Tuesday, 19 January 2016

டேனியல் எனும் தமிழன்

டேனியல் எனும் தமிழன்

'தமிழ் போர் புரியும்' என்று 90 ஆண்டுகள் முன்பே அறிவித்த தமிழன்.

தமிழ் இந்திய ஆட்சிமொழி ஆக திரு.காயிதே மில்லத் வாக்கெடுப்பு நடத்தியது பலரும் அறிந்ததே.

அதற்கு முப்பதாண்டுகள் முன்பே "தமிழுக்கு ஆட்சியதிகாரம் தரவில்லை என்றால் போர் வெடிக்கும்" என்று கூறியுள்ளார் டேனியல் என்ற தமிழர்.

பிரிட்டிஷ் இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் திருமூலம் சட்டமன்ற உறுப்பினராய் இருந்த,
திரு.பால்.வி.டேனியல்

27.01.1923 அன்று ஆற்றிய உரையின் முதல் ஐந்து வரிகள்,

"ராஜபாஷையாக இருந்த தமிழ் நசுக்கப்பட்டு அடுப்பண்டையில் ஒளிவிடம் தேடவேண்டியதாயிற்று.
இக்கடைசி உறைவிடத்தினின்றும் தள்ளப்படுமாயின் அது தன் நியாயமான அவகாசத்துக்காக எதிர்த்து நின்று அல்ஸ்றர் போர் புரியும்"

Ulster என்பது வட அயர்லாந்தைக் குறிக்கும்.

அயர்லாந்து மக்கள் மொழி உணர்வால் கிளர்ந்தெழுந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடினார்கள்.
இது ஐரிஷ்-தேசியம் எனப்படும்.

1919ல் அமைதிப் போராட்டமாக ஆரம்பித்து 1921ல் ராணுவ மோதலாக உருவெடுத்தது.
இந்த போராட்டம் அயர்லாந்து பிரிட்டிஷ்பேரரசுக்கு உள்ளேயே மாநில உரிமை கிடைக்கப்பெற்றதால் தற்காலிகமாக நின்றது.

அயர்லாந்தின் வடகிழக்கில் சிறுபகுதி (1/6) விடுதலையை ஆதரிக்காமல் இங்கிலாந்துடன் இணைவதை விரும்பியது.

பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக இருந்த தனது சொந்த நாட்டின் வடகிழக்குப்பகுதியின் மீது போர்தொடுத்தனர் அயர்லாந்து நாட்டின் மற்ற பகுதியினர்(5/6)

இந்த போரானது 1921 முதல் 1923 வரை நடந்தது.
வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இதைத்தான் டேனியல் 1923ல் உதாரணமாகக் கூறியுள்ளார்.

அதாவது கேரளாவின் தமிழ்பகுதிகளில் தமிழ் நசுக்கப்படுவதை கேரளத்தமிழர்கள் சகித்துக்கொண்டிருந்தால்,
தமிழகம் கேரளத்தமிழர் மீதே போர் தொடுக்கும் என்பதைத்தான் அவர் கூறியுள்ளதாக அறியமுடிகிறது.

அயர்லாந்தினரின் 'நாம் ஐரியர்' இயக்கத்தைப் பார்த்துதான் 'நாம் தமிழர்' சி.பா.ஆதித்தனாரால் உருவாக்கப்பட்டது.

அல்ஸ்றர் பகுதியை மீட்கமுடியாவிட்டாலும் இங்கிலாந்திடமிருந்து பிரிந்து அயர்லாந்து தனிநாடானது.

அதன்பிறகு மிகக்குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment