பழந்தமிழர் போர்க்குற்றம்
"""""""""""" """""""""""""""
தோற்ற மன்னர்களின் தலையே அடுப்பாக
வைத்து அவர் குருதியே உலைநெய்யாக
வார்த்து அவர்கள் வெட்டுண்ட
கைகளையே அகப்பையாக ஆக்கி போர்க்களத்தில்
தமிழ் மன்னர்கள் செய்த வேள்வி பற்றி சங்ககால
நூல்கள் கூறும் செய்யுள்கள்:-
ஆண்தலை - அடுப்பின் வய வேந்தர் ஒண்
குருதிசினத் தீயிற் பெயர்பு பொங்க...தொடித்
தோட்கை துடுப்பாக -
(மதுரைக் காஞ்சி.29-34)
முடித்தலை அடுப்பாக புனற்குருதி யுலைக்
கொளீஇத் தொடித் தோள் துடுப்பிற் றுழந்த
வல்சி
(புறநானூறு 26)
முடித்தலை யடுப்பில்
தொடித்தோள் துடுப்பில் (சிலப்பதிகாரம் 26
-242)
'அசுரர் சிரங்கள் அடுப்பா வைத்து'-
போர்க் களத் தலகை வகுப்பு -அடி 24. //
பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப்
பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார்
என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,
"பகைவர் நாட்டில் தேர்செல்லும் தெருக்களைக்
கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய்
. பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில்
குதிரைகள் பூட்டிய தேரைச்
செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்"(புறந
ானூறு 15).
இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர்
"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே" (புறம்6)
என்று வாழ்த்துகிறார்.
பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால்
எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும்
என்பது இதன் பொருளாகும்.
சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும்,
இரவும் கருதாது பகைவரது ஊரைத்
தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின்
புலம்பலோசையுடன்
கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,
"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்"
என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம்.
சோழன் இராசசூயம் வேட்ட
பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும்
வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக்
கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.
பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல்
அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான்
பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய
பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன்
சிவந்திறுத்த புலம்போல" என்ற
உவமையைப் பயன்படுத்துகிறார்.
போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப்
பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.
நன்னன் என்ற குறுநிலமன்னன் தன்னுடைய
பகைவர்களை வென்ற பிறகு அவர்களின்
உரிமை மகளிரின்
தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத்
திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின்
யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).
வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன்
பழையன் என்ற மன்னனை வென்று அவன்
மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப்
பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில்
பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட
பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான்
(பதிற்றுப் பத்து 5ம் பத்து)
கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன்
மூவன் என்பவனைப் போரில்
வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித்
தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.
மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற
குறுநில மன்னனின் பற்களைப்
பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில்
பதித்து வைத்தான். (அகம் 211).//
ராஜ ராஜ சோழனின் மெய்கீர்த்திகளில்
அவனது.வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக
"இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று"
என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜராஜன் தன்
மகன் முதலாம்
இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப்
பெற்றான். முதலாம் இராசேந்திரன் தலைமையில்
சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற
மேலைச் சளுக்கர் மன்னனுடன்
போரிட்டு வென்று இரட்டைபாடியைக்
கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன்
மேற்கொண்ட
பழி செயல்களை சத்தியாசிரையனின் கிபி.1007ம்
ஆண்டு காலத்திய
கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது
(சாஸ்திரி 1989: 23940).
நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான்.
நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள்,
அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக்
கொன்றும் கன்னியரைக்
கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச்
சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக்
கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத்
திரும்பினான்.
இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின்
ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார்
கோவிலுக்கு வழங்கினான்//
இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின்
மெய்கீர்த்திப் பகுதி " . . . யானைகள்,
குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத்
தொகுதிகள்"
ஆகியனவற்றை சத்தியாசிரயனிடம
ிருந்து ராஜராஜன் பறித்துக் கொண்டதாகக்
குறிப்பிடுகிறது (தந்தையாகிய
இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால்
இராஜேந்திரனின் வெற்றிச் சிறப்பு இராஜ
இராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுக
ிறது).
இராஜேந்திரன்
பட்டத்திற்கு வந்தபிறகு (1012-1044) நிகழ்த்திய
போர்களில்
கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப்போரில்
(ஈழம்=இலங்கை) ஈழமன்னனை இவன்
வெற்றிகண்டு கைப்பற்றிய பொருள்
குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச்
செப்பேடு (செய்யுள் 58-59)
பின்வருமாறு குறிப்பிடுகிறது.
"அவனுடைய நாட்டையும், அவனுடைய
முடியையும், அவனுடைய அரச
பத்தினியையும், அவளுடைய முடியையும்,
அவனுடைய மகளையும், மற்றப்
பொருட்குவியல்களையும் . . . கைப்பற்றினான்.
"
சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன்
காட்டுக்குள் ஓடிப்போனதாகவும்,
உடன்பாடு செய்து கொள்வதாகச் சொல்லிய
சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக்கொண்ட
ு, மேற்கொண்ட
செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.
"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள்
சிக்கிய கருவூலங்களையும்
உடனே சோழமன்னனுக்கு அனுப்பி வைத்தனர்.
பாதுகாப்பாக பல இடங்களில்
இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த
நினைவுச் சின்ன
அறைகளை உடைத்து அவற்றிலிருந்த
பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச்
சென்றனர். அவர்கள் கண்பட்ட
இடங்களிலெல்லாம் பெளத்த
சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும்
அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள்
அனைத்தையும் கொள்ளையடித்தனர்
" (சாஸ்திரி, 1989: 272).
வங்காள தேசத்து மன்னன்
மகிபாலனை வென்று யானைகள், பெண்கள்,
செல்வம் எல்லாவற்றையும் கைப்பற்றிக்கொண்
டான் (மேலது: 281).
முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான
ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின்
மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற
சிங்களமன்னனை வென்றான்.
சிங்கள மன்னன் ஓடி ஒளிய
அவனது தமக்கையையும், மனைவியையும்
சிறைபிடித்ததுடன் அவனது தாயின்
மூக்கை அறுத்தான் (ளு11111; 5056).
ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல்
நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில்
உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில
மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும்
சிறைபிடிக்கப்பட்டனர், பூண்டூர் நகர் அழித்துத்
தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய
ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது.
மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது.
1894ம் ஆண்டுக்கான
கல்வெட்டு ஆண்டறிக்கையில்(எண்.172).
சாளுக்கியர்களின் பழமையான நகரான
கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத்
தரைமட்டமாக்கி அங்கிருந்த
ஒரு தூவாரபாலகர்.உருவத்தைக்
கொண்டுவந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம்
கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில்
"ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம்
எரித்து கொண்டு வந்த துவார பாலர்"
என்று குறிக்கப்பட்டுள்ளது. முதல்
குலோத்துங்கச் சோழன் (1070---1120)
இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110)
வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள்
மற்றும் செல்வங்களுடன் மகளிரையும்
கைப்பற்றி.வந்தான். மூன்றாம்
குலோத்துங்கன் (கி.பி. 1178-1218) மதுரையின்
மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன்
செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள்
பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.
1. பெண்கள் அடிமைகளாகக்
கொண்டு செல்லப்பட்டனர்.
2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.
3. பாண்டியனின்
கூடமண்டபத்தை (முடிசூட்டும்
மண்டபம்).இடித்து கழுதை ஏரைப்
பூட்டி உழுதனர்.
திருவாரூர்த் தலைவனாக இருந்த
கங்கை கொண்டான்.உத்தம சோழராயனின்
படையதிகாரியான கூத்தன்
கணபதி என்பவனை "பகைவர்களின்
மனைவியர்க்குக் கணவன்"
என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE
1913 ப.97).//
கி.பி. 1219இல் சோழ நாட்டின்
மீது படையெடுத்த முதல் மாறவர்மன்
சுந்தரபாண்டியன் (1216 -1238)
தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான
மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான்
(I.P.S; 290,323)
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்
மலையில் உள்ள அக்கல்வெட்டின்
உரைநடை வடிவம் வருமாறு:
கொடுங் கோபமுடைய குதிரைகளையும்,
யானைகளையும் செலுத்திச்
சென்று சோழர்களின் தஞ்சைநகரையும்
செந்தழலிட்டுக் கொளுத்தினான். அழகிய
குவளை மலர்களும், நீல மலர்களும் தம்
அழகை இழக்கும்படி குளங்களையும்.ஆற
ுகளையும் கலக்கினான்.கூடம், மதில்,
கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள்,
மாடமாளிகைகள், கருவூலங்கள்
ஆகியனவற்றை இடித்துத்
தள்ளினான்.தன்னை வந்து அடிபணியாத
பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுதகண்ணீர்
ஆறாக ஓடும்படிச் செய்தான்.
பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர்
கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான்.
சோழர் தலைநகராக விளங்கிய.முடிகொ
ண்டசோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்"
எனனும் சடங்கை இவன் செய்தான். அதன்
பொருட்டு சோழ அரசியும் அந்தப்புரத்துப்
பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப்
பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப
்பட்டனர் (சாஸ்திரி, மேலது,579).//
இலங்கைப் படையெடுப்பின்போ
து இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை
அவனது
திருவாலங்காட்டுச் செப்பேடுகள்
குறிப்பிடுகின்றன.
ஈழநாட்டு கிராமங்களை தஞ்சைப்
பெருவுடையார்.கோவிலுக்குத் தானமாக
ராசேந்திரன் வழங்கினான்//
மேலும், சிங்கள
போர்க்கைதிகளை அடிமையாகக்
கொண்டுவந்து கல்லணை கட்டினான்
கரிகாலன்//
கண்ணகி மதுரையை எரித்தபின்
ஒரு பொற்கொல்லன் அறம்தவறியதற்காக 1000
பொற்கொல்லர்கள் கழுவிலேற்றிக்
கொல்லப்பட்டனர்//
ரொம்ப நல்லவன்
என்று சொல்லி சொல்லியே பல நூற்றாண்டுகள்
நம்மை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்துவருகின்ற
னர்; நாமும் சராசரி காட்டுமிராண்டி மனிதரே;
போர்க்குற்ற சான்றுகள் கொஞ்சமா நஞ்சமா?
பலன்தான் இல்லை;
சான்றுகாட்டி கெஞ்சிக்கேட்க
விடுதலை ஒன்றும் பிச்சையல்ல;
இது இனவழிப்பு இதைத் தடுக்க இனம்
ஒன்றுசேர்ந்தாலே போதும்;
போர் என்பது வெற்றி என்ற ஒன்றால்
மட்டுமே அளக்கப்படுகிறது.//
தமிழன் நல்லவனும் கிடையாது அப்பாவியும்
கிடையாது; ஒவ்வொரு காலத்திலும்
ஒவ்வொரு இனங்களின் கை ஓங்கியிருந்தது;
இப்போது எதிரிகள் கை ஓங்கியுள்ளது;
காயத்தைக் காட்டி கையேந்தும்
பிச்சைக்காரன்போல
கணக்கிலடங்கா சான்றுகளை கையில்வைத்துக்க
ொண்டு அனைத்துலகத்திடம் ஓடாமல், வாங்கிய
அடியை தமக்குள் பரப்பி அடுத்த
போரை திட்டமிட வலியுறுத்துகிறேன்;
எதிரிகளெல்லாம் நம்முன் குழந்தைகள் ஆனால்
உண்மையில் தமிழன்தான் பொல்லாதவன்;
உள்நெஞ்சில் பெருந்தீ
கொண்டோர்க்கு இப்பதிவின் நோக்கம் விளங்கும்.
https://m.facebook.com/photo.php?fbid=423969407706718&id=10000280986
Friday, 18 July 2014
பழந்தமிழர் போர்க்குற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment