ஹிந்தியா வல்லரசாக என்ன செய்யவேண்டும்?
நான் ஹிந்தியனாக பிறந்து ஹிந்தியாவை ஆண்டால்...
*) முதல் வேலையாக ஹிந்தியுடன் தொடர்பில்லாத பகுதிகளுக்கு விடுதலை அளித்துவிட்டு
ஹிந்தி மொழிக் குடும்பத்துடன் தொடர்புடைய பகுதிகளை மீட்பேன்
*) காஷ்மீருக்கு விடுதலை அளித்துவிடுவேன்
*) சீன இனங்களுடன் தொடர்புடைய கிழக்கு மாநிலங்களான சிக்கிம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகியவற்றுக்கு விடுதலை அளித்துவிடுவேன்
*) தமிழ் மொழிக்குடும்ப பகுதியான தென்னிந்தியாவுக்கும் விடுதலை அளித்துவிடுவேன்
*) வங்கதேசத்திலும் நேபாளத்திலும் உள்ள ஹிந்தி தொடர்பான பகுதிகளை ஹிந்தியாவுக்கு தரச்சொல்வேன்.
மறுத்தால் படை எடுத்து கைப்பற்றுவேன்.
*) பாகிஸ்தானின் மீது படையெடுத்து அதன் நடுவே ஓடும் சிந்து பேராறு வரையான ஹிந்தி தொடர்புடைய பகுதியை ஹிந்தியாவுடன் இணைப்பேன்.
ஆப்கானியா, பஷ்தூன், பலூச்சிஸ்தான் போன்ற பகுதிகளுக்கு விடுதலை அளிப்பேன்.
இதன்மூலம் பாகிஸ்தான் என்றநாடோ மாநிலமோ இல்லாது ஒழிந்து போகும்.
*) இத்தனை பெரிய நாட்டையும் வளங்களையும் மக்கள் எண்ணிக்கையையும் வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் வறிய நாடாக இருக்காமல் வறுமையை ஒழிக்க வேளாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துவேன்.
*) கறுப்பு பணத்தை மீட்க முயற்சி செய்வேன்.
பெருமுதலாளிகளை இயற்கையைக் கொள்ளையடிக்க விடமாட்டேன்.
கையூட்டு, ஊழல் ஆகியவற்றை இல்லாது ஒழிப்பேன்.
*) வேதங்களில் குறைகளைக் களைந்து நடைமுறை வாழ்க்கைக்கேற்ப ஒரு எளிய ஹிந்து மத புனித நூலை உருவாக்குவேன்.
அது எல்லா மொழிகளில் கிடைக்கச் செய்வேன்.
மூடநம்பிக்கைகளையும் போலிச் சாமியார்களையும் ஒழிப்பேன்.
*) ஹிந்து மதத்தை ஹிந்தியாவின் தேசிய மதமாக அறிவிப்பேன்.
ஹிந்துநாடு (Hindutva republic of Hindia) என்று பெயர் மாற்றுவேன்.
எவரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம்.
சிறுபான்மை மதத்தினருக்கு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்குவேன்.
*) மக்கள் தொகையைப் படிப்படியாக பல கட்டங்களில் சரியாகத் திட்டமிட்டு குறைப்பேன்
*) சேனையை பலமானதாக நவீனமானதாக வைத்திருப்பேன்.
நாட்டு மக்களின் உடல் நலத்தைப் பேணுவேன்.
*) பசு மாடு உட்பட அனைத்து விலங்குகளின் நலங்களையும் காப்பேன்.
காட்டு வளத்தைப் பெருக்குவேன்.
*) மக்களிடம் ஒழுக்கத்தைப் புகுத்துவேன்.
விதிகளை மீறும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவேன்.
*) ஹிந்தி மொழியை மற்ற ஹிந்திக் குடும்ப மொழியினர் மீது திணிக்கமாட்டேன்.
இறந்துபோன சமஸ்கிருதத்தைத் தூக்கிவைத்து அழாமல், இருக்கும் மொழிகளுக்கு உரிய உரிமைகளை அளிப்பேன்.
*) ஒவ்வொரு ஹிந்தி குடும்ப இனங்களுக்கும் சரியான மாநில உரிமைகள் அளிப்பேன்.
(இராணுவம், தகவல் தொடர்பு நடுவணரசு கட்டுப்பாட்டில்)
*) திபெத்தியருக்கு ஆயுதம் கொடுத்து சீனாவிடமிருந்து விடுதலை பெற உதவுவேன்.
மங்கோலியாவுக்கும் உதவி செய்து சீனாவிடம் பறிபோன தமது பகுதிகளை மீட்க தூண்டுவேன்.
கேண்ட்டான் (ஹாங்காங்) சீனாவிடமிருந்து விடுதலை பெருவதில் உதவுவேன்.
இதன் மூலம் சீனாவைத் துண்டாடி வலுவிழக்கச் செய்வேன்.
*) இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி பொருளாதாரத்தைப் பெருக்கி
எந்த வல்லரசுக்கும் அடிமையாக ஆகாமல் சொந்தக்காலில் இந்துநாட்டை நிற்கவைப்பேன்.
பிற நாடுகளில் குடியேறிய ஹிந்தியரை திரும்ப அழைத்து வருவேன்.
*) ஹிந்தியா மற்றும் அதனைச் சுற்றி நிலவழித் தொடர்புடைய நாடுகளை இணைத்து ஒரு ஒன்றியத்தைத் தொடங்குவேன்.
பொதுவான நாணயம் (currency) ஒன்றை உருவாக்குவேன்
*) எந்த நாட்டில் இந்து, இந்தி இன மக்களுக்குக் கொடுமை நடந்தாலும் குரல்கொடுப்பேன்.
Wednesday, 20 July 2016
ஹிந்தியா வல்லரசாக என்ன செய்யவேண்டும்?
Labels:
ஆதி பேரொளி,
சிந்தனை,
தனிநாடு,
தொலைநோக்குப் பார்வை,
பிரிவினை,
வரைபடம்,
வேட்டொலி,
ஹிந்தியா,
ஹிந்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment