தென்னாப்பிரிக்கத் தீவிரவாதி
- - - - - - - - - - - - - - - - - - - - - - --
1960, ஷார்ப்வில்லி என்ற இடத்தின் காவல்நிலையம்
முன்பு 5000மக்கள் தென்னாப்பிரிக்க
நிறவெறி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில் கடவுச்சீட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில்
திரண்டனர்; பீரங்கிகளும் துப்பாக்கிகளும் முழங்கின;
69 கறுப்பின மக்கள் பலியானார்கள்; 200பேர்
காயமடைந்தனர்.
1960,மே30; ஒரு கமுக்கமான(ரகசியமான)
ஊடகவியலார் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந
்தது; திடீரென்று அங்கே தலைமறைவாக இருக்கும்
நெல்சன் மண்டேலா தோன்றினார்;
"இனி ஆயுதம்தான் எங்கள் வழி" என்று அறிவித்தார்;
1961ல் மண்டேலாவின் அமைப்பினர் வைத்த குண்டுகள்
வெடித்தன; அரசு அதிர்ச்சியில் உறைந்தது.
தீவிரமாகத் தேடப்பட்ட மண்டேலா பல்வேறு ஆப்பிரிக்க
நாடுகளுக்கும் தலைமறைவாக சுற்றுப்பயணம்
சென்று ஆதரவு திரட்டிவந்தார்; மீண்டும் நாட்டுக்குள்
நுழைந்தபோது எதிர்பாராத விதமாகப் பிடிபட்டார்.
1962,அக்டோபர் 2, பிரிட்டோரியா வழக்குமன்றம்
பரபரப்பாக இருந்தது; காவல்துறை வண்டிகள்
சத்தம்போட்டபடி குழுமியிருந்த மக்கள் மத்தியில்
நின்றன;
புலித்தோல் போர்த்திய தமது பாரம்பரிய உடையில்
வெளிவந்தார் மண்டேலா;
முட்டியை உயர்த்தி 'அமெண்டோ' என்று உரக்கக்
கூறினார்;
சுற்றியிருந்த மக்களும் 'அமெண்டோ' (உறுதி)
என்று முழங்கினார்கள்.
1964,ஜூன்12; பிடிபட்ட ஆயுதப்போராளிகளான 7
கூட்டாளிகளோடு குற்றம்சாட்டப்பட்டு 27ஆண்டுகள்
சிறைத்தண்டனை பெறுகிறார் மண்டேலா; ராபன் தீவிலுள்ள
சிறையில் அடைக்கப்படுகிறார்; சிறையிலும்
பல்வேறு அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல்
போராடுகிறார்.
1986,
மண்டேலாவை விடுதலை செய்யக்கோரி அரசுக்கு எதிரான
மிகப்பெரிய கலவரம்; அரசு அசைந்துகொடுக்கவில்லை.
1990,பிப்ரவரி,11; சிறைக்கதவுகள் 27ஆண்டுகள்
கழித்து மண்டேலாவுக்காக உற்சாகமாகத்
திறந்துகொண்டன;
வெளியே கூடியிருந்த மக்களை கூர்ந்து பார்த்தார்
வயதாகிப்போன மண்டேலா;
முட்டியை உயர்த்தி கூறினார்
"அமெண்டோஓஓஓஓ".
(எந்த பிரிட்டோரியா வழக்காடுமன்றம் அவரைக்
குற்றவாளியாக அறிவித்ததோ அதே மன்றத்தில்
அவரது உருவப்படம் இருக்கிறது;
எந்த நாடாளுமன்றம் அவரைத்
தீவிரவாதி என்று அறிவித்ததோ அதே நாடாளுமன்ற
வளாகத்தில் அவரது சிலை நிமிர்ந்து நிற்கிறது).
https://m.facebook.com/photo.php?fbid=468290996607892&st=6&_rdr
Saturday, 19 July 2014
தென்னாப்பிரிக்கத் தீவிரவாதி
Labels:
ஆதி பேரொளி,
ஆப்பிரிக்கா,
இனம்,
கறுப்பு,
குண்டு,
தீவிரவாதி,
நிறவெறி,
நெல்சன் மண்டேலா,
பயங்கரவாதம்,
போராளி,
மண்டேலா,
மன்டேலா,
மாண்டேலா,
விடுதலை,
வேட்டொலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment