Saturday 16 January 2016

ஆரியர் என்றால்?!

ஆரியர் என்பது பல்வேறு காலங்களில் பல்வேறு பொருளில் பல்வேறு மக்களை குறித்துள்ளது.
மாணிக்கவாசகர் சிவனை 'ஆரியனே' என்று அழைத்துள்ளார்.
ராமனையும் 'ஆரிய' என்று கம்பர் அழைத்துள்ளார்.
ஆரியர் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறிப்பதில்லை.

'ஆரியற் காக வேகி' என்று கம்பரும்,
இடைச்சுரத்துக் கண்டோர் கூற்றாக “யார்கொல் அளியர் தாமே யாரியர்” என்று (குறுந். 7) பெரும்பதுமனாரும்,
முறையே, வணங்கப் படத்தக்கவன், பெற்றோர் என்னும் பொருளில் ஆரியன் என்னும் பெயரை வழங்கியிருப்பது காண்க.

குறுந்தொகை (7:3:5) பறையிசைக்கேற்ப கயிற்றின் மீது ஆடுவோர் ஆரியர் என்கிறது.

மிலேச்சரே ஆரியர் என்கிறது திவாகர நிகண்டு.

No comments:

Post a Comment