Showing posts with label கருப்பு ஜூலை. Show all posts
Showing posts with label கருப்பு ஜூலை. Show all posts

Thursday, 16 October 2014

புலிகள் சிறைமீட்ட பெண்

புலிகள் சிறைமீட்ட பெண்
---------- ---------------- --------
1983 யூலை 25ல் கறுப்பு யூலையின் உச்சக்கட்ட
கொலை நடந்த நாள்;
வெளியே குடும்ப
அட்டைகளைகு கையில் வைத்துக்கொண்டு சிங்களவர்
தமிழரை வேட்டையாடிக்கொண்டிருக்க
அன்று வெலிக்கடை சிறையில் இருந்த சிங்களக்
கைதிகள் மதிய உணவுக்குப் பிறகு திடலில்
(சிங்கள)சிறையதிகாரிகளால் ஒன்றுகூட்டப்பட்டனர்;
அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு தமிழ்க்கைதிகள்
இருந்த கூடம் நோக்கி சென்றனர்;
"சிங்கள மக்கள்
வாழ்க" "புலிகளைக் கொல்லுங்கள்" என்று சிங்களத்தில்
முழக்கமிட்டபடி சிறைக் காவலர்களால்
வழிநடத்தப்பட்டு கதவுகள் திறந்துவிடப்பட்டு அந்த
கொலைக்கூட்டம்,
ஏற்கனவே (மாலை மது அருந்திவிட்டு வரும்)சிறையதிகா
ரிகளால் நாள்தோறும் கொடுமைப்படுத்தப
்பட்டு உடல்நலம் சிதைந்துபோயிருந்த ஆயுதமில்லாத
தமிழ்க்கைதிகளைக் வெட்டியும் குத்தியும் அறுத்தும்
கொன்றனர்;
இதில் குட்டிமணி இறந்தபிறகு தமிழீழத்தைப் பார்ப்பேன்
என்று கண்தானம் செய்திருந்தார், உயிருடனே அவர்
கண்களை நோண்டி பிறகு கொடூரமாகக் கொல்லப்பட்டார்;
மொத்தம் 34பேர் கொல்லப்பட்டு உடல்களும்
துண்டுதுண்டாக வெட்டப்பட்டு அங்கிருந்த புத்தர்
சிலைமுன்பு படையல் போடப்பட்டது;
ஒரு சாண்
அளவு அங்கே குருதி தேங்கியிருந்தது;
நள்ளிரவு வரை இக்கோரதாண்டவம் நடந்தது;
பிறகு சிங்கள அதிகாரி அக்கைதிகளைப்
பாராட்டி உரையாற்றினார்;
பி3,டி3 கூடங்களில்
இருந்த அத்தை தமிழ்க்கைதிகளும் கொல்லப்பட்டுவிட
சி3ஐ நாளை பார்த்துக்கொள்ளலாம்
அதுவரை ஓய்வெடுக்குமாறு கூறினார்;
வெளியிலிருந்து சரக்குந்து(லாரி)
வந்து அத்தனை உடல்களும் அப்புறப்படுத்தப்பட்டன;
துப்புரவுப்பணி முடிந்ததும்
அதிகாலை ஒரு (சிங்கள)நீதிபதி வந்து சி3
தமிழ்க்கைதிகளை விசாரித்தார்; தமிழ்க்கைதிகள்
துணிந்து நடந்ததைக் கூறினர்; பிறகு,
இவ்வாறு இனி நடக்காது என்று கூறிவிட்டுச்
சென்றார்;
27-7-89 அன்று மீண்டும் இதேபோல்
கொலைத்திட்டம் நிறைவேறியது; ஆனால், தமிழ்க்கைதிகள்
எச்சரிக்கையாக இருந்தனர்;
தமது போர்வைகளை சுருட்டி கதவில் கட்டி இறுக்கிப்
பிடித்து திறக்கமுடியாது செய்துகொண்டு,
தீட்டிவைத்திருந்த தட்டு கரண்டி, கழிவறை வாளி,
மேசை போன்றவற்றை பயன்படுத்தி தாக்கினர்;
சிறுநீரையும் குழம்பையும் வைத்திருந்தனர்
அதை சிங்களவர்கள் கண்களில் ஊற்றினர்;
மூன்று மூன்று பேராக அடைக்கப்பட்டிருந்த
37கைதிகள் ஆயிரம் சிங்களவரை சமாளித்தனர்;
சில சிங்களக்கைதிகள் தப்பியோட முயற்சிக்க
சிறையதிகாரிகள் கலவரத்தை நிறுத்தமுயன்றனர்;
அதிரடிப்படை வரவழைக்கப்பட்டது; காயம்பட்ட தமிழர்கள் மருத்துவமனையில் சிங்கள
மருத்துவராலும், தாதியராலும் பரிகசிக்கப்பட்டனர்;
இரண்டாம் தாக்குதலில் மொத்தம் 18பேர் இறந்தனர் 19பேர் பிழைத்தனர்;
புலிகளுக்கு அடைக்கலம்
கொடுத்ததற்காக சிறையிடப்பட்ட 'நிர்மலா'
பெண்கைதிகளுடன் இருந்ததால் அவரை கவனிக்கவில்லை;
நிர்மலா என்பவர் மர்மமான முறையில்
படுகொலை செய்யப்பட்ட மனிதவுரிமை செயல்பாட்டாளர்
'ராஜினி' என்பவரின் உடன்பிறந்தவர்; தமிழ்கைதிகள்
மட்டகளப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர்;
23-9-83
அன்று பல்வேறு இயக்கங்கள்
சேர்த்து முயற்சித்து நிர்மலா தவிர 60தமிழர்கள்
தப்பினர்;
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட
நிர்மலாவை புலிகள் கேணல்.பிரான்சிசு என்பவர்
தலைமையில் பஷிர், சிவம், டேவிட் மற்றும் சிலர்
அடங்கிய அதிரடிக் குழு 15-6-84 அன்று மீட்டனர்;
சிறையின் வெளிக்கதவைத் தட்டி காவல் சீருடையில்
ஒருவர் புதியகைதிகளைக் கொண்டுவந்திருப்பதாக
சிங்களத்தில் கூற கதவு திறக்கப்பட்டது;
அதிரடியாக உள்ளே நுழைந்த புலிகள்
துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டால் காவலர்கள்
சூழ்ந்துவிடுவார்கள் என்று அடிதடியின்
மூலமே காவலர்களைத்
தாக்கி கதவுகளை உடைத்து நிர்மலாவை அழைத்துக்கொண்டு
வெளியேறினர்;
பிறகு நிர்மலா தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டு
திரு.புலமைப்பித்தன் வீட்டில் தங்கவைக்கப்பட்டார்;
இன்று நிர்மலா மனிதவுரிமை மற்றும்
பெண்ணுரிமை செயல்பாட்டாளராகவும் புலிகளையும்
சிறிலங்காவையும் ஒருசேர விமர்சிப்பவராகவும்
ஆகிவிட்டபோதிலும், அன்றைய காலத்தில்
ஒரு தோட்டாவைக்கூட தீர்க்காமல் புலிகள் செய்த இந்த
சாதனை சிங்கள மக்களுக்கு அதிர்ச்சியாகவும்
பதிலடியாகவும் தோன்றியது.
http://thibang.blogspot.in/2010_12_01_archi
ve.html?m=1
http://www.tamilcanadian.com/article/
tamil/599
https://m.facebook.com/photo.php?fbid=414745711962421&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Saturday, 26 July 2014

ஈழம் நோக்கிப் புறப்பட்ட தமிழகம்

ஈழம் நோக்கிப் புறப்பட்ட தமிழகம்

$S$S$S$S$S$S$S$S$S$S$S$

ஈழத்தில் கருப்பு யூலைக் கலவரம்
நடந்தபோது தமிழகத்தில்
பல்வேறு போராட்டங்கள் தமிழக மக்களால்
நடத்தப்பட்டது; வேற்றினத்தார் ஆட்சியில்
சிக்குண்டுள்ள 'ஏழைத் தமிழகம்' தம்மால்
முடிந்த எதிர்ப்பைத் தெரிவித்தது;
அதில் முத்தாய்ப்பான போராட்டம்
பழ.நெடுமாறன் அவர்கள் நடத்திய 'தியாக
பயணம்' போராட்டம்;
கருப்பு யூலைக் கலவரம்
முடிந்து ஒவ்வொரு செய்தியாக வெளிவெரத்
தொடங்கியபோது தமிழக மக்கள்
அதிர்ந்துபோனார்கள்;
ஈழம் நோக்கிச் செல்லவும் துணிந்த
பழ.நெடுமாறன் துணிவுள்ள இளைஞர்கள்
மதுரையில் கூடும்படி அழைப்பு விடுத்தார்;
சுமார் ஐயாயிரம் இளைஞர்கள் மதுரையில்
திரண்டனர்;
7,ஆகஸ்ட்,1983 அன்று குன்றக்குடி அடிகளார்
தொடங்கிவைக்க மதுரையிலிருந்து பேரணியாக
ராமேசுவரம் சென்றனர்;
வழிநெடுக மக்கள் வரவேற்பளித்தவாறும்
விருந்தோம்பல் செய்தும் கூட்டத்தில்
சேர்ந்தவாறும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள்
ராமேசுவரம் வந்தடைந்தனர்;
காவல்துறையினர் இந்த எழுச்சிபெற்றக்
கூட்டத்தைச் சமாளிக்கமுடியாமல்
திணறிக்கொண்டிருந்தனர்;
என்ன செய்வது ஈழத்திற்கும் தமிழகத்திற்கும்
இடையில் இந்தப் பாழாய்ப்போன கடல்
இருக்கிறதே!
காவல்துறையினர் முன்னேற்பாடாக படகுகளைப்
பறிமுதல் செய்துவிட்டிருந்தனர்;
ராமேசுவர மீனவர்களையும் போராட்டக்காரர்க
ளுக்கு படகு தரக்கூடாது என்று மிரட்டிவைத்திரு
ந்தனர்;
ஆனாலும் கிடைத்த ஒரு படகுகளில்
ஏறிக்கொண்டு பழ.நெடுமாறன் தலைமையில்
புறப்பட்டனர்;
பலர் முடிந்த
தொலைவு வரை கூடவே நீந்திச்சென்றனர்;
நடுக்கடலில் கடலோரக் காவல்படையால்
வழிமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
சட்டமன்றத்தில் ம.கோ.இரா (எம்ஜிஆர்)
மீது படகுகளைப் பறிமுதல் செய்ததாகக்
குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கடுமையான
கண்டம் தெரிவிக்கப்பட்டது;
"ஆமாம், நான்தான் பறிமுதல் செய்தேன்;
சிறிலங்கா கடற்படை சுட்டால்
தடுப்பதற்கு அவர்களிடம் மனத்துணிவைத் தவிர
என்ன இருக்கிறது?"
என்ற மகோஇரா பதிலளித்தார்.
(இதே போல பண்டாரவன்னியனுக
்கு தமிழகத்திலிருந்து 'ரகுநாத நாயக்கர்' என்ற
தெலுங்கு மன்னர் படையுதவி செய்துள்ளார்;
ஈழத்திற்கு வேற்றினத்தார் செய்த
உதவிகளை மறைக்கக்கூடாது என்பதற்காக
இதை இங்கே கூறுகிறேன்)
இதில் ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும்;
கருப்பு ஜூலை என்பது 25ம்
தேதியிலிருந்து 30ம் தேதி வரையான கலவரம்
ஆகும்.
ஆனால், 8நாட்கள் கழித்துதான் தமிழகம்
தமது பெரியளவிலான போராட்டத்தைத்
தொடங்குகிறது;
இதேபோல 2009
இனவழிப்பிற்கு பிறகு தமிழகத்தின்
பெரியளவிலான போராட்டங்கள் 2013ல்தான்
நடக்கிறது;
இதேபோலத்தான் கர்நாடக,ஆந்திர,கேரள
மாநிலங்களில் உள்ள தமிழர்கள் படும்
அல்லல்களும் அவர்களது போராட்டங்களும்
கூட தமிழக மக்களுக்குத் தெரியவராது;
என்றால் அந்தமான்,மலேசிய,சிங்கப்பூர்
தமிழரைப் பற்றி கூறவும் வேண்டுமா?
இதற்குக் காரணம் வேற்றினத்தார்
ஊடகங்களைக்கூட பெரும்பாலும்
கைப்பற்றி அரசியல் ரீதியாக
ஒரு இரும்புத்திரைக்குள் தமிழக
மக்களை வைத்திருப்பதுதான்.
ஈழமக்களும் மேற்குலக நாடுகளில்
பரப்புரை செய்வதில் காட்டும் அக்கறையைத்
தமிழ் மக்களிடம் பரப்புரை செய்வதில்
காட்டுவதில்லை;
தமிழகத்தின் ஈழ ஏதிலிகள்(அகதி) கடுமையான
கண்கானிப்பில் அடக்கி வைக்கப்பட்டிருப
்பது இந்த காரணத்தினாலேயே ஆகும்.
https://m.facebook.com/photo.php?fbid=470103026426689&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739