Thursday 10 July 2014

இளநங்கை ஔவை



ஔவையின் அழகை எடுத்துரைக்கும் பாடல்.

"இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி"
(புறம் 89)

இப்பாடல் அதியமானின் தோழியான 'சங்ககால ஔவையின்' அழகைக் குறிப்பதாக அமைந்துள்ளது; இதில்,

இழையணி (நூலால் கோர்க்கப்பட்ட ஒருவகை அணிகலன்) அணிந்த எடுப்பான பின்புறம்(புட்டம்) கொண்டவள்;
மடப்பத்தன்மை (மென்தன்மை) பொருந்திய மடவரல் (பேதைப்பெண்);
மை தீட்டிய கண்களும், வாள்போன்ற (வளைந்த பளபளப்பான) நெற்றியும் கொண்ட விறலி (விறல்-நாடகக் கலையின் ஒரு பிரிவு).

%%%%%%%%%%%%%%%%

"சிறிய கள் பெறின் எமக்கு ஈயும் மன்னே!
பெரிய கள் பெறின்
யாம் பாடத் தாம் மகிழ்ந்து உண்ணும் மன்னே..."

அதியமான் இறந்தபோது ஔவை நெஞ்சுருகிப் பாடும் பாடலான இதில் ,

கள் கொஞ்சமாக இருந்தால் எனக்குக் கொடுத்துவிடுவானே!
அதிகமாகக் கிடைத்தால் என்னைப் பாடவைத்து உண்டு மகிழ்வானே!

என்று ஔவை பாடுகிறார்

No comments:

Post a Comment