Showing posts with label வீரம். Show all posts
Showing posts with label வீரம். Show all posts

Wednesday, 16 October 2019

ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்

ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்

1947 க்கு பிறகு இந்தியா சந்தித்த போர்கள், இழப்புகள் மற்றும் முடிவுகள்
------------

1947 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 1104 பேர்
முடிவு = போர்நிறுத்தம்
-------------

1962 சீனா உடனான போர்
உயிரிழப்பு = 1383 பேர்
முடிவு = தோல்வி
-----------

1965 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3000 பேர்
முடிவு = வெற்றி
------------

1971 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3843 பேர்
முடிவு = வெற்றி
-------------

1984 சீக்கியர் உடனான போர்
உயிரிழப்பு = 634 பேர்
முடிவு = வெற்றி
------------

1987 புலிகள் உடனான போர்
உயிரிழப்பு = 1138 பேர்
முடிவு= பின்வாங்கல் (விலகுதல்)
-------------

1999 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 700 பேர்
முடிவு = வெற்றி
-------------
இதில் சேர்க்கப்படாதவை

ஜுனாகத், ஹைதராபாத் (32 பேர் உயிரிழப்பு) ஆக்கிரமிப்புகள் சேர்க்கப்படவில்லை.

கோவா(22 உயிரிழப்பு) , தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி (44 உயிரிழப்பு) ஆகியவற்றை கைப்பற்ற போர்ச்சுகல் உடன் நடந்த போர்கள் சேர்க்கப்படவில்லை.

காங்கோ மற்றும் சிசெல்ஷ் நாடுகளுக்கு படையுதவி செய்த முடிவுகளையும் சேர்க்கவில்லை.

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடந்த எல்லை மோதல்கள் சேர்க்கபடவில்லை.

(இதில் வட கிழக்கு, காஷ்மீர் ஆயுதக் குழுக்கள் மற்றும் நக்சலைட்  உடனான போர் நடவடிக்கைகள் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்து கொண்டு இருப்பதால் அவற்றைச் சேர்க்கவில்லை)

மேற்கண்ட அனைத்திலும் பாகிஸ்தான் (1947), சீனா (1962) மற்றும் புலிகள் (1987 - 1990) தவிர்த்த அனைத்து போரிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இதில் பாகிஸ்தானை மீண்டும் போரிட்டு 3 முறை தோற்கடித்துள்ளது.

1967 இல் சியாச்சின் எல்லை மோதலில் சீனாவைக்கூட தோற்கடித்துள்ளது.

என்றால் இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றுதானே பொருள்?!

(தகவல்களுக்கு நன்றி: Wikipedia)

Tuesday, 28 October 2014

அணையை உடைத்து காவிரியை மீட்டவன்

அணையைத் தகர்த்து
காவிரியை மீட்டவன்

&&&&&&&&&&&&&&

மைசூர் மன்னன் முதலாம் நரசிம்மன் (1141- 1173)
காவிரியைத் தடுத்தபோது
இரண்டாம் இராசராச சோழன் (1145- 1163)
அணையை உடைத்து
காவிரியை விடுவித்தான்.

இதுவே இன்றைக்கு தமிழ் அரசாங்கமும் படையும்
நாம் உருவாக்கியிருந்தோமானால்

காவிரியை கன்னடவன் விதிமீறி அணைகட்டித் தடுத்திருப்பானா?

அல்லது மலையாளி செண்பகவல்லி அணையை உடைத்திருப்பானா?

அல்லது பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவேன் என்று தெலுங்கன் அறிக்கைவிடுவானா?

https://m.facebook.com/photo.php?fbid=507610149342643&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr

Thursday, 16 October 2014

மூவேந்தர் தோற்கடித்த பேரரசு

மூவேந்தர் தோற்கடித்த பேரரசு

^^^^^^^^^^^^^^^^^^

சந்திரகுப்த மௌரியரின் காலம் கி.மு.321
முதல் கி.மு.292 ஆகும். அவர் மகன்
பிம்பிசாரரின்
காலம் கி.மு.293 முதல் கிமு.272 ஆகும்.
சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்
காலத்திலேயே,
கி.மு. 300-க்கு பின் தக்காணத்தைக்
கைப்பற்றும்
பணி தொடங்கி விடுகிறது. ஆனால்
பிம்பிசாரரின்
ஆட்சிக் காலத்தில் அதாவது கி.மு.293-க்குப
் பிறகு அது தீவிரப்படுத்தப் படுகிறது//
மௌரியர்கள் முதலில் வடுகர்கள்
துணை கொண்டு துளுவ நாட்டைத் தாக்கி,
அதனை ஆண்ட நன்னன் மரபினனை முறியடித்து,
அவனது தலைநகர் பாழியை கைப்பற்றிக்
கொண்டனர். பின்
அதனை ஒரு வலிமையான அரணாக மாற்றியமைத்து,
அங்கிருந்து அவர்கள் அதியமான் மரபினனாகிய
எழினியையும், சோழ நாட்டின் எல்லையிலுள்ள
அமுந்தூர்வேல் திதியனையும், பாண்டிய
நாட்டு எல்லையிலுள்ள மோகூர்த் தலைவனையும்,
படிப்படியாகத் தாக்கத் தொடங்கினர். சேரர்
எல்லையில் இருந்த
நன்னனை முதலிலேயே தாக்கியழித்திருந்ததால்,
முதலில் சேரர்களைத் தாக்கினர்.
சேரர் படைத் தலைவன் பிட்டங்கொற்றன்
மோரியர்களோடு பல தடவை போர் புரிகிறான்.
போர் வெற்றி தோல்வி இல்லாமல் தொடர்கிறது.
பின் மௌரியர்களை அதியமான் மரபினன்
எழினி என்பான் முதலில் வட்டாறு என்ற
இடத்திலும், பின் செல்லூர் என்ற
இடத்திலும் எதிர்த்து தாக்குதல்
நடத்துகிறான்.
இறுதியில் செல்லூர் போரில் எழினி வீர
மரணமடைந்து பெரும் புகழடைகிறான். அதன்
பின்னரும் அதியமான் மரபினர்
மௌரியர்களை எதிர்த்து தொடர்ந்து இறுதிவரை தாக்குதல்
நடத்தினர். அதன் காரணமாகவே அசோகரின்
கல்வெட்டில்,
அவர்களின் அரச குல வடமொழிப் (பிராகிருதம்)
பெயரில் ‘சத்திய புத்திரர்கள்’ என
மூவேந்தர்களுக்கு இணையாக இடம் பெற்றனர்
எனலாம்.
சோழ நாட்டெல்லையில் உள்ள அமுந்தூர்வேல்
திதியனும், பாண்டிய நாட்டெல்லையிலுள்ள
மோகூர்த் தலைவனும்
மோரியர்களை எதிர்த்துத் தாக்கி அவர்களைத்
தடுத்து நிறுத்து கின்றனர். இறுதியில்
திதியனும் மோகூர்த் தலைவனும்
மோரியர்களைப் போரில்
தோற்கடித்து தங்களது எல்லையை விட்டு துரத்தி விடுகின்றனர்.
மோரியர் படை பின்வாங்கி துளுவ
நாட்டை அடைந்து,
பாழி நகரில் நிலை கொள்ளுகிறது.
மௌரியப் பேரரசின் படை இதுவரை முழுமையாக
போரில் ஈடுபடவில்லை. அதன்
தென்பகுதி படைத்தலைவர்களே வடுகர்களின்
துணை கொண்டு போரை நடத்தி வந்தனர்.தமிழக
எல்லையில் ஏற்பட்ட
பெருந்தோல்வி மௌரியப்பேரரசினை
கொதித்தெழச்செய்தது.உடனடியாக
பெரும்படை திரட்டப்பட்டது.முதலில்
துளு நாட்டையும், எருமை நாட்டையும்
கடந்து வரும்
வழிகளிலுள்ள பாறைகளை வெட்டிச்
செப்பனிட்டு மௌரியப் பெரும்படை வருவதற்கான
பாதைகள் உருவாக்கும் பணி நடைபெற்றது.
இந்த பெரும் போருக்கான ஆயத்தப் பணிகள் சில
ஆண்டுகள் நடைபெற்றதாகத்தெரிகிறது.
இப்பாறைகளை வெட்டி பாதை அமைக்கும்
பணி குறித்தும், மோகூர் தலைவன்
பணியாதது குறித்தும், வடுகர்
வழி காட்டியாக
இருந்து மோரியர்களுக்கு உதவினர்
என்பது குறித்தும் சங்க புலவர்கள தங்கள்
பாடல்களில் தெரிவித்துள்ளனர். இந்த
பெரும்போருக்கான ஆயத்தப் பணிகள் முடிந்த
பின்
மௌரியப் பேரரசின் பெரும்படை துளுவ
நாட்டில்
வந்து தங்கி, தமிழகத்தின்
மீது படையெடுக்கத்
தயாராகியது//
தமிழகத்துக்கு வந்துள்ள மிகப்பெரிய
ஆபத்தை, சோழ
அரசன்
இளஞ்செட்சென்னி நன்கு உணர்ந்து கொள்கிறான்.
எல்லையிலுள்ள படைத் தலைவர்களை வேளீர்கள்
மற்றும் சிற்றரசர்களை மட்டும் இப்பெரும்
போருக்கு பொறுப்பாக்குவது பெரும்
ஆபத்தில் முடியும் என்றெண்ணி, தமிழர்
ஐக்கிய
கூட்டணி அரசுகளை (மாமூலனார் மற்றும் கலிங்க
மன்னர் குறிப்பிடும் தமிழக அரசுகளின்
கூட்டணி)
ஒன்று திரட்டி, தனது தலைமையில் பெரும்
படையைத் திரட்டுகிறான். இப்போர் தமிழகப்
போராக, தமிழக கூட்டணி அரசுகளின் போராக
நடைபெற்ற போதிலும்,
இப்போரின் வெற்றி சோழர்களின்
வெற்றியாகவே வடவரிடத்திலும்,
நமது இலக்கியங்களிலும், புராணங்களிலும்
பதிவாகி, சேர, பாண்டியர்களை விட சோழர்கள்
பெரும் புகழடைகின்றனர்.
தமிழக கூட்டணி அரசுகளுக்கும், மௌரியப்
பேரரசுக்குமிடையே பெரும் போர் துவங்கியது.
சோழ நாட்டெல்லையிலேயே பல தடவை மௌரியர்கள்
தோல்வியுற்றனர். எனினும் தொடர்ந்து புதுப்
புதுப்
படைகளை போருக்கு அனுப்பினர். மௌரியப்
பேரரசின் முழு ஆற்றலும்
திரட்டப்பட்டு பெரும்படை கொண்டு தமிழகம்
தாக்கப்பட்டது. தமிழகத்தின்
வடபகுதி முழுவதும்
மௌரியப் பெரும்படையால் தாக்கப்பட்டது. வட
ஆர்க்காட்டில் உள்ள வல்லம் என்ற இடத்தில்
நடைபெற்ற
பெரும்போரில்,
இளஞ்செட்சென்னி மௌரியர்களை பெருந்தோல்வியடை
யச்
செய்து துரத்தியடித்தான்.
வல்லம் போர் குறித்து அகம் 336-ல் பாடிய
பாவைக்
கொட்டிலார்என்ற பெண்பாற் புலவர்,
மௌரியர்களை ஆரியர் எனக் குறிப்பிடுகிறார்.
மௌரியர்கள் தங்களைஆரியர் என்றே அழைத்துக்
கொண்டனர். (இது கி.மு.3-ம் நூற்றாண்டுப்
பாடல்//
மௌரியர்கள் சளைக்காமல்
தொடர்ந்து பல தடவை,
பெரும்படைகளை அனுப்பிக் கொண்டேயிருந்தனர்.
ஆனால் போரில் பெரும் இழப்புகள்
ஏற்பட்டதே ஒழிய,
அவர்களுக்கு வெற்றி கிடைப்பதாகத்
தெரியவில்லை.இறுதியில்
தொடர்ந்து அடைந்து வந்த
தோல்விகளால் தாக்குப்பிடிக்க இயலாமல்
பெரும் இழப்போடு பாழி நகருக்குப்
பின்வாங்கினர்.
இளஞ்செட் சென்னி போரை தொடர்ந்து நடத்தி,
பாழி நகர் வரை படையெடுத்துச் சென்று,
அதனைத்
தாக்கி, இறுதியில் பெரும்
வெற்றியை தமிழகத்துக்கு வாங்கித் தந்தனன்.

முழுமையாக http://www.keetru.com/index.php?
option=com_content&view=article&id=1
9254%3A2012-04-02-07-12-27&cat
id=25%3Atamilnadu&Itemid=137
https://m.facebook.com/photo.php?fbid=411942295576096&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Friday, 18 July 2014

பழந்தமிழர் போர்க்குற்றம்

பழந்தமிழர் போர்க்குற்றம்
"""""""""""" """""""""""""""
தோற்ற மன்னர்களின் தலையே அடுப்பாக
வைத்து அவர் குருதியே உலைநெய்யாக
வார்த்து அவர்கள் வெட்டுண்ட
கைகளையே அகப்பையாக ஆக்கி போர்க்களத்தில்
தமிழ் மன்னர்கள் செய்த வேள்வி பற்றி சங்ககால
நூல்கள் கூறும் செய்யுள்கள்:-
ஆண்தலை - அடுப்பின் வய வேந்தர் ஒண்
குருதிசினத் தீயிற் பெயர்பு பொங்க...தொடித்
தோட்கை துடுப்பாக -
(மதுரைக் காஞ்சி.29-34)
முடித்தலை அடுப்பாக புனற்குருதி யுலைக்
கொளீஇத் தொடித் தோள் துடுப்பிற் றுழந்த
வல்சி
(புறநானூறு 26)
முடித்தலை யடுப்பில்
தொடித்தோள் துடுப்பில் (சிலப்பதிகாரம் 26
-242)
'அசுரர் சிரங்கள் அடுப்பா வைத்து'-
போர்க் களத் தலகை வகுப்பு -அடி 24. //
பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப்
பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார்
என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,
"பகைவர் நாட்டில் தேர்செல்லும் தெருக்களைக்
கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய்
. பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில்
குதிரைகள் பூட்டிய தேரைச்
செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்"(புறந
ானூறு 15).
இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர்
"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே" (புறம்6)
என்று வாழ்த்துகிறார்.
பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால்
எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும்
என்பது இதன் பொருளாகும்.
சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும்,
இரவும் கருதாது பகைவரது ஊரைத்
தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின்
புலம்பலோசையுடன்
கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,
"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்"
என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம்.
சோழன் இராசசூயம் வேட்ட
பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும்
வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக்
கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.
பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல்
அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான்
பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய
பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன்
சிவந்திறுத்த புலம்போல" என்ற
உவமையைப் பயன்படுத்துகிறார்.
போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப்
பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.
நன்னன் என்ற குறுநிலமன்னன் தன்னுடைய
பகைவர்களை வென்ற பிறகு அவர்களின்
உரிமை மகளிரின்
தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத்
திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின்
யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).
வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன்
பழையன் என்ற மன்னனை வென்று அவன்
மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப்
பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில்
பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட
பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான்
(பதிற்றுப் பத்து 5ம் பத்து)
கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன்
மூவன் என்பவனைப் போரில்
வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித்
தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.
மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற
குறுநில மன்னனின் பற்களைப்
பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில்
பதித்து வைத்தான். (அகம் 211).//
ராஜ ராஜ சோழனின் மெய்கீர்த்திகளில்
அவனது.வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக
"இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று"
என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜராஜன் தன்
மகன் முதலாம்
இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப்
பெற்றான். முதலாம் இராசேந்திரன் தலைமையில்
சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற
மேலைச் சளுக்கர் மன்னனுடன்
போரிட்டு வென்று இரட்டைபாடியைக்
கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன்
மேற்கொண்ட
பழி செயல்களை சத்தியாசிரையனின் கிபி.1007ம்
ஆண்டு காலத்திய
கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது
(சாஸ்திரி 1989: 23940).
நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான்.
நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள்,
அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக்
கொன்றும் கன்னியரைக்
கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச்
சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக்
கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத்
திரும்பினான்.
இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின்
ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார்
கோவிலுக்கு வழங்கினான்//
இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின்
மெய்கீர்த்திப் பகுதி " . . . யானைகள்,
குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத்
தொகுதிகள்"
ஆகியனவற்றை சத்தியாசிரயனிடம
ிருந்து ராஜராஜன் பறித்துக் கொண்டதாகக்
குறிப்பிடுகிறது (தந்தையாகிய
இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால்
இராஜேந்திரனின் வெற்றிச் சிறப்பு இராஜ
இராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுக
ிறது).
இராஜேந்திரன்
பட்டத்திற்கு வந்தபிறகு (1012-1044) நிகழ்த்திய
போர்களில்
கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப்போரில்
(ஈழம்=இலங்கை) ஈழமன்னனை இவன்
வெற்றிகண்டு கைப்பற்றிய பொருள்
குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச்
செப்பேடு (செய்யுள் 58-59)
பின்வருமாறு குறிப்பிடுகிறது.
"அவனுடைய நாட்டையும், அவனுடைய
முடியையும், அவனுடைய அரச
பத்தினியையும், அவளுடைய முடியையும்,
அவனுடைய மகளையும், மற்றப்
பொருட்குவியல்களையும் . . . கைப்பற்றினான்.
"
சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன்
காட்டுக்குள் ஓடிப்போனதாகவும்,
உடன்பாடு செய்து கொள்வதாகச் சொல்லிய
சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக்கொண்ட
ு, மேற்கொண்ட
செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.
"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள்
சிக்கிய கருவூலங்களையும்
உடனே சோழமன்னனுக்கு அனுப்பி வைத்தனர்.
பாதுகாப்பாக பல இடங்களில்
இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த
நினைவுச் சின்ன
அறைகளை உடைத்து அவற்றிலிருந்த
பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச்
சென்றனர். அவர்கள் கண்பட்ட
இடங்களிலெல்லாம் பெளத்த
சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும்
அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள்
அனைத்தையும் கொள்ளையடித்தனர்
" (சாஸ்திரி, 1989: 272).
வங்காள தேசத்து மன்னன்
மகிபாலனை வென்று யானைகள், பெண்கள்,
செல்வம் எல்லாவற்றையும் கைப்பற்றிக்கொண்
டான் (மேலது: 281).
முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான
ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின்
மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற
சிங்களமன்னனை வென்றான்.
சிங்கள மன்னன் ஓடி ஒளிய
அவனது தமக்கையையும், மனைவியையும்
சிறைபிடித்ததுடன் அவனது தாயின்
மூக்கை அறுத்தான் (ளு11111; 5056).
ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல்
நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில்
உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில
மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும்
சிறைபிடிக்கப்பட்டனர், பூண்டூர் நகர் அழித்துத்
தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய
ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது.
மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது.
1894ம் ஆண்டுக்கான
கல்வெட்டு ஆண்டறிக்கையில்(எண்.172).
சாளுக்கியர்களின் பழமையான நகரான
கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத்
தரைமட்டமாக்கி அங்கிருந்த
ஒரு தூவாரபாலகர்.உருவத்தைக்
கொண்டுவந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம்
கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில்
"ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம்
எரித்து கொண்டு வந்த துவார பாலர்"
என்று குறிக்கப்பட்டுள்ளது. முதல்
குலோத்துங்கச் சோழன் (1070---1120)
இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110)
வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள்
மற்றும் செல்வங்களுடன் மகளிரையும்
கைப்பற்றி.வந்தான். மூன்றாம்
குலோத்துங்கன் (கி.பி. 1178-1218) மதுரையின்
மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன்
செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள்
பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.
1. பெண்கள் அடிமைகளாகக்
கொண்டு செல்லப்பட்டனர்.
2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.
3. பாண்டியனின்
கூடமண்டபத்தை (முடிசூட்டும்
மண்டபம்).இடித்து கழுதை ஏரைப்
பூட்டி உழுதனர்.
திருவாரூர்த் தலைவனாக இருந்த
கங்கை கொண்டான்.உத்தம சோழராயனின்
படையதிகாரியான கூத்தன்
கணபதி என்பவனை "பகைவர்களின்
மனைவியர்க்குக் கணவன்"
என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE
1913 ப.97).//
கி.பி. 1219இல் சோழ நாட்டின்
மீது படையெடுத்த முதல் மாறவர்மன்
சுந்தரபாண்டியன் (1216 -1238)
தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான
மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான்
(I.P.S; 290,323)
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்
மலையில் உள்ள அக்கல்வெட்டின்
உரைநடை வடிவம் வருமாறு:
கொடுங் கோபமுடைய குதிரைகளையும்,
யானைகளையும் செலுத்திச்
சென்று சோழர்களின் தஞ்சைநகரையும்
செந்தழலிட்டுக் கொளுத்தினான். அழகிய
குவளை மலர்களும், நீல மலர்களும் தம்
அழகை இழக்கும்படி குளங்களையும்.ஆற
ுகளையும் கலக்கினான்.கூடம், மதில்,
கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள்,
மாடமாளிகைகள், கருவூலங்கள்
ஆகியனவற்றை இடித்துத்
தள்ளினான்.தன்னை வந்து அடிபணியாத
பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுதகண்ணீர்
ஆறாக ஓடும்படிச் செய்தான்.
பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர்
கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான்.
சோழர் தலைநகராக விளங்கிய.முடிகொ
ண்டசோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்"
எனனும் சடங்கை இவன் செய்தான். அதன்
பொருட்டு சோழ அரசியும் அந்தப்புரத்துப்
பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப்
பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப
்பட்டனர் (சாஸ்திரி, மேலது,579).//
இலங்கைப் படையெடுப்பின்போ
து இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை
அவனது
திருவாலங்காட்டுச் செப்பேடுகள்
குறிப்பிடுகின்றன.
ஈழநாட்டு கிராமங்களை தஞ்சைப்
பெருவுடையார்.கோவிலுக்குத் தானமாக
ராசேந்திரன் வழங்கினான்//
மேலும், சிங்கள
போர்க்கைதிகளை அடிமையாகக்
கொண்டுவந்து கல்லணை கட்டினான்
கரிகாலன்//
கண்ணகி மதுரையை எரித்தபின்
ஒரு பொற்கொல்லன் அறம்தவறியதற்காக 1000
பொற்கொல்லர்கள் கழுவிலேற்றிக்
கொல்லப்பட்டனர்//
ரொம்ப நல்லவன்
என்று சொல்லி சொல்லியே பல நூற்றாண்டுகள்
நம்மை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்துவருகின்ற
னர்; நாமும் சராசரி காட்டுமிராண்டி மனிதரே;
போர்க்குற்ற சான்றுகள் கொஞ்சமா நஞ்சமா?
பலன்தான் இல்லை;
சான்றுகாட்டி கெஞ்சிக்கேட்க
விடுதலை ஒன்றும் பிச்சையல்ல;
இது இனவழிப்பு இதைத் தடுக்க இனம்
ஒன்றுசேர்ந்தாலே போதும்;
போர் என்பது வெற்றி என்ற ஒன்றால்
மட்டுமே அளக்கப்படுகிறது.//
தமிழன் நல்லவனும் கிடையாது அப்பாவியும்
கிடையாது; ஒவ்வொரு காலத்திலும்
ஒவ்வொரு இனங்களின் கை ஓங்கியிருந்தது;
இப்போது எதிரிகள் கை ஓங்கியுள்ளது;
காயத்தைக் காட்டி கையேந்தும்
பிச்சைக்காரன்போல
கணக்கிலடங்கா சான்றுகளை கையில்வைத்துக்க
ொண்டு அனைத்துலகத்திடம் ஓடாமல், வாங்கிய
அடியை தமக்குள் பரப்பி அடுத்த
போரை திட்டமிட வலியுறுத்துகிறேன்;
எதிரிகளெல்லாம் நம்முன் குழந்தைகள் ஆனால்
உண்மையில் தமிழன்தான் பொல்லாதவன்;
உள்நெஞ்சில் பெருந்தீ
கொண்டோர்க்கு இப்பதிவின் நோக்கம் விளங்கும்.
https://m.facebook.com/photo.php?fbid=423969407706718&id=10000280986

SUPERMAN கணேஷ் (புலி)

SUPER MAN கணேஷ்
Super man, Spider man, Bat man, X men, விஜய்,
அஜித், சூர்யா………
இவர்களை உங்களுக்குப் பிடிக்குமா? எனக்கும்
பிடிக்கும், ஒரு காலத்தில்.
கதாநாயகன் என்றாலே மக்களுக்காக சண்டை போடுவது,
ஈகம்(தியாகம்) செய்வது, அள்ளிக் கொடுப்பது, பெண்கள்
மானத்தைக்
காப்பாற்றுவது என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
எத்தனைமுறை இது வெவ்வேறு வடிவங்களில்
காட்டப்பட்டாலும் சலிப்பதில்லை.
ஆனால், எனக்கு சலித்துவிட்டது; போலியான
பொருளுக்கு முன் உண்மையான பொருளை வைத்துவிட்டால்
போலியின் ஈர்ப்பு குறைந்துவிடும்தானே?!
என்றைக்கு எனக்கு புலித்தொற்று என்கிற நோய்
வந்துவிட்டதோ அன்றிலிருந்து போலியான கற்பனைக்
கதாநாயகர்கள் சலித்துப்போய்விட்டனர்;
இப்போது கதாநாயகன் கடைசிக்காட்சியில்
அடிவாங்கி கீழே விழுந்து திடீரென்று எழுந்து அடிப்பானே அதைப்
பார்க்கும்போது சிரிப்பாயிருக்கிறது.
ஏனென்றால் அவர்களை விடவும் வீரமான நாயகர்கள்
மெய்வாழ்க்கையில் இருக்கின்றனர்.
அப்படி ஒருவர்தான் 'கணேஷ்'.
பக்கத்துவீட்டு அண்ணன் பெயர்மாதிரி இருக்கிறதா?
சரி இப்போது கதையைக் கேளுங்கள்.
'தங்கநகர் கிளிவெட்டி' என்ற சிற்றூரில் 1984ல்
சிங்களப்படை நுழைந்து அந்த ஊரில் இருந்த மொத்த
இளைஞர்களையும் இழுத்துவந்து முச்சந்தியில்
நிறுத்தி சுட்டுக்கொல்கிறது; இதில் 42 இளைஞர்கள்
கொல்லப்படுகின்றனர்; எஞ்சிய பெண்களும்
முதியவர்களும் அருகில் இருந்த ஏதிலி(அகதி)
முகாமில் தஞ்சமடைகின்றனர்; அக்காலத்தில் சிங்களப்
படையினர் எல்லையோரத் தமிழ்ச்சிற்றூர்களில்
இவ்வாறு கொலைத்தாண்டவம்
ஆடி தமிழர்களை விரட்டிவிட்டு தமது மாமன் மச்சான்
குடும்பங்களை அங்கே குடியேற்றி விளைநிலங்களையும்
தமதாக்கிக்கொள்ள இதுபோலச் செய்துவந்த
ஆயிரக்கணக்கான அட்டூழியங்களில் இதுவும் ஒன்று;
மறுநாள் 'தெகிவத்தை' என்ற சிங்கள
ஊரிலிருந்து 'போலீஸ் கமாண்டா' படைப்பிரிவுச்
சிங்களப்படை மேற்சொன்ன இளைஞர்களே இல்லாத
ஏதிலி முகாமுக்குச் சென்று நல்ல இளம்பெண்களாக 50
தமிழ் யுவதிகளை வலுக்கட்டாயமாக ஒரு வண்டியில்
அள்ளிப்போட்டுக்கொண்டு போகின்றனர்; தமிழச்சிகளுக்கு
மானம்தான் பெரிது, தமிழகத்தைவிட அதிகம்
கண்ணகிக்கு கோயில்கள் ஈழத்தில் இருக்கின்றன; 50
தமிழச்சிகளை வலுகட்டாயமாக இழுத்துச்செல்லவ
ேண்டும் என்றால் அவர்கள் எத்தனைபேர் வந்திருப்பார்கள்
என்று கணக்குபோட்டுக் கொள்ளுங்கள்; தமிழ்மண்ணில்
இருந்தால்தானே புலிகள் வருவார்கள் என்று சிங்கள
சிற்றூரான 'தெகிவத்த'க்கு அழைத்துச்
சென்று ஒரு பாலத்தடியில்
வண்டியை நிறுத்திவிட்டு அந்த ஊர் பொறுக்கிப்பயல்க
ளுக்கு ஏற்கனவே கூறியிருந்தபடி 'தமிழச்சி விருந்து'
வைக்கப்போவதை கூறி அழைத்துவர சிலர் சென்றனர்;
இந்த நிலையில் முகாம் மக்கள் காட்டுக்குள்
ஓடிச்சென்று மறைந்திருந்த புலிகளிடம்
சொல்கின்றனர்; புலிகள் அப்போது மிகவும் குறைவு;
ஒரு மாவட்டத்திற்கு 50பேர்கூட கிடையாது;
புலிகளிடம் ஆயுதங்களும் குறைவு; பெரிய பெரிய
ஆயுதங்கள் கிடையாது; சீருடை கிடையாது;
அவ்வளவு ஏன் காடுமேடுகளில் நடமாட சப்பாத்துகள்(பூ
ட்ஸ்)கூட கிடையாது;
அப்போது அங்கே இருந்தவர்தான் 'கணேஷ்';
அவரோடு இருந்தது வெறும் ஐந்துபுலிகள்;
எது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன
புலி புலிதானே; உடனே ஒரு வாகனத்தை கடன்
வாங்கிக்கொண்டு விரைந்தனர் புலிகள்;
சிங்கள மண்ணான தெகிவத்தையில் கொழுப்பெடுத்த
காலிப்பயல்களும் படையினரும் அந்த
தமிழ்ப்பெண்களை சீரழிக்கும் முன் சரியான நேரத்தில்
அங்கே புலிகளின் வேட்டுச்சத்தங்கள் முழங்க
ஆரம்பித்தன; சற்றும் இதை எதிர்பார்க்காத சிங்களவர்கள்
அங்கிருந்து ஓடிவிட்டனர்; பிடிபட்ட சில
காலிப்பயல்களை புலிகள்
நையப்புடைத்து எச்சரித்து உயிருடன்
விட்டுவிட்டனர்; அந்த 50பெண்களையும்
முகாமுக்கு அழைத்துவந்து விட்டனர்;
இதைக் கேள்விப்பட்ட சிங்கள (ராணுவ)படை மறுநாள்
பெரும் எண்ணிக்கையில் அந்த முகாம் மீது தாக்குதல்
தொடுக்க வருகின்றனர்; ஆயத்த நிலையில் இருந்த
புலிகள் கணேஷ் தலைமையில் அந்த பெரும்படையுடன்
போரிட்டு விரட்டினர்; இதில் 9சிங்களப் படையினர்
கொல்லப்பட்டனர்.
இது மட்டுமல்ல 1982-1986 என நான்கு ஆண்டுகளில்
கணேஷ் அவர்கள் செய்த தாக்குதல் பட்டியல்
கீழ்க்கண்டவாறு நீள்கிறது,
1) நெல்லியடியில் சுற்றுக்காவல்படையினர்
வழிமறித்துக் கொலை
2) சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதல்
3) உமையாள்புரம் படைவண்டிகள் மீதான அதிரடி
4) 13 சிங்கள படையினரை முதன்முறை பலிகொண்ட
திருநெல்வேலி வரலாற்றுப்போர்
5)களுவாஞ்சிக்குடி காவல்நிலையத் தாக்குதல் ,
6) திருக்கோவில் என்ற இடத்தில் வைத்து இரண்டகன்
(துரோகி) ஒருவன்மீதான துப்பாக்கச் சூடு
7) ஈச்சலம்பத்தை முற்றுகை தகர்ப்பு
8) கட்டைப்பறிச்சான் கண்ணிவெடித் தாக்குதல்
9) பாலம்பட்டாறு படையினருடன் மோதல்
10) புலிகளின் வரலாற்றின் முதன்முதல் L .M .G
வகைத் துப்பாக்கியை படையினரிடமிருந்
து கைப்பற்றிய பட்டித்திடல் கவசவண்டித் தகர்ப்பு
11) இறால்குழி சுற்றிவளைப்புமீறல்போர் ,
12) 3ஆம் கொலனி படையினருடன் நேரடிமோதல்
13) வாகரை கண்ணிவெடி அதிரடித்தாக்குதல்
14) தெகிவத்தை போலிஸ்கொமாண்டோக்கள்
கடத்திச்சென்று கற்பழிக்க முயன்ற தமிழ் பெண்களை
மீட்டெடுத்த தீரப்போர்
15) விடுதலை வரலாற்றில் முதல்தடவை சிங்கள
விமானப்படையின் கெலிகொப்டர் சுட்டு வீழ்த்திய
கூனித்தீவு முற்றுகையுடைப்பு,
16) சம்பூர் யுத்தம்,
17)வெருகல் விடுதலைப்புலிகளின் முகாம்
வளைப்பு முயற்ச்சி முறியடிப்பு
18) கலவரத் தடுப்பு குழுவை கூலிப்படையினர்
கைது செய்தபோது போராடி அவர்களை மீட்ட களப்போர்
இறுதியாக ,
மேஜர்.கணேஷ் வீரமரணம் அடைந்த பெரியபாலம் என்ற
இடத்தில் 05.11.1986 அன்று 4 மணியளவில் நிகழ்ந்த
சிங்களப்படை சுற்றிவளைப்பு மோதல்.
https://m.facebook.com/photo.php?fbid=427113664058959&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739