Friday, 18 July 2014

உதயகுமாரைக் காலில்விழுந்து விமர்சிக்கவேண்டிய அவசியம் இல்லை

உதயகுமாரை காலில்விழுந்து விமர்சிக்கவேண்டிய
அவசியம் இல்லை.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
என்னிடம் இரண்டகன்(துரோகி) என்று எவனாவது கேட்டால்
உதயகுமாரைத்தான் காட்டுவேன்;
அணுவுலையைக் கூட வலுவாக எதிர்க்காத, தமிழின
பிரச்சனைகளில் சிறு அக்கறைகூட இல்லாத,
டெல்லி மக்களால் பின்புறத்தில்
மிதித்து வெளியே தள்ளப்பட்டுவிட்ட ஒரு ஹிந்திய
கட்சிக்கு விலை போன இவர் எப்படி தலைவராக
ஆகமுடியும்;
தமிழகத்தின் 'தந்தை செல்வா' ஆக வேண்டியவர்,'விள
க்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சலம்' ஆகிப்போனார்.
தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் காணாமல்தான்
போவார்.
ஹிந்தியம் தோண்டி வைத்திருந்த கிணற்றில் முக்கால்
கிணறு தாண்டிய பின் உள்ளே விழுந்த தமிழின
இரண்டகன்(துரோகி).
என்றைக்கு முல்லைப்பெரியார் பிரச்சனை உச்சத்தில்
இருந்த 2011ன் கடைசி மாதங்களில் மலையாளிகள்
அணுவுலை போராட்டத்திற்கு
ஆதரவு என்று அறிவித்ததும் மலையாள அமைச்சர்
பி.ஜே.ஜோசப்புக்
கு தூது விட்டது தெரிந்ததோ அன்றே நீங்கள்
மாவீரர்நாள் கடைபிடிப்பதும், ஹிந்திய
விடுதலைநாளை கறுப்புநாளாக அறிவிப்பதும்,
ஹிந்தியாவை கொடும்பாவியாக பிணவூர்வலம் எடுத்துச்
சென்று எரித்ததும், தமிழ்நாட்டாண்மை(தமிழ்த்
தேசியம்) பேசுவதும் ஏமாற்றுவேலை என்று ஐயம்
ஏற்பட்டு உங்களைத் தூக்கிவைக்கும் பதிவுகளைக்
குறைத்து ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்ட
மைக்கு என்னை நானே பாராட்டிக்கொள்கிறேன்;
ஆனால், இவ்வளவு தரம்தாழ்ந்து போவீர்கள்
என்று நினைக்கவில்லை;
நல்லவேளை முளையிலேயே உருத்தெரிந்துவிட்டீர்கள்;
வடஹிந்தியனிடம் கூடயிருந்த பத்தாயிரம்
மக்களோடு காலில் விழுந்த
உங்களை இனத்திற்கே தலைமையாக்கியிருந்தால்
முள்ளிவாய்க்கால் என்ன முள்ளிக்கடலே ஓடியிருக்கும்;
உங்களுக்காக நான் பிறந்தமண்ணான
திருநெல்வேலி செல்லும்போதெல்லாம்
அணுவுலையை அப்பாவியாக ஆதரிக்கும் உடன்வரும்
பயணியிலிருந்து உறவினர் நண்பர் என எத்தனை பேரிடம்
மல்லுக்கு நின்றேன்; இனி அவர்கள் முகத்தில்
எப்படி விழிப்பேன்?!
பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிட்ட என்
குடும்பத்து சொந்தபந்தங்களை இனி யார்
காப்பார்?????????????????

3 ஏப்ரல் 2014
https://m.facebook.com/photo.php?fbid=431123676991291&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment