Thursday, 10 July 2014

ஈழப்போரில் தமிழகம்


ஈழப்போரில் தமிழகம்
1970 களில் இருந்து 1982 வரை புலிகள் இயக்கம் வளர ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழகம் அவர்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்;
அது தொடர்பான ஒரு விளக்கமான பதிவு;
பழ.நெடுமாறன் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது; பலமுறை புலிகளுக்கும், தலைவருக்கும் உணவு, இடம் என பல ஆதரவுகளை வழங்கியவர்; 25-6-82ல் உமாமகேசுவரனும் பிரபாகரனும் சென்னை பாண்டிபசாரில் மோதிய வழக்கில் அவர்கள் கைதாக, நெடுமாறன் வீட்டில் விசாரணை நடந்த போது "ஆமாம், அவர்கள் ஆயுதப் போராளிகள் என்று தெரிந்துதான் உதவினேன்; தமிழனாக நான் செய்த கடமைக்கு எந்த விளைவையும் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறேன்" என்று உறுதியாகக் கூறிவிட்டு அவர்களைப் பிணையில் எடுக்கப்போனபோதுதான் தாம் உதவி வந்த இளைஞர்களில் ஒருவர்தான் பிரபாகரன் என்று தெரியவருகிறது; அந்த வழக்கை நடத்தி மதுரையில் தமது வீட்டிலும் தமது உறவினர்கள் வீட்டிலும் பிரபாகரன்,ரகு,தங்கவேலாயுதம், அன்டன், மாத்தையா, செல்லக்கிளி ஆகியோரைத் தங்கவைத்தவர்; போராளிகளை பிடித்துச் செல்ல சிங்கள அரசு ஆளனுப்ப 1-6-82 ல் 20கட்சிகளைக் கூட்டி தீர்மானம் போட்டு அதை பிரதமரான இந்திரா காந்திக்கு அனுப்பி போராளிகளைக் காத்தவர்; கிட்டு, ரஞ்சன், பண்டிதர், சீலன், புலேந்திரன், பொன்னம்மான், இளங்குமரன் போன்ற முக்கிய போராளிகளை பாபநாசத்தில் தமது இல்லத்தில் மறைத்து வைத்தவர்; மதுரையில் தமது வீட்டிலும் ஒன்றுவிட்ட தம்பி திரவியம் வீட்டிலும் பிரபாகரனைத் தங்கவைத்தவர்; காங்கிரசு பிரமுகர் வி.கே.வேலு அம்பலம் என்பவர் வீட்டில் இளங்குமரன் மற்றும் தோழர்கள் தங்கவைத்தவர்; தமது தம்பியின் மாமனர் ஊரான அவினாபுரியில் புலிகளுக்கு முகாம் அமைத்து தந்தவர்; தமது தோழர் சந்திரபால் என்பவர் வீட்டில் சீலனுக்கு சிகிச்சை;உறவினர் பாண்டியன் என்பவர் வீட்டில் இந்திய-புலிகள் போரின்போது முக்கிய ஆவணங்களை மறைத்துவைத்தவர்; பிரபாகரனின் தாய்தந்தையரை தம்மோடு வைத்துகொண்டவர்; அ.அமிர்தலிங்கம் அவர்களுக்கும் பிரபாகரனுக்கும் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியையும் புலிகளையும் இணைக்க முயன்றவர்; ரஞ்சன், பஷீர்காகா, சந்தோசம், புலேந்திரன் ஆகியோருக்கு பிரபாகரன் தலைமையில் திருப்பங்குன்றம் அருகேயுள்ள காடுகளில் பயிற்சிக்கு உதவியவர்; 1985ல் புலிகள் பாதுகாப்பில் ஈழத்தில் சுற்றுப்பயணம் செய்து தமிழர் நிலையை நேரடியாக 'சுதந்திரக் காற்று' என்ற பெயரில் ஆவணப்படமாக்கி இந்தியா முழுவதும் தடையை மீறித் திரையிட்டவர்; 1983 ஜூலைக் கலவரம் நடந்தபோது 5000இளைஞர்களைத் திரட்டி மதுரையிலிருந்து மக்கள் பேராதரவுடன் நடை ஊர்வலமாக இராமேசுவரம் வந்து எவர் தடுத்தும் நிற்காமல் அங்கிருந்து பல படகுகளில் கடலில் ஈழம்நோக்கி பாதி தூரம் வந்து இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டவர்; திலீபன் உண்ணோநோன்பிருந்தபோது நேரில் சென்றவர் என இவரைப் பற்றி தனி புத்தகமே போடலாம்;
1970களிலேயே தமிழர் மாணவர் பேரவை நிறுவனர் சத்தியசீலன் போன்ற பல போராளிகளுக்கு உதவியதோடு நில்லாமல் ஆன்டன் பாலசிங்கம் மற்றும் புலிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அறைகள் வழங்கிய மத்திய இணையமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன்; அந்த சமயத்தில் போராளிகளுக்கு அருகேயிருந்து உதவிய புலமைப்பித்தன்; உமாமகேசுவரன் விடுதலைப் புலிகள் இயக்கப்பெயருக்கு உரிமைகொண்டாடியபோது அவரை சரிசெய்து ப்ளோட் இயக்கம் தோற்றுவிக்கக் காரணமாயிருந்த அருகோ (எழுகதிர் ஆசிரியர்); சென்னை தெற்குப்பகுதியில் கடற்கரைக்கு சற்று தொலைவில் உள்ள சவுக்குத் தோப்புகளில் புலிகள் பயிற்சிபெற உதவிய சென்னைத் தமிழர் பலர் (திருமதி.அடேல் பயிற்சி பெற்ற இடம்); டெலோ சிறீசபா ரத்தினம் சில பெண்களை பயிற்சிக்காக சென்னை அழைத்து வந்தபோது டெலோ இயக்கம் பெண்போராளிகள் மீது ஆர்வம் காட்டாதபோது சென்னையில் தாழ்த்தப்பட்ட கத்தோலிக்கர் அவர்களைப் புலிகளுடன் சேர்த்துவிட்டனர் (முதல் பெண்புலி பிரிவு, சோதியா, சுகி, தீபா, இமெல்டா, வசந்தி போன்றோர் இதில் அடங்குவர்); 1984ல் திருவான்மியூரில் பெண்போராளிகளுடன் தங்கியிருந்த( தொடர்ச்சி பின்னூட்டத்தில்)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ப.மாணிக்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் என்.டி.வானமாமலை பிரபா-உமா வழக்கை நடத்தினார்; அமைச்சர் காளிமுத்து பிரபாகரனுக்கு நேரடியாக பல உதவிகள் செய்தவர்; மருத்துவக் கல்லூரி மாணவனான திண்டுக்கல் சந்திரன் தோழமையுடன் பிரபாகரனுக்கு பல உதவிகள் செய்தவர்; நெடுமாறன் அவர்களின் தோழர்கள் மீனாட்சி சுந்தரம், ஜெயப்பிரகாசம், தமிழ்க்கூத்தன் ஆகியோரும் உள்ளூருக்குள் பல உதவிகள் செய்தனர்; புலிகளின் கொடியை வரைந்து தந்த ஓவியர் நடராசன்; புலிகளின் உடையை வடிவமைத்த மதுரை தங்கராசு; முதல் மாவீரன் சங்கருக்கு மதுரையில் தோட்டா நீக்கி சிகிச்சை போன்ற பல முக்கிய மருத்துவ உதவிகளைச் செய்த புலிகளுக்காகவே ரகசிமாக இயங்கிய மருத்துவமனையின் பொறுப்பாளர் மரு.என்.எஸ்.மூர்த்தி; இசைநிகழ்ச்சி நடத்தி புலிகளுக்கு நிதி திரட்ட உதவிய இளையராஜா; 1980ல் சீரணியரங்கில் முதன்முதலாக புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் கூட்டிய பழநி பாபா; 1995ல் யாழ்இடப்பெயர்வு மக்களை தமிழகம் ஏற்றுக்கொள்ள முதன்முதலாகத் தீக்குளித்த அப்துல் ரவூப்; புலிகளுக்கும் தமிழக விடுதலை இயக்கங்களுக்கும் பாலமாக விளங்கிய சுப.முத்துக்குமார்; 2009ல் முத்துக்குமார் உட்பட தீக்குளித்த 17 ஈகிகள்; ராசீவு காந்திக்கு உயிருடன் இருக்கும் போதே அறம்பாடிய, தனுவுக்கு கவியாரம் சூட்டிய பெருஞ்சித்திரனார்; The History of Thamiraparni எனும் ஈழத்தமிழர்களின் வரலாற்றை எழுதிய, தனி ஈழத்துக்காக தீவிரமாகப் போராடிய, புலிகளால் மாமனிதர் பட்டம் அளிக்கப்பட்ட ஆ. இராசரத்தினத்துக்கு 1973லிருந்து கடைசிவரை அடைக்கலம் வழங்கிய திரு இரா.ஜனார்த்தனம் மற்றும் மணவைத்தம்பி; புலிகளின் பாடல்களுக்கு இசையமைத்துத் தந்த தேனிசைச் செல்லப்பா; சிறுமலை என்ற ஊரில் பயிற்சிக்கு தன் இடத்தை வழங்கிய, புலிகளால் ஈழத்துணை விருது வழங்கி மேன்மைப்படுத்தப்பட்ட திண்டுக்கல் அழகிரிசாமி; அப்போது முகாமுக்கு உணவு வழங்கிய திண்டுக்கல் வணிகர் சங்கத் தலைவர் மணிமாறன், ஈழத்திற்கு சென்று மரணப்படுக்கையில் இருந்த பிரபாகரனின் தாயாரைப் பல தடைகளை மீறி சந்தித்த வழக்கறிஞர்.அங்கயற்கண்ணி; 1986ல் சார்க் மாநாடு பெங்களூரில் நடைபெற்றபோது ஜெயவர்த்தனாவுக்கு ஆயிரக்கணக்கானோரோடு கறுப்புக்கொடி காட்டிய கர்நாடகத் தமிழ்ப்பேரவைப் பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம்; 1996ல் புலிகளுக்கு ஜீப் வண்டி நன்கொடையளித்த பி.எல்.ராமசாமி (திராவிடர் கழகம்); இந்திய அமைதிப்படை அட்டூழியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க 1988ல் கொடைக்கானல் குண்டுவெடிப்பு நடத்தி சிறைசென்ற தோழர்.பொழிலன்;

அடேல் மீது தவறான சந்தேகத்தோடு கூடி வந்து தாக்க முற்பட்ட அந்தப் பகுதி தமிழர்கள் அங்கே பொன்னம்மான் தாங்கள் ஈழப்போராளிகள் என்று கைத்துப்பாக்கியை எடுத்துக்காட்ட மன்னிப்பு கேட்டு வருந்தியபடி கலைந்துசென்றனர்; பாலா-அடேல் தங்கியிருந்த வீட்டில் குண்டுவெடித்தபோது அக்கம்பக்கத்து தமிழர்கள் வந்து நலம் விசாரித்தனர்; வேறொரு இசுலாமியத் தமிழ்க்குடும்பம் துணிந்து வீடுகொடுத்தது; எம்ஜிஆர் காவல்துறையை முடுக்கிவிட காரணமானவர் இலங்கை அமைச்சர் லலித் அதுலத் முதலி என தெரியவர அவர்மீது வழக்குபோடவிடாமல் இந்திய அரசாங்கம் தடுத்துவிட்டது; பயிற்சிக்கு தமது சொந்த இடத்தைக் கொடுத்த கொளத்தூர் மணி;கொளத்தூரில் பயிற்சி நடந்தபோது 150 போராளிகளுக்கு மூன்று ஆண்டுகள் சகலதேவைகளையும் நிறைவேற்றியதோடு மட்டுமன்றி தம்மோடு பழகிய பொன்னம்மாள் ஈழத்தில் இறந்தபோது நினைவிடம் அமைத்த கொளத்தூர் தமிழ்மக்கள்; அதே நேரத்தில் திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் உள்ள முகாமுக்கு உதவிகளனைத்தும் செய்த அப்பகுதி தமிழர்; அமைச்சராக இருந்தபோது புலிகளுக்கு உதவியதால் 1992ல் தடா'வில் கைது செய்யப்பட்ட சுப்புலட்சுமி, அவரது கணவர் செகதீசன்; கௌதமி, கலாராம், குமார் என்ற மூன்று ஊனமுற்ற ஈழவர் தடாவில் கைது செய்யப்பட்டபோது போராடி விடுதலை பெற்ற வழக்கறிஞர் கே.சந்துரு(தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி); பிரபாகரன், மாத்தையா உள்ளிட்ட முதல் பிரிவு இந்தியாவுக்கு பயிற்சிக்கு வந்தபோதும், இந்திய-இலங்கை-ஈழப்போராளிகள் பேச்சுவார்த்தையின் போதும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்த எஸ்.சந்திரசேகரன்(ரா உயரதிகாரி); புலிகளின் ஆயுதங்கள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டபோதும், புலிகள் இந்தியாவிடம் பயிற்சி பெறவும் பல உதவிகள் செய்த தமிழக காவல்துறை உயரதிகாரி அலெக்சாந்தர்; 1983ல் ஐநா பேரவைக் கூட்டத்தில் 70நாட்கள் பன்னாட்டு தலைவர்களுடன் பேசி, உரையாற்றி ஐநா பொதுச்செயலர் ஃபெரஸ் டி.கொய்லர் இலங்கை தமிழர் பிரச்சனை மனித உரிமை மீறல் தொடர்பானது என்று ஒப்புக்கொள்ளவைத்த பண்ருட்டி.ராமச்சந்திரன்; 1985ல் திம்பு மாநாட்டில் ஈழ ஆயுதக்குழுக்கள் ஒன்றிணைந்ததைக் கெடுக்க இந்திய அரசு பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகியோரை நாட்டைவிட்டு வெளியேறச் சொன்னபோது பொங்கியெழுந்த தமிழகம் போராடி அதைத் தடுத்தது; கறுப்பு யூலையின்போது அதுவரை தமிழகத்தில் நடக்காத அளவு முழுஅடைப்பும், பல்வேறு போராட்டங்களும் நடந்தன;
ஆலோசகரான ஜி.பார்த்த
சாரதி தமிழர் ஆதரவு செயல்பாட்டினால்
செயவர்த்தனாவால்

குற்றம்சாட்டப்பட்டு பதவி விலகினார்;ராசீவ் காந்தியால் வெளியுறவுத்துறை அமைச்சரான
ஏ.பி.வெங்கடேசன் தமிழர் ஆதரவு செயல்பாட்டால் பதவி விலக்கப்பட்டார்; கவிஞர்.காசிஆனந்தனுக்கு ஆதரவும் அடைக்கலம் தந்துள்ளது தமிழகம்; இந்திய அமைதிப் படை ஈழத்தில் நடத்திய கொடுமைகள்
பற்றி புலிகள் வெளியிட்ட 'சாத்தானின் படைகள்' நூலுக்கு ஓவியம் வரைந்துகொடுத்ததற்காக இந்திய உளவுத்துறையால் கைது செய்யப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளான ஓவியர்.வசந்தன்; ஈழ-
இந்தியப் போரில் தப்பிவந்த அத்தனை பேருக்கும் தமிழகம் உதவியதுய (காட்டாக அப்போது பாலசிங்கம்
தம்பதி தப்பி தமிழகம் வந்து வீட்டுக்காவலில் இருந்த கிட்டுவை சந்தித்துவிட்டு காலாவதியான
கடவுச்சீட்டு மூலம் வேறு பெயரில் பயணச்சீட்டு எடுத்து சென்னையிலிருந்து இலண்டன் சென்றனர்); போர் நடந்தபோது அங்கே களநிலவரம் அறிய மத்திய ரிசர்வு போலீசு உயரதிகாரி கார்த்திகேயன்
என்பவரை இந்திய டி.என்.சேஷன் அனுப்பினார், 1989ல் ரகசியமாக போர்ப்பகுதியில் சுற்றிவிட்டு தமிழர்கள் கேட்கும் உரிமைகளைத் தருவதே தீர்வென்றும், புலிகளின் பலத்தையும், இந்தியப்
படையினரின் மனமொடிந்த நிலையையும் கூறி போர் முடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தார்; 1988ல் சிறிலங்க அரசில் அமைச்சராக இருந்த பக்ருதீன் முகமது தலைமையில் இலங்கை இசுலாமியர்
பற்றி பேச சென்னையில் கிட்டுவை சந்திக்க வந்தபோது அப்துல்சமத் என்ற இந்திய முசுலீம் லீக் தமிழகக் கிளை தலைவர் அந்தப் பேச்சுவார்த்தையை பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டதன்பேரில்
நடத்தி புலிகளுக்கு ஈழத்தமிழ் இசுலாமியர் பக்கபலமாக இருக்க உதவியவர்; இந்திரா ல்லப்பட்டபோது நடந்த சீக்கியப்படுகொலை போல் இராசீவு படுகொலையின்போது தமிழர் படுகொலை போன்ற தீவிர நடவடிக்கை வராமல் பார்த்துக்கொண்டவர் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன்;
2002ல் சென்னை ஆனந்த் திரையரங்கில் புலிகள் ஆதரவு கூட்டம் நடத்திய தமிழ் முழக்கம் சாகுல் அமீது, 
பழ.நெடுமாறன், மரு.தாயப்பன், பாவாணன் ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்; 1990களில் புலிகள் கல்வித்திட்டத்தில் தமிழக கல்வியாளர்கள் பாடத்திட்டம், புத்தகங்கள், பயிற்சி என பல வகைகளில் உதவினர்; இராணுவ விஞ்ஞானம் பற்றிய பாடத்திட்டங்களை தீட்டி அளித்தவர் சென்னையில் இதே துறையின் தலைவராக இருந்த பேரா.மனோகரன்; நுண்கலைக் கல்லூரி ஒன்றை புலிகள் ஆரம்பிக்க பேரா.விசயகோபால் திட்டவரைவு வழங்கினார்; நீர்மேலாண்மை பற்றிய பாடத் திட்டம் நெடுமாறனின் தம்பி முனைவர்.பழ.கோமதிநாயகம் என்பவர் தீட்டியது; இவர், தமிழ் பாடத்துக்கு கடையம் பேரா.அறிவரசன், ஆங்கிலத்துக்கு பேரா.அ.அய்யாச்சாமி போன்றோர் ஈழத்திற்கே சென்று ஆண்டுக்கணக்கில் தங்கி உதவினர்; புலிகள் மீதான பல்வேறு வழக்குகளை தாமே முன்வந்து நடத்தியவர் எஸ்.சந்திரசேகரன், இவரும் இவரது உதவி வழக்கறிஞர் கோபிகிருஷ்ணனும் 2004ல் தலைவரை சந்தித்தனர்; இயக்குநர்கள் பாரதிராசா, மகேந்திரன், மணிவண்ணன் போன்றோர் தலைவரைச் சந்திக்கச் சென்று தமிழீழக் கலை பண்பாட்டுத் துறை நடத்தும் பூலித்தேவன் நாடகம், இலக்கிய விருதுகள், முத்தமிழ் விழா, பொங்கல் விழா போன்றவை கண்டு வியந்து வாழ்த்துகளும், ஆலோசனைகளும் வழங்கினர்;புலிகள் 1995ல் வேலூர் கோட்டையிலிருந்து தப்பி காட்டுக்குள் தப்பியபோது கொளத்தூர் மணி மற்றும் நெடுமாறன் போன்ற பலரின் உதவியால் ஈழம்போய்ச்சேர்ந்தனர்; (இவர்கள் சேலம் காடுகளில் பதுஙங்கியிருந்தபோது எதேச்சையாக வீரப்பனார் அவர்களைச் சந்திக்க மிகவும் மகிழ்ந்து வேண்டிய உதவிகளைச் செய்தார், இவர்களில் பிடிபட்டவர் மாறன் தற்போது லண்டனில் வசிக்கிறார்); பிரேமா என்ற பெண்புலிக்கு குண்டு அகற்றி தமது பொறுப்பில் பாதுகாத்த பழ.நெடுமாறனின் தோழர் மரு.பொ.முத்துசெல்வம்; சமரச முயற்சிகளை முன்னெடுத்த நீதியரசர்.வி.ஆர்.கிருஸ்ணய்யர்; இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டேபோகலாம்!!!!


மேலும் சீமான், வைகோ, ஜெகத் கஸ்பர், எம்ஜிஆர் போன்றவர்களின் பங்களிப்பு பலருக்கும் தெரியுமாதலால் அவற்றை விளக்கவில்லை;

தேவையற்ற பின்னூட்டங்கள் போடாதீர்கள்!

மேற்கண்ட தொடர்ச்சி பின்தள்ளப்பட்டுவிடும்


https://www.facebook.com/photo.php?fbid=392315390872120&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment