Thursday 10 July 2014

சாதி பற்றி தமிழரசனார்



நமது உண்மையான எதிரிகளை அடையாளம் காண்போம்.
12-ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் சாதிகளை ஒழிக்க கிளம்பிய 'பசவர்' இயக்கத்தில் சேர்ந்தவர்கள்
இன்று “லிங்கயாத்துகள்” என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.
15-ஆம் நூற்றாண்டின் கடைசியில் சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'கபீர்தாசு' இயக்கத்தில் சேர்ந்த இந்து, முஸ்லிம் நெசவாளிகள் இன்று “கபீர்பாந்தி”கள்
என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.
17-ஆம் நூற்றாண்டின்
முடிவில் 'சத்தியமே கடவுள்' என்று சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'ஜகஜீவன்தாசு' எனும் 'ராஜபுத்திரரின்' இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இன்று “சத்நமி” என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.
19-ஆம் நூற்றாண்டின் முடிவில் சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'ரயிதாஸ்' இயக்கத்தில் சேர்ந்த 'சமார்கள்' இன்று புதிய சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.

சாதிகளை எதிர்ப்பதாகக்
கூறி சாதிகளே இல்லாத முஸ்லீம், கிறித்துவ
மதங்கள் இந்தியாவிற்குள் நுழைந்தன.
ஆனால், அவைதாம் சாதிகள் உள்ளவையாக மாறினவே தவிர சாதிகள் ஒழியவில்லை.

தாழ்த்தப்பட்டவரிலிருந்து முஸ்லீமானவர் ''மூசல்லி" சாதியாகவும், பஞ்சாபில் துப்புரவு சாதியிலிருந்து முஸ்லீமானவர் ''சூஹ்ரா'' சாதியாகவும், பஞ்சாபில்
'கத்தி' சாதியிலிருந்தும், சிந்துவில் 'லோகனா' சாதியிலிருந்தும் முஸ்லீமானவர்கள் ''கோஜா" சாதியாகவும், 'ராசபுத்திர' சாதியிலிருந்து முஸ்லீமானவர் ''லால்கனி" சாதியாகவும், பஞ்சாபில் முஸ்லீமாயுள்ள "அவான், கோஷி, கட்டீ, மிராதி" சாதிகளாகவும், மேல் இந்தியாவில் "லால்பெகி, மிவாதி ஜொலாகா" சாதிகளாகவும்,
சிந்து பகுதியில் "மீமான், துருக்கிய பஞ்சாரா சமார், கௌர் சாதிகளாகவும்",,
பார்ப்பனரிலிருந்து முஸ்லீமானவர் "தாக்கர் சாதியாகவும், டவாய்ப் சாதியாகவும்" ...சாதியற்ற முஸ்லீம் மதத்தில் எண்ணற்ற சாதிகள் தோன்றிவிட்டன.

அதேபோன்றே சாதியற்ற கிறித்துவ மதத்தில் சேர்ந்த நாடார், கிறித்துவநாடாராயும், தேவர், கிறித்துவத்தேவராயும், பள்ளர், கிறித்துவப்பள்ளராயும், கவுண்டர், கிறித்துவக்கவுண்டராயும்.....சாதியற்ற கிறித்துவ மதத்தில் எண்ணற்ற சாதிகள் தோன்றிவிட்டன.

ஆரியமதம், வைதீகமதம்,சனாதன மதமென அழைக்கப்படும் இந்து மதத்தின் அடித்த்தளமான சாதியமைப்பை, அம்மதத்திற்குள்ளிருந்து எதிர்ப்பவர்களையும் சரி., முறியடித்து அவர்களையே சாதியமைப்பைப் பின்பற்றும்படி செய்யும் வல்லாண்மையுடையதாய் சாதியமைப்பு இருந்து கொண்டிருக்கிறது.

இப்படி சர்வவல்லமையுடன்
நிலைத்து நீடித்து நிற்கும் சாதியமைப்பை அடியோடு அழிக்கவேண்டுமெனில் அதைப் பற்றிய மார்க்சிய அறிவியல் ரீதியான, வரலாற்று ரீதியான பார்வையும், அணுகுமுறையும் தேவை.
தோற்றம், வளர்ச்சி, அழிவு, நிலைமைகள் பற்றிய தெளிவும் தேவை.

- தோழர் தமிழரசன் (1945 --1987)
தலைவர், தமிழ்நாடு விடுதலைப்
படை (TNLA)

நன்றி: முகநூல் நண்பர். தமிழரசன் கலை.



No comments:

Post a Comment