Showing posts with label தமிழகப்புலி. Show all posts
Showing posts with label தமிழகப்புலி. Show all posts

Thursday, 20 November 2014

நெருப்புக்குத் தீப்பொறி தமிழ்க் குடியரசுக்கு ஈழப்பொறி

நெருப்புக்குத் தீப்பொறி
தமிழ்க் குடியரசுக்கு ஈழப்பொறி

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

தமிழீழம் நிலப்பரப்பு= 21,952 ச.கீ.மி
+
தற்போதைய தமிழகம்=130,058 சகீமி
+
அண்டைமாநிலங்கள் பறித்துக்கொண்டது=70,000சகீமி
==
மொத்தம்=222,010 சகீமி

அதாவது புலிகள் அறிவித்த தமிழீழத்தை விட 10.11 மடங்கு பெரியது நம் தாய்மண்.

உலகின் பரப்பளவில் (510,072,000 சகீமி)  இது 0.043% ஆகும்.
அதாவது நூற்றுக்கு அரைப்பங்கு கூட இல்லை.

இதில் கிட்டத்தட்ட பாதியளவுள்ள (58%) தமிழகத்தைத் தவிர மற்ற பகுதிகள் வேற்றினத்தாரிடம் முற்றாக இழந்துவிட்டோம்.
தமிழகம்கூட அரைகுறைக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது .

உலக மக்கள்தொகை 712கோடி.
அதில் அசல் தமிழர் கிட்டத்தட்ட 6.5 கோடி.
இது 0.91 சதவீதம் ஆகும்.
இது நூறுபேரில் ஒருவர்கூட தமிழினம் இல்லை.

பரப்பளவின் படி நாம் 77வது நாடு.

நாம் ஒரு பழமையான மிகச் சிறுபான்மையான இனம். நமக்குள் வேறுபாடுகள் ஏன்?

நமது தாய்நிலம் சின்னஞ்சிறியது இதற்குள் ஏன் இருநாடுகள்?

பெரியநாடுகளோடு நாம் இணைந்திருப்பதால் நமது வளங்கள் சுரண்டப்பட்டு நாம் அடிமைப்படுத்தப்படுகிறோம்.
நாம் ஒரு நாடமை(தேசிய)இனம்.
நமக்கு தனிநாடு பெறும் தகுதியும் உரிமையும் உண்டு.
இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா நாட்டினர் நம்மை 'ஸகோதரர்கள்' என்கிறார்கள்.
உடன்பிறந்த அண்ணன் தம்பியே ஆனாலும் ஈன்ற பெற்றோரே ஆனாலும் உரிமைகள் வழங்கப்படாவிட்டால் பிரிந்துசெல்வது சரியே ஆகும்.
நம் வளங்களைச் சுரண்டி நம்மை எட்டுதிக்கும் விரட்டியடிக்கும் இவர்கள் நமது உடன்பிறந்தவர்களும் இல்லை. இவர்கள் நமது எதிரிகளே ஆவர்.

எனவே தமிழரே,
தலைவர் பிரபாகரன் வழியில் நாம் நமக்குள் திரண்டு நமது சின்னஞ்சிறிய தாய்மண்ணை மீட்டு நமக்கான நாட்டினை அமைக்க ஆயத்தமாவோமாக.

நம்மிலும் சிறிய தாய்நிலத்தையும் நம்மைவிடக் குறைந்த மக்கள்தொகையும் கொண்ட பிரிட்டிஷ்காரர்கள் உலகிலேயே பெரிய பேரரசை நிறுவவில்லையா?

நம்மால் நமது தாய்நிலத்தில் ஒரு வல்லரசை நிறுவிப் படைக்க இயலாதா?

உலக மானிடர் அனைவருக்கும் நாம் நல்லது செய்யலாம். எப்படி செய்யலாம் என்றால் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக சிறந்துயர்ந்த ஒரு நாட்டினைக் கட்டியமைப்பதன் மூலம் செய்யலாம்.

( தமிழ்க் குடியரசு எல்லைகள்
https://m.facebook.com/photo.php?fbid=419383841498608&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )
(தமிழகம்-ஈழம் வாங்கிய அடிகளில் ஒற்றுமை
https://m.facebook.com/photo.php?fbid=435281226575536&id=100002809860739&set=a.203447446425583.28789.100002809860739&refid=13 )

Saturday, 26 July 2014

ஈழம் நோக்கிப் புறப்பட்ட தமிழகம்

ஈழம் நோக்கிப் புறப்பட்ட தமிழகம்

$S$S$S$S$S$S$S$S$S$S$S$

ஈழத்தில் கருப்பு யூலைக் கலவரம்
நடந்தபோது தமிழகத்தில்
பல்வேறு போராட்டங்கள் தமிழக மக்களால்
நடத்தப்பட்டது; வேற்றினத்தார் ஆட்சியில்
சிக்குண்டுள்ள 'ஏழைத் தமிழகம்' தம்மால்
முடிந்த எதிர்ப்பைத் தெரிவித்தது;
அதில் முத்தாய்ப்பான போராட்டம்
பழ.நெடுமாறன் அவர்கள் நடத்திய 'தியாக
பயணம்' போராட்டம்;
கருப்பு யூலைக் கலவரம்
முடிந்து ஒவ்வொரு செய்தியாக வெளிவெரத்
தொடங்கியபோது தமிழக மக்கள்
அதிர்ந்துபோனார்கள்;
ஈழம் நோக்கிச் செல்லவும் துணிந்த
பழ.நெடுமாறன் துணிவுள்ள இளைஞர்கள்
மதுரையில் கூடும்படி அழைப்பு விடுத்தார்;
சுமார் ஐயாயிரம் இளைஞர்கள் மதுரையில்
திரண்டனர்;
7,ஆகஸ்ட்,1983 அன்று குன்றக்குடி அடிகளார்
தொடங்கிவைக்க மதுரையிலிருந்து பேரணியாக
ராமேசுவரம் சென்றனர்;
வழிநெடுக மக்கள் வரவேற்பளித்தவாறும்
விருந்தோம்பல் செய்தும் கூட்டத்தில்
சேர்ந்தவாறும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள்
ராமேசுவரம் வந்தடைந்தனர்;
காவல்துறையினர் இந்த எழுச்சிபெற்றக்
கூட்டத்தைச் சமாளிக்கமுடியாமல்
திணறிக்கொண்டிருந்தனர்;
என்ன செய்வது ஈழத்திற்கும் தமிழகத்திற்கும்
இடையில் இந்தப் பாழாய்ப்போன கடல்
இருக்கிறதே!
காவல்துறையினர் முன்னேற்பாடாக படகுகளைப்
பறிமுதல் செய்துவிட்டிருந்தனர்;
ராமேசுவர மீனவர்களையும் போராட்டக்காரர்க
ளுக்கு படகு தரக்கூடாது என்று மிரட்டிவைத்திரு
ந்தனர்;
ஆனாலும் கிடைத்த ஒரு படகுகளில்
ஏறிக்கொண்டு பழ.நெடுமாறன் தலைமையில்
புறப்பட்டனர்;
பலர் முடிந்த
தொலைவு வரை கூடவே நீந்திச்சென்றனர்;
நடுக்கடலில் கடலோரக் காவல்படையால்
வழிமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
சட்டமன்றத்தில் ம.கோ.இரா (எம்ஜிஆர்)
மீது படகுகளைப் பறிமுதல் செய்ததாகக்
குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கடுமையான
கண்டம் தெரிவிக்கப்பட்டது;
"ஆமாம், நான்தான் பறிமுதல் செய்தேன்;
சிறிலங்கா கடற்படை சுட்டால்
தடுப்பதற்கு அவர்களிடம் மனத்துணிவைத் தவிர
என்ன இருக்கிறது?"
என்ற மகோஇரா பதிலளித்தார்.
(இதே போல பண்டாரவன்னியனுக
்கு தமிழகத்திலிருந்து 'ரகுநாத நாயக்கர்' என்ற
தெலுங்கு மன்னர் படையுதவி செய்துள்ளார்;
ஈழத்திற்கு வேற்றினத்தார் செய்த
உதவிகளை மறைக்கக்கூடாது என்பதற்காக
இதை இங்கே கூறுகிறேன்)
இதில் ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும்;
கருப்பு ஜூலை என்பது 25ம்
தேதியிலிருந்து 30ம் தேதி வரையான கலவரம்
ஆகும்.
ஆனால், 8நாட்கள் கழித்துதான் தமிழகம்
தமது பெரியளவிலான போராட்டத்தைத்
தொடங்குகிறது;
இதேபோல 2009
இனவழிப்பிற்கு பிறகு தமிழகத்தின்
பெரியளவிலான போராட்டங்கள் 2013ல்தான்
நடக்கிறது;
இதேபோலத்தான் கர்நாடக,ஆந்திர,கேரள
மாநிலங்களில் உள்ள தமிழர்கள் படும்
அல்லல்களும் அவர்களது போராட்டங்களும்
கூட தமிழக மக்களுக்குத் தெரியவராது;
என்றால் அந்தமான்,மலேசிய,சிங்கப்பூர்
தமிழரைப் பற்றி கூறவும் வேண்டுமா?
இதற்குக் காரணம் வேற்றினத்தார்
ஊடகங்களைக்கூட பெரும்பாலும்
கைப்பற்றி அரசியல் ரீதியாக
ஒரு இரும்புத்திரைக்குள் தமிழக
மக்களை வைத்திருப்பதுதான்.
ஈழமக்களும் மேற்குலக நாடுகளில்
பரப்புரை செய்வதில் காட்டும் அக்கறையைத்
தமிழ் மக்களிடம் பரப்புரை செய்வதில்
காட்டுவதில்லை;
தமிழகத்தின் ஈழ ஏதிலிகள்(அகதி) கடுமையான
கண்கானிப்பில் அடக்கி வைக்கப்பட்டிருப
்பது இந்த காரணத்தினாலேயே ஆகும்.
https://m.facebook.com/photo.php?fbid=470103026426689&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Wednesday, 16 July 2014

புலிகள்-இயக்கத்தில் தமிழக-இளைஞர்கள்.

புலிகள்-இயக்கத்தில் தமிழக-இளைஞர்கள்
+___+___+___+___+___+___+___+___+___+
பின்மண்டையில் முரசுகள் ஒலிக்க,
"ஒரு மார்தட்டும் பதிவு"
ஏறக்குறைய 30,000 போராளிகள் இருந்த விடுதலைப்
புலிகள் இயக்கத்தில் சற்றேறக்குறைய 200 தமிழக
போராளிகள் இருந்தனர்;
அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்கள்
கிடைக்கவில்லை; எனக்குக் கிடைத்தவரை சில தகவல்கள்
தருகிறேன்.
வீரமரணம் அடைந்தோருக்கு புலிகள் வழங்கும் 'மாவீரர்'
பட்டம் பெற்ற தமிழகத் தமிழர்களில்
ஒரு கரும்புலி இரண்டு பெண்போராளிகள் உட்பட
14பேரின் விபரங்கள்,
பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள்
ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போ
து வீரச்சாவு
துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ள
து.
________________
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: உமா
இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 27.05.1972
வீரச்சாவு: 11.12.1999
நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத
அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள
்ளது.
_____________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மணியரசி
இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி
ஊர்: தமிழகம்.
வீரப்பிறப்பு: 02.02.1977
வீரச்சாவு: 19.04.1996
நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற
மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2
நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ள
து.
______________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: பத்மநாபன்
இயற்பெயர்: பி.பத்மநாபன்
ஊர்: திருச்சி, தமிழகம்.
வீரப்பிறப்பு: 27.07.1963
வீரச்சாவு: 16.03.1988
நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத
விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு
________________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுனில்
இயற்பெயர்: கதிரவன்
ஊர்: தமிழகம்.
வீரச்சாவு: 11.04.1988
நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில்
இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
________________
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)
இயற்பெயர்: முத்தையா இராமசாமி
ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 23.07.1962
வீரச்சாவு: 11.12.1991
நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில்
சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள
்ளது.
______________
நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: உதயசந்திரன்
இயற்பெயர்: சேதுபாணடித்தேவர்
ராமமணி சேகரன்மகாதேவர்
ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 05.05.1969
வீரச்சாவு: 09.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில்
சிறிலங்கா படையினர்
மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு
__________________
பிரிவு: கடற்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: ஈழவேந்தன்
இயற்பெயர்: துரைராசன் குமரேசன்
ஊர்: தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 25.05.1969
வீரச்சாவு: 20.11.1992
நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ள
து.
_____________
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சச்சு
இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்
ஊர்: பியர், இந்தியா.
வீரப்பிறப்பு: 04.09.1975
வீரச்சாவு: 20.12.1992
நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம்
படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள்
மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள
்ளது.
______________
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)
இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 01.01.1966
வீரச்சாவு: 13.05.1996
நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த
காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது
வீரச்சாவு
_____________
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)
இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 31.05.1975
வீரச்சாவு: 19.05.1996
நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான
தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில்
இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
_____________
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குற்றாளன்
இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 08.08.1969
வீரச்சாவு: 16.07.1996
நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில்
படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட்
உட்கொண்டு வீரச்சாவு
_________________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுதா
இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்
ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு
வீரப்பிறப்பு: 28.10.1980
வீரச்சாவு: 05.07.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில்
சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில்
வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள
்ளது.
_____________
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: குருசங்கர்
இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 18.04.1973
வீரச்சாவு: 25.07.1996
நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள்
நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம்
பெறும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்
மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
___________
நடிகனுக்குப் பாலூற்றும் இளைஞரைப்பற்றிப் பேசிக்
களைப்படைந்தோர் இனி இவர்களைப்பற்றிப் பேசுங்கள்.