Showing posts with label எழுச்சி. Show all posts
Showing posts with label எழுச்சி. Show all posts

Wednesday, 7 October 2015

சராசரித் தமிழனே சாதிப்பான்

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்

வரலாறே தெரியாத
தமிழில் புலமையே இல்லாத
அரசியல் பற்றி எதுவுமறியாத

ஒரு சராசரித் தமிழ் இளைஞன்தான்

இனத்தின் மீது அக்கறைகொண்டு
தன் வீரமும் அறிவும் மட்டுமே துணையாக

ஆயுதம் தூக்கி பதிலடி கொடுத்து

புத்தகம் எழுதும்
இயக்கம் நடத்தும்
அரசியல் பேசும்
கூட்டம் சேர்க்கும்

அதிமேதாவி தமிழ்தேசியர்களின் அத்தனை முயற்சிகளின் பலனையும் அசட்டையாக தட்டிக்கொண்டு போகப்போகிறான்.

கோடானு கோடித் தமிழர்கள் மனதில் கால்மேல் கால் போட்டு அமரப்போகிறான்

இன்று நடப்பதெல்லாம் அவன் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க மட்டுந்தான் பயன்படப்போகிறது.

Tuesday, 30 September 2014

அணுகுண்டே உரமாக

அணுகுண்டே உரமாக

உஊஉஊஉஊஉஊஉஊஉஊ

1945, உலகப்போரில் ஜெர்மனியும் அதன் கூட்டரசுகளும் வீழ்ந்துவிட்ட நேரம்; உலக உருண்டையின் மறுபக்கம் ரஷ்யாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பர்மாவிலிருந்து பசிபிக் தீவுகள் வரை உலகப் பந்தில் கிட்டத்தட்ட 30% ஜப்பானின் கட்டுப்பாட்டில்; வல்லரசுகளான அமெரிக்கா,இங்கிலாந்து,ரஷ்யா என ஒட்டுமொத்த உலகமும் இப்போது ஜப்பானை நோக்கித் திரும்பியது; சரணடையச் சொன்னார்கள்; ஜப்பான் மறுத்துவிட்டது; அமெரிக்கா பசிபிக் கடலில் முதல் அடி எடுத்துவைத்தது; வலுவான பதிலடி கிடைத்தது; பர்மாவில் இங்கிலாந்தும் சீனாவில் ரஷ்யாவும் கடுமையான மோதலுக்கும் பிறகு சில பகுதிகளை மீட்டன;
நேருக்கு நேர் மோதினால் ஜப்பானைத் தோற்கடிக்க 30ஆண்டுகளும் கோடிக்கணக்கான உயிர்ச்சேதமும் ஆகலாம் என்று கணக்கு சொன்னார்கள்;
1945-8-6 அன்று முதல் அணுகுண்டு ஹிரோஷிமா நகரில் முதல் அணுகுண்டு போடப்பட்டது; 1,40,000 பேர் உயிரிழக்கக் காரணமானது; ஜப்பான் சரணடைய மறுத்தது; மூன்றுநாட்கள் கழித்து நாகசாகியில் அணுகுண்டு; 70,000 பேர் உயிரிழக்கக் காரணமானது; வேறு வழியில்லாமல் ஜப்பான் 15ஆகஸ்ட்1945ல் சரணடைந்தது(இந்த வெற்றியைத்தான் ஹிந்திய மக்கள் ஸ்வதந்த்ர தினமாக கொண்டாடி வெள்ளையருக்குத் தாம் அடிமை என்பதை நிறுவிவருகின்றனர்); ஜப்பானின் சாமுராய் பரம்பரையினர் பலர் இழுக்கு பொறுக்காமல் தற்கொலை செய்துகொண்டனர்; (ஜப்பானிய அரசு சரணடைந்தாலும் ஜப்பான் படைத் தலைவர்கள் சரணடைய மறுத்து தொடர்ந்து அக்டோபர் வரை போர்புரிகின்றனர்).
அன்று ஜப்பானின் நிலை படுபாதாளத்தில் வீழ்ந்திருந்தது;
அழிவை சதவீதமாகக் கூறவேண்டுமானால், தலை நகரம் 57%, உற்பத்தி 90%, தொழிற்சாலைகள் 30%, கப்பல் கட்டுமானம் 80% அழிந்து போயிருந்தது; 81நகரங்கள் வானூர்தித் தாக்குதலில் அழிந்துபோயிருந்தன;
விலைவாசி 45மடங்கு அதிகம்; தலைநகர் டோக்கியோவில் 57% அழிவு; தொள்ளாயிரமாயிரம்(90லட்சம்) உயிரிழப்புகள்; ஒருகோடிப் பேரைக் கொன்ற கொலைப்பழி; கதிர்வீச்சு, நோய், பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், அரசு கலைப்பு, வீடில்லாத நிலை.
ஜப்பான் மீள 150ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டார்கள்;
ஆனால், பதினாறே ஆண்டுகளில் தலைநிமிர்ந்தது ஜப்பான்(!!).
அதுதான் ஜப்பான்.
நிலையான அரசு கிடையாது; வழிநடத்த தலைவன் கிடையாது; 1945-1952வரை அமெரிக்க ஆட்சி; படை கலைக்கப்பட்டு ஐநூறாயிரம்(5லட்சம்) வீரர்கள் வேலையிழந்தனர்; தொழிற்சாலை,படைத்துறை, அரச வேலைகளில் இருந்த அத்தனை பேரும் உணவுக்கு வழியில்லாமல் வேலையில்லாமல் அல்லாடினர்; தள்கொலைகளும் பட்டினிச்சாவுகளும் தெருவுக்குத் தெரு நடந்தது; உலகமே வெறுத்து ஒதுக்கியது; ஆனாலும் தூக்கத்தில் இருந்து எழுவதுபோல மரணத்திலிருந்து எழுந்தது ஜப்பான்; 
போர்க்குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது; அரசரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மக்களாட்சி பிறந்தது; நிலங்கள் அதிகம் வைத்திருப்போரிடமிருந்து நிலம் பிடுங்கப்பட்டது;
வேளாண்மைக்குக் குறைந்த வட்டியில் கடன்; அரைவயிறோடு மாணவர்கள் கல்வி கற்றனர்; புதிய 167 பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன; 5000தனியார் நிறுவனங்கள் பொதுநிறுவனங்கள் ஆக்கப்பட்டன;
பெரிய நிறுவனங்கள் அழைக்கப்பட்டு வழிமுறைகள் வழங்கப்பட்டன; நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களையும் பொதுமக்களையும் பங்குதாரர்களாக ஆக்கின; படை இல்லாத நிலையைச் சமாளிக்க 1,10,000 பேர் கொண்ட காவல்படை உருவானது;
விலைவாசியைக் குறைக்க உற்பத்தி அதிகமாக்கப்பட்டது, மக்களிடம் பணப்புழக்கம் குறைக்கப்பட்டது, மக்கள் கையிலிருக்கும் பணத்தை அரசிடம் ஒப்படைத்தனர்; 360% இருந்த பணவீக்கம் கொஞ்சம் குறைந்தது; மக்களுக்கு அரசு உதவித்தொகை(500யென், அப்போது 360யென்=1அமெரிக்க டாலர்) தரும் அதுதான் வருமானம்; நகரமக்கள் பட்டிதொட்டிகளுக்குக் குடிபெயர்ந்தனர்; கள்ளச்சந்தையில் எதையும் வாங்குவதை முடிந்த அளவு தவிர்த்தனர்;  ஊழியர்கள் சப்பளம் உச்சவரம்பு அறிவிக்கப்பட்டது; உலக நாடுகளின் உதவிகள் ஏற்கப்பட்டன; வரிகள் கெடுபிடியாக வசூலிக்கப்பட்டன; பொதுமக்கள் சிறுசேமிப்பு அரசிடமே இருக்குமாறு வழியமைக்கப்பட்டது; கொரிய போருக்கு தளவாடங்கள் அனுப்ப உரிமம் பெறப்பட்டு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர்;
பட்டு உற்பத்தி மவுசு குறைவதை புரிந்துகொண்டு நைலான்,பாலியஸ்டர் தயாரிக்கத் தொடங்கினர்;
அதாவது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தினர், வேண்டிய மாற்றங்களை உடன் செய்தனர்; தொழிலதிபர்கள் குழுமங்களாக சேர்ந்து தனிவங்கிகள் வைத்துக்கொண்டு அரசு உதவியுடன் தொழிற்துறையை மேம்படுத்தினார்கள்; முக்கியமான தொழில்களுக்கு வரிச்சலுகை; வெளிநாட்டில் தொழில்தொடங்க விதிமுறைகள் தளர்த்தப்பட்டன; வேற்றுநாடுகள் உள்நாட்டில் தொழில்தொடங்க தடை; உலகம் முழுவதும் முன்னனி தொழிற்சாலைகளில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன; ஜப்பானிய நிபுணர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று கற்றுவந்தனர்; கப்பல் மூலப்பொருட்களை தரையிறக்கும் துறைமுகங்கள் அருகிலேயே தொழிற்சாலைகள் மாற்றப்பட்டு பொருள்அலைச்சல் குறைக்கப்பட்டது; புதிய ஆலைகள் தொடங்கப்பட்டன; அதிக சம்பளம் வாங்கிய தொழிலாளர்கள் வேலை பறிக்கப்பட்டு புதிதாக வரும் மாணவர்கள் அமர்த்தப்பட்டனர்; நவீன பொருடகள் சந்தைக்கு வந்தால் அதில் ஒன்றை வாங்கி அதை அப்படியே நகல் எடுத்தாற்போல செய்தனர்; தொழில்நுட்ப கமுக்கங்களை(ரகசியம்) கையூட்டு(லஞ்சம்) கொடுத்து வாங்கினர்; ஆண்களின் சம்பளத்தில் பாதியளவு சம்பளத்திங் பெண்களை வேலைக்கு அமர்த்தினர்; புதிய கண்டுபிடிப்புகள் ஊக்கப்படுத்தப்பட்டன; புல்லட் தொடர்வண்டி, ரோபோ, செயற்கைகோள் என பல்வேறு துறைகளில் சாதனை படைக்க இது வழிவகுத்தது; மாணவர்கள் வெளிநாட்டில் கல்விபெற அனுப்பப்பட்டார்கள்; பொருளாதாரம் உயர உயர அது மக்களுக்குப் பயன்படுமாறு பார்த்துக்கொண்டனர்;
1973ல் இசுரேலுக்கு உதவிசெய்யும் நாடுகளுக்கு எண்ணெய் உற்பத்தியை அரபுநாடுகள் நிறுத்தியபோது, இது நீண்டகாலம் நீடிக்காது என்று தெரிந்த மற்றநாடுகள் அசட்டையாக இருந்தன; பெட்ரோல் விலை உயர்ந்தது; ஆனால், ஜப்பான் முக்கியமான ஆலைகளுக்கு மட்டுமே பெட்ரோல்; அவைகளுக்கும் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்க வலியுறுத்தியது; மாற்று ஆற்றல்கள் பயன்பாட்டில் கவனம்; பெட்ரோல் சிக்கன நுட்பங்கள்; பெட்ரோல் பயன்பாட்டைக் குறைத்தால் பாராட்டு,சலுகை,விருது; இந்த காலகட்டத்தில் ஜப்பானிய உற்பத்தி செலவு மற்ற நாடுகளைவிட குறைவென்பதால் குறைந்தவிலையில் பொருட்களை விற்று சந்தையைப் பிடித்தது; பெட்ரோலிய நாடுகள் அதை விற்காமல் தாக்குப்பிடிக்க முடியாது என்று உணர்ந்து மறுபடியும் பெட்ரோலை ஏற்றுமதி செய்தபோது பெட்ரோல் விலை குறைந்தது; ஏற்கனவே பெட்ரோல் பயன்பாட்டைக் குறைத்திருந்த ஜப்பான் மேலும் விலையைக் குறைத்தது.
எத்தனை வீழ்ச்சியிலும் ஜப்பான் பொருட்களின் தரத்தில் சமரசம் செய்துகொள்ளவேயில்லை;
ஜப்பான் தனது பழைய நிலையை 1961வாக்கில் அடைந்தது; 1964ல் ஒலிம்பிக் நடத்தி தம் சொந்த செயற்கோள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப அந்த ஒலிம்பிக் சுடரை ஹிரோஷிமா நகரில் பிறந்த யோஷிநோரி ஸக்காய் என்பவரை ஏற்றச்செய்து ஜப்பான்;
உலகத்தாரெல்லாம் பார்வையாளராக அண்ணாந்து பார்க்க கால்மேல் கால்போட்டு நிமிர்ந்த நெஞ்சுடன் வல்லரசு அரியணையில் பத்தொன்பதே ஆண்டுகளில் மீண்டும் அமர்ந்தது ஜப்பான்;
பதக்கப்பட்டியலிலும் 16தங்கம்,5வெள்ளி, 8வெண்கலம் என மூன்றாவது இடம் (ஜப்பானுக்கு 1936ல் முதல் ஒலிம்பிக்ஸ் அதன்பிறகு 1964தான் இரண்டாவது);
வானொலி பழுதுபார்க்கும் கடையாகத் தொடங்கிய சோனி, மிதிவண்டி விளக்குகள் தயாரிப்பில் தொடங்கிய பானசோனிக் உலக முன்னனி நிறுவனங்களாக உள்ளன;
அமெரிக்கா பணத்தில் புரண்டுகொண்டிருந்தபோது மாணவர்கள் வேலைகிடைத்தவுடன் மகிழுந்து வாங்குவதற்காக சிறிய மகிழுந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்தது செய்தது; 1989 அமெரிக்காவிலேயே ஆலைகளைத் தொடங்கியது;
1990களுக்குப் பிறகு பொருளாதாரச் சுழலில் சிக்கினாலும், பல்வேறு இயற்கைச் சீற்றங்கள்,அதிக மக்கள்தொகை, வளக்குறைவு என பல தடைகளைத் தாண்டி ஜப்பான் இன்றும் வெற்றிநடை போடுகிறது ஜப்பான்.
https://m.facebook.com/photo.php?fbid=498153826954942&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=17&_ft_&__tn__=E

Friday, 5 September 2014

ஜப்பானை செதுக்கியவர்

ஜப்பானை செதுக்கியவர்

1864ல் அமெரிக்கா,பிரிட்டன்,ஹாலந்து,பிரான்ஸ் நான்கு நாடுகள் கூட்டாகப் போர்தொடுத்தன; ஜப்பான் படுதோல்வி அடைந்தது.

1867ல் கோமே மரணமடைந்தார்;
அவரது 15வயது மகன் முட்ஷிஹிடோ அரியணை ஏறினார்.

இவர்தான் 'மெய்ஜி' (Meiji=தெளிவுபெற்ற அரசன்) என்று அழைக்கப்படுகிறார்;
வேற்றுநாடுகளின் ஆதிக்கத்தில் சிக்குண்டிருந்த ஜப்பானை 40ஆண்டுகளில் வல்லரசாக செதுக்கி எடுத்தவர் இவர்தான்.

*அரசியலில் முதியவர்களை வைத்துக்கொள்ளாமல் இளைஞர்களை அரசியல் அவைக்குக் கொண்டுவந்தார்
*முதல் கட்டமாக வேளாண்மையை ஆராய்ந்து காலநிலை, மண்வளம், பருவசூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து புதிதாக வேளாண்மை நிலங்களை ஏற்படுத்தி நவீனமுறைகளைப் புகுத்தினார்
*தொழிற்சாலை உருவாக்கி வேளாண்மைக்கு அடுத்தபடியாக நாட்டைத் தாங்குமளவு தொழிற்துறையை உருவாக்கினார்.
*தொழில்வழி வந்த பிரிவுகளை (சாதிகள்) வணிக சாதியார் மட்டுமன்றி மற்றவரையும் வணிகத்தில் புகுத்தி குலத்தொழில் முறையை உடைத்தார்.
*நான்கு பெரிய தீவுகளும் பலநூறு சிறு தீவுகளும் ஆன ஜப்பானின் நிலப்பரப்பில் போக்குவரத்தை மேம்படுத்தினார்; சாலைகள், தண்டவாளங்கள், நீர்வழிப் போக்குவரத்துகளைப் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தினார்.
*குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி, ஏழை எளிய மக்களுக்கும் எத்தகைய உயர்கல்வியும் பயிலலாம் என்ற நிலையை உருவாக்கினார்;கல்விசாலைகளை உருவாக்கி அதில் அறிவியல் புத்தகங்களை தாய்மொழியில் மொழிபெயர்த்து சிறப்பான முறையில் கல்வி கிடைக்கச்செய்தார் (ஜப்பான் மக்களில் ஏறத்தாழ அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள் ஆனால் 5%பேருக்குக் கூட ஆங்கிலம் உட்பட வேற்றுமொழி எதுவும்தெரியாது).
*இளைஞர்களை கட்டாய படைச்சேவையில் ஈடுபடுத்தினார் (ஜப்பானியர் ஒரு படைவீரரின் ஒழுங்குடன் இன்றும் செயல்பட இதுவொரு காரணம்)
*அரசன் ஆளுவதாக இல்லாமல் சட்டதிட்டங்கள் வகுத்து அதன்மூலமே ஆட்சி என்ற முறையைக் கொண்டுவந்தார்
*அரசின் முடிவுகள் அனைத்து தட்டு மக்களையும் கூட்டி ஆலோசனை நடத்திய பிறகே எடுக்கப்படும் என்ற முறையைப் பின்பற்றினார்
*எல்லாவற்றையும் விட உலகில் எந்தமூலையில் அறிவு இருந்தாலும் அதைத் தேடிச்சென்று பெறவேண்டும் என்ற ஆவலை மக்களிடம் புகுத்தினார்.

1871ல் நாட்டின் பலதரப்பான மக்களும் அடங்கிய நூற்றுக்கும் அதிகமானோர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது;
பெரும் பொருட்செலவில் இவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, ரஷ்யா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து என்று அன்றைய வல்லரசு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
(ஈழத்தின் அரசியல் சட்டவரைவு ஏற்படுத்த தலைவர் அமைத்த தூதுக்குழு பல்வேறு நாடுகளுக்கும் சென்று பார்த்தது நினைவு வருகிறதுதானே?!)

இக்குழு அந்நாடுகளின் கழிவு மேலாண்மை முதல் சட்டசபை வரை சுற்றிப்பார்த்தார்கள்;
எவ்வளவு கற்கமுடியுமோ கற்றார்கள்;  முடிவில் நாடுதிரும்பி 2,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மன்னனிடம் கையளித்தார்கள்.
(1876ல் தான் தொலைபேசியே கண்டுபிடிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க)

அதன்படி எந்தநாட்டில் எந்த துறை சிறப்பாக இருக்கிறதோ அந்தத் துறையில் (நகல் எடுத்தாற்போல) அந்த நாட்டை அப்படியே பின்பற்றவேண்டும் என்று பட்டியல் போடப்பட்டு அந்தந்தத் துறையினரிடம் அளிக்கப்பட்டது;
அதன்பிறகு பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு துறையில் சாதித்தவர்கள் ஜப்பானுக்கு அழைக்கப்பட்டார்கள்;
அனைத்துவசதிகளும் அவர்களுக்கு சிறப்பான முறையில் செய்துகொடுத்து நன்றாக விருந்தோம்பல் செய்து அவர்களை முடிந்த அளவு பயன்படுத்திக்கொண்டனர்;
30 ஆண்டுகள் இந்தமுறையைப் பின்பற்றினர்.

கிட்டத்தட்ட 20ஆண்டுகள் கழித்து மெய்ஜி மன்னரின் முயற்சி பலன்தரத் தொடங்கியது நாட்டுமக்கள் அறிவில் சிறந்தவர்களாக அத்தனை துறைகளையும் வளர்த்தெடுத்தார்கள்;
நாட்டுமக்களின் அறிவுவளம் போல ஒரு நாட்டின் பகட்டான செல்வம் வேறு உண்டோ?!
எங்கும் வளம் எவரிடத்தும் அறிவு.
அடித்தளம் அமைந்ததும் மெய்ஜி மன்னர் அடுத்த திட்டங்களை வகுத்தார்; மூலப்பொருட்களை விற்காமல் அதை பொருளாகத் தயாரித்து விற்பனை செய்யத்  தூண்டினார்; அளவுக்கதிகமாக சொத்துசேர்த்து வைத்திருந்தவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி சொத்துகளை அரசுடைமை ஆக்கினார்; பெரிய அளவிலான தொழில்தொடங்குவோருக்கு அரசே முதலீடு செய்யும் முறையைத் தொடங்கிவைத்தார்; பள்ளிகளில் வேளாண்மைக் கல்வியை புகுத்தினார்; பணக்கார குடும்பங்களை வங்கிகள், தொழிற்சாலைகள், வணிகம் ஆகியவற்றில் ஈடுபடுத்தி அவர்களைப் பயன்படுத்திக்கொண்டார்; அத்தனைத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்களை உழைப்பாளர்களாக உருவாக்கினார். (அப்போது தொழிற்துறையில் 50% பெண்கள்).

அடுத்த 20ஆண்டுகளில் விண்ணுக்குப் பாய்ந்தது ஜப்பான்; வல்லரசுக்குத் தேவையான அத்தனையும் ஜப்பானிடம் தாராளமாக இருந்தன;
மெய்ஜி அரசனின் தலைமையில் 1894ல் ஆண்டாண்டுகாலமாக  தன்னை ஆண்டு நடத்திய சீனாவையே கொரிய போரில் தோற்கடித்தது ஜப்பான்;
1895ல் வல்லரசு நாடுகள் மஞ்சூரிய நாட்டில் ஜப்பான் பார்வை படக்கூடாது என்று மிரட்டின;
மெய்ஜி படைவலிமையை அதிவிரைவில் பெருக்கினார்; அதன்விளைவு 1904ல் ரஷ்ய படை மஞ்சூரியா போரில் ஜப்பான் படையிடம் மரண அடி வாங்கியது; 1914ல் சீனாவில் இருந்த ஜெர்மானிய படைகளைத் தோற்கடித்தது.

1868ல் தோற்று அடங்கிப்போயிருந்த ஜப்பான் 1914ல் மூன்று வல்லரசுகளைத் தோற்கடித்து உலக வல்லரசுப் பட்டியலில் இடம்பெற்றது;
இதற்கு காரணமாக விளங்கிய மெய்ஜி 1912ல் மறைந்தார் அதாவது உடலால் மரணமடைந்தார்; ஆனால், அவரது பெயர் இன்றும் ஜப்பானில் உயிருடன் உள்ளது;

அன்று ஜப்பானிய மக்கள் பெற்ற பேரெழுச்சி அப்படியே இன்று வரை தொடர்கிறது;
அணுகுண்டு விழுந்தும் அசராமல் எழுந்துநிற்கிறது அந்நாடு;
இன்று உங்கள் கைகளில் தவழும் கைபேசிகூட மெய்ஜி அரசனின் பெயரைச் சொல்லாமல் சொல்கிறது.

படம்: இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் கைப்பற்றிய பகுதிகள்.

பி.கு: ஜப்பானிடம் தமிழ்க் குடியரசு மக்களாகிய நாம் கற்றுக்கொள்ளவேண்டியது என்னவென்றால் நாம் வல்லரசாக ஆனாலும் சிறிலங்கா ஹிந்தியா போன்ற அண்டைநாடுகளிடம் வரம்புமீறக்கூடாது;
மக்கள் எழுச்சியை நாடுபிடிக்கும் கருவியாகப் பயன்படுத்தினால் அழிவுதான் நேரிடும் என்பதை ஜப்பானும் ஜெர்மனியும் உணர்த்துகின்றன.

https://m.facebook.com/photo.php?fbid=489880551115603&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr

Thursday, 10 July 2014

வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி



வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி

$$$$$$$$$$$$$$$$$$

வீரப்பனார் கடத்தல்காரனாக இருந்தபோதே தமிழ் மக்கள் மீது பற்றுள்ளவராக இருந்தார்; 1993ல் வீரப்பனாரைத் தேடுகின்ற பெயரில் அதிரடிப்படை மக்களைக் கொடுமைப்படுத்துவது உச்சநிலையை அடைந்திருந்தது; வீரப்பனார் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் தமது குடும்பத்திற்கும் எதுவும் செய்யாமல் இருந்ததால் அவரது மனைவி இருபெண்பிள்ளைகளுடன் புடவை விற்று பிழைத்துவந்தனர்; இத்தனைக்கும் அவர் கோடிகோடியாக சம்பாதித்து வந்தார்; 1993க்குப் பிறகு அல்லல் படும் மக்களுக்காக எதாவது செய்யவேண்டும் என்று நினைத்தார்; 1994களுக்குப் பின் கடத்தல்தொழிலை விட்டுவிட்டார்; அதிலிருந்து அவர் வனத்துறை அல்லது காவல்துறையினரை கடத்திச்சென்று பணம்பெற்று விடுதலை செய்து அந்த பணத்தை மக்களுக்கு பகிர்ந்தளித்தார்; அவரால் கடத்தப்பட்டவர்கள்,

1994 சிதம்பரம் (டிஎஸ்பி), தமிழகக் காவல்துறை.
1995 மூன்று தமிழக வனத்துறையினர்
1997 பத்து கர்நாடக வனத்துறையினர்
1997 ஆறு பந்திப்பூர் புலிகள் சரணாலய ஊழியர்கள்

ஆயுதங்கள் குறைந்தபோது 1998ல் வெள்ளித்திருப்பூர் காவல்நிலையத்தில் ஆயுதக்கொள்ளை நடத்தினார்.

சிறிதுகால அமைதிக்குப்பின் ஜூலை மாதம் 2000ம் ஆண்டு.

தமிழர் நாடு விடுதலைப் படை(TNLA) தலைவர் மாறன் வீரப்பனார் கட்டுப்பாட்டுப் பகுதியில் தமது படையைக் கட்டமைக்கும் பணியில் இருந்தார்; வீரப்பனாரும் மாறனாரும் கலந்து பேசி திட்டம் ஒன்றை வகுத்தனர்; கன்னடவரால் 'பெரியண்ணன்' என்று அழைக்கப்படுபவரும், தாதா சாகேப் பால்கே விருதுபெற்றவரும், கன்னடத்தை கட்டாயப்பாடமாக்க முழு கர்நாடகாவையும் திரட்டிப் போராடியவரும், கன்னட இனவெழுச்சிப் பாடல்களைத் தன்குரலால் பாடியவருமான திரு.இராஜ்குமாரை கடத்துவதாக திட்டம்; அப்போது அவருக்கு 72 அகவை; அவர் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவர்; அவர் பங்காற்றிவந்த கன்னட இயக்கங்கள் தமிழரையே குறிவைத்து தாக்குபவை ஆனால் அவர் நேரடியாக எந்த அரசியல் விளையாட்டும் செய்ததில்லை; ஆனால், கன்னட இனத்தின் பெருமையான வடிவமாக அவர் அறியப்பட்டார்;
அவரைக் கடத்துவதுதான் கன்னட இனத்தின் தலையில் கைவைத்ததுபோல் இருக்கும்;
கடத்தி பரபரபாக்கி தீங்கில்லாமல் விடுதலை செய்வது என்று முடிவானது.

தோட்டகாஜனூரில் இருந்த தனது தோட்டத்துமாளிகையில் ஓய்வாக இருந்தார் ராஜ்குமார்.

30ஜூலை2000 அன்று இரவு 10மணியளவில் கதவு தட்டப்பட்டது; வெளியில் இரும்புக்கதவைத் தாண்டி வீடுவரை யார்வந்தது என்று எண்ணியபடி கதவை ராஜ்குமாரின் மனைவி திறந்தார்; வெளியே கொட்டும் மழையில் 10,12 துப்பாக்கியேந்திய ஆட்களுடன் வீரப்பனார் நின்றிருந்தார்; அப்பெண்மனி அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்; வீரப்பனார் கன்னடத்தில் "ஐயாவைப் பார்க்கவேண்டும்" என்றபடி உள்ளே நுழைந்தார்; ராஜ்குமார், அவரது மருமகன்,அவரது உறவினர், துணை இயக்குனர் ஒருவர் என நான்குபேரைத் தன்னோடு அழைத்துக்கொண்டு போகும்போது ராஜ்குமார் துணைவியாரிடம் அவரது கணவருக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் ஒரு ஒலிநாடாவைக் கொடுத்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் அதைக் கொடுத்துவிடும்படியும் கூறிவிட்டு சென்றார்; அன்றிரவே பரபரப்பு கிளம்பிவிட்டது;
விடிந்ததும் விடியாததுமாக எஸ்.எம்.கிருஷ்ணா தமிழக முதல்வரைச் சந்திக்க சென்னைக்கு பதறியடித்து ஓடினார்; மறுநாள் கர்நாடகாவே கதிகலங்கிப்போனது; கன்னடத் திரைப்படத்துறை வேலைநிறுத்தம் செய்தது;
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன; தமிழக பதிவு வாகனங்கள் எண்களைப் பார்த்ததும் அடித்துநொறுக்கப்பட்டன;
பெங்களூரில் தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன; மாண்டியா அருகில் இரண்டு தொடர்வண்டிகள் நிறுத்தப்பட்டன; பேருந்துகள் கொளுத்தப்பட்டன; ஆனால், உயிர்ப்பலி எதுவும் இல்லை, ராஜ்குமாரை விடுவித்தபிறகும் கூட;
காரணம் வீரப்பனார் கையில் அவர்கள் குடுமி இருந்தது;
சோர்ட் சாலையில் (chord road) ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார் அது ராஜ்குமார் கடத்தப்பட்டதன் எதிரொலியா என்பது உறுதியாகவில்லை;
வீரப்பனார் அனுப்பிய ஒலிநாடாவில் "கர்நாடக மற்றும் தமிழக முதலமைச்சர்களுக்கு வணக்கம், நான் வீரப்பன் பேசுவது என்னவென்றால், என் தோழர் என் கோரிக்கைகளை வாசிப்பார்" என்கிறார். அதன்பிறகு தநாவிப தலைவர் மாறன் கோரிக்கைகளை வாசிக்கிறார்.
அவைகளில் முக்கியமானவை,

1. காவிரிப் பிரச்சினையை அனைத்துலக நீதிமன்றம் விசாரித்து முடிவு கூறவேண்டும்.
2.தமிழக சிறைகளில் உள்ள தமிழர் நாட்டு விடுதலைப் படை, தமிழர்நாடு மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த ஐந்துபேரை தமிழகஅரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3.வாச்சாத்தி,சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட
பெண்களுக்கு ஆகியோருக்கு நஷ்டஈடு தரவேண்டும்.
4. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழ்
வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும்.
அதற்கான சட்டம் இயற்ற வேண்டும்.
5. தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ள அப்பாவித்தமிழர்களை
விடுவிக்க வேண்டும்.
அவர்களுக்கு உறுதியளித்தபடி
நிவாரணம் வழங்க வேண்டும்.

(தொடரும்)


https://www.facebook.com/photo.php?fbid=448921765211482&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739