Thursday 25 September 2014

பிஜி தமிழருக்கு வைத்த கொள்ளி

பிஜி தமிழனுக்கு வைத்த கொள்ளி

ரறரறரறரறரறரறரறரறரறரறரற

ஹிந்தி எதிர்ப்பு இங்கே தீவிரமாகும் முன்பே தமிழெதிர்ப்பு மற்ற இந்தியர்கள் மத்தியில் தலையெடுத்துவிட்டது;

பிஜி தீவுகளில் இன்று தமிழரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூறாயிரம்(ஒரு இலட்சம்); இதில் தமிழ் பேசத்தெரிந்தவர்கள் எத்தனைபேர் தெரியுமா? வெறும் 15000பேர்;
மற்ற எந்த தமிழனுக்கும் தமிழே தெரியாது; 70,000பேருக்கு தமிழ்பேசக்கூடத் தெரியாது;
என்ன காரணம் தெரியுமா?
தென்னிந்தியரோடு இனக்கலப்பு, வடயிந்தரால் மொழியழிப்பு;
தமிழகத்தில் பஞ்சம் வந்தபோது (ஐயா.பென்னிகுக் அணகட்டி பஞ்சத்த தீத்துவச்சாரே அப்ப, அந்த அணையையாவது பாதுகாக்க முடிஞ்சதா உன்னால?) வயிற்றுப்பிழைப்புக்கு வழியில்லாமல் ஆங்கிலேயனால் ஓட்டிச்செல்லப்பட்ட தமிழர்கள் இன்றுவரை வயிற்றுப்பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்;
பிஜி தீவில் 'இந்தியர்கள்(?)' படும் கொடுமையைக் கேட்டு மனம் ஆறாத பாரதி 'கரும்புத் தோட்டத்திலே' என்று ஆரம்பிக்கும் பாடலைப்பாடி மனக்குமுறலைக் கொட்டினார்.

கொஞ்சகாலம் இந்தியனாக இருந்தவர்கள் பிறகு வழக்கம்போல் இனவுணர்வை வெளிக்காட்ட ஆரம்பித்தார்கள்;
தமிழன் எல்லாம் தமிழ்படித்தால் அப்புறம் நாம் எப்படி ஆள்வது என்று தமிழை ஒழித்துக்கட்ட முடிவுசெய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினர்;
அப்போது தமிழர்களை ஒருங்கிணைத்து வந்தது 'சங்கம்' என்ற இதழ்; இது யார் நடத்தியது தெரியுமா?
திரு.அப்பாபிள்ளை நடத்தியது (அயோத்திதாசரையே தெரியாத ஒனக்கு அப்பாபிள்ளைய எங்க தெரியப்போவுது).
அந்த இதழின் அச்சகத்தை தீவைத்து கொழுத்திவிட்டனர்;
(கொழுத்திவிட்டான் என்பது முக்கியமில்ல, அது எந்த வருசம் எந்த இடம்னுகூட தகவல் இல்ல).
அனேகமாக 1955-1962க்குள் இது நடந்தது;
அப்பாபிள்ளை மனம் சளைக்காமல் கையால் எழுதி கையெழுத்து இதழாக சிறிதுகாலம் நடத்தினார்;
தமிழக அரசுக்கு பல கடிதங்கள் எழுதினார்;
தமிழகத்துக்கு பல்வேறு காலகட்டங்களில் ஒருமுறை இருமுறை அல்ல மூன்றுமுறை நேரில் வந்து தமிழக அரசிடம் கெஞ்சினார்;

என்ன நடந்திருக்கும்?!
தமிழகத்தை ஆள்பவனே வந்தேறி;
அவன் எப்படி உதவி செய்வான்? (தமிழனெல்லாம் தமிழ் படிச்சா நாம எப்படி ஆளமுடியும்?).
அப்பாபிள்ளையும் இறுதியில் கண்ணைமூடிவிட்டார்;

இன்றைக்கு நிலை என்ன தெரியுமா?
பிஜி தீவில் பிழைக்கமுடியாமல் வெளியேறிய தமிழன் கிட்டத்தட்ட 30,000பேர் (என்ன ஆனானோ)
வடயிந்தியன் அதுவும் குறிப்பாக குஜராத்திகள் பெரும்பணக்காரர்களாக வணிகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் (பிஜி மக்களே கடுப்பாகி ஒட்டுமொத்த இந்தியர்களையும் வெளியேற்ற 1975ல் முயன்றனர், அப்படி ஒரு ஆதிக்கம்)
அங்கே தமிழன் ஒருத்தன்கூட முன்னேறவில்லை;
1983க்குப் பிறகு ஈழமக்களின் எழுச்சியின் விளைவு 1985வாக்கில் கொஞ்சம் தமிழ் எழுச்சி ஏற்பட்டது;
அங்கே இப்போதும் தமிழ் எழுத படிக்கத்தெரிந்த 3000பேரும் 20 தமிழ்ப் பள்ளிகளும் இருக்கிறது என்றால் அது புலிகளின் எழுச்சியும் அவர்கள் நடத்திய நிழல் அரசாங்கமும்தான்;
1900களில் இல்லாத இனவுணர்வு 1990களில் எப்படி வந்தது என்றால் ஈழத்தில் தமிழினத்தின் எழுச்சிதான்;
(எப்படி என்று விளக்கி சொல்ல அலுப்பாக இருக்கிறது, சொன்னாமட்டும் கொதிச்சு எழவா போற?!)

இப்போது ஈழமே சிதைந்துபோய்விட்டது;
இனி உலகத்தமிழனை இன்னொரு பிரபாகரன் வந்துதான் காப்பாற்றவேண்டும் (அதெல்லாம் எங்க நடக்கப்போவுது? நாந்தான் சொல்லிக்கிட்டு இருக்கேன் தமிழன் எழுவான்- தமிழன் எழுவான்-னு)

தொடர்பான பதிவு: https://m.facebook.com/story.php?story_fbid=10151462218457473&substory_index=0&id=141482842472&from_feed=1&refid=8&_ft_=qid.5883630740934608181:mf_story_key.6739401248606661925  ///
https://m.facebook.com/photo.php?fbid=496790027091322&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr

No comments:

Post a Comment