Saturday, 2 July 2016

சென்னையை தமிழர் மீட்பதில் தடையாக இருந்த ஈ.வே.ரா

சென்னையை தமிழர் மீட்பதில் தடையாக இருந்த ஈ.வே.ரா

2.1.1953இல் மேயர் செங்கல்வராயன் வீட்டில் சென்னையை மீட்பதற்கான கூட்டம் நடைபெற்றபோது ஈ.வே.ரா அதில் தமிழரைக் குழப்பும் விதத்தில் பேசினார்.

இராயப் பேட்டை இலட்சுமிபுரத்தில் 5.1.1953இல் நடந்த கூட்டத்திலும் தமிழர்களைகக் குழப்பும் வகையில் பேசினார்.

"இரண்டு நாட்களுக்கு முன் மேயர் வீட்டில் நடந்த சர்வ கட்சிக் கூட்டம் என்பதிலும் நான் பேசிய போது இதையே சொல்லியிருக்கிறேன்.
அதாவது, இந்தப் பிரிவினையில் ஏற்படுகிற தொல்லைகள் எல்லாம் மத்திய அரசாங்கத்தாலும், மத்திய அரசாங்கத்தில் செல்வாக்கு உடையவர்களாலும் ஏற்படுகிற தொல்லைகளே தவிர,. வேறு ஆந்திர மக்கள் தொல்லை அல்ல"

"இன்று காலையிலுங் கூட டாக்டர் A.கிருஷ்ணசாமி அவர்களிடம் எனக்குச் சென்னை நகரம் முக்கியமல்ல,
அன்னியன் ஆதிக்கமற்ற, அன்னியன் சுரண்டலற்ற பூரண சுயேட்சையுள்ள பிரதேசம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதுதான் தேவை என்று சொன்னேன்."

"சென்னை நகரம் தமிழருக்கோ, தமிழ்நாட்டுக்கோ பெரிய தொண்டு செய்திருக்கிறது, செய்து வருகிறது, அல்லது செய்ய முன் வரும் என்பதற்காக அல்ல என்றும் சொன்னேன்"

"ஒரு சமயம் சென்னை போய்விடுமானாலும் நான் ஒன்றும் அதிகமாகக் கவலைப்பட மாட்டேன் என்றும்,
சென்னை ஒழிந்து போனால் பாக்கி உள்ள தமிழ்நாட்டை என் இஷ்டம் போல ஆக்கி நாளைக்கே பூரண விடுதலை பெற்ற பிரதேசமாக ஆக்க விளம்பரம் செய்து விட முடியும் என்று சொன்னேன்"

"இவை ஒருபக்கம் இருந்தாலும் நாம் பிரயத்தனப்படா விட்டால் சென்னை நகரம் ஆந்திரர்களுக்குப் போய் விடுமோ என்கிற கவலை சிறிதும் வேண்டியதில்லை.
ஏனெனில் அநேகமாகத் தமிழ்நாட்டு பிராமணர்கள் சென்னையில் வாழ்கிறார்கள்.
அவர்கள் ஒரு நாளும் சென்னை ஆந்திராவுடன் சேரவோ, தனி மாகாணமாக ஆக்கவோ சம்மதிக்கமாட்டார்கள்.
அவர்கள் இதில் வெற்றி பெற்றே தீருவார்கள்.
ஆதலால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று இன்று காலையில் சொன்னேன்"

விடுதலை 7.1.1953,
விடுதலை 8.1.1953.

நன்றி: Kathir Nilavan

No comments:

Post a Comment