Tuesday, 30 September 2014

அணுகுண்டே உரமாக

அணுகுண்டே உரமாக

உஊஉஊஉஊஉஊஉஊஉஊ

1945, உலகப்போரில் ஜெர்மனியும் அதன் கூட்டரசுகளும் வீழ்ந்துவிட்ட நேரம்; உலக உருண்டையின் மறுபக்கம் ரஷ்யாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பர்மாவிலிருந்து பசிபிக் தீவுகள் வரை உலகப் பந்தில் கிட்டத்தட்ட 30% ஜப்பானின் கட்டுப்பாட்டில்; வல்லரசுகளான அமெரிக்கா,இங்கிலாந்து,ரஷ்யா என ஒட்டுமொத்த உலகமும் இப்போது ஜப்பானை நோக்கித் திரும்பியது; சரணடையச் சொன்னார்கள்; ஜப்பான் மறுத்துவிட்டது; அமெரிக்கா பசிபிக் கடலில் முதல் அடி எடுத்துவைத்தது; வலுவான பதிலடி கிடைத்தது; பர்மாவில் இங்கிலாந்தும் சீனாவில் ரஷ்யாவும் கடுமையான மோதலுக்கும் பிறகு சில பகுதிகளை மீட்டன;
நேருக்கு நேர் மோதினால் ஜப்பானைத் தோற்கடிக்க 30ஆண்டுகளும் கோடிக்கணக்கான உயிர்ச்சேதமும் ஆகலாம் என்று கணக்கு சொன்னார்கள்;
1945-8-6 அன்று முதல் அணுகுண்டு ஹிரோஷிமா நகரில் முதல் அணுகுண்டு போடப்பட்டது; 1,40,000 பேர் உயிரிழக்கக் காரணமானது; ஜப்பான் சரணடைய மறுத்தது; மூன்றுநாட்கள் கழித்து நாகசாகியில் அணுகுண்டு; 70,000 பேர் உயிரிழக்கக் காரணமானது; வேறு வழியில்லாமல் ஜப்பான் 15ஆகஸ்ட்1945ல் சரணடைந்தது(இந்த வெற்றியைத்தான் ஹிந்திய மக்கள் ஸ்வதந்த்ர தினமாக கொண்டாடி வெள்ளையருக்குத் தாம் அடிமை என்பதை நிறுவிவருகின்றனர்); ஜப்பானின் சாமுராய் பரம்பரையினர் பலர் இழுக்கு பொறுக்காமல் தற்கொலை செய்துகொண்டனர்; (ஜப்பானிய அரசு சரணடைந்தாலும் ஜப்பான் படைத் தலைவர்கள் சரணடைய மறுத்து தொடர்ந்து அக்டோபர் வரை போர்புரிகின்றனர்).
அன்று ஜப்பானின் நிலை படுபாதாளத்தில் வீழ்ந்திருந்தது;
அழிவை சதவீதமாகக் கூறவேண்டுமானால், தலை நகரம் 57%, உற்பத்தி 90%, தொழிற்சாலைகள் 30%, கப்பல் கட்டுமானம் 80% அழிந்து போயிருந்தது; 81நகரங்கள் வானூர்தித் தாக்குதலில் அழிந்துபோயிருந்தன;
விலைவாசி 45மடங்கு அதிகம்; தலைநகர் டோக்கியோவில் 57% அழிவு; தொள்ளாயிரமாயிரம்(90லட்சம்) உயிரிழப்புகள்; ஒருகோடிப் பேரைக் கொன்ற கொலைப்பழி; கதிர்வீச்சு, நோய், பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், அரசு கலைப்பு, வீடில்லாத நிலை.
ஜப்பான் மீள 150ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டார்கள்;
ஆனால், பதினாறே ஆண்டுகளில் தலைநிமிர்ந்தது ஜப்பான்(!!).
அதுதான் ஜப்பான்.
நிலையான அரசு கிடையாது; வழிநடத்த தலைவன் கிடையாது; 1945-1952வரை அமெரிக்க ஆட்சி; படை கலைக்கப்பட்டு ஐநூறாயிரம்(5லட்சம்) வீரர்கள் வேலையிழந்தனர்; தொழிற்சாலை,படைத்துறை, அரச வேலைகளில் இருந்த அத்தனை பேரும் உணவுக்கு வழியில்லாமல் வேலையில்லாமல் அல்லாடினர்; தள்கொலைகளும் பட்டினிச்சாவுகளும் தெருவுக்குத் தெரு நடந்தது; உலகமே வெறுத்து ஒதுக்கியது; ஆனாலும் தூக்கத்தில் இருந்து எழுவதுபோல மரணத்திலிருந்து எழுந்தது ஜப்பான்; 
போர்க்குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது; அரசரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மக்களாட்சி பிறந்தது; நிலங்கள் அதிகம் வைத்திருப்போரிடமிருந்து நிலம் பிடுங்கப்பட்டது;
வேளாண்மைக்குக் குறைந்த வட்டியில் கடன்; அரைவயிறோடு மாணவர்கள் கல்வி கற்றனர்; புதிய 167 பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன; 5000தனியார் நிறுவனங்கள் பொதுநிறுவனங்கள் ஆக்கப்பட்டன;
பெரிய நிறுவனங்கள் அழைக்கப்பட்டு வழிமுறைகள் வழங்கப்பட்டன; நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களையும் பொதுமக்களையும் பங்குதாரர்களாக ஆக்கின; படை இல்லாத நிலையைச் சமாளிக்க 1,10,000 பேர் கொண்ட காவல்படை உருவானது;
விலைவாசியைக் குறைக்க உற்பத்தி அதிகமாக்கப்பட்டது, மக்களிடம் பணப்புழக்கம் குறைக்கப்பட்டது, மக்கள் கையிலிருக்கும் பணத்தை அரசிடம் ஒப்படைத்தனர்; 360% இருந்த பணவீக்கம் கொஞ்சம் குறைந்தது; மக்களுக்கு அரசு உதவித்தொகை(500யென், அப்போது 360யென்=1அமெரிக்க டாலர்) தரும் அதுதான் வருமானம்; நகரமக்கள் பட்டிதொட்டிகளுக்குக் குடிபெயர்ந்தனர்; கள்ளச்சந்தையில் எதையும் வாங்குவதை முடிந்த அளவு தவிர்த்தனர்;  ஊழியர்கள் சப்பளம் உச்சவரம்பு அறிவிக்கப்பட்டது; உலக நாடுகளின் உதவிகள் ஏற்கப்பட்டன; வரிகள் கெடுபிடியாக வசூலிக்கப்பட்டன; பொதுமக்கள் சிறுசேமிப்பு அரசிடமே இருக்குமாறு வழியமைக்கப்பட்டது; கொரிய போருக்கு தளவாடங்கள் அனுப்ப உரிமம் பெறப்பட்டு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர்;
பட்டு உற்பத்தி மவுசு குறைவதை புரிந்துகொண்டு நைலான்,பாலியஸ்டர் தயாரிக்கத் தொடங்கினர்;
அதாவது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தினர், வேண்டிய மாற்றங்களை உடன் செய்தனர்; தொழிலதிபர்கள் குழுமங்களாக சேர்ந்து தனிவங்கிகள் வைத்துக்கொண்டு அரசு உதவியுடன் தொழிற்துறையை மேம்படுத்தினார்கள்; முக்கியமான தொழில்களுக்கு வரிச்சலுகை; வெளிநாட்டில் தொழில்தொடங்க விதிமுறைகள் தளர்த்தப்பட்டன; வேற்றுநாடுகள் உள்நாட்டில் தொழில்தொடங்க தடை; உலகம் முழுவதும் முன்னனி தொழிற்சாலைகளில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன; ஜப்பானிய நிபுணர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று கற்றுவந்தனர்; கப்பல் மூலப்பொருட்களை தரையிறக்கும் துறைமுகங்கள் அருகிலேயே தொழிற்சாலைகள் மாற்றப்பட்டு பொருள்அலைச்சல் குறைக்கப்பட்டது; புதிய ஆலைகள் தொடங்கப்பட்டன; அதிக சம்பளம் வாங்கிய தொழிலாளர்கள் வேலை பறிக்கப்பட்டு புதிதாக வரும் மாணவர்கள் அமர்த்தப்பட்டனர்; நவீன பொருடகள் சந்தைக்கு வந்தால் அதில் ஒன்றை வாங்கி அதை அப்படியே நகல் எடுத்தாற்போல செய்தனர்; தொழில்நுட்ப கமுக்கங்களை(ரகசியம்) கையூட்டு(லஞ்சம்) கொடுத்து வாங்கினர்; ஆண்களின் சம்பளத்தில் பாதியளவு சம்பளத்திங் பெண்களை வேலைக்கு அமர்த்தினர்; புதிய கண்டுபிடிப்புகள் ஊக்கப்படுத்தப்பட்டன; புல்லட் தொடர்வண்டி, ரோபோ, செயற்கைகோள் என பல்வேறு துறைகளில் சாதனை படைக்க இது வழிவகுத்தது; மாணவர்கள் வெளிநாட்டில் கல்விபெற அனுப்பப்பட்டார்கள்; பொருளாதாரம் உயர உயர அது மக்களுக்குப் பயன்படுமாறு பார்த்துக்கொண்டனர்;
1973ல் இசுரேலுக்கு உதவிசெய்யும் நாடுகளுக்கு எண்ணெய் உற்பத்தியை அரபுநாடுகள் நிறுத்தியபோது, இது நீண்டகாலம் நீடிக்காது என்று தெரிந்த மற்றநாடுகள் அசட்டையாக இருந்தன; பெட்ரோல் விலை உயர்ந்தது; ஆனால், ஜப்பான் முக்கியமான ஆலைகளுக்கு மட்டுமே பெட்ரோல்; அவைகளுக்கும் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்க வலியுறுத்தியது; மாற்று ஆற்றல்கள் பயன்பாட்டில் கவனம்; பெட்ரோல் சிக்கன நுட்பங்கள்; பெட்ரோல் பயன்பாட்டைக் குறைத்தால் பாராட்டு,சலுகை,விருது; இந்த காலகட்டத்தில் ஜப்பானிய உற்பத்தி செலவு மற்ற நாடுகளைவிட குறைவென்பதால் குறைந்தவிலையில் பொருட்களை விற்று சந்தையைப் பிடித்தது; பெட்ரோலிய நாடுகள் அதை விற்காமல் தாக்குப்பிடிக்க முடியாது என்று உணர்ந்து மறுபடியும் பெட்ரோலை ஏற்றுமதி செய்தபோது பெட்ரோல் விலை குறைந்தது; ஏற்கனவே பெட்ரோல் பயன்பாட்டைக் குறைத்திருந்த ஜப்பான் மேலும் விலையைக் குறைத்தது.
எத்தனை வீழ்ச்சியிலும் ஜப்பான் பொருட்களின் தரத்தில் சமரசம் செய்துகொள்ளவேயில்லை;
ஜப்பான் தனது பழைய நிலையை 1961வாக்கில் அடைந்தது; 1964ல் ஒலிம்பிக் நடத்தி தம் சொந்த செயற்கோள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப அந்த ஒலிம்பிக் சுடரை ஹிரோஷிமா நகரில் பிறந்த யோஷிநோரி ஸக்காய் என்பவரை ஏற்றச்செய்து ஜப்பான்;
உலகத்தாரெல்லாம் பார்வையாளராக அண்ணாந்து பார்க்க கால்மேல் கால்போட்டு நிமிர்ந்த நெஞ்சுடன் வல்லரசு அரியணையில் பத்தொன்பதே ஆண்டுகளில் மீண்டும் அமர்ந்தது ஜப்பான்;
பதக்கப்பட்டியலிலும் 16தங்கம்,5வெள்ளி, 8வெண்கலம் என மூன்றாவது இடம் (ஜப்பானுக்கு 1936ல் முதல் ஒலிம்பிக்ஸ் அதன்பிறகு 1964தான் இரண்டாவது);
வானொலி பழுதுபார்க்கும் கடையாகத் தொடங்கிய சோனி, மிதிவண்டி விளக்குகள் தயாரிப்பில் தொடங்கிய பானசோனிக் உலக முன்னனி நிறுவனங்களாக உள்ளன;
அமெரிக்கா பணத்தில் புரண்டுகொண்டிருந்தபோது மாணவர்கள் வேலைகிடைத்தவுடன் மகிழுந்து வாங்குவதற்காக சிறிய மகிழுந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்தது செய்தது; 1989 அமெரிக்காவிலேயே ஆலைகளைத் தொடங்கியது;
1990களுக்குப் பிறகு பொருளாதாரச் சுழலில் சிக்கினாலும், பல்வேறு இயற்கைச் சீற்றங்கள்,அதிக மக்கள்தொகை, வளக்குறைவு என பல தடைகளைத் தாண்டி ஜப்பான் இன்றும் வெற்றிநடை போடுகிறது ஜப்பான்.
https://m.facebook.com/photo.php?fbid=498153826954942&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=17&_ft_&__tn__=E

1 comment:

  1. அருமையான தொகுப்பு ஆதி

    ReplyDelete