Thursday 14 January 2016

இந்திய ராணுவத்தில் தமிழர் மனநிலை

வீரப்பன் ஒரு தமிழ் ராபின் உட்

நான் விடுமுறைக்கு டெல்லியிலிருந்து என் தாய்த்தமிழ்நாட்டிற்கு தொடர்வண்டியில் வரும்போதெல்லாம் குறைந்தது ஒரு தமிழ் படைவீரராவது அந்தப் பெட்டியில் இருப்பார்.
முகத்தைப் பார்த்தே அடையாளம் கண்டுகொள்வேன்;

அவர்களோடு பேசுவதும் அவர்கள் தமக்குள் பேசும் விடயங்களைக் கேட்பதும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
நாம் ஏதோ இந்திய எல்லையில் பாதுகாப்புப் படையில் இருப்பவர்கள்  இந்தியப் பற்றொடு நிற்பார்கள் என்று கற்பனை செய்வோம், ஆனால் அதுதான் கிடையாது.

அங்கே இருக்கும் தமிழருக்கு இந்தியப்பற்றை விடத் தமிழ்பற்றே அதிகமாக இருக்கும்.
இதை என்னால் அடித்துக் கூறமுடியும்.
அந்த வீரர்களின் கைபேசி அழைப்பு மணி கூட நல்ல தமிழ்ப்பாடலாகவே ஒலிப்பதை பலமுறை கவனித்திருக்கிறேன்.
தவிர பல்வேறுமொழி வீரர்கள் ஒன்றாக வண்டியில் ஏறிய பிறகு தத்தமது மொழிபேசுவோரிடம் சேர்ந்துகொள்கிறார்கள்;

தமிழ் வீரர்கள் அத்தனை பேருக்கும் வீரப்பனார் மீதும் பிரபாகரன் மீதும் கர்வம் இருப்பதையும் தெரிந்துகொண்டேன்;

அவர்களிடம் பழகிய பிறகுதான் இராணுத்தில் மேல்நிலைப் பதவியில் தமிழர் இடம்பிடிப்பது குதிரைக்கொம்பு என்றும் தெரிந்துகொண்டேன்;
சாதாரண படைவீரர்களாகவோ அல்லது அவர்களை வழிநடத்தும் அடிமட்ட மேல்பதவிகளிலோ தமிழர் நிறைந்துள்ளனர்;

ஆனால் கேப்டன், லெப்டினனன்ட், கர்னல், பிரிகேடியர், பீல்டு மார்சல் என உயர்பதவிகளில் சாதனை பல புரிந்தும் தமிழர் இடம்பெறவியலாது;
தமிழ்ப்பார்ப்பனர் என்றாலாவது கொஞ்சம் வாய்ப்பு உண்டு;
மற்றபடி உயர்பதவியிலிருப்பவர்கள் பெரும்பாலும் சீக்கியர்கள், மலையாளிகள், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனர்கள்.

நேரடியாக உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கும் சிப்பாய்கள் பெரும்பாலும் கூர்க்காக்கள், தமிழர்கள், பீகாரிகள் மற்றும் சீக்கியர்கள்.

அவர்களுடன் பேசியதிலிருந்துதான் இந்தியப் படைத்துறையில் மலிந்துள்ள ஊழல்களும், வடயிந்தியரின் ஆதிக்க மனப்பான்மையும், காசுமீர் வாழ்க்கை நிலையும், மாவோவாதிகளின் பலமும், வட மற்றும் தென்னிந்தியர் தமிழரை படைத்துறையில் ஒடுக்குவதையும்,
வடயிந்தியப் பெண் தலைமையில் காவல் காக்கப்படும் திகார் சிறையில் நூறு சதவீதம் தமிழர்களை அமர்த்தி குறுக்கொடிய வேலைவாங்குவதையும்,
வெளிநாட்டு விருந்தினராக வரும் படைவீரர்களுக்கு நடக்கும் அரசகவனிப்பையும்,
பணக்காரர்களின் புகை கக்கும் ஆலைகளுக்கு நாட்டு மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பளிக்கப்படுவதும்,
அமைச்சர்கள் சாவகாசமாகப் பேச கால்கடுக்க நிற்கும் படைவீரர்களுக்குக் குடிநீர்கூட ஒழுங்காக வழங்கப்படாத கொடுமையையும் ,
தமிழக மீனவர் கொலையை மற்ற இந்தியர்கள் பொருட்டாகவே மதிக்காததும்,
சீனாவை எதிர்கொள்ள முதுகெலும்பில்லாத நிலையில் படைத்தலைவர்களின் ஒருங்கிணைப்பும்,
கிழக்கிந்தியாவில் படையினரின் வரம்பு மீறிய அதிகாரமும் என இன்னும் இன்னும் எத்தனையோ விடயங்களை அறிய முடிந்தது;

தமிழ்படைவீரருக்கு அரசியல் அறிவு வளராமல் வைக்கப்பட்டுள்ளனர் ஆனால் யாராலும் இனப்பற்று வளர்வதைத் தடுக்கமுடியவில்லை;

தமிழ் படைவீரர்கள் தமது குடும்பம் அமைந்துள்ள தமிழ்நாடு இந்தியாவின் பாதுகாப்பிற்குள் வருகிறது என்ற ரீதியிலேயே தமது கடமையைப் புரிந்துகொள்கின்றனர்.

முத்தாய்ப்பாக ஒன்று..

தமிழ்படையினருக்கும் கன்னடபடையினருக்கும்தான் அடிக்கடி தகராறு வருமாம்.
அப்போது தமிழர்கள் "வீரப்பன் இருந்தப்போ எங்கடா போச்சு உங்க வீரம்?" என்று கேட்டுவிட்டால் போதுமாம்.

கன்னடவர்கள் அவமானத்தில் கூனிகுறுகிவிடுவார்களாம்.

ஆம்; கன்னட எல்லைக்குள் தமிழ்மண்ணில் பிறந்து, பள்ளிக்கூடமே போகாத, காட்டில் விறகுவெட்டிக் கூலிவேலை செய்த, ஒயிலாட்டம் கற்று திரைத்துறையில் நுழைய முயற்சித்த, தாம் அடக்கி வைத்திருந்தாக எண்ணிக்கொண்டிருக்கும் தமிழ்மக்களில் ஒருவனான வீரப்பன் என்கிற தனிமனிதன் 36 ஆண்டுகள் கன்னடவர் கண்ணில் விரல் விட்டு ஆட்டியது மறக்குமா அவர்களுக்கு?

வீரப்பனாருக்கு ஓரளவேணும் சவாலாக விளங்கியவர்கள் கோபாலகிருட்ணன், தேவாரம் போன்ற தமிழர்கள்தான்.

அவரைக் குறுக்கு வழியிலேனும் கொன்றவர்கள் மலையாளி விசயகுமாருக்குக் கீழ் இயங்கிய தமிழக அதிரடிப்படை வீரர்கள்தான்.

கன்னடவெறியர்களின் கொட்டத்தை அடக்கி அடிமனதில் உறையும் வண்ணம் நடுமண்டையில் 'நச்'சென்று குட்டி அவர்களின் கையாலாகாத்தனத்தை உணர்த்தியவர்தான் எமது தமிழியத்தலைவர்களுள் ஒருவரான "வீரப்பனார்".

நாளை தமிழர் மீது இந்தியா பாய்ந்தால் தமிழ் படையினர் கட்டாயம் தமது மண்ணைக் காக்கும் வீரப்பனாக மாறிவிடுவார்கள் என்பது உறுதி.

1 comment:

  1. இந்த தகவல் உங்களுக்கு உதவுமா என்று பாருங்கள். முருகனின் ஆறு படை வீடுகள் மலையில் தான் உள்ளது. மலை போன்ற நிலப்பரப்பு ஆதி காலத்தில் இருந்தே போர் செய்ய சிறந்த இடமாக கருதப்பட்டது. இன்றும் அது நடைமுறையில் உள்ளது (vantage point). முருகனின் கோவில்களை நாம் "படை" வீடு என்று தான் சொல்கிறோம்.

    ReplyDelete