Showing posts with label முதன்முதலாக தனித்தமிழ்நாடு. Show all posts
Showing posts with label முதன்முதலாக தனித்தமிழ்நாடு. Show all posts

Wednesday, 6 June 2018

தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய மூன்றாமவர் ஈ.வே.ரா

தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய மூன்றாமவர் ஈ.வே.ரா

  "தமிழ்நாடு தமிழருக்கே!" என்ற முழக்கத்தை ஏதோ ஈ.வே.ராமசாமிதான் முதலில் முழங்கியதாக பலரும் கதையளந்து வருகின்றனர்.

உண்மையை அறிய அம்முழக்கம் முதன்முதலாக முழங்கப்பட்ட மாநாட்டில் (11.09.1938) நடந்தவற்றை ஈ.வே.ரா நடத்திய விடுதலை ஏடு கீழ்க்கண்டவாறு வெளியிட்டுள்ளது,

"காங்கரஸ் லட்சியம் 'சுயராஜ்யம்' என முதன் முதல் கூறியது காலஞ் சென்ற தாதாபாய் நவரோஜி.
அது போல 'தமிழ்நாடு தமிழருக்கே' என தமிழர்களின் பிரதிநிதிகளான மூன்று பெரியார்கள் சென்ற 11-ந்தேதி சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒன்றரை லக்ஷம் தமிழர்கள் முன்னிலையில் கூறிவிட்டார்கள்.  அக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த மறைமலை அடிகள் மதவாதிகள் பிரதிநிதி,
அக்கூட்டத்தில் பேசிய தோழர் பாரதியார் காங்கரஸ்காரர் பிரதிநிதி,
அன்று பேசிய ஈ.வெ. ராமசாமிப் பெரியார் பகுத்தறிவுவாதிகள் பிரதிநிதி.
ஆகவே தமிழ்நாட்டின் அபிப்பிராயம் அக்கூட்டத்திலே பூரணமாகப் பிரதிபலித்தது என தைரியமாகக் கூறிவிடலாம்.
தமிழ் நாட்டார் மதவாதிகள், பகுத்தறிவுவாதிகள், காங்கரஸ் வாதிகள் என்ற மூன்று பெரும் பிரிவில் அடங்கி விடுவர்.
அந்த மூன்று பிரிவார் அபிப்பிராயத்தையே அந்த மூன்று பெரியார்களும் தமிழர்களுக்கு அன்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

- விடுதலை தலையங்கம் (19.09.1938).

மேற்கண்ட கட்டுரை நமக்கு உணர்ந்துவது என்ன?

அன்றைய கூட்டத்தில் "தமிழ்நாடு தமிழருக்கே" என முழங்கிய மூவரில் ஒருவர் ஈ.வே.ரா என்றுதான் உள்ளது.

அன்று தலைமை வகித்தவர் மறைமலையடிகள்.
அதன்பிறகு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் மேலே இரண்டாவதாக பாரதியார் என்று குறிக்கப்பட்டுள்ள சோமசுந்தர பாரதியார்.
மூன்றாவது இடத்தில்தான் ஈ.வே.ரா இருந்துள்ளார்.

ஈ.வே.ரா பத்திரிக்கை நடத்திவந்த காரணத்தால் ஊடகம் அவர் கையில் இருந்தது.
இந்த ஊடக பலம்தான் பிற்காலத்தில் அவர்காலத்து போராட்டங்கள், சிந்தனைகள், அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றை அவர் பெயருக்கு மாற்றிக்கொள்ள வழிவகுத்தது.

தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை ஈ.வே.ராமசாமிதான் முதலில் முன்வைத்தார் என்றும்,
தமிழ்தேசிய சிந்தனையே அவரால்தான் ஏற்படுத்தப்பட்டது  என்றும்,
பிறருக்கு அதில் சிறிதும் பங்கில்லை என்பது போலவும் ஈ.வெ.ரா பக்தர்கள் பரப்புரை செய்கின்றனர்.

ஆனால் ஈ.வே.ரா தமிழ்தேசிய நிலைப்பாட்டை அவ்வப்போது கையிலெடுத்தும் கைவிட்டும் நிறம் மாறி மாறி குழப்பியவர் என்பதை சான்றுகளுடன் காட்டமுடியும்.

தேடுக: ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? வேட்டொலி

தேடுக: இந்தியை எதிர்த்தாரா ஈ.வே.ரா? வேட்டொலி

Tuesday, 19 January 2016

டேனியல் எனும் தமிழன்

டேனியல் எனும் தமிழன்

'தமிழ் போர் புரியும்' என்று 90 ஆண்டுகள் முன்பே அறிவித்த தமிழன்.

தமிழ் இந்திய ஆட்சிமொழி ஆக திரு.காயிதே மில்லத் வாக்கெடுப்பு நடத்தியது பலரும் அறிந்ததே.

அதற்கு முப்பதாண்டுகள் முன்பே "தமிழுக்கு ஆட்சியதிகாரம் தரவில்லை என்றால் போர் வெடிக்கும்" என்று கூறியுள்ளார் டேனியல் என்ற தமிழர்.

பிரிட்டிஷ் இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் திருமூலம் சட்டமன்ற உறுப்பினராய் இருந்த,
திரு.பால்.வி.டேனியல்

27.01.1923 அன்று ஆற்றிய உரையின் முதல் ஐந்து வரிகள்,

"ராஜபாஷையாக இருந்த தமிழ் நசுக்கப்பட்டு அடுப்பண்டையில் ஒளிவிடம் தேடவேண்டியதாயிற்று.
இக்கடைசி உறைவிடத்தினின்றும் தள்ளப்படுமாயின் அது தன் நியாயமான அவகாசத்துக்காக எதிர்த்து நின்று அல்ஸ்றர் போர் புரியும்"

Ulster என்பது வட அயர்லாந்தைக் குறிக்கும்.

அயர்லாந்து மக்கள் மொழி உணர்வால் கிளர்ந்தெழுந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடினார்கள்.
இது ஐரிஷ்-தேசியம் எனப்படும்.

1919ல் அமைதிப் போராட்டமாக ஆரம்பித்து 1921ல் ராணுவ மோதலாக உருவெடுத்தது.
இந்த போராட்டம் அயர்லாந்து பிரிட்டிஷ்பேரரசுக்கு உள்ளேயே மாநில உரிமை கிடைக்கப்பெற்றதால் தற்காலிகமாக நின்றது.

அயர்லாந்தின் வடகிழக்கில் சிறுபகுதி (1/6) விடுதலையை ஆதரிக்காமல் இங்கிலாந்துடன் இணைவதை விரும்பியது.

பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக இருந்த தனது சொந்த நாட்டின் வடகிழக்குப்பகுதியின் மீது போர்தொடுத்தனர் அயர்லாந்து நாட்டின் மற்ற பகுதியினர்(5/6)

இந்த போரானது 1921 முதல் 1923 வரை நடந்தது.
வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இதைத்தான் டேனியல் 1923ல் உதாரணமாகக் கூறியுள்ளார்.

அதாவது கேரளாவின் தமிழ்பகுதிகளில் தமிழ் நசுக்கப்படுவதை கேரளத்தமிழர்கள் சகித்துக்கொண்டிருந்தால்,
தமிழகம் கேரளத்தமிழர் மீதே போர் தொடுக்கும் என்பதைத்தான் அவர் கூறியுள்ளதாக அறியமுடிகிறது.

அயர்லாந்தினரின் 'நாம் ஐரியர்' இயக்கத்தைப் பார்த்துதான் 'நாம் தமிழர்' சி.பா.ஆதித்தனாரால் உருவாக்கப்பட்டது.

அல்ஸ்றர் பகுதியை மீட்கமுடியாவிட்டாலும் இங்கிலாந்திடமிருந்து பிரிந்து அயர்லாந்து தனிநாடானது.

அதன்பிறகு மிகக்குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, 20 November 2014

நெருப்புக்குத் தீப்பொறி தமிழ்க் குடியரசுக்கு ஈழப்பொறி

நெருப்புக்குத் தீப்பொறி
தமிழ்க் குடியரசுக்கு ஈழப்பொறி

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

தமிழீழம் நிலப்பரப்பு= 21,952 ச.கீ.மி
+
தற்போதைய தமிழகம்=130,058 சகீமி
+
அண்டைமாநிலங்கள் பறித்துக்கொண்டது=70,000சகீமி
==
மொத்தம்=222,010 சகீமி

அதாவது புலிகள் அறிவித்த தமிழீழத்தை விட 10.11 மடங்கு பெரியது நம் தாய்மண்.

உலகின் பரப்பளவில் (510,072,000 சகீமி)  இது 0.043% ஆகும்.
அதாவது நூற்றுக்கு அரைப்பங்கு கூட இல்லை.

இதில் கிட்டத்தட்ட பாதியளவுள்ள (58%) தமிழகத்தைத் தவிர மற்ற பகுதிகள் வேற்றினத்தாரிடம் முற்றாக இழந்துவிட்டோம்.
தமிழகம்கூட அரைகுறைக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது .

உலக மக்கள்தொகை 712கோடி.
அதில் அசல் தமிழர் கிட்டத்தட்ட 6.5 கோடி.
இது 0.91 சதவீதம் ஆகும்.
இது நூறுபேரில் ஒருவர்கூட தமிழினம் இல்லை.

பரப்பளவின் படி நாம் 77வது நாடு.

நாம் ஒரு பழமையான மிகச் சிறுபான்மையான இனம். நமக்குள் வேறுபாடுகள் ஏன்?

நமது தாய்நிலம் சின்னஞ்சிறியது இதற்குள் ஏன் இருநாடுகள்?

பெரியநாடுகளோடு நாம் இணைந்திருப்பதால் நமது வளங்கள் சுரண்டப்பட்டு நாம் அடிமைப்படுத்தப்படுகிறோம்.
நாம் ஒரு நாடமை(தேசிய)இனம்.
நமக்கு தனிநாடு பெறும் தகுதியும் உரிமையும் உண்டு.
இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா நாட்டினர் நம்மை 'ஸகோதரர்கள்' என்கிறார்கள்.
உடன்பிறந்த அண்ணன் தம்பியே ஆனாலும் ஈன்ற பெற்றோரே ஆனாலும் உரிமைகள் வழங்கப்படாவிட்டால் பிரிந்துசெல்வது சரியே ஆகும்.
நம் வளங்களைச் சுரண்டி நம்மை எட்டுதிக்கும் விரட்டியடிக்கும் இவர்கள் நமது உடன்பிறந்தவர்களும் இல்லை. இவர்கள் நமது எதிரிகளே ஆவர்.

எனவே தமிழரே,
தலைவர் பிரபாகரன் வழியில் நாம் நமக்குள் திரண்டு நமது சின்னஞ்சிறிய தாய்மண்ணை மீட்டு நமக்கான நாட்டினை அமைக்க ஆயத்தமாவோமாக.

நம்மிலும் சிறிய தாய்நிலத்தையும் நம்மைவிடக் குறைந்த மக்கள்தொகையும் கொண்ட பிரிட்டிஷ்காரர்கள் உலகிலேயே பெரிய பேரரசை நிறுவவில்லையா?

நம்மால் நமது தாய்நிலத்தில் ஒரு வல்லரசை நிறுவிப் படைக்க இயலாதா?

உலக மானிடர் அனைவருக்கும் நாம் நல்லது செய்யலாம். எப்படி செய்யலாம் என்றால் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக சிறந்துயர்ந்த ஒரு நாட்டினைக் கட்டியமைப்பதன் மூலம் செய்யலாம்.

( தமிழ்க் குடியரசு எல்லைகள்
https://m.facebook.com/photo.php?fbid=419383841498608&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )
(தமிழகம்-ஈழம் வாங்கிய அடிகளில் ஒற்றுமை
https://m.facebook.com/photo.php?fbid=435281226575536&id=100002809860739&set=a.203447446425583.28789.100002809860739&refid=13 )

Friday, 18 July 2014

அயோத்திதாசரின் தமிழ்முழக்கம்

அயோத்திதாசரின் தமிழ்முழக்கம்

எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ

ஈவேரா-வை தமிழ்த் தேசியத் தந்தை என்று சிலர் திரிக்கின்றனர்.

தமிழ்நாடு தமிழருக்கே என்று அவர்தான் முதலில் கூறினாராம்.

ஈவேரா என்பவர் திராவிட நாடு, தனித்தமிழ் நாடு என்று மாற்றி மாற்றி பேசி கடைசிரை குழப்பியவராவார், அவர் எப்படி தமிழ்த்தேசியத்தின் தந்தை ஆவார்?

ஆனால், 1881லேயே தாழ்த்தப்பட்ட மக்களை பஞ்சமர் அல்லது தலித் என்று குறிப்பிடாமல் 'ஆதித் தமிழர்' என்று குறிப்பிட வலியுறுத்தியவர் அயோத்திதாசர்;
1885லிருந்து 'ஜான் ரத்தினம்' என்பவருடைய 'திராவிடப் பாண்டியன்'என்ற இதழில் அயோத்திதாசர் உதவியாசிராக பணிபுரியலானார்;
ஆனால், 1907ல் அவர் தனி இதழ் தொடங்கியபோது அதற்கு திராவிடப் பெயரை வைக்காது 'ஒரு பைசாத் தமிழன்' என்றே பெயர் சூட்டி தமிழிய சிந்தனைகளோடு வெளியிட்டுவந்தார்;
பிறகு 1908ல் அதன் பெயரைத் 'தமிழன்' என்று மாற்றினார்;
தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் வேத, மத, பிராமணீய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சமுக நீதி பிரதிநித்துவம், தாழ்த்தப்பட்டோர் விடுதலை, சுயமரியாதை, இந்தி எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற கருத்துகளுடன் வெளிவந்தது தமிழன் இதழ்.
மலேசியா, சிங்கப்பூர் வரையிலும் கூட அவ்விதழ் பரவியது.
(1942ல் 'தமிழ் ராஜ்ய கட்சி'  என்ற கட்சியைத் தொடங்கி தமிழருக்குத் தனி ராஜ்யம் தேவை என்று முழங்கிய சி.பா.ஆதித்தனாரும் 1942ல்  'தமிழன்' என்ற வார இதழைத் தொடங்கினார்)

மொழியின் மூலம் சாதியை பின்னுக்குத் தள்ளலாம் என்பதை  "ஓர் பாஷையின் பெயரால் சங்கத்தை நிலை நிறுத்துவோமானால் ஆதவரும் ஆதி தமிழரென்பர், வன்னியரும் ஆதி தமிழரென்பர்,
நாடாரும் ஆதி தமிழரென்பர், வேளாளரும் ஆதி தமிழரென்பர்" என்கிறார்.

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியம், திராவிடம் போன்ற 'தமிழர் மீதான வேற்றின ஏகாதிபத்திய' கருத்துகள் தமிழர் மத்தியில் விதைக்கப்பட்டபோது, முதன்முதலாக 'தமிழ்நாடு தமிழருக்கே' (தமிழ்தேசம் சுதேசிகளுக்கே) என்று கூறியவரும் அயோத்திதாசப் பண்டிதரே ஆவார்.

30-10-1912 அன்று தமிழன் இதழில் 'விடுதலை அளித்தால் இம்மண்ணின் மைந்தரான(சுதேசிகளான) தமிழருக்கே வழங்கவேண்டும்' என்றார். "தமிழ்மொழியில் பிறந்து, தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்குச் சொந்தமான பூர்வக்குடிகள் சுதேசிகளுக்கே சுதந்திரம் வழங்கவேண்டும்" என்கிறார்.
மேலும் "கருணை தாங்கிய ஆங்கில ஆட்சியாளர்களே சுதேசிகள் மீது கருணை பாவித்து ஆட்சி அதிகாரத்தை இத்தேச பூர்வகுடிகளுக்கு அளிப்பதே கருணையாகும்.
நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னர்
குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக்கருதி அவர்களிடம் ஆட்சியை வழங்கினால், நாடு பாழாகி சீர்கெட்டுவிடும்” என
ஆங்கிலேயரிடம் விடுதலை பெறுவதற்கு 35ஆண்டுகளுக்கு முன்னரே அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
(இதே காலகட்டத்தில் 1922ல் அருணாசலம்'தனி ஈழம்' என்கிற கருத்தியலை உருவாக்குகிறார்)

ஈவேரா பொதுவாழ்க்கைக்கு வரும் முன்னரே 'தமிழர் ஒரு தேசிய இனம்' என்று சிந்தித்த அயோத்தி தாசரே 'தனித் தமிழர் நாடு'  என்ற கருத்தியலின் தந்தை ஆவார்.

நன்றி: http://thamizhanvelu.blogspot.in/2012/07/blog-post_4258.html?m=1
https://m.facebook.com/photo.php?fbid=568286243286260&id=100003146695085&set=t.100003146695085&source=42&refid=13
http://ta.m.wikipedia.org/wiki/அயோத்தி_தாசர்
https://m.facebook.com/photo.php?fbid=467886293315029&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=48