Friday 1 July 2016

மாடு இல்ல கண்ணு, மானம்

மாடு இல்ல கண்ணு, மானம்

(_)(_)(_)(_)(_)(_)(_)
.V  V  V  V  V  V V

" வெறும் மாடு இல்ல கண்ணு!
எங்க பேரு பெரும எல்லாம் அதுதான்.

கொம்புல குத்துவாங்கி செத்த அம்பது பேர நா காட்டுறேன்.
மாடுபிடிக்கறப்போ செத்துபோன ஒரு மாட்ட காட்டு பாப்போம்.

குத்துவாங்குற எங்களுக்கு பயமில்ல.
வேடிக்கபாக்குற ஒனக்கு எங்க குடையுது?!

அதென்னமோ நெதர்லாந்துக்காரன் காளமாடே இல்லாம ஊசி போட்டே கன்னுபோட வைக்கானாமே?!
அவன் ஊசி இந்தியாவுலயே தமிழ்நாட்டுல மட்டும் விக்கலயாமே?!

எப்பிடி விக்கும்?!
எங்க ஜல்லிக்கட்டுகாள ஓங்குதாங்கா வளந்து நிக்கும்போது?

நாளக்கே அவன் ஓசி போட்டு கொழந்த பெத்துக்கலாம்பான்.
சரினு சொல்லிருவியா?!

மாட்டோட சாணியயும் கோமியத்தயும் கலந்து வயல்ல போட்டா பொன்னா வெளஞ்சு கொட்டுமேடா!
இங்லீசு ஒரத்த போட்டு மண்ண வெசமாக்கி மனுசனயே கொல்ல துணிஞ்ச பெரியமனுசங்கதானடா நீங்க
மாட்ட ஒழிக்கறத பத்தி யோசிக்கவா செய்வீங்க?!

படிச்சவன் நாங்கேக்குறேன்,
இங்க தட பண்ணவர்ற பீட்டா வெள்ளக்காரன்,
ஸ்பெயின்ல புல்பைட்டுங்கறான்.
மாட ஓடிவரவிட்டு சிவப்பு துணிக்கு பின்னால மறஞ்சுக்கிறான்.
அது துணிய முட்டவும் வெலகிடுறான்.
கடசில அந்த அப்பாவி ஜீவன முதுகுல பெரிய பெரிய கத்திய குத்தி ரத்தம் பீய்ச்ச பீய்ச்ச ஓடவிடுவான்.
கடசில அத கொல்லுவான்.
கேட்டா பண்பாடும்பான்.
அத நிறுத்திட்டீங்களா?!

கனடாவுல சீல் வேட்டைங்குறான்.
பிஞ்சு சீல்குட்டிங்கள கணக்கில்லாம கொல்றான்.
கேட்டா கலாச்சாரம்பான்.
அத நிறுத்திட்டீங்களா?!

கோர்ட் தடைய மீறி ஆந்திராக்காரன் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தலைமைல சேவல்சண்ட நடத்துனானுகளே,
என்னபண்ணமுடிஞ்சது ஒங்களால?!

மாட்டுக்கு கொம்பு சீவி விட்டுட்டு வெறும் கையோட அத புடிக்க போறோமே
எங்களயாடா அவனுகளோட சேக்குறீங்க?

மாட்டுக்கு தனியா பண்டிக கொண்டாடுற இனம் வேற ஒண்ணு இந்த ஒலகத்துல உண்டா?

கோயிலுக்கு சீதனமா மாட்ட நேந்துவிட்ட சனம் தம்பி.

மாட்டுக்கு ஜாதகம் எழுதுனவன்லா இந்த ஊருல உண்டு.

குடும்பபோட்டோ எடுத்தா மாட்டயும் சேத்துநிக்கவச்சு போட்டோ எடுத்து பெருமயா நடுவீட்டுல மாட்டுற மக்கள் நாங்க.

வெறும் மாடுன்றானுக, மாடு இல்ல தம்பி
எங்க மானம்.

குறுக்கு வழில மாட்ட புடிச்சான்னு சொந்த தங்கச்சி மவன் கைய வெட்டுவன் எங்கப்பன்.

இந்தா நிக்கி பாரு எ காள.
எனக்கு வெவரம் தெரிஞ்சப்ப சுழிபாத்து எங்க ஐயன்  கூட்டிவந்தது.
கொம்பு மொளைக்குறதுக்கு முன்னாடில இருந்தே என்னயும் எங்க ஐயனயும்தா முட்டி பழகுச்சு.
பேரு வாங்குன காள.
பால்காரனெல்லாம் வந்து வந்து தவமா கெடப்பான்.

அஞ்சு வருசம் முந்தி அலங்காநல்லூர்ல புடிபட்டு போச்சு.

மூணுநாளு எங்கபோச்சுனே தெரில.
மனுசனா இருந்திருந்தா நாண்டுட்டு செத்துருக்கும்.
சோறு தண்ணி இல்லாம கண்காணாத எடத்துக்கு போயிடுச்சி.

தேடி திரிஞ்சு கண்டுபிடிச்சு,
தோல்வி வீரனுக்கு சகஜம்டானு புரியவச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.

  அப்பறமும் அது மனசு கேக்கலயே.
இத புடிச்ச அந்த வீராதிவீரனுக்கு எங்க வீட்டு குத்துவிளக்க கொடுத்து எங்க குடும்பத்துல ஒருத்தனாக்குன பெறகுதான் சமாதானமாச்சு.

இப்பமும் எ மச்சான் வந்தா மூஞ்ச திருப்பிட்டு போகுமே!

இது முன்னாடி என்ன கைநீட்டி ஒரு வார்த்த பேசிரு பாப்போம்!

நா வளத்த மாட்டுக்கே இம்புட்டு ரோசமிருக்கும்போது

எனக்கு எம்ம்ம்ம்ம்புட்டு ரோசமிருக்கும்?

ஊரு எதுத்து நின்னாலும் சரி.
ஏன் ஒலகமே எதுத்து நின்னாலும்
நா பணிஞ்சு போவமாட்டேன்.

தனி ஆளா எதுத்து நிப்பேன்.

எனக்கு எ காள இருக்கு

எ காள எம்பின்னால நிக்கும்"

No comments:

Post a Comment