Thursday 14 January 2016

தமிழ்க்குடியரசின் தெளிவான வரைபடம்

#### (((( தமிழ்க்குடியரசின் தெளிவான வரைபடம்)))) #####

பார்த்துக்கொள்ளுங்கள் தமிழர்களே நம் தாய்நாட்டை!

தற்போதைய தமிழ்நாடு பாதி கூட கிடையாது;

இசுரேலியர்களிடம் நிலத்தை இழந்த பாலசுத்தீனர் நிலைதான் நம் நிலையும்;

ஒரு பரந்த நிலப்பரப்பில் வாழும் தனித்த அடையாளமுடைய மக்கள்குழு தனது வரையறுக்கப்பட்ட நிலத்தையும் தமது மொழியையும் கட்டிக்காப்பதில்தான் தமது சந்ததிகள் உயிர்வாழும் வாய்ப்பை அதிகப்படுத்தும் என்பதை உணர்ந்திருப்பது அவசியம்;

எந்த ஒரு இனமும் தனக்கென ஆறு,மலை,காடு,கடல் என இயற்கை எல்லைகளால் வரையறுக்கப்பட்ட தமது பாரம்பரிய தாய்நிலத்தை தக்கவைத்துக் கொண்டதால்தான் வரலாற்றில் உயிர்பிழைத்து வந்துள்ளது;

நமது தாய்த்தமிழ்மண்ணானது ஆறு, கடல், தீவுகள்,காடுகள், எண்ணெய், நிலக்கரி, விளைநிலம், சமதளம், பொட்டல், சுற்றுலா, ஓய்வுத் தளங்கள், நீரிணைப்பு, அரிய மூலிகைகள்,அரிய விலங்கினங்கள், மழை, தட்பவெப்ப மாறுதல்கள், பருவக் காற்று , இயற்கை அரண்கள் என இன்னும் எத்தனை அம்சங்கள் ஒருநாட்டுக்குத் தேவையோ அத்தனையும் கொண்டது.
பத்துக்கோடிபேர் என்ன நூறுக்கோடிப் பேர்கூட வாழலாம்.
எந்த தட்டுப்பாடும் வராது.
விளையாட்டுக்கு சொல்லவில்லை உண்மையில் அத்தனை வளங்கள் உள்ளன;

வணிகத்திற்கு திறந்தே கிடக்கிறது கடல்;
அதையே தூய்மையாக்கி குடிநீராக்கினால் யாரிடமும் கையேந்தவேண்டாம்.
ஆறுகளை மறித்தால் கூட நமது நிலத்தடி நீர் வளத்தையும் , பஞ்சமேயில்லாமல் ஊர்ஊருக்கு இருக்கும் நீர்நிலைகளையும் சரியாகப் பயன்படுத்தியே தாராளமாக நீர்பெறலாம்.

இவ்வளவு ஏன்?! வளமான தஞ்சை மண்ணே போதும் முழுத்தமிழ்க்குடியரசுக்கும் சோறுபோட்டு பக்கத்து நாடுகளுக்கு விலையில்லாமல் ஏற்றுமதிகூட செய்யலாம்.

இந்த வரைபடத்தில் நம்பிக்கையில்லாதோர் இணையம் மூலம் கூகுள் செயற்கைகோள் வழியாக பாருங்கள்.
நமது தாய்நாட்டின் அமைப்பு அப்படியே தெரியும்.

( மேலே இருக்கும் கொஞ்சம் தவறு.
திருத்தப்பட்ட தமிழ்க்குடியரசு.எல்லைகள் மற்றும் சான்றுகள்
https://m.facebook.com/photo.php?fbid=419383841498608&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13 ).

No comments:

Post a Comment