இதே மே 2 நாள் 2009ம் ஆண்டில்,
ஈழப்படுகொலை உச்சநிலையை அடைந்துகொண்டிருந்த நேரம்;
தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள், தீக்குளிப்புகள், அரசின் ஒடுக்குமுறைகள் என்று பரபரப்பாயிருந்த நேரம்; இலங்கைக்கு கமுக்கமாக ஹிந்தியா செய்த படையுதவியை பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படச்சான்றுகளுடன் தினத்தந்தி வெளியிட்டதையிட்டது.
பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தேசிய இயக்கம், மதிமுக மாணவரணி, தமிழ் இளைஞர் இயக்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம் போன்ற பல இயக்கங்கள் சேர்ந்து ஆந்திராவிலிருந்து கமுக்கமாக கொச்சிவழியாக இலங்கை செல்லவிருந்த படைத்தடவாளங்களை கோயம்புத்தூர் அருகே நீலம்பூர் புறவழிச் சாலையில் மறித்து அதன் ஓட்டுநர்களைத் தாக்கி விரட்டிவிட்டு வண்டிகளில் ஆயுதங்கள் மற்றும் தடவாளங்களை வெளியே எடுத்து வீசிவிட்டு அந்த 5 சரக்குந்துகளையும் தீவைத்து கொளுத்தினர்;
ஓட்டுநர்கள் மதுக்கரை படைமுகாமில் முறையிட ஹிந்தியப் படையினர் அங்கே வந்து போராட்டக்காரர்களையும் செய்தியாளர்களையும் தாக்கத் தொடங்கினர்; போராட்டக்காரர்களும் திருப்பித் தாக்க இருதரப்பினரும் மோதிக்கொண்டனர்; பிறகு காவல்துறையினர் அங்கே வந்து அமைதி செய்து போராட்டக்காரர்களில் முக்கியமானோரைத் தளைப்படுத்தி அழைத்துச்சென்றனர்;
(ஆனாலும் சற்று பின்னால் வந்த மேலும் 75 சரக்குந்துகள் மாற்றுவழியில் அனுப்பிவைக்கப்பட்டன; ஹிந்தியா தொடர்ந்து உதவிகளை வாரிவழங்கிக்கொண்டிருந்தது)
அதன்பிறகு ஹிந்திய அரசின் அழுத்தத்தால் வேற்றின திராவிட அரசு 250 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிறைப்பிடித்தது; கு.இராமகிருசுணன் (பெரியார் தி.க), பொன்சந்திரன் (பியூசிஎல்), சிவப்ரியன் (ததேஇ), லட்சுமணன்(மதிமுக) ஆகியோர் மீது நாட்டு பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
இச்செய்தியும் பெரும்பாலான ஊடகங்களால் இருட்டிப்பு செய்யப்பட்டது.
நாம் உழைத்து கட்டிய வரிப்பணம் நம் உறவுகள் மீது குண்டாக வெடித்ததை அறிவீர்களாக.
No comments:
Post a Comment