விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர்
/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/¿?/
நீங்கள் '1958 சந்த்ரா' என்று கேள்விப்பட்டதுண
்டா?
இது விண்ணில் சுற்றிவரும் கோளும் அல்லாத
பாறையும் அல்லாத ஒரு குறுங்கோள் ஆகும்;
இதில் 'சந்த்ரா' என்ற பெயர்
ஒரு தமிழனை பெருமைப் படுத்தும் விதத்தில்
சூட்டப்பட்ட பெயர் ஆகும்;
அந்த தமிழர்தான் திரு.சுப்பிரமணியம்
சந்திரசேகர்;
1910ல் தற்போது பாகிஸ்தானில் உள்ள
லாகூரில் ஆங்கில அரசில் பணிபுரிந்துவந்த
இவரது தந்தை (சர்.சி.வி.ராமனின் அண்ணன்)
வசித்தபோது பிறந்தார்;
பிறகு தமிழகம் திரும்பி 1930களில்
அமெரிக்கா சென்று குடியேறுகிறார்;
அங்கே பல்வேறு சாதனைகளும் விருதுகளும்
குவித்து பெயர்பெற்ற அறிவியலாளராக(வி
ஞ்ஞானி) வளர்கிறார்;
1983ல் இவரது 'விண்மீன்களின் பரிணாமம்'
பற்றிய ஆய்வைப் பாராட்டி இயற்பியலுக்கான
நோபல் பரிசு வழங்கப்படுகிறது;
இந்த ஆய்வு விண்மீன்களின் வயதையும்
ஆயுளையும் கணிக்க உதவுகிறது; கதிரவனின்
வயதைக் கணித்தவர் இவர்தான்
என்று நம்பப்படுகிறது;
வானியல் ஆய்வாளர் 'சந்திரசேகர் எல்கை'
என்பதைப் பயன்படுத்துகின்றனர்;
இயற்பியலாளர்கள் 'சந்திரசேகர் எண்' என்பதைப்
பயன்படுத்துகின்றனர்;
இத்தனை பெருமைமிக்க ஒரு தமிழனைப்
பற்றி எந்த தமிழனுக்கும் தெரியாது;
திராவிடக் கட்சிகள் இவர் ஒரு தமிழ்ப் பார்ப்பனர்
என்பதாலேயே இவரை மறைத்துவிட்டனர்;
இவரது சித்தப்பாவான சர்.சி.வி.ராமனும்
ஒரு நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்; அவர்
திராவிடம் தலைதூக்கும்
முன்பே பரிசு பெற்றவராதலால்
அவரை மறைக்கமுடியவில்லை;
கதை இதோடு முடியவில்லை;
சி.வி.ராமனின் மகனான திரு.வெங்கடராமன்
ராமகிருஷ்ணன் என்பவர் 2009ல்
வேதியியலுக்கான நோபல்
பரிசு வழங்கி பாராட்டப்பட்டார்; இதுவும்
பலருக்குத் தெரியாது;
ஆக தமிழர்களில் இதுவரை 3பேர் உலகின்
மிகச்சிறந்த விருதாகக் கருதப்படும் நோபல்
பரிசு பெற்றுள்ளனர்;
இன்னும் இருக்கிறது;
ராமானுஜம் மிக
இளவயதிலேயே இறந்துவிட்டார்
இல்லாவிட்டால் அவருக்கும் நோபல்
பரிசு கட்டாயம் கிடைத்திருக்கும்;
சி.வி.ராமனின் மாணவரான ஜி.என்.ராமச்சந்திரன்
நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்
ஆனால்
அது கிடைக்கவில்லை (எப்படி கிடைக்கும்,
அவர் ஒரு வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்திரு
ந்தால் கிடைத்திருக்கும்);
ஏ.ஆர்.ரகுமான் கூட ஒரு ஐரோப்பிய
படத்திற்கு இசையமைக்கவில்லை என்றால்
அவருக்கும் 'ஆஸ்கார்' கிடைத்திருக்காது;
இதேபோல சிவசங்கர நாராயணப்பிள்ளை,
கே.எஸ்.கிருஷ்ணன் என்று உலகளாவிய
புகழ்பெற்ற பல தமிழ் மேதாவிகள் இருந்தனர்.
நமக்கு இவர்களின் பெயரெல்லாம் தெரியாது;
நமக்குத் தெரிந்ததெல்லாம் நோபல்
பரிசை ஏற்படுத்தியர் ஆல்பிரட் நோபல்
என்பதும், நோபல் பரிசு பெற்றவர்களில்
அன்னை தெரசா, ரவீந்தரநாத் தாகூர்,
அமர்த்தியா சென் போன்ற ஹிந்தியர்களின்
பெயர்களும் மேலும் கல்பனா சாவலா,
மேத்தா பட்கர், அருந்ததி ராய் போன்ற
தமிழரல்லாதவர்களின் பெயரும்தான் தெரியும்.
நம் மொழி பேசும், நம் இனத்தைச் சேர்ந்த, நம்
மண்ணில் பிறந்த மேதாவிகளை அவர்கள் பிறந்த
சாதியைக் காரணம்காட்டி மறைத்துவிடும்
கீழான அரசியலைத்தான் நாம்
அரியணை ஏற்றி வைத்திருக்கிறோம்.
https://m.facebook.com/photo.php?fbid=470592359711089&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr&refid=13#470604516376540
No comments:
Post a Comment