Thursday 10 July 2014

வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி



வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி

$$$$$$$$$$$$$$$$$$

வீரப்பனார் கடத்தல்காரனாக இருந்தபோதே தமிழ் மக்கள் மீது பற்றுள்ளவராக இருந்தார்; 1993ல் வீரப்பனாரைத் தேடுகின்ற பெயரில் அதிரடிப்படை மக்களைக் கொடுமைப்படுத்துவது உச்சநிலையை அடைந்திருந்தது; வீரப்பனார் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் தமது குடும்பத்திற்கும் எதுவும் செய்யாமல் இருந்ததால் அவரது மனைவி இருபெண்பிள்ளைகளுடன் புடவை விற்று பிழைத்துவந்தனர்; இத்தனைக்கும் அவர் கோடிகோடியாக சம்பாதித்து வந்தார்; 1993க்குப் பிறகு அல்லல் படும் மக்களுக்காக எதாவது செய்யவேண்டும் என்று நினைத்தார்; 1994களுக்குப் பின் கடத்தல்தொழிலை விட்டுவிட்டார்; அதிலிருந்து அவர் வனத்துறை அல்லது காவல்துறையினரை கடத்திச்சென்று பணம்பெற்று விடுதலை செய்து அந்த பணத்தை மக்களுக்கு பகிர்ந்தளித்தார்; அவரால் கடத்தப்பட்டவர்கள்,

1994 சிதம்பரம் (டிஎஸ்பி), தமிழகக் காவல்துறை.
1995 மூன்று தமிழக வனத்துறையினர்
1997 பத்து கர்நாடக வனத்துறையினர்
1997 ஆறு பந்திப்பூர் புலிகள் சரணாலய ஊழியர்கள்

ஆயுதங்கள் குறைந்தபோது 1998ல் வெள்ளித்திருப்பூர் காவல்நிலையத்தில் ஆயுதக்கொள்ளை நடத்தினார்.

சிறிதுகால அமைதிக்குப்பின் ஜூலை மாதம் 2000ம் ஆண்டு.

தமிழர் நாடு விடுதலைப் படை(TNLA) தலைவர் மாறன் வீரப்பனார் கட்டுப்பாட்டுப் பகுதியில் தமது படையைக் கட்டமைக்கும் பணியில் இருந்தார்; வீரப்பனாரும் மாறனாரும் கலந்து பேசி திட்டம் ஒன்றை வகுத்தனர்; கன்னடவரால் 'பெரியண்ணன்' என்று அழைக்கப்படுபவரும், தாதா சாகேப் பால்கே விருதுபெற்றவரும், கன்னடத்தை கட்டாயப்பாடமாக்க முழு கர்நாடகாவையும் திரட்டிப் போராடியவரும், கன்னட இனவெழுச்சிப் பாடல்களைத் தன்குரலால் பாடியவருமான திரு.இராஜ்குமாரை கடத்துவதாக திட்டம்; அப்போது அவருக்கு 72 அகவை; அவர் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவர்; அவர் பங்காற்றிவந்த கன்னட இயக்கங்கள் தமிழரையே குறிவைத்து தாக்குபவை ஆனால் அவர் நேரடியாக எந்த அரசியல் விளையாட்டும் செய்ததில்லை; ஆனால், கன்னட இனத்தின் பெருமையான வடிவமாக அவர் அறியப்பட்டார்;
அவரைக் கடத்துவதுதான் கன்னட இனத்தின் தலையில் கைவைத்ததுபோல் இருக்கும்;
கடத்தி பரபரபாக்கி தீங்கில்லாமல் விடுதலை செய்வது என்று முடிவானது.

தோட்டகாஜனூரில் இருந்த தனது தோட்டத்துமாளிகையில் ஓய்வாக இருந்தார் ராஜ்குமார்.

30ஜூலை2000 அன்று இரவு 10மணியளவில் கதவு தட்டப்பட்டது; வெளியில் இரும்புக்கதவைத் தாண்டி வீடுவரை யார்வந்தது என்று எண்ணியபடி கதவை ராஜ்குமாரின் மனைவி திறந்தார்; வெளியே கொட்டும் மழையில் 10,12 துப்பாக்கியேந்திய ஆட்களுடன் வீரப்பனார் நின்றிருந்தார்; அப்பெண்மனி அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்; வீரப்பனார் கன்னடத்தில் "ஐயாவைப் பார்க்கவேண்டும்" என்றபடி உள்ளே நுழைந்தார்; ராஜ்குமார், அவரது மருமகன்,அவரது உறவினர், துணை இயக்குனர் ஒருவர் என நான்குபேரைத் தன்னோடு அழைத்துக்கொண்டு போகும்போது ராஜ்குமார் துணைவியாரிடம் அவரது கணவருக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் ஒரு ஒலிநாடாவைக் கொடுத்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் அதைக் கொடுத்துவிடும்படியும் கூறிவிட்டு சென்றார்; அன்றிரவே பரபரப்பு கிளம்பிவிட்டது;
விடிந்ததும் விடியாததுமாக எஸ்.எம்.கிருஷ்ணா தமிழக முதல்வரைச் சந்திக்க சென்னைக்கு பதறியடித்து ஓடினார்; மறுநாள் கர்நாடகாவே கதிகலங்கிப்போனது; கன்னடத் திரைப்படத்துறை வேலைநிறுத்தம் செய்தது;
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன; தமிழக பதிவு வாகனங்கள் எண்களைப் பார்த்ததும் அடித்துநொறுக்கப்பட்டன;
பெங்களூரில் தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன; மாண்டியா அருகில் இரண்டு தொடர்வண்டிகள் நிறுத்தப்பட்டன; பேருந்துகள் கொளுத்தப்பட்டன; ஆனால், உயிர்ப்பலி எதுவும் இல்லை, ராஜ்குமாரை விடுவித்தபிறகும் கூட;
காரணம் வீரப்பனார் கையில் அவர்கள் குடுமி இருந்தது;
சோர்ட் சாலையில் (chord road) ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார் அது ராஜ்குமார் கடத்தப்பட்டதன் எதிரொலியா என்பது உறுதியாகவில்லை;
வீரப்பனார் அனுப்பிய ஒலிநாடாவில் "கர்நாடக மற்றும் தமிழக முதலமைச்சர்களுக்கு வணக்கம், நான் வீரப்பன் பேசுவது என்னவென்றால், என் தோழர் என் கோரிக்கைகளை வாசிப்பார்" என்கிறார். அதன்பிறகு தநாவிப தலைவர் மாறன் கோரிக்கைகளை வாசிக்கிறார்.
அவைகளில் முக்கியமானவை,

1. காவிரிப் பிரச்சினையை அனைத்துலக நீதிமன்றம் விசாரித்து முடிவு கூறவேண்டும்.
2.தமிழக சிறைகளில் உள்ள தமிழர் நாட்டு விடுதலைப் படை, தமிழர்நாடு மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த ஐந்துபேரை தமிழகஅரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3.வாச்சாத்தி,சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட
பெண்களுக்கு ஆகியோருக்கு நஷ்டஈடு தரவேண்டும்.
4. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழ்
வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும்.
அதற்கான சட்டம் இயற்ற வேண்டும்.
5. தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ள அப்பாவித்தமிழர்களை
விடுவிக்க வேண்டும்.
அவர்களுக்கு உறுதியளித்தபடி
நிவாரணம் வழங்க வேண்டும்.

(தொடரும்)


https://www.facebook.com/photo.php?fbid=448921765211482&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment