Thursday 14 July 2016

காசுமீருக்குக் குரல்கொடுக்கலாமா?

காசுமீருக்குக் குரல்கொடுக்கலாமா?

காசுமீருக்கு குரல்கொடுத்தால் ஹிந்தியா கோவித்துக்கொள்ளுமாம்.

ஈழப் போராளிகளின் அறிவுரை.

முதலில் காசுமீர் பிரச்சனை இனரீதியான பிரச்சனை.
அங்கே பண்டித்துகள், பார்சிகள் என பல்வேறு மதத்தவர்கள் விடுதலையை ஆதரிக்கின்றனர்.

காஷ்மீர் விடுதலையை காசுமீரிகள் பார்த்துக்கொள்வார்கள்.

தமிழகத்தைப் போல காசுமீரமும் இரண்டு துண்டாக
சொல்லப்போனால் மூன்று துண்டாக வல்லாதிக்க நாடுகளால் உடைக்கப்பட்டுள்ளது.

காசுமீரிகள் ஹிந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் விடுதலை வேண்டிதான் போராடுகின்றனர்.

அவர்களிடமிருந்து நாம் எதையாவது கற்றோமா?

முதலில் ஈழம் என்பதே தமிழரைத் துண்டாடும் கருத்தியல்.
வெறும் 20 லட்சம் தமிழர்கள் வாழும் ஒரு தீவின் கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதி 8கோடி தமிழர்களுக்கு எப்படி தீர்வாகும்?

தமிழர் மண் தமிழக மாநிலத்தையும் புலிகள் அறிவித்த ஈழத்தையும் தாண்டி பெங்களூர் முதல் கதிர்காமம் வரை பரந்துவிரிந்து உள்ளது.
தமிழ்தேசியவாதிகள் ஈழத்தைத் தாண்டி இன்னமும் சிந்திக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரிய நிலை.

காசுமீருக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தால் இந்தியாவை பகைக்கவேண்டி வருமாம்.

இந்தியாவைப் பகைக்கவேண்டிவருமோ என்றுதான் தமிழக பிரச்சனைகளில் தலையிடாமல் ஈழப்போராட்டம்
ஆனால் இறுதியில் என்ன நடந்தது?

உறுதியாகக் கூறுவேன்.

ஈழம் தோற்றதுக்கு ஒரே காரணம் தமிழகத்துடன் அரசியல் ரீதியாகவும் ஆயுதரீதியாகவும் கைகோர்க்காததுதான்.

ஈழமும் தமிழகமும் ஒரே நாடு.

ஈழத்தில் நடந்த அத்தனை பிரச்சனைகளும் தமிழகத்திலும் நடந்துள்ளது.

(விரிவான பதிவு :
தமிழகம் - ஈழம் வாங்கிய அடிகளில் ஒற்றுமை
- வேட்டொலி )

இந்தியா என்ன
உலக நாடுகள் அனைத்தும் எதிர்த்தாலும் சரி
நாம் நமது தாய்மண்ணை ஒரு பிடியும் விட்டுக்கொடுக்காமல் போராடவேண்டும்.

ஈழத்தான் கடலுக்கு இந்த பக்கம் வந்து இந்தியாவுக்கு வந்துட்டேன் என்கிறான்.

தமிழகத்தான் அவனைப் பார்த்து இலங்கை அகதி என்கிறான்.

இருவரும் திருந்தவேண்டும்.

ஈழம் மட்டும் போதும் என்போர் தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்கின்றனர்.

ஆகவே காசுமீரை ஆதரிக்கவேண்டுமா என்றால் ஆதரிக்கலாம்
அல்லது வேறு இனத்தின் பிரச்சனையில் தலையிடாமல் விட்டுவிடலாம்.

ஆனால் ஹிந்தியா கோபமாகிவிடும் என்பதற்காக மட்டும் பம்முவது கோழைத்தனம்.

No comments:

Post a Comment