Thursday 10 July 2014

பாகிசுத்தானை தோற்கடித்த ஹிந்திய-முசுலீம்



1965ல் ஹிந்திய- பாகிஸ்தான்
போரின் போது பாகிஸ்தான் அமெரிக்காவோடு நெருக்கமாக
இருந்தது, இந்திய ரஷ்யாவிடம் நெருக்கமாக
இருந்தது, பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆதரவுடன் 400 பேட்டன் தாங்கிகளை (batton tank) போரில் இறக்கியது; தடுத்து நிறுத்தமுடியாத அளவு வல்லமை கொண்ட பேட்டன் தாங்கிகள் பெரிய சேதத்தை ஏற்படுத்தியபடி முன்னேறிக்கொண்டே வந்தன.

1965-ஆம் ஆண்டு செப்டெம்பரில் முன்புறம் எந்த தாக்குத்தலையும் தாங்கியபடி
முன்னறும் பேட்டன் தாங்கிகளின் பின்புறம் மிக
மெலிதாக இருந்ததை கண்டுபிடித்த ஹிந்திய படைவீரர் 'அப்துல் ஹமீது' பேட்டன் தாங்கிகளை முன்னேறவிட்டு
சுற்றி வளைத்து பின்புறமாக அடித்தார்.

அடுத்தடுத்து மூன்று தாங்கிகளை சிதறடித்துவிட்டு நான்காவது தாங்கிக்கு முன்னேறும்போது வீரச்சாவடைந்தார்;
இதே உத்தி மூலம் ஹிந்திய
வீரர்கள் பேட்டன் தாங்கிகளை சிதறடித்தனர்;
'பரம் வீர் சக்ரா' என்ற விருது அப்துல் அமீதுக்கு வழங்கப்பட்டது.

இப்படிப்பட்ட முசுலீம்களைத்தான் பாகிஸ்தானிகள் என்றும் மொகலாய வாரிசுகள் என்றும் வந்தேறிகள் என்றும் கூறி மதவெறியைப் பரப்புவோர் ஹிந்திய ஆட்சியை பிடித்துள்ளனர்.

http://en.m.wikipedia.org/wiki/Abdul_Hamid_(soldier) 

No comments:

Post a Comment