Thursday 10 July 2014

தமிழ்க் குடியரசின் எல்லைகள்



எதை நோக்கி நாம் போராடவேண்டும்?
========================

காலிஸ்தான் பற்றி இணையத்தில் தேடியபோது அவர்கள் தமது தாய்நில வரைபடத்தை பலவாறு வரைந்துள்ளதை அறிந்தேன்; அதேபோல நமக்கு குழப்பம் வரக்கூடாதே என்றுதான் ஐயமே இல்லாத தமிழர் தாய்நிலத்தின் வரைபடத்தை இங்கே தருகிறேன்; ஏற்கனவே நான் வெளியிட்டிருந்த படத்தில்( https://m.facebook.com/photo.php?fbid=366164226820570&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=42&refid=17) ஈழப்பகுதியையும், கேரளா ஆக்கிரமித்துள்ள பகுதியையும் திருத்தியுள்ளேன்; அதே போல அந்தமான்-நிகோபர் பகுதியை நாம் ஐயமின்றி நமது பகுதி என்று கூறவியலாது என்பதால் தற்போதைக்கு நீக்கியுள்ளேன்; நமக்கு எந்த ஐயமும் இல்லாத பகுதியின் வரைபடத்தை கிடைத்துள்ள சான்றுகளோடு தருகிறேன்; முதலில் நாம் இப்பகுதியை மீட்டபிறகு மற்ற பகுதிகளை ஆராய்ந்து நம் நாட்டுடன் இணைப்பதா அல்லது அப்பகுதி பூர்வீக மக்களுக்கு விடுதலை பெற்றுத் தந்து நம்மோடு இணைந்துகொள்ள வலியுறுத்துவதா என்பதை அறம் வழுவாது பிறகு முடிவுசெய்யலாம்; உலகின் தற்போதைய மூத்த இனம் என்றவகையில் உலகத்தவர் யாவருக்கும் இனவிடுதலை பெற்றுத்தரவேண்டிய பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது;
சுருங்கிவரும் நம் தாய்நிலத்தை காக்கவேண்டும்;அதில் எந்த குழப்பம் வரக்கூடாது; நமது நாட்டை நாம்நிறுவும் வரை இதுதான் தாய்நிலம்; யார் தமிழர் தாய்நிலம் பற்றி கேட்டாலும் இந்த படத்தையே காட்டுங்கள்;
முக்கியமான சில எல்லைப் பகுதிகளை சிவப்பில் குறித்துள்ளேன்;எல்லைப்பகுதிகள் பெரும்பாலும் வேற்றுமொழியில் உள்ளன; தற்போதைய பெயர்களையே தருகிறேன்;
கடிகாரத் திசையில் தற்போதைய கேரளாவின் தென்கோடி மேற்கில் 'திருவனந்தபுரம்',நம்முடையது; தற்போதைய கேரளாவின் நடுப்பகுதியில் 'காலடி' வரை நமது; தற்போதைய கேரளாவின் வடகோடி மேற்கில் 'கேளகம்' வரை நமது; தற்போதைய கர்நாடகாவில் தென்கோடி மேற்கில் 'திதிமதி' வரை நமது; அங்கிருந்து வடகிழக்கில் 'கௌடில்' வரை நமது; தற்போதைய ஆந்திராவின் தெற்கே 'புட்டப்பர்த்தி' வரை நமது; அங்கிருந்து வடகிழக்கே 'தோனகொண்டா' மற்றும் 'தர்சி' ஆகியவை நமது வடகோடி எல்லைகளாக உள்ளன; ஈழத்தில் தென்கோடி மேற்கில் 'போதனா' கால்வாய் நமது தென்கோடி எல்லை; தென் தமிழீழத்தின் மேற்கு எல்லை 'எல்லேகொட்டலியா' என்ற பகுதிவரை; வட ஈழத்தின் தென் எல்லை 'மல்வெட்டு ஓயா' ஆறு; மேற்கு ஈழத்தின் தென் எல்லை 'கின் ஓயா' என்ற ஆறு; இதற்கான சான்றுகளை கீழே கருத்துகளில் தந்துள்ளேன்; எனவே இதில் எந்த கருத்தும் இடவேண்டாம்.

நன்றி.

விடுதலை பெறுவோம்
விடுதலை பெற்றுக் கொடுப்போம்


https://www.facebook.com/photo.php?fbid=419383841498608&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739


No comments:

Post a Comment