Tuesday, 30 September 2014

மூன்றாம் தலைவர்

மூன்றாம் தலைவர்
#=-=#=-=#=-=#=-=#=
ஒரு மரபினத்தை பல இனங்கள்
கூட்டுசேர்ந்து வீழ்த்தியிருந்த காலகட்டம்;
எவரும் அழிக்கமுற்படாவிட்டால் தாமே அழிந்துவிட
தமிழினம் முடிவுகட்டியிருந்த சோர்வான நேரம்;
முதல் தலைவர் ஈழத்தில் இருநூறு ஆண்டுகள்
முன்பு உலகநாடுகளால் வீழ்த்தப்பட்டார்; இரண்டாம்
தலைவர் தமிழகத்தில் நூறு ஆண்டுகள்
முன்பு குறுக்குவழியில் வீழ்த்தப்பட்டார்;
இரண்டுமுறை இருமுனைகளிலும் தோற்று அழிவைச்
சந்தித்த இனத்தில்தான் தலைவனுக்கெல்லாம் தலைவனாக,
வல்லானுக்கெல்லாம் வல்லானாக எம் மூன்றாம் தலைவர்
தோன்றினார்;
அவர் பெயர் சொன்னாலே கேட்டவர் இதயமும் சொன்னவர்
இதயமும் அதிரும்; அவர் வாழ்நாளில் ஒருவருக்கேனும்
நன்மை செய்தாரா என்றால் செய்ததேயில்லை.
என்னை நோக்கி வரும் குண்டுகளை என் தாய்நிலம் ஈன்ற
காட்டுமரங்கள் தாங்கிக்கொண்டு வீழும்
என்மக்கள் புதிதாய்த் தூவும் விதைகள் நான்
கொன்றுபுதைத்த பகைவர்
பிணங்களே உரமாகக்கொண்டு வளரும்.
இதுபோன்ற வன்முறை நிரம்பிய கவிதைகள்,
குருதி வழியும் வரலாறு, ஈவிரக்கமே இல்லாத
அரக்கத்தனம், மூன்றாம் தலைவரின் பெயரைக்
கேட்டாலே புன்னகை காணாமல்போகும்;
தான் பிறந்த இனத்திற்கு மாறாக்
கலங்கத்தை ஏற்படுத்தியவர்; உலகக் கொடுங்கோலர்
பட்டியலில் இடம்பிடித்துவிட்டவர்; ஆனாலும், அவர்
ஒரு தலைவர்; எப்படி என்றால் தமிழ்மக்கள்
வெறுக்கமுடியுமேயன்றி தவிர்க்கமுடியாத
ஒரு அடையாளம் எம் மூன்றாம் தலைவர்; உலகில்
தமிழருக்கான அடையாளமாக மாறியவர்; அவர்
பெயரன்றி தமிழ் வரலாற்றில்
நான்குவரிகள் கூட எழுதமுடியாது; தமிழன்
நெறிதவறமாட்டான் என்று வரம்புமீறியே பழகிப்போன
பகைவர்களுக்கு உள்மூளையில் பட்ட காயம்போல
ஆழமாகதொரு பாடம் புகட்டிய விதிவிலக்கு;
எம் மூன்றாம் தலைவர் ஒரு சராசரியான குடும்பத்தில்
பிறந்தார்; அவர் இனரீதியாக எந்தவகையிலும்
பாதிக்கப்படவில்லை; அவர் பிறந்த பகுதியிலும்
இனவழி எந்த இடர்ப்பாடும் இல்லை; அவர்
அமைதியானவராக, மாந்தநேயராக,
உயர்கல்வி கற்றவராக, வாழ்க்கையில் அனைத்தும்
கிடைக்கப்பெற்றவராக இருந்தார்; அவர்
தமது முப்பது வயதுவரை ஒரு வம்புச்சண்டைக்கேனும்
போனவரில்லை; அந்த சராசரி இளைஞன்தான்
மிகக்குறுகிய காலத்தில் கொலைகாரனாக,
வன்முறையாளனாக, தீவிரவாதியாக, கிளர்ச்சியாளனாக,
ஒரு இனத்தின் எதிரிகளையெல்லாம் ஒற்றை ஆளாக
பந்தாடிய தலைவனாக உருவெடுத்தார்; அவர் குடித்த
உயிர்கள் கணக்கிலடங்காதவை; கசாப்புக்கடையில்
வளர்ந்த சிறுவனால்கூட இத்தனை அசட்டையாக
வன்முறை செய்யமுடியாது; இனரீதியாக
பாதிக்கப்பட்டவனால்கூட அத்தனைத் தீவிரமாக
இயங்கியிருக்க முடியாது; உயிர்வாழ்ந்த
காலம்வரை அவரை யாராலும் வீழ்த்தமுடியவில்லை; அவர்
குறுக்குவழிக்கே குறுக்குவழி காட்டுபவராக
இருந்தார்.
இருந்தும் அவர் தமிழ்மக்கள் உள்மனதில் யாருக்கும்
வெளிப்படையாகத் தெரியாமல் வீற்றிருக்கும் தலைவர்;
ஏன் அவரைத் தலைவராக ஏற்பதைத் தவிர்க்கமுடியாத
ு என்றால், தமிழினம்
அழிவிலிருந்து மீண்டு அரசாளும் வழியை அவர்தான்
காட்டினார்; அவருடைய கருத்தியலும் கோட்பாடும்
இனவழி அழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து என்றென்றும்
வழிநடத்தும் பாதையாக இருக்கும்;
அவர் எழுத்தும் பேச்சும் மாந்த நேயத்தையும்
இயற்கை காப்பையும் நேர்மையையும் வீரத்தையும்
ஒற்றுமையையும் எந்தவொரு சிந்தனையாளரையும் விட
சிறப்பாக சொல்கின்றன; ஒரு இனத்திற்கு தக்கவழியைக்
காட்டிய எம் தலைவர் நடைமுறையில் அதைக்
கிஞ்சித்தும் செயல்படுத்தவில்லை; அவர் செய்ததெல்லாம்
அடிக்கு அடி, உதைக்கு உதை, உயிருக்கு உயிர் என்ற
பழிவாங்கல் நடவடிக்கைதான்; "புரட்சி,விடுதல
ை இதற்கெல்லாம் நான் போராடவில்லை, என் மக்கள்
மீது வன்முறையை ஏவினால்
பதிலடி கொடுப்பது மட்டும்தான் என் வேலை, பழிக்குப்
பழி செய்வது தீவிரவாதம் என்றால் நான்தான்
முழுமையான தீவிரவாதி" என்று வெளிப்படையாக
சொன்னவர் எம் தலைவர்;
ஒரு முறை அவரைப் பேட்டி கண்டவர் கேட்டார்,
"உங்கள் செயல்பாடுகள் என்னென்ன?" என்று.
தலைவர் சொன்னார் "என் செயல்பாடு உயிரை எடுப்பது,
எந்த இனத்தவனோ அவன் நோக்கம் என்னவோ இருந்துவிட்டுப்
போகட்டும்; என்னைப்போன்ற ஒரு மாந்தனை நான்
கொல்கிறேன்; இதுதான் நான் செய்வது; பல
உயிர்களை வாழவைக்க சில உயிர்களை நான் கொல்கிறேன்;
இதுதான் என் செயல்பாடு".
இந்த பதிலை பலகோணங்களில் ஆராய்ந்தால் எம் தலைவரின்
மாந்தநேயத்தையும்,வீரத்தையும், திமிரையும்,
அறிவாற்றலையும் அறியலாம்;
இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனமான வழியைக்
கடைப்பிடித்தவர் அருமையான கோட்பாடுகளையும்
கருத்தியல்களையும் எப்படி வழிவகுத்தார்
என்று எவருக்கும் புரியாது; எம் மூன்றாம் தலைவரைப்
புரிந்துகொள்ள அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும்
அவர் காலத்து அரசியல் சூழலையும் உணர்ச்சியுடன்
கூடிய அறிவால் ஆராய்வது தேவை;
அவர் நேர்மையான, குறையில்லாத, அறிவார்ந்த மக்கள்
மத்தியில் பிறந்தவர்; அவர் வரலாற்றையும்
அரசியலையும்
நன்கு கற்றார்;இது அவரது சிந்தனைக்கு செறிவூட்டி கொள்கைகளை ஆராய்ந்து குறைநீக்கி நடைமுறைக்கேற்ப
வளைத்து புதிய கருத்துகளை அவர் உருவாக்க
உதவியது; மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்ற
தீவிரமான எண்ணம் இருந்தது;
ஏற்கனவே இரண்டு பேரழிவினைச் சந்தித்தித்திருந்த
மக்கள்; சுற்றிலும் பகைவர்கள்; சிறிய
எழுச்சி தெரிந்தாலும் ஒரு இனவழிப்பை நடத்த
கண்கொத்திப்பாம்பாகக் காத்திருந்தனர்; தலைவர் எண்ணம்
உண்மையில் புரட்சியும் விடுதலையும்தான்;
அதை நேர்வழி சாதிக்க ஏற்றசூழல் இல்லை;
ஒரு தலைமுறையில் சாதிக்க விடுதலை ஒன்றும்
அத்தனை எளிதான காரியமில்லை;
அப்போது புரட்சி,விடுதலை
,எழுச்சி என்று தொடங்கியிருந்தால்
தீவிரவாதி என்று முத்திரைகுத்தி படையெடுத்து வந்திருப்பார்கள
்; விடுதலைகூட கிடைத்திருக்கலாம் ஆனால், சேதம்
அதிகம் இருந்திருக்கும்; அதனால்தான் தலைவர்
வன்முறையைக் கையிலெடுத்தார்; மற்றவர்கள் அவரைத்
தீவிரவாதி என்று முத்திரை குத்தவில்லை; ஏனென்றால்
அவரே தன்னைத் தீவிரவாதி என்று அறிவித்துவிட்டார்;
வல்லாதிக்ககங்கள் சிதைந்துபோன இனத்தை மேலும்
சிதைக்கவந்த கோடாரிக்காம்பு என்றுதான்
தலைவரை நினைத்தனர்; தலைவர் முதலில் இரண்டகம்
செய்தவர்களை துடைத்தெறிந்தார்; விடுதலைப்போரில்
தோற்றாலும் வென்றாலும் சேதம் என்னவோ போராடும்
மக்களுக்குத்தான்; இந்த விதியை மாற்றியமைத்தவர்
தலைவர்; வன்முறை எந்த முறையில்
நடந்ததோ அதை அப்படியே திருப்பிக்கொடுப்பபதுதான்
அவர் பாணி; தமிழ்நிலத்துக்கு உள்ளே யார்
வந்து வன்முறையை நடத்தினாலும் அவர்கள்
தாய்நிலத்திற்குள் சென்று ஈடான
அளவு வன்முறையை நிகழ்த்துவார்; தலைவர்
பிறக்குமுன் ஒரு கொடூரமான கற்பழிப்பு நடந்தது;
அதன் குற்றவாளிகள் தண்டனை என்ற பெயரில் நன்றாக
கவனிக்கப்பட்டு விருந்தினர்போல சிறையில்
இருந்தார்கள்; இனவெறிக் கொலைகாரர்களுக்க
ு அப்படி ஒரு கவனிப்பு நடப்பது செய்தியாக
வெளிவந்தது; அடுத்து சில நாட்களுக்குள் அந்த
குற்றவாளிகளின் வீட்டுப்பெண்களில் ஒருவர்வீதம்
ஒவ்வொருவராக கற்பழித்துக் கொலை செய்யப்பட்டனர்;
இப்படியான ஒரு செயலை பலரும் கண்டித்தனர்; ஆனால்,
போற்றுவோர் போற்ற தூற்றுவோர் தூற்ற தம்
மனச்சான்றே நீதிபதியாகத் தலைவர் தம் பணியைத்
தொடர்ந்தார்; அரசியல் கயவர்களை மேலுலகம்
அனுப்பினார்; அட்டூழியம் செய்துவந்த
வன்முறை வெறியர்களை வன்முறைக்கே பலியெடுத்தார்;
மறைமுக வல்லாதிக்கங்களின்
ஒடுக்குமுறையை அறிந்திருந்தார் அவற்றிற்கெதிரான
கோட்பாடுகளை உருவாக்கி வைத்தார்; ஆனால்
அடிபொடி ஆதிக்கங்களின் நேரடி ஒடுக்குமுறையோடு
மோதினார்; இனத்தின் சிறிய எதிரி முதல் பெரிய
எதிரிவரை கண்ணுக்குத்
தெரிந்தவர்களை ஒழித்துக்கட்டினார்; தாம் ஏன்
இப்படி செய்கிறோம் என்று புரிந்த
ஒரு படையை உருவாக்கினார்; ஒரே இனத்திற்குள்
ஒரு குறிப்பிட்ட பிரிவை தனியாக கூறுபோட
நினைத்த ஒருவரை, தமது படையில் அதே குறிப்பிட்ட
பிரிவைச்சேர்ந்த ஆட்களை அனுப்பி தீர்த்துக்கட்டினார்;
குறுக்குவழிகள் எதுவும் அவரிடம் எடுபடவில்லை;
அவர் தமது நிழலைக்கூட நம்பியதில்லை; அதனால்தான்
இறுதிவரை அவர் வீழாமல் இருந்தார்; அவர் செய்த
நன்மையெல்லாம் வன்முறைக்குப் பதில் வன்முறை,
அதற்குப் பதிலடியாக வரும் வன்முறைக்கு மேலும்
பதிலாக வன்முறை என மோதலைக் கொஞ்சம் கொஞ்சமாகப்
பெரிதாக்கி எதிரிக்கும் மக்களுக்கும்
இடையே தெளிவான கோட்டினை வரைந்ததுதான்; இன்றைய
தமிழர்கள் அவர் பெயரைச்சொல்லவும் தயங்குகிறார்கள்;
ஆனால், அன்றைய தமிழர்கள்
முழு ஆதரவு வழங்கினார்கள்;
அவர்களுக்கு விடுதலை பிறக்கும்
என்று நம்பிக்கை வருமுன் திருப்பியடிக்கமுடியும்
என்ற நம்பிக்கையை அவர் உருவாக்கியிருந்தார்;
வெறுமனே பொதுமக்களைக் கொல்லும்
வன்முறைக்குழு என்று பெயரெடுத்தாலும் வீரம்செறிந்த
மோதல்களும் அவர்தம் வரலாற்றில் இடம்பெற
வைத்திருந்தார்;
ஒருமுறை அவரது படைகள் தம்மைப்போல
இருமடங்கு எண்ணிக்கையுள்ள படைகளை சரணடைய
வைத்தது; யாரையும் அவர் துன்புறுத்துவதி
ல்லை ஒரே தோட்டாவில் தீர்த்துவிடுவார்; யாரையும்
மன்னிப்பதும் இல்லை;
எதிரிக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுப்பதை விரும்பாதவர்;
எதிரிகள் மட்டுமன்றி எதிரிகளின் தலையெடுக்க
வாய்ப்புள்ள இடங்களை துடைத்தெறிந்தார்;
அவர்களுக்கு தாங்குதளமாக இருப்பவைகளை ஒழித்தார்;
அப்பாவி மக்கள் எதிர்ப்பக்கமும்
உண்டு என்று நினைவுபடுத்தினார்; அவரை பிடிக்க
வல்லாதிக்கங்கள் மக்களுக்கு ஏற்படுத்திய சேதம்
ஏராளம்; அதற்கு விலையாக வல்லாதிக்கங்கள்
காலூன்றி நிற்கத் தோள்கொடுக்கும் அதன்
மக்களை சரியானபடி கவனித்தார்; அவர் பழியைத் தாம்
ஏற்றுக்கொண்டு மக்களிடமிருந்து விலகிக்கொண்டார்;
மக்கள் ஆதரவிருப்பதாக அவர் காட்டிக்கொண்டதே இல்லை;
இன்று அவர்காட்டிய பாதையில் அவர் ஏற்படுத்தித் தந்த
அடித்தளத்தில் எம் நான்காம் தலைவர் ஆட்சிசெலுத்துகி
றார்;
ஆனால், அவரால்கூட மூன்றாம்
தலைவரை மேற்கோள்காட்டிக்கூடப் பேசமுடியாது;
உலகையே எதிர்த்துக்கொண்டு இன்று நாங்கள் வல்லரசாக
ஆகியிருக்கிறோம்; எம் மூன்றாம் தலைவர் வழிநடக்கும்
பதிலடிக் குழு ஒன்று இன்றும் எம்நாட்டில்
பதுங்கியிருப்பதே எமது முப்படைகளையும் விட
எமக்கு பாதுகாப்பளிக்கிறது; நான்காம் தலைவர்
அடிக்கடி சொல்வார் "பழியை ஏற்கத் தயங்காதவன்தான்
தலைவன்" என்று; அப்படிப் பார்த்தால் எம் மூன்றாம்
தலைவர் வேறு எவரும் கேள்விப்பட்டிராத
ஒரு புதுவிதமானத் தனிப்பெரும் தலைவர்.
https://m.facebook.com/photo.php?fbid=498313006939024&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr

No comments:

Post a Comment