Friday, 8 January 2016

அரசு வேலையும் இன எழுச்சியும்

அரசு வேலையும் இன எழுச்சியும்

1940களில் இலங்கையில் 60% அரசு பணியாளர்கள் தமிழர்கள்
அதிலும் குறிப்பாக யாழ் தமிழர்கள்.
இதை எதிர்த்து உருவானதுதான் சிங்களதேசியம்.

இலங்கையில் சிங்களவர் ஆட்சியைக் கைப்பற்றி சிங்களத்தைப் புகுத்தி  20 ஆண்டுகளில் 70% அரசு பணி சிங்களவர் கைக்கு மாற்றினர்.
அதன்பிறகு யாழ் தமிழர்கள் "ஈழம்" கருத்தியலை உருவாக்கினர்.

1920களில் மெட்ராஸ் மாகாணத்தில் 60% அரசுப் பணியாளர்கள் தமிழர்கள்
அதிலும் குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்.
இதை எதிர்த்து உருவானதுதான் திராவிடம்.

சென்னை மாகாணத்தில் 20 ஆண்டுகளில் திராவிடம் ஆட்சியைக் கைப்பற்றி இடவொதுக்கீட்டுக்காகப் போராடி தமிழ்ப் பார்ப்பனரை ஓரம்கட்டி தமிழ் வளர்ச்சியைத் தடுத்து வந்தேறிகளின் வேட்டைக்காடாக தமிழகத்தை மாற்றியது.
இன்று அரசு வேலைகளில் தமிழர் 50%க்கும் குறைவு.
இந்தி திணிப்பை எதிர்த்து போராடியிராவிட்டால் இதுவும் இருந்திருக்காது.
தற்போது "தமிழ்தேசியம்" கருத்தியல் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

திராவிடம் பார்ப்பனரைத்தான் எதிர்க்கிறது பிராமணரை அல்ல
என்பதை அன்றே தமிழ்ப் பார்ப்பனர் கவனித்திருக்கவேண்டும்.
தமிழ் சார்ந்த ஒரு எதிர்க்கருத்தியலை உருவாக்கியிருக்க வேண்டும்.

அன்று கோட்டை விட்டது மட்டுமல்லாமல் இன்று வரை தமிழ்தேசியம் பக்கம் வராமல்
வெளிநாட்டில் குடியேறுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

சிங்களம் நேரடியான எதிரி அதனால் குறுகிய காலத்தில் அதிகளவு அடக்குமுறையும் அதற்கெதிரான பெரிய போராட்டமும் வெடித்தது.

திராவிடம் மறைமுகமான எதிரி
மெல்ல மெல்ல சுரண்டல்கள் நடந்தது.
அதனால் தமிழர்கள் விழித்துக்கொள்ள நீண்ட இடைவெளி ஆனது.
----------------------------------------

No comments:

Post a Comment