News_Detail.asp?
Nid=17881
மக்கள் நலப்பணியாளர் 13000பேர் நீக்கம், நீதிமன்றம்
தடை
http://www.dailythanthi.com/2014-01-04-Gover
nment-to-the-High-Court-notices
மாற்றி மாற்றி மின்வெட்டு அறிக்கைகள்
------12அக்டோபர்2012-----------
அடுத்த ஆண்டு இறுதியில் மின்வெட்டு நீங்கும்
http://www.bbc.co.uk/tamil/india/2012/10/
121026_jayaonpowercut.shtml
------8பிப்ரவரி2013------
நடப்பாண்டின் இறுதியில் மின்வெட்டு முழுமையாக
நீங்கும்
http://m.oneindia.in/tamil/news/2013/02/08/
tamilnadu-jayalalithaa-promises-no-power-cut-f
rom-dec-169440.html
------2அக்டோபர்2011------
அடுத்தாண்டு ஆகஸ்டுக்குள்
மின்வெட்டு அறவே நீக்கப்படும்
http://tamil.webdunia.com/newsworld/news/
tnnews/1110/02/1111002010_1.htm
------25அக்டோபர்2013------
இந்த ஆண்டு இறுதியில் மின்மிகை மாநிலம் ஆகும்
http://tamil.thehindu.com/tamilnadu/தமிழகம்-
மிக-விரைவில்-மின்-மிகை-மாநிலமாகும்-ஜெய
லலிதா/article5271707.ece
------17டிசம்பர்2013------
ஆறுமாதத்தில் மின்வெட்டு நீங்கும்
http://www.dinamani.com/tamilnadu/
2013/12/17/ஆறு-மாதங்களில்-மின்வெட்டு-அ/
article1949361.ece
------3பிப்ரவரி2014------
விரைவில் மின்வெட்டு இருக்காது
http://www.dailythanthi.com/2014-02-03-Jayal
alithaa-Speak-on-Electricity-Production
நான்கு நாட்கள் உண்ணாமல் போராடிய
லயோலா மாணவர்களை நள்ளிரவில்
காவல்துறை விட்டு தூக்கியதால் ஒருகோடி மாணவர்
களமிறங்கிய போராட்டம் வெடிக்கக் காரணமான நிகழ்வு
http://www.dinamalar.com/news_detail.asp?
id=664634
முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவரை அங்குலம்
தவறாது அளந்து இடித்தபோது,
பொது இடத்தை தாராளமாக
ஆக்கிரமித்தபடி ஜெயலலிதாவோடு குடும்பம் நடத்திய
தெலுங்கு கூத்தாடி நடிகன் 'சோபன் பாபு'
சிலை தமிழக தலைநகர் சென்னையில் பல
கோரிக்கைகளையும் மீறி சிரித்தபடி நிற்கிறது.
http://www.satrumun.net/2013/11/can-
government-remove-shoban-babu.html?m=1
(சோபன் பாபுவுடன் குமுதத்தில் பேட்டி
http://maatrangal.blogspot.in/2012/02/blog-
post_14.html?m=1 )
இனியும் கண்டவர்களை 'அம்மா' என்று சொல்லாதீர்கள்
https://m.facebook.com/photo.php?fbid=422858017817857&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739