Monday 18 July 2016

சிங்கள நடனமும் தமிழன் போட்ட பிச்சைதான்

சிங்கள நடனமும் தமிழன் போட்ட பிச்சைதான்

%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%

யாழ் பல்கலையில் கண்டிய நடனமும் ஆடுவோம் என்று சிங்களவர் அடாவடி.

உண்மை என்னவென்றால்,
கண்டி தமிழர் மண் என்பதுடன் கண்டிய நடனமும் தமிழருடைய சொத்து என்பதுதான்.

சிங்களவர்களின் தேசிய நடனமான கண்டிய நடனத்தின் வேர்கள்,
அதன் சொற்கள்,
நாட்டியத்தின் விதிகள்
அனைத்தும் இன்றும்  தமிழ் மொழியில்தான் இருக்கின்றன.

கண்டிய நடனத்தின் முக்கியமான பாகத்துக்குப் பெயர் ‘வண்ணம’ (தமிழில் வண்ணம்).

கண்டிய நடனத்தில் நாட்டிய விதிகளுக்கான தமிழ்ச் சொற்கள் இன்றும் தமிழாகவே இருப்பதை நாம் காணலாம்.

சிங்கள மொழி தமிழிலிருந்து ஆயிரக்கணக்கான சொற்களை இரவல் வாங்கியுள்ளது,
ஆனால் அந்த சொற்கள் எல்லாம் கடைசி எழுத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, சிங்கள உச்சரிப்புக்கேற்றதாக உருமாற்றப்பட்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக,
தமிழில் அம்பலம், சிங்களத்தில் அம்பலம;
தமிழில் எதிரி, சிங்களத்தில் எதிரிய;
தமிழில் கடிவாளம், சிங்களத்தில் கடிவாளம;
தமிழில் காப்பு, சிங்களத்தில் காப்புவ;

இப்படி ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் இரவல் வாங்கப்பட்டு சிங்களமாக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
சிங்கள நடனத்தில் பதினெட்டு விதமான வண்ணங்கள் அதாவது நாட்டிய பாரம்பரியம் உண்டு.

சிங்களவர்களில் தாழ்த்தப்பட்ட சாதிபிரிவினர்  இந்த நடனமாடுவதையும், பறை(சிங்களத்தில் 'பெற') அடிப்பதையும் அரசவையிலும் ஆலயங்களிலும், கிராமங்களிலும் செய்து வந்தனர்.

ஆனால் கண்டிய நடனத்துக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்குமுள்ள தொடர்பை திட்டமிட்டு மறைத்தவர்கள் அவர்களல்ல.
சுதந்திரத்துக்குப் பின்னால் சிங்களவர்களின் கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்க புறப்பட்ட, நகர்ப்புற, படித்த, உயர்சாதி சிங்களவர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் தான் திட்டமிட்டு, தமிழ் வேர்களை மறைத்து, கண்டி நடனத்தை சிங்களவர்களுடையது மட்டுமாக்கி, அதற்கு மகாவம்சத்துப் புராணக் கதையையும் இயற்றிவிட்டனர்.

கண்டி நாட்டியக்காரார்கள் வண்ணம், சிறுமருவு, அடவு, காத்திரம், மாத்திரை எனும் தமிழ் நாட்டிய மரபுகளை எந்த விதமான சிங்களமயப் படுத்தலுமில்லாமல் தமிழ்ச்சொற்களையே இன்றும் சிங்களத்திலும் பாவிப்பதைக் காணலாம்.

அடவு:

இந்தச் சொல் தமிழர்களின் பாரம்பரிய சதிராட்டத்தைப் (இன்றைய பாரத நாட்டியம்) போன்றே கண்டிய நடனத்திலும் பாதங்களின் அசைவுகளைக் குறித்தாலும்,
அது பாத அசைவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.
தஞ்சாவூர் பாரம்பரியத்தில் 65 அடவுகள் உண்டு.
அவை பல்வேறு விதமான நாட்டிய அசைவுகளைக் குறிக்கின்றன.
சிங்களவர்களின் தேசிய நடனமாகிய கண்டிய நடனத்திலும் ஒவ்வொரு வண்ணம்(ம) நாட்டியத்தின் முடிவிலும் ஆடப்படுவது அடவு ஆகும்.

காஸ்திரம் அல்லது காத்திரம்:

இதுவும் ஒரு பலமான அல்லது கடுமையான நாட்டிய அசைவுகளைக் குறிக்கிறது. 
கண்டிய நடனத்தில் காத்திரத்தை தொடர்ந்து ஆடப்படும் அடிப்படை நாட்டிய அசைவுகளும், அதற்கேற்ப மேளத்தின் அடியும் மாத்திரை என்றே அழைக்கப்படுகிறது.
இரண்டாவது, மூன்றாவது மாத்திரைகளின் பின்னர் காத்திரம் சிக்கலான நாட்டிய அசைவாக மாறுகிறது.
நாலாவது மாத்திரையின் பின்பு காத்திரம் நீண்ட நேரத்துக்கு ஆடப்படும்.
நாலாவது மாத்திரையில் நாட்டியமாடுபவர் சுதந்திரமாக, அவரது விருப்பப்படி துள்ளவும், சுழன்றாடவும் முடியும்.
ஆனால் மேளம் அடிப்பவர் அவரது அசைவுகளைக் கவனமாக அவதானித்து,  அவரது நாட்டிய அசைவுகளுக்கேற்ப மேளத்தை ஒலிக்க வேண்டும். 
சிங்கள நடனத்தில் வண்ணம் என்றழைக்கப்படும் நடனத்தின் உச்சகட்டம் இது. 

சிறுமருவு:

தமிழ்ச் சொல்லாகிய சிறுமருவு என்ற சொல்லை  மென்மையாக, மெதுவாக ஆடப்படும் நாட்டிய அசைவுகளுக்கு சிங்களவர்கள் இன்றும்  பாவிக்கிறார்கள் (பயன்படுத்துகிறார்கள்).
காத்திரத்தின் போது பலமான நாட்டிய அசைவுகளையும், சுழன்றும், துள்ளியும் ஆடிக் களைத்துப் போன நாட்டியக்காரரும், மேளகாரரும் சிறுமருவின் போது இளைப்பாறிக் கொள்ளுவர். 

நையடி (Naiadi) அல்லது நையாண்டி:

நையாண்டி பாரம்பரியம்  இன்றும் தமிழ்நாட்டில் உண்டு.
இலங்கையிலும் சிங்களவர்களால் கதிர்காம முருகனை வேண்டி பம்பை, நையாண்டி மேளம் என்பவை ஆடப்பட்டன.
ஆனால் இன்று விஸ்ணு கோயில்களிலும் ஆடப்படுகிறது.
பம்பை, நையாண்டி என்று தமிழ் பெயர்களால் அழைத்துக் கொண்டே அது வட இந்தியாவிலிருந்து மகிந்த தேரோ அறிமுகப்படுத்தினார் என்று கூறும் சிங்களவர்களுமுண்டு.

பந்தெறு (சிங்களம்)/ பந்தெறி (தமிழ்):

பந்தெறு நடனம் கண்ணகி அல்லது பத்தினி தெய்வத்த்தின் (சிங்களத்தில் பத்தினித்தெய்யோ) அருளை வேண்டி ஆடப்படுகிறது.

இது போலத்தான் உடுக்கு(தமிழ்), உடெக்கி (சிங்களம்) ஆனது.

தம்பட்டம்(தமிழ்), தம்மெட்டம்(சிங்களம்) ஆனது.

முயலடி வண்ணம் முசலடி வண்ணமானது.

கண்டியின் மல்வத்தை விகாரையின் புத்தபிக்குகளுக்கு தமிழகத்துக் கவிஞர்கள் 18ம் நூற்றாண்டில் நாட்டியத்தின் ஒவ்வொரு வண்ணத்துக்கும் எழுதிக்கொடுத்த நாலடி கவிதைகள்தான் இன்றும் பாடப்படுகின்றன.
இதனை கவி என்றே அழைக்கின்றனர்.

வீரசோழியம் என்ற தமிழ் பவுத்த இலக்கண நூலைக் கொண்டே சிங்கள இலக்கணமும் வகுக்கப்பட்டது.

வந்தேறிக்கேது வரலாறு ??????

சிங்கள இனத்திற்கென்று தற்சார்பாக எதுவுமே கிடையாது.
அத்தனையும் தமிழர் போட்ட பிச்சை.

நன்றி: viyaasan வலைப்பூ

No comments:

Post a Comment