Friday, 18 July 2014

SUPERMAN கணேஷ் (புலி)

SUPER MAN கணேஷ்
Super man, Spider man, Bat man, X men, விஜய்,
அஜித், சூர்யா………
இவர்களை உங்களுக்குப் பிடிக்குமா? எனக்கும்
பிடிக்கும், ஒரு காலத்தில்.
கதாநாயகன் என்றாலே மக்களுக்காக சண்டை போடுவது,
ஈகம்(தியாகம்) செய்வது, அள்ளிக் கொடுப்பது, பெண்கள்
மானத்தைக்
காப்பாற்றுவது என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
எத்தனைமுறை இது வெவ்வேறு வடிவங்களில்
காட்டப்பட்டாலும் சலிப்பதில்லை.
ஆனால், எனக்கு சலித்துவிட்டது; போலியான
பொருளுக்கு முன் உண்மையான பொருளை வைத்துவிட்டால்
போலியின் ஈர்ப்பு குறைந்துவிடும்தானே?!
என்றைக்கு எனக்கு புலித்தொற்று என்கிற நோய்
வந்துவிட்டதோ அன்றிலிருந்து போலியான கற்பனைக்
கதாநாயகர்கள் சலித்துப்போய்விட்டனர்;
இப்போது கதாநாயகன் கடைசிக்காட்சியில்
அடிவாங்கி கீழே விழுந்து திடீரென்று எழுந்து அடிப்பானே அதைப்
பார்க்கும்போது சிரிப்பாயிருக்கிறது.
ஏனென்றால் அவர்களை விடவும் வீரமான நாயகர்கள்
மெய்வாழ்க்கையில் இருக்கின்றனர்.
அப்படி ஒருவர்தான் 'கணேஷ்'.
பக்கத்துவீட்டு அண்ணன் பெயர்மாதிரி இருக்கிறதா?
சரி இப்போது கதையைக் கேளுங்கள்.
'தங்கநகர் கிளிவெட்டி' என்ற சிற்றூரில் 1984ல்
சிங்களப்படை நுழைந்து அந்த ஊரில் இருந்த மொத்த
இளைஞர்களையும் இழுத்துவந்து முச்சந்தியில்
நிறுத்தி சுட்டுக்கொல்கிறது; இதில் 42 இளைஞர்கள்
கொல்லப்படுகின்றனர்; எஞ்சிய பெண்களும்
முதியவர்களும் அருகில் இருந்த ஏதிலி(அகதி)
முகாமில் தஞ்சமடைகின்றனர்; அக்காலத்தில் சிங்களப்
படையினர் எல்லையோரத் தமிழ்ச்சிற்றூர்களில்
இவ்வாறு கொலைத்தாண்டவம்
ஆடி தமிழர்களை விரட்டிவிட்டு தமது மாமன் மச்சான்
குடும்பங்களை அங்கே குடியேற்றி விளைநிலங்களையும்
தமதாக்கிக்கொள்ள இதுபோலச் செய்துவந்த
ஆயிரக்கணக்கான அட்டூழியங்களில் இதுவும் ஒன்று;
மறுநாள் 'தெகிவத்தை' என்ற சிங்கள
ஊரிலிருந்து 'போலீஸ் கமாண்டா' படைப்பிரிவுச்
சிங்களப்படை மேற்சொன்ன இளைஞர்களே இல்லாத
ஏதிலி முகாமுக்குச் சென்று நல்ல இளம்பெண்களாக 50
தமிழ் யுவதிகளை வலுக்கட்டாயமாக ஒரு வண்டியில்
அள்ளிப்போட்டுக்கொண்டு போகின்றனர்; தமிழச்சிகளுக்கு
மானம்தான் பெரிது, தமிழகத்தைவிட அதிகம்
கண்ணகிக்கு கோயில்கள் ஈழத்தில் இருக்கின்றன; 50
தமிழச்சிகளை வலுகட்டாயமாக இழுத்துச்செல்லவ
ேண்டும் என்றால் அவர்கள் எத்தனைபேர் வந்திருப்பார்கள்
என்று கணக்குபோட்டுக் கொள்ளுங்கள்; தமிழ்மண்ணில்
இருந்தால்தானே புலிகள் வருவார்கள் என்று சிங்கள
சிற்றூரான 'தெகிவத்த'க்கு அழைத்துச்
சென்று ஒரு பாலத்தடியில்
வண்டியை நிறுத்திவிட்டு அந்த ஊர் பொறுக்கிப்பயல்க
ளுக்கு ஏற்கனவே கூறியிருந்தபடி 'தமிழச்சி விருந்து'
வைக்கப்போவதை கூறி அழைத்துவர சிலர் சென்றனர்;
இந்த நிலையில் முகாம் மக்கள் காட்டுக்குள்
ஓடிச்சென்று மறைந்திருந்த புலிகளிடம்
சொல்கின்றனர்; புலிகள் அப்போது மிகவும் குறைவு;
ஒரு மாவட்டத்திற்கு 50பேர்கூட கிடையாது;
புலிகளிடம் ஆயுதங்களும் குறைவு; பெரிய பெரிய
ஆயுதங்கள் கிடையாது; சீருடை கிடையாது;
அவ்வளவு ஏன் காடுமேடுகளில் நடமாட சப்பாத்துகள்(பூ
ட்ஸ்)கூட கிடையாது;
அப்போது அங்கே இருந்தவர்தான் 'கணேஷ்';
அவரோடு இருந்தது வெறும் ஐந்துபுலிகள்;
எது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன
புலி புலிதானே; உடனே ஒரு வாகனத்தை கடன்
வாங்கிக்கொண்டு விரைந்தனர் புலிகள்;
சிங்கள மண்ணான தெகிவத்தையில் கொழுப்பெடுத்த
காலிப்பயல்களும் படையினரும் அந்த
தமிழ்ப்பெண்களை சீரழிக்கும் முன் சரியான நேரத்தில்
அங்கே புலிகளின் வேட்டுச்சத்தங்கள் முழங்க
ஆரம்பித்தன; சற்றும் இதை எதிர்பார்க்காத சிங்களவர்கள்
அங்கிருந்து ஓடிவிட்டனர்; பிடிபட்ட சில
காலிப்பயல்களை புலிகள்
நையப்புடைத்து எச்சரித்து உயிருடன்
விட்டுவிட்டனர்; அந்த 50பெண்களையும்
முகாமுக்கு அழைத்துவந்து விட்டனர்;
இதைக் கேள்விப்பட்ட சிங்கள (ராணுவ)படை மறுநாள்
பெரும் எண்ணிக்கையில் அந்த முகாம் மீது தாக்குதல்
தொடுக்க வருகின்றனர்; ஆயத்த நிலையில் இருந்த
புலிகள் கணேஷ் தலைமையில் அந்த பெரும்படையுடன்
போரிட்டு விரட்டினர்; இதில் 9சிங்களப் படையினர்
கொல்லப்பட்டனர்.
இது மட்டுமல்ல 1982-1986 என நான்கு ஆண்டுகளில்
கணேஷ் அவர்கள் செய்த தாக்குதல் பட்டியல்
கீழ்க்கண்டவாறு நீள்கிறது,
1) நெல்லியடியில் சுற்றுக்காவல்படையினர்
வழிமறித்துக் கொலை
2) சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதல்
3) உமையாள்புரம் படைவண்டிகள் மீதான அதிரடி
4) 13 சிங்கள படையினரை முதன்முறை பலிகொண்ட
திருநெல்வேலி வரலாற்றுப்போர்
5)களுவாஞ்சிக்குடி காவல்நிலையத் தாக்குதல் ,
6) திருக்கோவில் என்ற இடத்தில் வைத்து இரண்டகன்
(துரோகி) ஒருவன்மீதான துப்பாக்கச் சூடு
7) ஈச்சலம்பத்தை முற்றுகை தகர்ப்பு
8) கட்டைப்பறிச்சான் கண்ணிவெடித் தாக்குதல்
9) பாலம்பட்டாறு படையினருடன் மோதல்
10) புலிகளின் வரலாற்றின் முதன்முதல் L .M .G
வகைத் துப்பாக்கியை படையினரிடமிருந்
து கைப்பற்றிய பட்டித்திடல் கவசவண்டித் தகர்ப்பு
11) இறால்குழி சுற்றிவளைப்புமீறல்போர் ,
12) 3ஆம் கொலனி படையினருடன் நேரடிமோதல்
13) வாகரை கண்ணிவெடி அதிரடித்தாக்குதல்
14) தெகிவத்தை போலிஸ்கொமாண்டோக்கள்
கடத்திச்சென்று கற்பழிக்க முயன்ற தமிழ் பெண்களை
மீட்டெடுத்த தீரப்போர்
15) விடுதலை வரலாற்றில் முதல்தடவை சிங்கள
விமானப்படையின் கெலிகொப்டர் சுட்டு வீழ்த்திய
கூனித்தீவு முற்றுகையுடைப்பு,
16) சம்பூர் யுத்தம்,
17)வெருகல் விடுதலைப்புலிகளின் முகாம்
வளைப்பு முயற்ச்சி முறியடிப்பு
18) கலவரத் தடுப்பு குழுவை கூலிப்படையினர்
கைது செய்தபோது போராடி அவர்களை மீட்ட களப்போர்
இறுதியாக ,
மேஜர்.கணேஷ் வீரமரணம் அடைந்த பெரியபாலம் என்ற
இடத்தில் 05.11.1986 அன்று 4 மணியளவில் நிகழ்ந்த
சிங்களப்படை சுற்றிவளைப்பு மோதல்.
https://m.facebook.com/photo.php?fbid=427113664058959&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment