Friday 18 July 2014

கறுப்பு செப்டம்பர்

கறுப்பு செப்டம்பர்
@@@@@@@@@
1972 செப்டம்பர் 5,
ஜெர்மனியின் தலைநகரம் ம்யூனிக்; ஒலிம்பிக் போட்டிகள்
நடந்துகொண்டிருந்த நேரம்; ஒட்டுமொத்த உலகமும்
கூடியிருந்த இடம்; துப்பாக்கி வேட்டுச்சத்தங்கள்
அதிகாலை மௌனத்தைக் கலைத்தன; விளையாட்டு வீரர்கள்
தங்கவைக்கப்படும் 'ஒலிம்பிக் சிற்றூர்(olympic
village)' அலறத் தொடங்கியது;
காவலை மீறி கமுக்கமாக உள்ளே நுழைந்து, கள்ளத்
திறவுகோல்(சாவி) மூலம் இஸ்ரேல்
நாட்டு விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த
வீட்டுக்குள் கதவைத் திறந்து எதிர்பாராமல்
நுழைந்தனர் எட்டுபேர்; முகமூடி, துப்பாக்கியுடன்
வந்த அவர்களைப் பார்த்து குழம்பிய யூத
விளையாட்டு வீரர்கள் தூக்கம் கலைந்து அதிர்ச்சியில்
உறைந்தனர்; துணிச்சலை வரவழைத்துக்கொண்
டு கேள்விகேட்டவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை;
முரண்டுபிடித்த இருவர் உடனடியாகச் சுடப்பட்டனர்;
ஒட்டுமொத்த உலகமும் கதற ஆரம்பித்தது; உலகின்
மூலைமுடுக்கெல்லாம் தலைப்புச் செய்திகள் பதறத்
தொடங்கின.
ஜெர்மனி அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது;
யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு?
நாங்கள் 'கறுப்பு செப்டம்பர் (black september)' என்ற
இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள்; எங்கள் பாலஸ்தீனத்தில்
இசுரேல் செய்துவரும் அட்டூழியத்திற்கு பதிலடி தர
வந்திருக்கிறோம்; இந்த விளையாட்டு வீரர்களைக்
கொல்வது எங்கள் நோக்கமல்ல; எங்கள் போராளிகள்
இருநூறுபேரை இசுரேல் விடுவிக்கவேண்டும்;
அது நடக்காவிட்டால் இந்த
ஒன்பது விளையாட்டு வீரர்களை மறந்துவிடுங்கள்.
இசுரேல் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை;
ஜெர்மனியே அவர்களை ஏதாவது செய்து விடுவிக்கவேண்டு
ம், அல்லது நாங்கள் அதிரடி நடவடிக்கை எடுப்போம்
என்று சொல்லிவிட்டார் இசுரேலிய பெண் அதிபர் கொடால்
மிய்ர்;
ஜெர்மன் அரசு நயமாகப்
பேசி பயணக்கைதிகளோடு பத்திரமாக தங்கள்
நாட்டிலிருந்து தனிவானூர்தி மூலம் வெளியேற
உதவுவதாகவும், பாலஸ்தீனம் சென்ற பிறகு இசுரேலுடன்
பேரம் பேசிக்கொள்ளுங்கள் என்றும்
கூறி இசைவு பெற்றது.
பயணக்கைதிகளை ஆயுதமுனையில் அழைத்துக்கொண்டு
தனிவானூர்தி நிறுத்தப்பட்டிருந்த
நிலையத்திற்கு ஆயுதப்போராளிகள் வந்தபோது ,
அங்கே ஜெர்மன் அரசு அதிரடி நடவடிக்கைக்காக
மறைத்துவைத்திருந்த படைவீரர்கள் தாக்குதலைத்
தொடங்கும் முன் சில வினாடிகளில் சுதாரித்துக்கொண
்ட போராளிகள் பணயக்கைதிகளை சுடத் தொடங்கினர்;
ஜெர்மானியப் படையினர் 8போராளிகளில்
ஐவரை சுட்டுவிடும் முன் போராளிகள் 9
பணயக்கைதிகளில் அனைவரையும் சுட்டுமுடித்துவ
ிட்டனர்;
மொத்தம் 11அப்பாவி விளையாட்டு வீரர்களும் 5
ஆயுதப்போராளிகளும் அங்கே உயிரிழந்தனர்;
மூன்று ஆயுதப்போராளிகள் சிறையிலடைக்கப்பட்டனர்;
பலமணிநேர பரபரப்பு முடிவுக்கு வந்தது.
1940களில் யூதர்கள் கோடிக்கணக்கில் கொல்லப்பட்டபோது
உலகமே யூதர்களை இரக்கத்துடன் பார்த்தது; அந்த
பார்வைக்கு வலுசேர்க்கும் விதமாக தற்போது மேலும்
அப்பாவி யூதர்கள் பதினொரு பேரின்
குருதி நிலத்தில் சிந்திவிட்டது.
'கறுப்பு செப்டம்பர்' இந்த பழியை ஏற்றுக்கொண்டது;
ஆமாம், அவர்கள் அன்று அப்படி செய்த
பிறகு அண்டைநாடுகளுக்குக்கூட சரிவரத் தெரியாத
பாலஸ்தீனப் போராட்டம் உலகம் முழுதும் பரவியது;
அதுவரை பாலஸ்தீனத்திற்காக
குண்டுவைத்தவர்கள், ஆள்கடத்தியவர்கள், தாக்குதல்
நடத்தியவர்கள், விடுதலைக் கவிதை எழுதியவர்கள்,
புத்தகம் போட்டவர்கள், புலம்பெயர் பாலஸ்தீன
ஆதரவாளர்களின் பரப்புரை, புகைப்படங்கள்,
ஆவணப்படங்கள், ஐநா தீர்மானங்கள் என எதுவும்
சாதிக்காத ஒன்றை…
எட்டு போராளிகளும் அவர்கள் துப்பாக்கிகளும்
சரியான இடத்தில் சரியான நேரத்தில் எடுத்த
ஒரேயொரு அதிரடி நடவடிக்கை சாதித்தது.
இன்று 'பாலஸ்தீன்' என்ற பெயரை அத்தனைபேரும்
குறைந்தது பத்துதடவையாவது கேள்விப்பட்டிருப்போம்.
காரணம் அன்று கொலைப்பழி சுமந்த 'ப்ளாக் செப்டம்பர்'.
நமக்கு ஒரு 'கறுப்பு மே' இல்லாமல் போய்விட்டது;
பொதுநலவாய மாநாடும் (காமன்வெல்த்) இலங்கையில்
கோலாகலமாக நடந்தும்விட்டது;
நாமும் வருடாவருடம் நூறாயிரக்(லட்சக்)கணக்கில்
ஐநா முன்பு கூடி கத்திக்கொண்டிருக்கிறோம்.
https://m.facebook.com/photo.php?fbid=427750493995276&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment