Friday 18 July 2014

முகநூல் எருமைகள்

facebook எருமைகள்
பதிலடியாக கலாய்ப்போம்மா!!!!
இப்பதான் முகநூலில் புரட்சிகரமாகப்
பதிவுபோடுறவங்கள கலாய்ச்சு ஒரு பதிவு படிச்சேன்.
"சரி பதிலுக்கு நாமளும் கலாய்ப்போமே" என்று இந்த
பதிவு.
சில வெண்ணவெட்டிப் பயலுக இருப்பானுக (அதாங்க
ஹிந்தியா சொதந்தரதெனத்துக்கு இந்தியக்கொடிய
போட்டு happy independence
dayனு பதிவுபோட்டாங்களே அவனுகளேதான்)
இவங்க முக்கியமான அடையாளம் இவங்க முகப்புபடத்துல(
profile picture) கறுப்பு கண்ணாடி போட்ட படத்த
வச்சிருப்பாங்க.
இவனுகளுக்கு தமிழ்நாடு எவ்வளவு பெரிசுன்னோ சென்னை ஒரு தனிமாவட்டம்னோ கூட
தெரியாது; அவ்வளவு உலக அறிவோடு இருப்பாங்க;
பாக்யா, டைம் பாஸ், குங்குமம் முக்கியமான குமுதம்
இதல்லாம் படிச்சு இந்தி நடிகர் பேரல்லாம்
தெரிஞ்சு வச்சுப்பாங்க; ஒடனே ஒரு திமிரு
'நமக்குத்தான் எல்லாம் தெரியும்'னு;
பாட்சா படத்துல ரசினிக்கு தாடி ஒட்டுவனோட
பேட்டி,
ஒரு புதுநடிகை செல்லமா மொறச்சமாதிரி ஒரு படம்
போட்டு "அவர் ரொம்ப நல்லவர், சூட்டிங் ஸ்பாட்ல
எல்லாரோடயும் சகஜமா பழகுவார்;
எனக்கு தலைவலி தெரிஞ்சதும் அவரே எங்கிட்ட
வந்து விக்ஸ் தடவிக்கோனு சொல்லிட்டு போனார், ரொம்ப
சிம்பிளானவர் ஈகோவே கிடையாது"
அப்டினு ஒரு 'பேரன் பேத்தி எடுத்த' முத்தல் நடிகன
பத்தி பேட்டி கொடுக்கும், கடைசில மறக்காம
'உங்களுக்கு யார் பிடிக்கும்னு' கேள்வி ,
அதுக்கு 'எல்லாரையும் புடிக்கும்னு' பதிலோட அந்த
பேட்டி முடியும், அதல்லாம் ஒருவரிவிடாம
படிச்சுட்டுதான் மறுவேல.
அரசியல்வாதி துணுக்கு மன்னர் துணுக்கு மருத்துவர்
துணுக்கு (யாரல்லாம்
பாத்து வயிறெரியறமோ அவனுக்கு துணுக்கு போட்டு கேவலமா படம்
வரஞ்சு ஒரு அல்ப கிளுகிளுப்பு) இதல்லாம்
படிச்சுட்டு அத
அப்டியே திருடி பதிவு போடுறது அல்லது அது மாதிரி பாணில
சப்பாணி அரசியல்வாதிகள
கலாய்க்கிறது (குறிப்பா முந்துன காலத்துல
அதிகாரத்துல இருந்தவங்களா பாத்து, எல்லாரும் யார
கலாய்க்கறாங்களோ அவங்களதான் கலாய்ப்பானுக, இப்ப
அதிகாரத்துல இருக்குறவங்கள
கலாய்ச்சா அடிவிழுமோனு பயந்து சாவானுக)
அல்லது பெண்கள கிண்டல் பண்ணி பதிவு போடுறது .
சென்னை சூப்பர் கிங்சு (அதுல வெளயாடுறவனுக்கு
சென்னை எந்த மாநிலத்துல
இருக்குன்னே தெரியாதுங்கறது வேறவிசயம்)
விளாசித் தள்ளுறது மாதிரியும் அதோடு தலைவன்
எவனோ இந்திக்காரன் டோனியோ தோனியோ பொம்பளங்களோட
சாராய வெளம்பரத்துல கூட வருவானே அவன
தலைவானு புகழ்ந்தும் ஒரு படம்(அடுத்தவனோடதுதான்)
போட்ருப்பாங்க;
சரின்னு அவங்க காலக்கோடுல போய்ப்பாத்தா அதுல
"ஈ......" னு இளிச்சமாதிரி சந்தானம் படம் இருக்கும்
அதுல " நா என் ஃபிரண்டோட வண்டிய கடன் வாங்கக்
கேட்கும்போது இப்டித்தான் இளிப்பேன்"னு தங்லிசுல
எழுதிருக்கும்.
அதுவும் இவனுக சொந்தமாப்போட்ருக்கமாட்டானுக
எதாவது இதே மாதிரி "கலாய்க்குற பக்கம்" நடத்துற
'வேல கெடைக்காத பொறியியல் மாணவன்' போட்ருப்பான்.
சரி, எத்தன நாள்தான்
கலாய்ச்சுட்டே இருக்குறதுனு ஒரு குற்றவுணர்ச்சிவ
ந்ததும் ஒடனே போடுவான் பாருங்க ஒரு மனிதாபின
பதிவு,
'இந்த தாத்தா இந்தவயசுல
இளநி வெட்டி உழைக்கிறாரு'னு ஒரு படம்.
அப்டியே புல்லரிச்சுரும்;
படத்துக்கு கீழ "mapla epdi iruka" "vry nyc"
"unga thathavada idu?" அப்டினுலாம் சமூக
அக்கறயோட பின்னூட்டம் பதிலனுப்பிருப்பாங்க.
"மனதில் பட்டதை கூறாதே சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து கொல்வார்கள்"
அட இது கவிததாங்க சொன்னா மரியாதயா நம்பிருங்க
இல்லன்னா
இதே மாதிரி 'மனசு, உண்மை, நேசி, அன்பு,
இறுதிமூச்சு' இதெல்லாம் இடைல இடைல போட்டு இதவிட
கொடூரமான கவிதைகள சந்திக்கவேண்டிவரும்; அதனால
இதுக்கே விருப்பம் போட்டு தப்பிச்சிக்கோங்க;
சரி இதுவாவது இவன் சொந்தமுயற்சியான்னா ஊகூம்
அதுவும் எவன்ட்டயோ சுட்டதா இருக்கும்.
சாகுற நெலமைல ஒரு பையன் அவன் நண்பனுக்கும்
பெண்தோழிக்கும் (பெரும்பாலும் சாவுற நெலமைல
னு கதை இருக்கும்) "நா போறேன்"
அப்டினு குறுந்தகவல் அனுப்பறான்
"பெண்தோழி "எனக்கு காசு ஏத்திவிடு"னு பதில்
அனுப்புறா, "நானும் வாரேன்" னு நண்பன் பதில்
அனுப்பறான்.
இதுலருந்து என்ன தெரியுது "காதல விட
நட்பு சிறந்தது".
அப்பாடா ஒலகத்துக்கே புரியவச்சாச்சுப்பா
அதுல கீழ ஒரு முண்டக்கலப்ப "factu factu
factu"னு பதில் வேற அனுப்பிருக்கும்.
(அதுகூட சந்தானத்திட்ட சுட்ட வசனம்தானா?
ஏன்டா படத்துல வர்ற வசனத்த பதிலா தர்றதுல
என்னடா பெரும?)
ஒலகத்துலயே மத்த எந்த மொழிக்காரனயும் விட
தமிழ்லதான் நெறய நல்ல நல்ல செய்திகள் தர்ற ஆட்களும்
பக்கங்களும் முகநூல்ல இருக்கு அதல்லாம் இந்த
பொறம்போக்கு பயலுக கண்டுக்கவே மாட்டானுக,
ஆனா ஒரு பொண்ணு (அதுவும் போலியான பேர்ல எவனோ) "I
miss Chennai very much and my family"
அப்டினு போட்ருக்கும்;
இவனுக்கு எங்க அரிக்குமோ தெரியாது ஒடனே ஓடிபோய்
கணினிக்குள்ள தலையில் விட்டு மொத ஆளா "don't
worry dear. konja nal la palakidum" னு பதில்
போட்டுட்டு பதில் வருமானு காத்துக்கெடப்பான்.
ச்சே! இப்படி நாமளும் இருக்கோமே இவன
மாதிரி காத்துகெடக்காம
"விழிடா தமிழா"னு வீராவேசமா பதிவு போட்டு நேரத்தை வீணாக்கறோம்
பாருங்க.
அப்பப்ப நடிகை படம் போட்டுட்டே நடுவுல
ஒரு குழந்தை படத்தை போட்டு அம்மா கவித
ஒண்ணு போடுவானுங்க பாத்துருக்கீங்களா?!!!!???!!
அட என்னங்க நீங்க? ஒலகத்துல யாருக்குமே தெரியாத
பரம ரகசியமான "தாய்ப்பாசத்த" அவங்க
ஒரேஒரு படத்துல (மொக்கயானாலும்)
ஒரு கவிதை எழுதி உங்களுக்கு புரியவச்சு எவ்வளவு பெரிய
நன்ம செய்றாங்க;
அவங்க மட்டும் இல்லினா உங்களுக்கு தாய்ப்பாசம்
என்னானு தெரிஞ்சிருக்குமா?
ஒடனே நீங்க உணர்வுபூர்வமான "that's true"
அப்டினு பதில் போடவேண்டாமா?.
மனசு பொறுக்காம அவன தனியா அரட்டைல
கூப்ட்டு அறிவுர சொன்னாலும் "மக்கள
திருத்தமுடியாது கூமுட்டைங்க எல்லாரும்"
னு பதில் வரும்( என்னமோ இவன் பொளந்து தள்ளுன
மாதிரி)
நாமளும் காவிரி, கூடங்குளம், பிரபாகரன்,
ராமேசுவரம் மீனவன், மாணவர் போராட்டம், இசைப்
பிரியா, பாலசந்திரன் எல்லாம்
சொல்லி புரியவச்சா "oh really" னு பதில் வரும்;
(தமிழ்ல கேள்விகேட்டா இங்கிலீசுலதான் பதில்
சொல்லுவாரு தொற)
நாமளும் 'பய ஓரளவு யோசிப்பான்னு' விட்ருவோம்;
மறுநாளே நீங்க முகநூல்ல நொழஞ்சதும் "ajith fan -
like; Vijay fan- comment" னு ஒரு படத்தை உங்க
தலைல தூக்கி போட்ருப்பான் ;
அந்தப்படத்த போய்பாத்தா அதுக்கு கீழ
ஒரு வாரமா எச்சி எலைக்கு நாய் அடிச்சுக்குற
மாதிரி ரெண்டு நடிகன் ரசிகனுங்களும் ஒருத்தன
ஒருத்தன் 'அக்கா ஆத்தா மூணுதலமொற முந்துன
முப்பாட்டி' வர இழுத்து கிழிச்சிட்ருப்பானுக;
தப்பித்தவறி கூட அவங்கள திருத்தனும் களத்துல எறங்க
கூடாது அப்புறம் ஒங்க
அப்பத்தா நடுவீதிக்கு வந்துரும் பாத்துக்கோங்க.
இவனுகளால
ஒரே நல்லது என்னன்னா இப்படி ஈனப்பிறவிகள
பாக்றப்பதான் இவனுகள மாதிரி ஆடுமாடா வாழாம
கொஞ்சமாவது மனுசனா வாழுறோம்னு ஒரு திருப்தி கெடைக்கும்
அவ்ளோதான்.
இந்தப் பதிவு யாருடைய மனதையும்
நன்கு "புண்ணாக்கி"அவர்களை தன்னலவாதிகளாக
இருக்கவிடாமல்
செய்யவே போடப்பட்டது என்று தெரிவித்துக்கொள
்கிறேன்.
-முகநூலில்(மட்டுமாவது) போராடும் ஒருவன்.
(ஒங்க முகநூல் பட்டியல்ல இருக்குற
கறுப்பு கண்ணாடி பயலுகள இந்த படத்துல (tag)
கோர்த்துவிடுங்க
எல்லாவனும் சாவட்டும்)
https://m.facebook.com/photo.php?fbid=425323060904686&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment