அங்கே இங்கே எங்கே
என 'குழுவில் போலி'யைத் தேடியபின்
திறக்கும் ஒரு கதவு.
அழக்கூடாது என்பது விதி.
அழவைக்கும் ஆட்களுக்கு கிடைப்பது வெறும் ஆயிரங்களும் அவமானங்களும்.
எப்போதாவது வெள்ளைத்தோல் பெண்மணிகளின் கைகுலுக்கலும் கிடைக்கும்.
இடைவேளையில் போடும் பத்து நொடி விளம்பரத்திற்கு 2,50,000 சம்பாதிப்பார் முதலாளி.
பார்ப்பவர்கள் எல்லோரும் விழுந்து விழுந்து அழுதுவிட்டு போய்விடுவார்கள்.
ஆப்பத்தை மென்றபடி அழவைத்தவர்கள் ஏங்கி ஏங்கி சிரிப்பார்கள்.
தமது முகமும் திரையில் வந்ததை எண்ணி மெலிதாக அழவும் செய்வார்கள்.
No comments:
Post a Comment